Sunday, May 5, 2024

 சன் தொலைக்காட்சியில் ராமாயணத் தொடர் ஒலிபரப்ப அரையனா அறிஞர்கள் எதிர்ப்பா?
  

avargal unmaigal



சன் TV என்பது இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி பொழுதுபோக்கு தொலைக்காட்சியாகவும் உள்ளது. இது சென்னையைச் சேர்ந்த ஊடக நிறுவனமான சன் குழுமத்தின் சன் டிவி நெட்வொர்க்கின் முதன்மை அலைவரிசையாகும். இந்த அலைவரிசை கலாநிதி மாறன் என்பவரால் 14 ஏப்ரல் 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.  சண் தொலைக்காட்சியில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் காலத்திற்கேற்ப மக்களின் வரவேற்பிற்கு ஏற்ப பல விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்த டீவியில் தற்போது ராமாயணம் ஒரு தொடர் நிகழ்ச்சியாக வரப் போகிறது என்று சன் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது. இதை அறிந்த உடனே அரைகுறை அரையனா அறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கண்டனத்தைப் பலவித தளங்களில் பதிந்து வருகிறார்கள். இந்த தொடர் வெளி வந்தால்  அந்த சன் டிவி நிறுவனத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் கூறிவருகிறார்கள்


சன் டிவி நிறுவனத்தார் கலைஞசர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தான் .ஆனால் அதற்காக அவர்கள்  திராவிட கொள்கையை பரப்ப சன் நிறுவனத்தை ஆரம்பிக்க வில்லை. அவர்கள் தங்களின் சொந்த தொழிலாக, லாபம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாகவே அதை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் நிறுவன வளர்ச்சிக்காகக்  கலைஞரை திமுக கட்சியைப் பயன்படுத்திக் கொண்டார்களே தவிரக்  கலைஞருக்கு உதவுவதற்காகவோ அல்லது திமுகவின் கொள்கைகளைப் பரப்புவதற்காகவோ அதை அவர்கள் ஆரம்பித்து நடத்தவில்லை என்பதான் உண்மை


இப்படி கலைஞரை, திமுக கட்சியை  தங்களது வளர்ச்சிக்காகப் பயன்படுத்திய நன்றி உணர்வு காரணமாக  திமுக தரப்பு செய்திகளையும் அவர்கள் ஒலிபரப்பி வந்தார்களே தவிர திமுகவை வளர்க்க அவர்கள் நிறுவனத்தைத் தொடங்கவில்லை. தங்கள்  தொழில் வேறு  தாங்கள் சார்ந்த கட்சி வேறு என்பதாக கருதித்தான் அவர்கள் நடந்து வந்தார்கள் .அவர்களிடம் எந்த குழப்பமும் இல்லை அவர்கள் மிகத் தெளிவாகவே இருந்தார்கள்.

ஆனால் திமுக தலைமைக்கும் மற்றும் கட்சியினருக்கும்  சரியான புரிதல் இல்லாதால் மாறன் சகோதரர்களுக்கும் திமுக தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாகத்தான் கலைஞர் டிவி ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பிறகு சன் டிவி வழக்கம் போல தங்கள் பாதையில்  அது சென்று கொண்டு இருக்கிறது அதனால்தான் அவர்கள் தாங்கள் சார்ந்த கட்சி திமுக என்றாலும் தங்கள் பிஸின்ஸ் வேறு என்பதால் பாஜக கட்சியின் விளம்பரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்தார்கள்..


இப்போது அவர்களின் கணிப்பின்படி, இன்னும் அவர்களின் சந்தாதாரர்களைத் தக்க வைக்க ராமாயணம் ஒலிபரப்ப இருக்கிறார்கள்.  ராமாயணம்  தொடர் ஒன்றும் மோசமானது அல்ல அது ஒரு மதத்தின் இதிகாசக் கதைதான்..  அதில் ஆபாசம் என்பது இல்லை...அதனால் அதை ஒலிபரப்புவதில் தப்பேதும் இல்லை.. அவர்கள் இதிகாசக் கதையைத்தான் ஒலிபரப்புகிறார்களே ஒழிய இந்தத்துவாவை ஆதரித்து நிகழ்வுகள் நடத்தவில்லை .அதனால் அதற்கு எதிர்ப்பை தெரிவிப்பது என்பது முட்டாள்தனம்.  சண்டிவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்றால் அதில் வரும் பல நிகழ்ச்சிகள் சமுகத்தைக் கெடுக்கின்றன. அதனால் அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம்


ராமர் கோவில் கட்டிய விதத்திற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கலாம் ராமரை வைத்து அரசியல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் ஆனால் ராமருக்கோ அல்லது ராமாயணத்திற்கோ எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரையனா அறிஞர்கள் செய்யும் செயல்

கடவுள் நம்பிக்கை உங்களுக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ராமர் என்பவர் இந்து மதக் கடவுள் அதைப் பலரும் வழிப்பட்டு வருகின்றனர் அதனால் அந்த கடவுளைப் பற்றி நிகழ்வுகளை ஒலிபரப்புவது தவ்ரு இல்லை. அது  போல மற்ற மதக் கடள்வுகளைகளை பற்றிய பக்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதும் தவறு இல்லை

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.