'கருடா சௌக்கியமா?' - சமஸைப் புரட்டிப்போட்ட தத்துவம்!
சமஸ்: சிலருக்குச் சந்தனம்... பலருக்கு மலத்துடன் சேர்ந்த அசுத்தம்!
சந்தனம்! சாமானியனுக்குச் சும்மா அல்ல; அதன் மணம், அதன் குணம், அதன் புனிதத் தன்மையால் அது என்றென்றும் உயர்ந்தது. #பத்திரிகையாளர் #சமஸ் என்பவரும் தமிழகத்தின் அறிவுச் சூழலில் ஒரு காலத்தில் அப்படி ஒரு 'சந்தன'மாகவே பார்க்கப்பட்டவர். கூர்மையான எழுத்து, நடுநிலை தவழாத விமர்சனப் பார்வை, ஆழமான தகவல்களின் அடிப்படையில் அவர் எழுதிய கட்டுரைகளும், பணியாற்றிய ஊடகங்களும் அவருக்கு ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தித் தந்தன. 'தினமணி'யில் தொடங்கி, 'ஆனந்த விகடன்', 'தி இந்து' எனப் பல பெருமைமிக்க இடங்களில் அவர் நடுப்பக்க ஆசிரியர் என்கிற முக்கியமான அரியணையில் வீற்றிருந்தார். அவருக்குக் 'கலைஞர் பொற்கிழி விருது' கிடைத்ததும் அதனால்தான்.
ஆனால், அதே சமஸ் இன்று கடுமையான விமர்சனப் புயலில் சிக்கித் தத்தளிப்பது ஏன்?
சில நாட்களாக, சமஸ் குறித்து சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகை வட்டாரங்களிலும் நடக்கும் விவாதங்கள் எல்லாமே ஒரே மையத்தை நோக்கியே நகர்கின்றன. "சமஸ் ஒரு நல்ல சிந்தனையாளர்; ஆழமான எழுத்தாளர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர் இன்று இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. அவர் யார் பக்கம் நிற்கிறார்? யார் சொல்வதை எழுதுகிறார்?" - இந்தக் கேள்விகள் தான் இன்றைய அவரது பிம்பத்தைக் குலைத்திருக்கின்றன.
ஒரு நண்பரின் கூற்று கவனிக்கத்தக்கது. "சமஸ் சந்தனம்தான், அதில் சந்தேகமில்லை. ஆனால், அந்தச் சந்தனம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அதற்கு மரியாதை. ஒருவேளை அது மலத்துடன் சேர்ந்துவிட்டால்...? நண்பர்கள் பார்வையில் அவர் இன்றும் சந்தனமாகத்தான் இருக்கிறார். ஆனால், மற்றவர்களுக்கு, அவர் சந்தனமாக இருந்தாலும், அது அசுத்தமான ஒன்றுடன் சேர்ந்து விட்டதால், அந்தச் சந்தனத்தையும் அசுத்தமாகப் பார்க்கிறார்கள்."
இந்தக் கருத்தின் ஆழத்தில் தான் சமஸின் தற்போதைய சர்ச்சைக்குரிய நிலை அடங்கியிருக்கிறது.
ஒரு காலத்தில், தான் சார்ந்திருந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தயங்காதவர் சமஸ். அதே வேளையில், தனிப்பட்ட முறையில் அவர் தொடங்கிக் நடத்தி வந்த 'அருஞ்சொல்' இணையதளம் தீடீரெண்ரு முடக்கப்பட்டு அதன் பின் புதிய தலைமுறையில் நிர்வாக ஆசிரியரான பின், சிலரால் அது ஓர் அரசியல் முகாம் சார்ந்த தளமாகப் பார்க்கப்படுவது ஏன்? நடுநிலையின் வாசலில் நின்ற சமஸ், ஏதோ ஒரு கட்டத்தில் தனது ஆளுமையின் அச்சாணியைத் தவறவிட்டு, ஒரு குறிப்பிட்ட சாய்வுக்குள் வந்து விட்டாரா?
இந்தக் குழப்பமான மனநிலையில்தான் ஒரு சினிமாப் பாடல் வரிகள் என் நினைவுக்கு வருகிறது. 'சூரியகாந்தி' திரைப்படத்தில் வரும் அந்தப் பாடல், நிலைமைக்கேற்ற மரியாதையின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும்:
"பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது!"
ஆம்! கருடனுக்குச் சிம்ம சொப்பனமான பாம்பு, தான் பரமசிவன் கழுத்தில் அமர்ந்திருக்கும் அகம்பாவத்தில் கருடனை நலம் விசாரிக்கிறது. ஆனால், கருடனோ, "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே" என்று பதிலளிக்கிறது. அதன் அர்த்தம் ஆழமானது. ஒருவருக்குக் கிடைக்கும் மரியாதை, அவர் இருக்கும் இடத்தைப் பொறுத்தது. அந்த இடத்தின் தகுதி, அங்கிருக்கும் நிலைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்தது.
பத்திரிகையாளர் சமஸ், நடுநிலை என்ற பரமசிவன் கழுத்தில் இருந்த வரை ஒரு 'சந்தனம்'. ஆனால், இன்று அவரது இடம் மாறியதாகப் பலரும் உணர்கிறார்கள். அந்தப் புதிய 'இடம்' தான், அவர் மேல் வீசப்படும் சேற்றுக்குக் காரணமாகிறது.
சமஸ் ஒருபோதும் சாதாரணமானவர் அல்ல. அவரது கட்டுரைகள் இன்றும் பலரால் வாசிக்கப்படுகின்றன. அவருடைய எழுத்தின் வீரியம் குறைந்துவிடவில்லை. ஆனால், எழுத்தின் நேர்மை, நம்பகத்தன்மை ஆகியவை எழுதும் ஆசானை, அவர் இருக்கும் இடத்தின் மூலம் எப்படிக் கேள்விக்குள்ளாக்கும் என்பதற்கு சமஸின் இன்றைய நிலை ஒரு பாடமாக இருக்கலாம்.
சமஸ் ஒருமுறை சொன்னதுபோல, "தார்மிக உணர்வுதான் அறத்திலிருந்து விலகிடாமல் என்னைச் செலுத்தும் ஆற்றலாக அமைந்திருக்கிறது." அந்தத் தார்மீக உணர்வை அவர் இழந்தாரா? இல்லையா? என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால், வாசகர்களின் கண்ணுக்கு, அவர் அமர்ந்திருக்கும் 'இடம்' இன்று புனிதமானதாக இல்லை.
சந்தனத்தின் வாசம் வேண்டுமானால் மாறாமல் இருக்கலாம். ஆனால், அது சேர்ந்துள்ள இடம், அதன் மதிப்பை நிர்ணயிக்கும்!
இன்னும் மிக எளிய மக்களுக்கு புரியும் வண்ணம் ஒரு உதாரணத்தை சொல்லுகின்றேன் ஒரு திறமையான மருத்துவர், மருத்துவமனையில் வெள்ளைக் கோட்டுடன் (White Coat) நின்று சிகிச்சை அளிக்கும்போது, அவர்மீது மக்களுக்கு இயற்கையாகவே ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அதே மருத்துவர், இரவு நேரத்தில் ஒரு டாஸ்மாக் கடைக்கு அருகில் நின்று, அதே வெள்ளை கோட்டுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தால்? அவரது மருத்துவ அறிவு சிறிதும் குறையவில்லை. ஆனால், அவரது 'இடம்' அந்த அறிவின் மரியாதையைக் குலைத்துவிடும். சமஸின் அறிவும் எழுத்தும் இன்றளவும் கூர்மைதான். ஆனால், அவர் இன்று சார்ந்திருக்கும் 'சூழல்' தான், அந்த எழுத்தின் நோக்கத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.
அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.