உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, March 5, 2014

கட்சிகளின் கடைசி நேர அறிவிப்பு!!??மக்களைவை தேர்தலுக்கான நாட்கள் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் கடைசி நேர அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளன. அதன் விபரம் வருமாறுகாங்கிரஸ் : வரும் மக்களைவை தேர்தலில் எங்களுடன் இணைந்து போட்டியிட கட்சிகள் தேவை. சேரவிருப்பம் உள்ள கட்சிகளுக்கு தகுந்த பண உதவி செய்யப்படும். விருப்பம் உள்ள கட்சிகள் 2 நாட்களுள் தொடர்பு கொள்ளவும்.தேமுதிக : வரும் மக்களைவை தேர்தலில் கட்சிகள் வெற்றி பெற நாங்கள் உதவுகிறோம். அதற்கு அதிக பணப் பெட்டிகளுடன் வரும் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்திமுக : மக்களைவை தேர்தல் நெருங்கி வருவதால் உடன் பிறப்புகளே நம்மிடம் சண்டை வேண்டாம் அதனால் அழகிரி நண்பர்கள் எல்லாம் ஸ்டாலின் நண்பர்களாக மாறி சீட்டை வாங்கி கொள்ளவும். தேர்தல் முடிந்த பின் நீங்கள் மீண்டும் அழகிரியுடன் சேர்ந்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தி கொள்ள தலைமையகம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கிறது..


அதிமுக : : எங்கள் கம்பெனிக்கு வேலைக்கு ஆட்கள் தேவை இல்லை..


பாஜ : டீக் கடையில் டேபிள் துடைக்க முதலாளிகள் தேவை இந்த வாய்ப்பு இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே திறந்து இருக்கும்


அன்புடன்
மதுரைத்தமிழன்.


10 comments :

 1. சுவையான நக்கல்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. டீ விக்கறவங்களத் தவிர எல்லாப் பார்ட்டியும் ஒரு பாயிண்டைக் கோட்ட விட்டுட்டாங்களே. மதச்சார்பின்மை தேர்தல்ல முக்கியமான விசயமில்லையா. ஒரு வரி சேத்துங்க. எங்களிடம் சீட்டுக் கேட்டு வருவோர் மதச்சார்பற்றவராக இருக்கவேண்டும்.

  கோபாலன்

  ReplyDelete
 3. இதில் முக்கியமான மரம் வெட்டிப்போட்டு வளர்ந்த கட்சியை விட்டுடீங்களே!!!!!!!!

  ReplyDelete
 4. சுவையான அறிவிப்புக்கள்!

  ReplyDelete
 5. ஐயோ.... அப்போ யாருக்குத் தான் ஓட்டு போடுவார்கள் மக்கள்?

  ReplyDelete
 6. பஸ் ல போட்டுருகிங்க பாருங்க குதிரையோட றெக்கை அதுதான் ஹைலைட் !!

  ReplyDelete
 7. நாட்டையும் ஆளத்தான் வந்திடுவோம்! வென்றிடுவோம்! உமை வென்றிடுவோம்! அப்படினு மதுரைத் தமிழன் குதிக்க வேண்டியதுதானே!!!!!

  உங்கள அறிவிப்பை நையாண்டியை ரசித்தோம்!

  த.ம.

  ReplyDelete
 8. நீங்கள் பகிர்ந்த விளம்பரங்கள் பலே ஜோர்! :) ரசித்தேன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog