"சுந்தர் பிச்சைகள் தப்பிக்கிறார்கள், சாதாரண இந்தியக் குடும்பங்கள் 'தீண்டத்தகாதவர்கள்' ஆகிறார்கள்": குடியேற்ற சமூகத்தின் எதிர்காலத்தை அழிக்கும் 'இந்துத்துவா' அட்டூழியங்கள்!
You can read this post in English and Hindi at the end of this Tamil post. आप इस पोस्ट को अंग्रेज़ी और हिंदी में इस तमिल पोस्ट के अंत में पढ़ सकते हैं।
அமெரிக்காவின் தொழில்நுட்பத் தலைநகரங்களில் இந்தியப் பெயர்களைச் சுமக்கும் சுந்தர் பிச்சைகள், அரசியல் தளத்தில் ஜொலிக்கும் கேஷவ் படேல்கள் போன்றோர் இந்தியக் குடியேற்றத்தின் வெற்றிச் சின்னங்கள். ஆனால், இந்தியாவின் இந்துத்துவா அரசியலால் தூண்டப்பட்ட சில கும்பல்களின் அரைவேக்காட்டுத்தனமான கொண்டாட்டங்கள், ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தையுமே 'தீண்டத்தகாதவர்கள்' என்ற நிலைக்குத் தள்ளி வருகின்றன.
தீபாவளிப் பட்டாசுகளின் சத்தம், விநாயகர் சிலைகளின் குப்பை, தெருக்களில் அரங்கேறும் அத்துமீறிய ஆரவாரம் இவை அனைத்தும் மேற்கத்திய நாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பை வளர்த்து, குடியேற்ற வாய்ப்புகளை அச்சுறுத்துகின்றன.
இது வெறும் கலாச்சார மோதல் அல்ல; இது நம் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு சமூக சீரழிவு!
1965ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியேற்றச் சட்டம் (Immigration and Nationality Act) பிறப்பிட அடிப்படையிலான வரம்புகளை நீக்கியது. இதன் விளைவாக, மருத்துவம், பொறியியல், கல்வி எனத் திறமை வாய்ந்த இந்தியர்கள் அமெரிக்காவின் கதவைத் தட்டினர். H-1B விசா திட்டம் 1990களில் இந்தக் குடியேற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இன்று 4 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளனர்.
ஆனால், பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்துத்துவா பிரச்சாரம் குடியேறிய இந்தியர்கள் வழியாக உலகளாவிய அளவில் ஒரு நச்சுப் பிரச்சாரமாகப் பரவியுள்ளது. இதன் தாக்கம் இப்போது உச்ச நிலையில் உள்ளது.
அத்துமீறிய கொண்டாட்டங்கள்: விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் வீசுவது, தீபாவளிப் பட்டாசுகளை அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி மிகச் சத்தத்துடன் வெடிப்பது, குடியேற்றப் பகுதிகளில் கண்ட இடங்களில் கும்பலாகத் தெருக்களில் ஆடிப்பாடி ஆர்ப்பரிப்பது போன்ற தவறான பழக்கங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இத்தகைய பழக்கங்கள் தாய்நாடு மற்றும் தங்கியுள்ள நாடுகளுக்கு மட்டுமல்ல, எதிர்காலக் குடியேறிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மிக மோசமான விஷயம் என்னவென்றால், அவர்கள் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. இன்று இவர்கள் செய்யும் செயல்களின் விளைவுகளை அவர்களது குழந்தைகளே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்த இந்துத்துவா ஆதரவாளர்கள் செய்யும் செயல்களால் இந்துக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மற்ற சமூகத்தைச் சார்ந்த இந்தியர்களும் பாதிக்கப்படுகின்றனர். அதனால்தான் பல மேலை நாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான ஒரு வெறுப்பு மனப்பான்மை வளர்ந்து வருகிறது. இந்தப் 'புதிய எதிர்ப்பு மனப்பான்மை' ஒரு நாட்டு மக்களிடம் இருந்து மட்டுமல்ல, பல்வேறு நாட்டு மக்களிடம் இருந்தும் வருகிறது.
மேலை நாடுகள், இந்தியர்கள் இங்கு கோயில் கட்டி இந்தியப் பண்பாடு, கலாச்சாரத்துடன் வாழத் தடை விதிக்கவில்லை. ஆனால், 'இந்தியப் பண்பாடு, கலாச்சாரம்' என்ற பெயரில் அத்துமீறுவதால் இந்தியர்களுக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்து இருக்கின்றனர்.
பாகுபாடு: இங்கு மிகப் பெரிய பதவிகளை இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர். சுந்தர் பிச்சை, துணை அதிபரின் மனைவி கமலாவின் கணவர், கேஷவ் படேல் எனப் பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களில் யாரையும் இவர்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இந்த இந்துத்துவா ஆட்கள் செய்யும் அத்துமீறல்கள்தான் ஒட்டுமொத்த இந்தியர்கள் மீது ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றது.
விஷத் துளி: ஒரு தவறான தலைவன் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கிலும் உள்ள இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு துளி விஷம் எப்படி ஒரு குடம் பாலையும் விஷமாக்கிவிடுமோ, அப்படித்தான் இதுவும் இருக்கின்றது.
பெருமைக்கு இழுக்கு: அன்று விவேகானந்தரால் இந்தியாவிற்குப் பெருமை. ஆனால், அவரைப் போல நடிக்கும் ஒருவராலும், அவரை ஆதரிக்கும் கும்பலாலும் ஒட்டுமொத்த இந்தியர்களும் உலகெங்கும் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.
முன்பு அமெரிக்காவில் கருப்பினத்தவர்களைத் தீண்டத்தகாதவர்களாகப் பாவித்தது போல, இப்போது அமெரிக்காவில் இந்தியர்களைத் 'தீண்டத்தகாதவர்கள்' போலப் பாவிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதில் என்ன கொடுமை என்றால், இங்கு வாழும் கறுப்பினத்தவர்களும் இந்தியர்களைத் 'தீண்டத்தகாதவர்களாக'ப் பார்க்க ஆரம்பித்திருப்பதுதான்.
சமூகப் பிளவுகள்: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) தொடர்புடைய அமைப்புகள், அமெரிக்கா, ஐரோப்பா, கனடாவில் இந்தியர்களிடம் இஸ்லாமிய எதிர்ப்பு, இந்து தேசியவாதத்தைத் தூண்டி, சமூகப் பிளவுகளை உருவாக்கின. இது வெறும் பேச்சு அல்ல; 2022இல் இங்கிலாந்தின் லெஸ்டர் நகரில் இந்து-முஸ்லிம் மோதல்கள் வெடித்தன.
மீறல்களும் வெறுப்பும்:
தீபாவளி அன்று, அமெரிக்காவின் நியூ ஜெர்சி, கலிபோர்னியா தெருக்களில் இரவு 10 மணிக்குப் பிறகும் பட்டாசுகள் வெடிக்கின்றன சட்ட விதிகளை மீறி, அண்டை வாசல்களைத் திகைக்க வைத்து. கடந்த வாரம், நியூ ஜெர்சியில் போலீஸ் மற்றும் தீயணைப்புப் படையினர், இந்தியக் குடியேற்றிகளின் தெருக்களில் பட்டாசு வெடிப்பைத் தடுத்தனர்; உள்ளூர் மக்கள் 'இந்தியர்கள் விதிகளை அவமதிக்கிறார்கள்' என்று சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டினர்.
விநாயகர் சதுர்த்தி அன்று, லண்டன் மற்றும் டொராண்டோ நீர்நிலைகளில் பிளாஸ்டிக் சிலைகள் குப்பையாக வீசப்படுகின்றன சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி, உள்ளூர் ஆர்வலர்களின் கோபத்தைத் தூண்டுகின்றன. தமிழ்நாட்டின் நீர்நிலைகளில் கூட இத்தகைய கொண்டாட்டங்கள் மாசுபாட்டை அதிகரிக்கின்றன; ஆனால் வெளிநாட்டில், இவை 'அநாகரிகம்' (Uncivil) என்று சொல்லப்படுவதோடு, இந்தியக் கலாச்சாரத்தை 'தூய்மையின்மை' என்று இழிவுபடுத்துகின்றன.
இத்தகைய அத்துமீறல்கள் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பின் விதைகளை விதைக்கின்றன.
புள்ளிவிவரங்கள்: கனடாவில், 2019-2022க்கு இடைப்பட்ட காலத்தில் தென்கிழக்கு ஆசியர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் 132% அதிகரித்தன; இது இந்தியர்களை முக்கிய இலக்காகக் கொண்டது.
ஆன்லைன் வெறுப்பு: அமெரிக்காவில், 2025 தேர்தலுக்குப் பிறகு ஆசியர்களுக்கு எதிரான ஆன்லைன் வெறுப்பு 'அச்சுறுத்தலான அளவில்' உயர்ந்தது. இந்தியர்கள் 'விசா திருடர்கள்' என்று இழிவுபடுத்தப்பட்டனர். சமூக ஊடகங்களில், 'இந்தியர்கள் வேலைகளைத் திருடுகிறார்கள், சத்தமாகப் பேசுகிறார்கள், சுத்தமின்றி இருக்கிறார்கள்' என்ற வார்த்தைகள் பரவுகின்றன. இது இந்துத்துவா கும்பல்களின் செயல்களால் தூண்டப்பட்டது.
இந்த வெறுப்பு இந்துக்களை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் பாதிக்கிறது. உயர் பதவிகளில் அமர்ந்த இந்தியர்கள் இந்த வெறுப்பிலிருந்து தப்புகின்றனர், ஏனெனில் அவர்கள் 'அமெரிக்கமயமான' தோற்றத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், தெருக்களில் பட்டாசு வெடிக்கும் சாதாரண இந்தியக் குடும்பங்கள், 'தீண்டத்தகாதவர்கள்' என்று ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.
இந்துத்துவா ஆதரவாளர்கள் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்களது குழந்தைகள் அமெரிக்கப் பள்ளிகளில் 'இந்திய ஸ்கேமர்கள்' என்று அழைக்கப்படும். அவர்கள் இந்த வெறுப்பின் விளைவுகளைச் சந்திப்பார்கள்.
இந்தியக் குடியேற்றிகள் தங்கள் வெற்றிக்கு பொறுப்புள்ளவர்கள் இந்த நச்சைத் தடுக்காவிட்டால், 1965-ன் கனவுகள் 2025-ல் சிதைந்து போகும்
English Translation
Title: Sundar Pichais Escape, Ordinary Indian Families Become 'Untouchables': Hindutva Atrocities Destroying the Future of the Immigrant Community!
Leaders bearing Indian names in America's tech hubs, like Sundar Pichai, and political figures like Keshub Patel they are the symbols of Indian immigration success. But the semi-civilized celebrations of certain groups, fueled by India’s Hindutva politics, are pushing the entire Indian community toward the status of 'Untouchables'.
The noise of Diwali firecrackers, the debris of Ganesha idols, the uncontrolled public chaos on the streets—all these are fueling hatred against Indians in Western countries and threatening immigration opportunities. This is not just a cultural conflict; it is a social decay that jeopardizes the future of our next generation!
The 1965 U.S. Immigration and Nationality Act removed national-origin quotas. As a result, skilled professionals in medicine, engineering, and education from India opened America's doors. The H-1B visa program in the 1990s propelled this immigration to its peak. Today, over 4 million Indians are the backbone of America’s growth.
However, after the BJP came to power for the second time, Hindutva propaganda spread globally as a toxic campaign through immigrant Indians. The impact is now at its peak.
Excessive Celebrations: Bad practices such as immersing Ganesha idols in water bodies, setting off Diwali firecrackers loudly and far past permitted hours, and groups loudly reveling and chanting in immigrant neighbourhoods are constantly occurring.
Such habits are harmful not only to the homeland and the host countries but also to future immigrants. The worst thing is that they never think about the next generation. Their children will have to face the consequences of the actions they commit today.
The actions of these Hindutva supporters affect not just Hindus, but all other communities within the Indian diaspora, collectively. That is why an atmosphere of hatred against Indians is growing in many Western countries. This 'new resistance mentality' is coming not just from one nationality, but from people of various backgrounds.
Western nations have not banned Indians from building temples or living with Indian culture. But by transgressing in the name of 'Indian culture and tradition', they have started acting against Indians.
Discrimination: Indians hold very high positions here. We can list many examples: Sundar Pichai, the Vice President's spouse, Keshub Patel, etc. They are not opposing any of these individuals. But it is the transgressions of these Hindutva individuals that are creating a deep sense of hatred against all Indians.
A Drop of Poison: Because of the election of a wrong leader, Indians are suffering not only in India but globally. Just as a drop of poison can contaminate a whole pot of milk, so is this situation.
A Stain on Legacy: Vivekananda brought glory to India. But a person acting like him, and the mobs supporting him, are causing problems for all Indians across the globe.
Just as African Americans were historically treated as untouchables in the U.S., the truth is that Indians are now beginning to be treated as 'Untouchables' in America. The cruelty is that even African Americans who live here are now starting to view Indians as 'Untouchables'.
Social Splits: Organizations associated with the Rashtriya Swayamsevak Sangh (RSS) created social divisions by inciting anti-Islamic and Hindu nationalist sentiments among Indians in the US, Europe, and Canada. This was not just rhetoric; in 2022, Hindu-Muslim clashes erupted in Leicester, England.
Transgressions and Hatred:
On Diwali, firecrackers are set off in the streets of New Jersey and California, even after 10 PM, violating laws and startling neighbours. Last week, Police and Firefighters in New Jersey stopped the fireworks being set off by Indian immigrants; local residents complained on social media that 'Indians disrespect the rules.'
During Ganesh Chaturthi, plastic idols are dumped as trash in water bodies in London and Toronto, causing environmental pollution and angering local activists. Even in water bodies in Tamil Nadu, such celebrations increase pollution; but abroad, they are called 'Uncivil' and demean Indian culture as 'Impurity.'
These transgressions sow the seeds of hatred against Indians.
Statistics: Hate crimes against South East Asians in Canada increased by 132% between 2019 and 2022; Indians were a key target.
Online Hate: In the U.S., online hatred against Asians rose to 'alarming levels' after the 2025 elections. Indians were demeaned as 'Visa Thieves.' Words like 'Indians steal jobs, they are loud, and they are unclean' are spreading on social mediafueled by the actions of Hindutva mobs.
This hatred affects not just Hindus, but the entire Indian community Muslims, Christians, and Sikhs. High-ranking Indians escape this hatred because they have adopted an 'Americanized' appearance. But ordinary Indian families setting off firecrackers on the streets are being ostracized as 'Untouchables.'
Hindutva supporters do not think about the next generation. Their children who are being called 'Indian Scammers' in American schools will face the consequences of this hatred.
If Indian immigrants—who are responsible for their own success do not stop this poison, the dreams of 1965 will be shattered in 2025.
II. Hindi Translation
शीर्षक: सुंदर पिचाई तो बच रहे हैं, मगर आम भारतीय परिवार बन रहे हैं 'अछूत': हिंदुत्व के अत्याचारों से अप्रवासी समुदाय का भविष्य खतरे में!
अमेरिका के टेक हब में भारतीय नाम धारण करने वाले सुंदर पिचाई और केशव पटेल जैसे राजनीतिक चेहरे—ये भारतीय प्रवासन की सफलता के प्रतीक हैं। लेकिन भारत की हिंदुत्व राजनीति से प्रेरित कुछ समूहों के अदूरदर्शी जश्न, पूरे भारतीय समुदाय को 'अछूतों' की स्थिति में धकेल रहे हैं।
दिवाली के पटाखों का शोर, गणेश प्रतिमाओं का मलबा, सड़कों पर होने वाला अनियंत्रित हंगामा—ये सब पश्चिमी देशों में भारतीयों के खिलाफ नफरत को बढ़ा रहे हैं और अप्रवासन के अवसरों को खतरे में डाल रहे हैं। यह महज़ सांस्कृतिक संघर्ष नहीं है; यह सामाजिक पतन है जो हमारी अगली पीढ़ी के भविष्य को खतरे में डाल रहा है!
1965 के अमेरिकी आप्रवासन और राष्ट्रीयता अधिनियम (Immigration and Nationality Act) ने जन्म-आधारित सीमाओं को हटा दिया। इसके परिणामस्वरूप, भारत से चिकित्सा, इंजीनियरिंग और शिक्षा जैसे क्षेत्रों के प्रतिभाशाली पेशेवर अमेरिका के दरवाजे पर दस्तक देने लगे। 1990 के दशक में H-1B वीज़ा कार्यक्रम ने इस प्रवासन को चरम पर पहुँचाया। आज, 4 मिलियन से अधिक भारतीय अमेरिका के विकास की रीढ़ हैं।
लेकिन, भाजपा के दूसरी बार सत्ता में आने के बाद, हिंदुत्व का प्रचार अप्रवासी भारतीयों के माध्यम से विश्व स्तर पर एक ज़हरीले अभियान के रूप में फैल गया है। इसका प्रभाव अब चरम पर है।
अतिचारपूर्ण उत्सव: जल निकायों में गणेश प्रतिमाओं का विसर्जन करना, दिवाली पर देर रात तक बहुत तेज़ आवाज़ में पटाखे फोड़ना (अनुमति प्राप्त समय के बाद भी), और अप्रवासी क्षेत्रों की सड़कों पर समूहों में नाच-गाकर हंगामा करना—ये गलत आदतें लगातार हो रही हैं।
ऐसी आदतें न केवल मातृभूमि और मेज़बान देशों को, बल्कि भविष्य के अप्रवासियों को भी भारी नुकसान पहुँचा रही हैं। सबसे बुरी बात यह है कि वे अगली पीढ़ी के बारे में सोचते ही नहीं हैं। आज वे जो काम कर रहे हैं, उनका खामियाजा उनके बच्चों को भुगतना पड़ेगा।
इन हिंदुत्व समर्थकों की हरकतों से न सिर्फ हिंदू, बल्कि पूरे अन्य समुदायों के भारतीय भी प्रभावित हो रहे हैं। यही कारण है कि कई पश्चिमी देशों में भारतीयों के खिलाफ नफरत की भावना बढ़ रही है। यह 'नया विरोधी रवैया' सिर्फ एक देश के लोगों से नहीं, बल्कि विभिन्न देशों के लोगों से आ रहा है।
पश्चिमी राष्ट्रों ने भारतीयों को यहाँ मंदिर बनाने या भारतीय संस्कृति के साथ जीने से मना नहीं किया है। लेकिन 'भारतीय संस्कृति और परंपरा' के नाम पर अतिचार करने के कारण वे भारतीयों के खिलाफ काम करना शुरू कर चुके हैं।
भेदभाव: यहाँ बड़े-बड़े पदों पर भारतीय विराजमान हैं। सुंदर पिचाई, उपराष्ट्रपति की पत्नी के पति, केशव पटेल—जैसे कई उदाहरण दिए जा सकते हैं। इनमें से किसी का भी वे विरोध नहीं कर रहे हैं। लेकिन इन हिंदुत्व समर्थकों के अतिचार ही हैं जो सभी भारतीयों के खिलाफ एक गहरी नफरत पैदा कर रहे हैं।
विष की बूँद: एक गलत नेता के चुने जाने के कारण, भारतीय न केवल भारत में, बल्कि पूरी दुनिया में प्रभावित हो रहे हैं। जैसे एक बूँद ज़हर पूरे घड़े के दूध को ज़हरीला बना देता है, वैसे ही यह भी है।
गौरव पर कलंक: एक समय में विवेकानंद ने भारत को गौरव दिलाया था। लेकिन उनके जैसा अभिनय करने वाले एक व्यक्ति और उनका समर्थन करने वाले समूहों के कारण, दुनिया भर के सभी भारतीय समस्याओं का सामना कर रहे हैं।
जिस तरह पहले अमेरिका में अफ्रीकी अमेरिकियों को अछूत माना जाता था, उसी तरह अब भारतीयों को अमेरिका में 'अछूतों' की तरह मानना शुरू कर दिया गया है—यही सच्चाई है। इसमें दुख की बात यह है कि यहाँ रहने वाले अफ्रीकी अमेरिकी भी अब भारतीयों को 'अछूत' के रूप में देखने लगे हैं।
सामाजिक दरारें: राष्ट्रीय स्वयंसेवक संघ (RSS) से जुड़े संगठनों ने अमेरिका, यूरोप और कनाडा में भारतीयों के बीच इस्लाम विरोधी और हिंदू राष्ट्रवादी भावनाओं को भड़काकर सामाजिक दरारें पैदा कीं। यह महज़ बात नहीं थी; 2022 में इंग्लैंड के लीसेस्टर शहर में हिंदू-मुस्लिम दंगे भड़क उठे।
अतिचार और नफरत:
दिवाली के दिन, न्यू जर्सी और कैलिफ़ोर्निया की सड़कों पर रात 10 बजे के बाद भी पटाखे फोड़े जाते हैं—नियमों का उल्लंघन करते हुए, पड़ोसियों को चौंकाते हुए। पिछले हफ़्ते, न्यू जर्सी में पुलिस और दमकल विभाग ने भारतीय अप्रवासियों द्वारा पटाखे फोड़ने को रोका; स्थानीय लोगों ने सोशल मीडिया पर आरोप लगाया कि 'भारतीय नियमों का अनादर करते हैं।'
गणेश चतुर्थी के दौरान, लंदन और टोरंटो के जल निकायों में प्लास्टिक की मूर्तियों को कूड़े के रूप में फेंक दिया जाता है—पर्यावरण प्रदूषण पैदा करते हुए, स्थानीय कार्यकर्ताओं के गुस्से को भड़काते हुए। तमिलनाडु के जल निकायों में भी ऐसे उत्सव प्रदूषण बढ़ाते हैं; लेकिन विदेशों में, इन्हें 'असभ्य' कहा जाता है और भारतीय संस्कृति को 'अशुद्धता' कहकर बदनाम किया जाता है।
ये अतिचार भारतीयों के खिलाफ नफरत के बीज बोते हैं।
आँकड़े: कनाडा में, 2019-2022 के बीच दक्षिण पूर्व एशियाई लोगों के खिलाफ नफरत अपराधों में 132% की वृद्धि हुई; इसमें भारतीय मुख्य लक्ष्य थे।
ऑनलाइन नफरत: अमेरिका में, 2025 के चुनावों के बाद एशियाई लोगों के खिलाफ नफरत 'खतरनाक स्तर' तक बढ़ गई। भारतीयों को 'वीज़ा चोर' कहकर बदनाम किया गया। सोशल मीडिया पर 'भारतीय नौकरियाँ चुराते हैं, वे शोरगुल करते हैं, और वे गंदे हैं' जैसे शब्द फैल रहे हैं—जो हिंदुत्व समूहों की हरकतों से प्रेरित है।
निष्कर्ष:
यह नफरत केवल हिंदुओं को नहीं, बल्कि पूरे भारतीय समुदाय—मुसलमानों, ईसाइयों और सिखों—को प्रभावित करती है। उच्च पदों पर बैठे भारतीय इस नफरत से बच जाते हैं क्योंकि उन्होंने एक 'अमेरिकीकरण' स्वरूप अपना लिया है। लेकिन सड़कों पर पटाखे फोड़ने वाले साधारण भारतीय परिवारों को 'अछूतों' के रूप में अलग कर दिया जाता है।
हिंदुत्व समर्थक अगली पीढ़ी के बारे में नहीं सोचते हैं। उनके बच्चे—जिन्हें अमेरिकी स्कूलों में 'इंडियन स्कैमर' कहा जाता है—इस नफरत के परिणामों का सामना करेंगे।
अगर भारतीय अप्रवासी—जो अपनी सफलता के लिए जिम्मेदार हैं—इस ज़हर को नहीं रोकते, तो 1965 के सपने 2025 में बिखर जाएँगे।
அன்புடன்
மதுரைத்தமிழன்
#IndiaPoison, #NRIUntouchables, #இந்துத்துவாஅத்துமீறல்,#AvargalUnmaigal, #ImmigrationRisk, #SundarPichaiVsCommonMan #HindutvaAtrocities #OverseasIndians #india #political # social issues,

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.