அனைத்து நண்பர்களுக்கும் "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்' தனித் தனியாக சொல்ல நேரம் இல்லாததால் இங்கேயே அனைவருக்கும் என் வாழ்த்துகளை சொல்லி கொள்கின்றேன்
தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி அன்று என்ன செய்வார்?
தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி அன்று
மனைவியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத்தான் காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்.
மனைவி ஆசையாக வாங்கி தந்ததால் மட்டும் புதிய ஆடைகளை அணிந்து கொள்வார்
மனைவி விருப்பத்திற்கிணங்க மட்டும்தான் சாமி படம் முன் நின்று அவர் இடும் சந்தனத்தை நெற்றியில் இட அனுமதி கொடுப்பார்
மனைவி கடவுளை வணங்கிவிட்டு அதன் பின் அவரின் காலில் விழுந்து வணங்கு போது அதற்கு மதிப்பு அளித்துதான் ஆசிர்வதித்து வாழ்த்துவார்
மனைவி ஆசையாகச் செய்து, கடவுளுக்குப் படைத்த பலகாரங்களை மிகச் சுவையாக இருப்பதால்தான் உண்டு மகிழ்வார்.
மனைவியுடன் சேர்ந்து தனது சந்தோஷத்திற்காக மட்டும்தான் மகன் மகள் மற்று பேரக் குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து மகிழ்வார்.
ஆனால் அவருக்கு மத சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாததால் தீபாவளி பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை .அதனால்தான் பொதுமக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதில்லை...
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் சொல்ல மாட்டார்.
ஆனால் திமுகவில் உள்ள அனைவரும் மதச் சார்பின்றி அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை சொல்லி செல்வார்கள்.
ஆனால் பிரதமர் தீபாவளி நல்வாழ்த்துக்களை மக்கள் அனைவருக்கும் சொல்லுவார்.
ஆனால் சங்கிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைச் சொல்வதற்குப் பதில் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை என்று கதறிக் கொண்டிருப்பார்கள். #சங்கிகள் தனிப் பிறவிகள்
இந்து சொந்தங்களே, இந்துக்கள் கடையில் பொருட்களை வாங்குங்கன்னு சொல்றிங்களே.
ஆனால் இந்து கடையோ அல்லது இஸ்லாமியக் கடையோ அங்கு விற்கப்படும் ரெடிமேட் ஆடைகள் எல்லாம் வங்காள தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகளே.. இப்ப துணி வாங்கப் போறீங்களா அல்லது அம்மணமாகத் தீபாவளி கொண்டாடப் போறீங்களா?
இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் தயாரிக்கப்பட்ட பொருட்கள் யாவும் "மேட் இன் இண்டியா" மூதிஜியின் அட்வைஸ்படி மேட் இன் இண்டியா பொருட்களை வாங்கப் போறீங்களா அல்லது பங்களாதேஷ் பொருட்களை வாங்கப் போறீங்களா? சங்கிகளே உங்கள் மூளை மிக அபாரம்
தீபாவளிக்குப் பலகாரம் சுடும் போது இப்படிச் செய்து பாருங்களேன். முறுக்கை சதுர வடிவிலும், லட்டை மைசூர் பாகு வடிவத்திலும், மைசூர் பாக்கை லட்டு வடிவத்திலும் செய்து பாருங்கள்.. # தீபாவளி பண்டிகை வருகிறது நாமும் ஏதாவது சொல்லி வைப்போம்
#தீபாவளிக்கு லட்டு குலோப்சாமுன் மைசூர் பாகு இது போன்ற ஸ்வீட்ஸ்களை பண்ண தெரியாதவங்க "ஸ்வீட் பொங்கலை " பண்ணி தீபாவளி கொண்டாடலாமா??? #தீபாவளி பண்டிகை வருகிறது நாமும் ஏதாவது கேட்டு வைப்போம்
சங்கி :நீங்கள் உண்மையான இந்துக்களாக இருந்தால் இந்துக்களிக் கடைகளில் மட்டும் பொருட்களை வாங்குங்கள்.
உண்மையான இந்துக்கள் : சரி
சங்கி :நீங்கள் உண்மையான இந்துக்களாக இருந்தால் அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் வேலை பார்த்து பணம் சம்பாதிக்காதீர்கள்.
உண்மையான இந்துக்கள் : அடப் போடா மூளை இல்லாதவனே நாங்கள் உண்மையான இந்துக்களே இல்லை
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஒட்டுண்ணிகள் அப்படித்தான்...
ReplyDelete