நீங்கள் சொல்லும் அந்த ஒரு வார்த்தை ஒருவரை காலம் முழுவதும் சந்தோஷம் அடையச் செய்யலாம் அது எப்படி என்று சொல்லுவதுதான் இந்த சிறு வீடியோ
ஒருவர் அழகாகவோ அல்லது அவர் செய்த செயல்கள் பாராட்டும்படி இருந்தாலோ அல்லது அவர் இட்ட பதிவுகள் நல்லதாக இருந்தாலோ அல்லது அவர் உதவி செய்வது செய்தது உங்களுக்கு தெரியவந்தாலோ அல்லது அவரின் பேச்சோ ,அவர்களின் சமுக சேவையோ இது போலப் பலவற்றை சொல்லலாம். அப்படி மற்றவர்கள் ஏதாவது செய்தால் அவர்களை ஒரு வார்த்தை பாராட்டிச் செல்லுங்கள் .அதற்கு ஒரு வினாடி கூட ஆகாது .ஆனால் அதனால் அவர்களுக்கு கிடைக்கும் சந்தோஷம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் கூட நீடிக்கலாம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள் .உங்களின் உழைப்பை அவர்களுக்கு அள்ளிதாருங்கள் என்று நான் சொல்லவில்லை . நீங்கள் கற்ற கல்வியிலிருந்து ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சொல்லுங்கள் என்றுதான் சொல்லுகின்றேன்.
வாங்க நம்ம சேனலுக்கு .... விருப்பம் இருந்தால் இணைந்து கொள்ளுங்கள். இன்ங்கே இப்படி சின்ன சின்ன செய்திகளை பதியலாம் என நினைக்கின்றேன்
https://www.youtube.com/@maduraitamilguy
அன்புடன்
மதுரைத்தமிழன்
உண்மைதான் தமிழரே பாராட்டுக்கள்.
ReplyDelete