Sunday, May 12, 2024

 தமிழர்களுக்கு அன்னையர் தினத்திற்கும் அன்னையின் நினைவு நாளுக்கும் வித்தியாசம் தெரியலையா என்ன?

  

avargal unmaigal


அன்னையர் தினம் என்பது தாய்மார்கள் மற்றும் தாய்மையைப் போற்றும் ஒரு கொண்டாட்டமாகும், அதே போல் சமுதாயத்தில் தாய்மார்களின் செல்வாக்கை நிலை நிறுத்தும் ஒரு செயலாகும்,


அன்னையர் தினம் பல்வேறு வழிகளில் பரிசுகள்,  வாழ்த்து அட்டைகள் , பூக்களை  வழங்குதல் மற்றும் தாய்மார்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுதல் என்று   கொண்டாடப்படுகிறது, . அன்னையர்கள்  தங்கள் குடும்பங்களுக்காகச் செய்யும் அன்பு, அக்கறை மற்றும் தியாகங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நேரம் இது. தனிநபர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தை வடிவமைப்பதில் தாய்மார்கள் வகிக்கும் முக்கிய பங்கை அங்கீகரிக்க இது ஒரு வாய்ப்பாகும்

அன்னையர் தினத்தின் தோற்றம் பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய திருவிழாக்களிலிருந்து அறியப்படுகிறது, அவை தாய் தெய்வங்களை மதிக்கின்றன. இருப்பினும், இன்று நாம் அறிந்த நவீன அன்னையர் தினம் அமெரிக்காவில் அதன் வேர்களைக் கொண்டுள்ளது. உத்தியோக பூர்வ அன்னையர் தினத்திற்கான பிரச்சாரம் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கியது, அன்னா ஜார்விஸ் தலைமையில், அவர் எல்லா இடங்களிலும் தனது சொந்த தாய் மற்றும் தாய்மார்களைக் கௌரவிக்க விரும்பினார்.


1914 ஆம் ஆண்டில், ஜனாதிபதி உட்ரோ வில்சன் அதிகாரப்பூர்வமாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக நியமித்தார், இது அமெரிக்காவில் ஒரு தேசிய விடுமுறையாக மாற்றப்பட்டது. அங்கிருந்து, கொண்டாட்டம் மற்ற நாடுகளுக்கும் பரவியது, ஒவ்வொன்றும் அதன் சொந்த மரபுகள் மற்றும் தாய்மார்களை மதிக்கும் பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ளன.


அவ்வளவுதானுங்க அன்னையர் தினம் என்பது...


ஆனால் இன்று நான் சமுக இணைய தளங்களில் நம் தமிழ்கள் பலவிதமாக எழுதிப் பதிந்த ரைட் அப்புக்களை  பார்க்கும் போது அது அன்னையர் தின பதிவாகத் தெரியவில்லை. அதை அன்னையின்  நினைவு தின பதிவாகத்தான் எனக்குத் தோன்றியது.. இதில் பிரபல பதிவர்களும் அன்னைக்கு நினைவு அஞ்சலி செலுத்திய மாதிரின் எழுதிப் பதிவிட்டு இருந்தனர்



🙁"Mother's day is a mom's memorial day since lots of
folks just think about their moms on Mother's Day
"


பலரும் இறந்த போன அன்னையை நினைவு கூர்ந்து பதிவுகள் எழுதி இருந்தனரே தவிர உயிரோடு இருக்கும் அம்மாவைச் சந்தித்தும் பேசி அவர்களுக்குப் பரிசுகள் வாங்கி கொடுத்து, கூட இருந்து உணவு வாங்கி கொடுத்து அல்லது சமைத்துக் கொடுத்து தங்களின் அன்னையர்களுடன் செலவிடும் நேரத்தைப் பற்றி இது வரை யாரும் எழுதவில்லை..

சிலர் மட்டும் தங்கள் மனைவிக்கு இப்படிச் செய்து  அன்னையர் தினத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள். மனைவியும் ஒரு அன்னைதான் ஆனால் தன்னை பெற்று எடுத்து வளர்த்தவளும் அன்னைதானே அவர் உள்ளூரில் வேறு இடத்தில் வசித்தாலும் அல்லது வெளியூரில் வசித்தாலும் அங்குச் சென்று அவர்களுக்கு மரியாதை செலுத்துவதுதானே முறை.

இந்த வருடம் முடிந்துவிட்டது அடுத்த வருடத்திலிருந்தாவது நாம் அன்னையை நேரில் சென்று கெளரவிப்போம்

உடனுக்குடன் எனது யூடியுப் வீடியோ க்ளிப்களை கண்டு மகிழ  இங்கே செல்லுங்கள் www.youtube.com/@maduraitamilguy

சின்ன சிறு செய்திகளை கண்டு ரசிக்க  இங்கே வாருங்கள் https://www.facebook.com/avargal.unmaigal/


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. நான் மகன் வீட்டுக்கு வந்து இருக்கிறேன். மருமகளின் அம்மாவும், நானும் சேர்ந்து வந்தோம். எங்கள் இருவருக்கும் , மருமகளுக்கும் அன்னையர் தினத்தை பேரனும், மகனும் சேர்ந்து சர்ப்ரைஸ் விழாவாக செய்தார்கள். என் மகளையும் நேரலையில் அழைத்து கலந்து கொள்ள வைத்தார்கள், கேக் வெட்டினார்கள், ஓட்டல் அழைத்து சென்றார்கள். பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்கள்.

    ஊரில் உள்ள உறவினர்களுக்கு அன்ன்னையர் தின வாழ்த்து சொல்லி மகிழ்ந்தோம்.
    நாங்கள் இருவரும் இது நாள் வரை போகாத அழகு நிலையம் அழைத்து சென்றார், பெடிக்யூர் என்று கால்களுக்கு , உள்ள நகங்களை சீர் அமைத்து பாத சிகிட்சை செய்ய வைத்தார் .
    நான் எப்போதும் கால், கைகளில் நகங்கள் வளர்க்க மாட்டேன் கட் செய்து சுத்தமாக வைத்து இருப்பேன். வேண்டாம் என்று மறுத்துப்பார்த்தேன், மருமகள் உங்கள் கால்களுக்கு புத்துணர்வு கிடைக்கும் வாங்க என்று அழைத்து சென்றாள்.

    ஊரில் இருக்கும் போது இது ஒன்றுமே இல்லாமல் அம்மா சாப்பிட்டாயா என்று ஆதரவாய் பேசினாலே போதும், பக்கத்தில் இருக்கும் போது கைகளை இதமாக பிடித்துக் கொண்டு அருகே அமர்ந்து புன்னகை செய்தாலே அம்மா மகிழ்வாள்.

    வெளி நாட்டில், வெளியூரில் இருப்பவர்கள் நேரத்தை ஒதுக்கி அம்மா, அப்பாவுடன் பேசுங்கள், குழந்தைகளை தாத்தா, பாட்டியிடம் பேச வையுங்கள். முடிந்த போது ஊருக்கு போய் அம்மா, அப்பாவை பார்த்து வாருங்கள் அது போதும். பெற்றோர் வாழ்த்துவார்கள்.
    வயதானபின் வெளி நாட்டு பயணம் கடினம் .

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பாக்கியம் செய்தவர். வயதான காலத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வதை விட வேறு எந்த பாக்கியமும் இந்த உலகத்தில் இல்லை

      Delete
  2. நான் ஆறுமாதம் தான் இருக்க முடியும். ஊருக்கு போய் விடுவேன்.

    ReplyDelete
    Replies

    1. ஒரு வருடம் கூட இருக்க முடியும் அப்ப்டி இருந்தால் அடுத்த தடவை வரும் போது கொஞ்சம் இடைவெளி கொடுக்க வேண்டும்

      Delete
  3. முன்பு வந்து ஒரு வருடம் இருந்து விட்டேன். இந்த தடவையும் கூடுதலாக இரண்டு மாதம் இருக்க போகிறேன். அனுமதி பெற வேண்டும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.