Saturday, November 11, 2023

 தமிழகத்தில் திராவிடம் சாதிக்கிறது உபியில் மதவாதம் என்ன செய்கிறது? 

 

avargal unmaigal



திராவிடக்கட்சி மதவாதக் கட்சி அல்ல... அவர்கள் மதத்திற்கு எதிரானவர்களும் அல்ல... அதனால்தான் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் தங்கள் சொந்தங்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடச் செல்ல விழைவோர்களுக்காகப்   பேருந்து வசதிகள் செய்து கொடுக்க தங்களால் முடிந்த  எல்லாவற்றையும் செய்து தந்து இருக்கிறார்கள்

அதற்காக அரசு அதிகாரிகளை மட்டுமல்ல போக்குவரத்துத் துறையைச் சார்ந்த அமைச்சர் சிவசங்கரையும் களத்தில் இறங்கச் செய்து சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
 


இதற்காகத் தமிழக அரசையும் அமைச்சர் சிவசங்கரையும் பாராட்ட வேண்டும்... இதையும் குறை சொல்லுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் அவர்களிடம் ஒரு கேள்வி இந்துக்களுக்கு எதிராக  திமுக செயல்படுகிறது என்பவர்கள் இந்தியாவில் இப்படி எந்த ஒரு மாநிலத்திலாவது தீபாவளி சமயத்தில் மக்கள் தீபாவளி  தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று ஒரு அரசோ அல்லது அமைச்சரோ இப்படிச் செயலாற்றி இருக்கிறார்கள் என்று சொல்லிக் காட்ட முடியுமா என்ன?

இந்துக்களுக்கு எதிராகச் செயல்படும் என்று சொல்லப்படும் திமுக அரசு தீபாவளி சமயத்தில் இப்படி மக்களின் சந்தோஷத்திற்காக இப்படிச் செயல்படும் போது இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசுகள் இதைவிட மேலாகத்தானே செயல்பட்டு இருக்க வேண்டும்.. ஆனால் அப்படிப்பட்ட செய்திகள் ஏதுவும் இந்தியா முழுவதையும் அலசி பார்த்தால் ஒன்றைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லைதான்.


இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மதவாத அரசான உபி இந்த தீபாவளிக்குச் செய்தது என்ன? தீபாவளிக்காக அயோத்தி முழுக்க 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைத்தது உத்தரப்பிரதேசம் அரசு!  லட்சக்கணக்கான அகல்விளக்கை  மக்களின் வரிப்பணத்திலிருந்து  செலவு செய்து ஏற்றி கின்ன்ஸ் ரிக்கார்டில் வர ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்

இதனால் சமுகம் அடைந்த பலன் என்னவென்று ஏதாவது சொல்ல முடியுமா என்ன?

இந்த படத்தைப் பாருங்கள் அதுவே மதவாத அரசின் நிலையை எடுத்துச் சொல்லும்

 




இந்த வீடியோவை பாருங்கள் விளக்கேற்றுவது உயர் சாதி வர்க்கத்தை சார்ந்தவர்கள் அல்ல ஏழைக் குழந்தைகள். இப்படி விளக்கு ஏற்றுவதால் அன்று ஒரு வாய் கஞ்சி குடிக்க கிடைத்து இருக்கலாம் ஆனால் இதற்காக செலவு செய்த பணத்தை திராவிட அரசு போல சமுக நலத்திட்டங்கள் கொண்டு வந்து இருந்தால் இந்த குழந்தைகளோ அல்லது ஏழைகளோ பலன் அடைந்து இருப்பார்கள்தானே?

 


இப்படிப்பட்ட சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற முடியாத அரசுதான் .தீப ஒளி ஏற்றி கின்னஸ்புக்கில் சாதனை செய்கிறது. ஏது முக்கியம் மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதா அல்லது ஒரு நாள் கூத்துக்கு ஒளியேற்றுவதா?


சங்கிகள் எதுவும் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தீபாவளியன்று அயோத்தியின் இந்த படங்களைப் பார்த்தால்  உண்மையான ராம பக்தர்களின் இதயம் கூட உருகிவிடும்.


ஏழைப் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டத்தால் இந்த தீபாவளி சமயத்தில் பயனடைந்தவர்கள் எத்தனை பேர்கள் என்று கேட்டு பாருங்கள்... கேட்பது இப்படி அரசு கொடுக்கும் தொகையை வாங்கபவர்களித்தே மட்டும் கேளுங்கள் அதைவிட்டு விட்டு மேல் தரத்து  வர்க்கத்திடம் கேட்காதீர்கள்


பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத்திட்டம் இதனால் எத்தனை பெண்கள் பயன் அடைந்துள்ளார்கள் என்று கேட்டுப் பாருங்கள்

பள்ளிக் குழந்தைகளுக்கான காலை மதிய உணவுத் திட்டம் பலன் அடைந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்

இப்படி செய்துவதுதான் சமுக நலன். அதைவிட்டு விட்டு விளக்கு ஏற்றுவது கையை தட்டுவது ஜெய் ஸ்ரீராம் சொல்வது என்பதால் எந்த சமுகமும் உயர்ந்து விடாது.




  அனைத்து நண்பர்களுக்கும்   இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்'  தனித் தனியாக சொல்ல நேரம் இல்லாததால் இங்கேயே அனைவருக்கும் என் வாழ்த்துக்களை சொல்லி கொள்கின்றேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.