ஒரு பெண்ணை பெற்று எடுத்து நன்றாகக் கல்வி பண்புகள் போன்றவற்றை கற்றுக் கொடுத்து அந்த பெண்ணை ஒரு நல்ல மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்து கொடுத்த பின் அந்த பெண் எனக்குத்தான் சொந்தம் அதனால் எனக்குத்தான் எல்லா உரிமையும் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? அது போலத்தான் #இளையராஜாவின் இசையும் தயாரிப்பாளருக்குச் சொந்தமான பின் அதில் உரிமை கொள்வது தவறு.
அப்படியானால் இன்றைய இசையமைப்பாளர்கள் தங்களது இசைக்கு தாங்களுக்குதான் முழு உரிமை என்று ஒப்பந்தம் போட்டு வைத்துக் கொள்கிறார்களே அது சரிதானா என்று கேட்டால்.. காலம் மாறி போச்சு இன்றைய காலத்தில் பெண்ணை பெற்றவர்கள் ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு தன் பெண்ணை கட்டி தரச் சம்மதிக்கும் போதே வீட்டோட மாப்பிள்ளையாக வரச் சம்மதம் என்றால் தாங்கள் கட்டி தரத் தயார் என்று சொல்வது போலத்தான் இன்றைய புதிய இசையமைப்பாளர்கள் தங்களது இசைக்கு முழு உரிமையை எடுத்துக் கொள்கிறார்கள்.
இளைய ராஜா இசை அந்த காலத்தில் தான் வளர்த்த பெண்ணைக் கட்டிக் கொடுத்தது போலத்தான் . காலம் கடந்த பின் மற்றவர்களைப் பார்த்து தானும் வீட்டோட மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ள முயல்வது நடக்காது.

அன்புடன்
மதுரைத்தமிழன்
தயாரிப்பாளர் என்ற பிரம்மன் (முதலாளி) இல்லை என்றால் திரையுலகில் எவனுக்குமே வாழ்வு கிடையாது.
ReplyDeleteநாயகன் முதல் லைட்பாய் வரையில்....