கலாச்சார பாதுகாவலராக வேஷம் போடும் நடிகர் ரஞ்சித்திற்க்கு கலாச்சார சீரழிவு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.?
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இப்போது தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக நடந்து வருகிறது. இதில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமல் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் பலர் நடுத்தரவர்க்க குடும்பத்தினரிலிருந்து அதற்கும் கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொள்கின்றனர்/ இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஆடல் பாடலிருந்து பலவிதமான நிகழ்வுகள் நடை பெறுகின்றது .இது பலருக்குக் கவலைகளை மறந்து மகிழ்ச்சியைத் தரக் கூடிய நிகழ்வாக இருக்கிறது. எங்கோ ஒரு சில தவறான நிகழ்வுகள் நடந்து இருக்கலாம். அதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இந்த நிகழ்வு ஒரு நல்ல நிகழ்வே. காரணம் இங்குச் சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரும் ஆடிப் பாடி மகிழ்கிறார்கள். வாழ்க்கை ஒரு நல்ல நிலையில் இருக்க எல்லோரும் முட்டி மோதிக் கொண்டும் கடுமையாகப் பல வித கவலைகளுடன் முயற்சிக்கும் வேளையில் இந்த நிகழ்வு அவர்களைக் கவலைகளை மறந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிறது என்றால் அது நல்லதுதானே. இங்க சாதி என்கிற கட்டமைப்பையும் கலாச்சாரத்தையும் உடைக்கனும்னா மக்களை ஒன்றுசேர்க்க இதுபோல நிகழ்ச்சிகள் தான் உதவும்,
மன அழுத்தம் உள்ள வாழ்க்கைக்கு இது போன்ற refreshments தேவை தான்! மறைந்து மறைந்து தவறுகள் செய்துவிட்டு நல்லவன் போல் நடிக்கும் சங்கிகளை போல இல்லாமல் வெளிப்படையாக சில சந்தோஷங்களை அனுபவிப்பது தப்பில்லைதானே
இப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் ஒரு கலாச்சார சீரழிவு என நடிகர் ரஞ்சித் கூறியுள்ளார். இந்த நிகழ்வைப் பற்றி சமூகவியலாளர்கள், ஆய்வாளர்கள் சொல்வதற்கு முக்கியத்துவம் தராமல், சமுக சீரழிவிற்கு முக்கிய காரண கர்த்தாவாக இருக்கும் திரை நடிகர்களிடம் கருத்துக் கேட்கும் ஊடகவியலர்கள்தான் தான் இவரைவிடச் சுத்த மோசம்.
கலாச்சாரம் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டேதான் வருகிறது அப்படி மாறி வரும் தன்மையிலும் சில அடிப்படை விஷயங்கள் அப்படி மாறாமல் இருப்பதனால்தான் நமது கலாச்சாரம் இன்று பெருமைப்படக் கூடியதாக இருக்கிறது. அன்று வீட்டில் பெண்ணை பூட்டி வைத்தது நம் கலாச்சாரம்தான் ஆனால் இன்று அதே கலாச்சாரம்தான் அந்த பெண்களைச் சுதந்திரமாக வெளியே பறக்கவிட்டு இருக்கிறது.. அப்படி அவர்கள் வெளியே பறப்பதால் கெட்டு ஒன்றும் போய்விடவில்லை
அப்படியும் அவர்கள் கெட்டுப் போகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இன்றைய திரைப்படங்களும் ,டிவி சீரியல்களும்தான் முக்கிய காரணம்.. அங்குதான் கலாச்சார சீரழிவிற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.. ஆனால் இதை எல்லாம் கூத்தாடி ரஞ்சித் பேச மாட்டார் .ஏனென்றால் இந்த சீரழிவுகள் மூலம் தான் அவரு வயிறு நிறைகிறது. அதனால் அவர் வயிற்குக்கு வஞ்சம் பண்ண மாட்டார்.
அவர் கையில் பாருங்கள் விலையுயர்ந்த ஸ்மார்ட் செல்போன் இருக்கும் .அதைவிட நம் சமுகத்திற்குச் சீரழிவை ஏது கொடுத்துவிட முடியும் .அந்த ஸ்மார்ட் போன் மூலம் பல நல்ல பலன்களை அடையலாம் என்றாலும் அதனால் நம் சமுகம் சீரழிந்ததுதான் அதிகம். அதற்காக அவர் தன் கையில் இருக்கும் செல்போனை தூக்கி எறிந்து உடைத்துவிடுவாரா என்ன? அல்லது தன் குடும்பத்தினர்கள் அனைவரும் வைத்திருக்கும் அனைத்தும் செல்போன்களுக்கும் தடை விதித்துவிடுவாரா என்ன?
மேல் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் , ஐ டி போன்ற உயர் வருமானம் தரக் கூடிய பதவிகளில் இருப்பவர்கள் பஃப் மற்றும் ஸ்டார்நைட்டுக்கு போய் சரக்கு அடித்து, போதைப் பொருட்கள் அருந்தி ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்களே அவர்களை நோக்கி இவர் இது கலாச்சார சீரழிவு என்று கூக்குரல் இடவில்லையே ஏன்? அப்படிச் செய்தால் அவர் பொடனியில் இரண்டு தட்டு தட்டி அனுப்பிவிடுவார்கள் என்று தெரிந்துதானே பொத்திக் கொண்டு இருக்கிறார்.
ஆனால் இப்படி போதைப் பொருட்களை அருந்தாமல் ,சரக்கு அடிக்காமல் ,தங்கள் கல்லூரி நண்பர்கள் அல்லது தெருவில் உள்ள நண்பர்கள் அண்டைய வீட்டார்கள் அல்லது தங்கள் குடும்பத்தினருடன் காவலர் பாதுகாப்புடன் ஆடிப்பாடுவதுதான் இவருக்குக் கலாச்சார சீரழிவாகத் தோன்றுகிறது என்றால் இவரின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று நான் சொல்லித்தானா உங்களுக்குத் தெரியவேண்டும் உணவு, மொழி என நம்மீது திணிக்கப்படுவதுதான் சீரழிவு
இவர் தலைமை தாங்கி நடத்திய கோயில் விழாக்களில் ஆடும் Record Danceதான் நமது கலாச்சாரம் ஆனால் Happy Street கலாச்சார சீரழிவாம் அடேய்...
இஎல்லாம் விடுங்க பேட்டியில் கடைசில end twistஆ ஆடுனதேயே திரும்ப திரும்ப ஆடுற வள்ளிகும்மிய எல்லாம் பாராட்டும் போது ஜாதியக் கொண்டையை மறைக்க மறந்து போய் வேஷம் கட்டியது வெளியே தெருகிறது
திரைத்துறை துறையில் விலாசம் இல்லாமல் போனவர் கலாச்சார பாதுகாவலராகத் தன்னை முன்னிறுத்தி விலாசம் தேடும் ஒரு முயற்சியைத்தான் பா,ரஞ்சித் செய்கிறார். இவருக்கு பாஜக கூடிய விரைவில் ஒரு விலாசம் தந்து அவர் வருமானத்திற்கு வழி தரும் அது வரை இவர் இப்படித்தான் பொது வெளியில் நடித்துக் கொண்டிருப்பார் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை
நான் என் மனைவிக்கு உதவுவதே இல்லை ஆனாலும் எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க " இது"தான் காரணம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
ReplyDelete