Saturday, March 9, 2024

 தமிழகத்தில் வாழும் ஒரே ஒரு அறிவுச்சுடர் ஜெயமோகன் மட்டும்தான்.
  

avargal unmaigal



அவருக்கு உள்ள அறிவு போல வேறு யாருக்கும் அறிவே கிடையாது.



அதனால்தான் அவர் மஞ்ஞுமெல் பாய்ஸ் மலையாளப்படத்தை விமர்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒட்டு மொத்த மலையாள சமுகத்தைக் கழுவி ஊற்றி இருக்கிறார்.


குடிகாரகள் காட்டுக்குள் குடித்துவிட்டு அங்கேயே பாட்டில்களைத் தூக்கிவீசுவதால் காட்டில் உள்ள விலங்குகள் துன்புறுகின்றனவாம். அடேய் அப்ப நாட்டுக்குள் குடிக்காதவர்கள் தூக்கி தெருவில் ஏறியும் குப்பைகளால் பாதிக்கும் மனிதர்களைப் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறாயா? இந்த அறிவாளி மட்டும் குப்பைகளைத் தெருவில் போடாமல்  குப்பைத் தொட்டியைத் தேடித்தான் குப்பை போடுகிறாரா என்ன?  அதில் பாட்டில்களைத் தனியாகவும் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித்தனியாகத்தான் பிரித்துப் போடுகிறாரா? அப்படிக் குப்பைகளுக்கு எனத் தனித் தனி தொட்டிகள் இல்லையென்றால் இந்த அறிவுஜீவி அதற்காக அரசாங்கத்திடம்  புகார் அளித்து இருக்கிறாரா? அல்லது அரசாங்கம் செவி சாய்க்காத  போது தன் சொந்த செலவில் அதற்கென தனித் தனி தொட்டிகள் சொந்த செலவிலாவது வாங்கி வைத்துத்தான் கொட்டுகிறாரா என்ன? அறிவாளி என்றால் இப்படித்தானே செய்து இருப்பார்.

ஜக்கி வாசுதேவ் காட்டை அழித்து கோயில் கட்டினாரே அப்போது அதனால் விலங்குகள் பாதிக்கப்பட வில்லையா? அல்லது காட்டிற்கு அருகே சிவராத்திரியைப் பெரிய பெரிய ஒலிப் பெருக்கிகள் வைத்து ஆடி பாடி மகிழ்வதால் அந்த ஓசைகளால் விலங்குகள் பாதிக்கப்படுவதில்லையா அது பற்றி இந்த றிவு ஜீவி  எழுதி இருக்கிறாரா என்ன?



 சரி அதை எல்லாம் விடுங்கள் குடிக்காதவர்கள் கோயிலுக்குச் செல்லும் போது அங்கு என்ன செய்கிறார்கள். கோயில்கள் புனித இடம்தானே அங்குச் செல்லுபவர்கள் குடிகாரர்கள் இல்லைதானே அப்ப என்ன ___க்கு அங்குக் கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி தின்றுவிட்டு அங்கேயே கண்ட கண்ட இடங்களில் குப்பைகளைப் போடுகிறார்களே .அது எப்படி  உமக்கு  எப்படி தோன்றுகிறது. ஜெயமோகனாரே. கோவில்களில் உள்ள தூண்களில் மறந்தும் சாய்ந்து விட முடியுமா என்ன? அது பக்தர்களின் கைகளைத்  துடைக்கும் இடங்களாகத்தானே இருக்கிறது..


இந்த அறிவாளிகளுக்கெல்லாம் குடிப்பதும் அசைவம் உண்பதுதான் குற்றம் முட்டாள்தனம் .ஆனால் அவர்கள் செய்யும் அயோக்கியத்தனங்கள் எல்லாம் அறிவாளி தனங்கள்..

இப்போது திரைத்துறை என்றில்லாமல் எல்லாமே வணிக மயமாகத்தான் மாறிவிட்டன. கோயில்களும் மதங்களுமே இப்போது வணிக மாயமாகிவிட்டன. பள்ளிகளில் கூட நீதி போதனைகள் வகுப்புக்கள் நீக்கப்பட்டு அதுவும் வணிக தளங்களாகிவிட்டது. ஏன் எழுத்தும் கூட இப்போது வணிக மயமாகிவிட்டது. அதனால்தான் இன்றைய எழுத்துகள் கூட அராத்து மாதிரியான இளைஞன் என்ற எழுத்தாளன் எழுதும் எழுத்துகள்தான் பலராலும் வாங்கி படிக்கப்படுகின்றன. காரணம் இன்றைய சூழ்நிலையில் இன்றைய இளைய சமூகத்தினரைக் கவனித்து அவர்களோடு வாழ்ந்து  அவர்களைப் பற்றி அறிந்து அவர்களுக்கேற்ற தலைப்பையும் புத்தகங்களின் அட்டைகளையும் வடிவமைத்து  எழுதும் வெளியிடும் புத்தகங்கள்தான் வெற்றியடைகின்றன. எழுத்துகள் அன்றைய சமுகத்தை வெளிபடுத்துபவையாக இருக்க வேண்டும். இன்று வரை பேசப்படும் பல பண்டைய இலக்கியங்கள் கூட அன்றை சூழ்னிலையை சமுக நிலையை எடுத்து சொல்பவையாக இருக்கின்றன. அவைகள்தான் இன்று வரை பேசப்படுகின்றன. மற்றவைகள் குப்பைகளோடு குப்பைபகளாகிவிட்டன என்பதுதான் உண்மை.

உலகமே வணிகமாகிவிட்டது என்பதைக் கூட உணர்ந்து கொள்ளாதவர்தான் இந்த அறிவாளியாம். அதைவிட்டுவிட்டு சங்கிகள் கூட்டங்களில் சேர்ந்து கொண்டு இலக்கிய எழுத்தாளர் என்ற பெயரில் மற்றவர்களைக் கறித்துக் கொட்டுவதுதான் அவரது அறிவாளித்தனம் என்றால் அந்த அறிவாளித்தனம் எங்களுக்கு வேண்டியதில்லை



மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் 


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.