Friday, April 1, 2011

விஜயகாந்த் வேட்பாளரை அடித்தற்கான உண்மையான காரணம் (இதுவரை வெளிவராத உண்மைகள்)




விஜயகாந்த அவர்கட்சி வேட்பாளரை அடித்த காட்சியை எல்லோரும் டி,வியில் பார்த்து இருப்பிர்கள். ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை எல்லோரும் திரித்து விட்டதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் அவர்கள்..உண்மைகள் ப்ளாக்கின் பதிவாளர் கருதியதால் அவர், அவரது துப்பறியும் டீமை தமிழ் நாட்டுக்கு அனுப்பி உண்மையை கண்டறிந்து வர செய்தார்.

அந்த டீம் அனுப்பிய செய்தி இதுதான்.



பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த விஜயகாந்திற்கு ஒரு S.M.S தகவல் வந்தாகவும் அதை படித்த பின் தான் அவர் கோபமடைந்து அந்த வேட்பாளரை தாக்கியதாகவும் அந்த துப்பறியும் டீம் செய்தி அனுப்பியது. அவருக்கு வந்த தகவலையும் இந்த டீம் கண்டுபிடித்து அனுப்பியது.



விஜயகாந்த் வீட்டில் உள்ள நாய் காணாமல் போய்விட்டதாகவும் அதை பற்றி பேப்பரில் விளம்பரம் கொடுக்க சொல்லி இந்த வேட்பாளரிடம் விஜயகாந்த் சொன்னதாகவும். அந்த வேட்பாளரும் அதைப் பற்றி விளம்பரம் கொடுத்திருந்தார்.



அந்த வேட்பாளரோ விஜயகாந்த் வீட்டில் உள்ள நாய் காணாமல் போய்விட்டது அதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு தரப்படும் என்று விளம்பரம் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் பேப்பரில் வந்த டைப்போ தவறினால் சற்றுமாற்றி விஜயகாந்த்நாயை காணவில்லை அதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு தரப்படும் என்று வந்திருந்தது. இது வேட்பாளர் செய்த தவறுதான் என்று கோபப்பட்டு விஜயகாந்த் தாக்கியுள்ளார். பின்னர் அவர் உண்மையை அறிந்து வேட்பாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த தவறுக்கு காரணம் நடிகர் வடிவேலின் நண்பர் அந்த பத்திரிக்கை அலுவலகத்தில் வேலைபார்ப்பதுதான் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.



வடிவேலை பிடித்து விஜயகாந்த் முன்னால் நிறுத்துபவர்களுக்கு லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக ரகசிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.





--------------------------- --------------------------------

யாருங்க அது. யுத்தத்துக்கு போற கதாநாயகன் மாதிரி கவச உடையோட ஒருத்தர் தலைவர் கூட நின்னுகிட்டு கும்பிடு போடுறாரு.

நம்ம தொகுதி வேட்பாளர்தாங்க அது வேற ஒண்ணுமில்ல.நம்ம தலைவர் திடீர்னு கோபம் வந்து வேட்பாளர்களை கண்டபடி போட்டு அடி பின்னி எடுக்குறாரம்.அதுக்குதான் முன்னெச்சரிக்கையா இப்படி ஒரு பாதுகாப்பு கவஷம்.
01 Apr 2011

2 comments:

  1. போர் என்றால் மக்கள்(தமிழர்கள்) சாகத்தான் செய்வார்கள்!
    அரசாங்க காசில் பத்து பைசா கூட தொடாத நாயகி நான்!
    எனக்கு ஒட்டு போட்டு மக்கள் அனைவரும் மாங்காய்
    மடையர்களாக இருக்குமாறு புரட்சி தலைவர் மீது ஆணையிட்டு
    அகம்பாவம் இல்லாமல்,ஆணவம் இல்லாமல்,....
    அம்மாவின் ஆணைப்படி.காலில் விழுந்து கும்பிட தயாராக இருங்கள்

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா ஹா நல்லா இருக்கு சிரிப்பாக....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.