Sunday, February 6, 2011

கலாசாரத்தைக் கெடுக்கும், " தமிழ் டி.வி சீரியல்கள்!'


நாம் சிறுவர்களாக இருந்த போது நமது பெற்றோர்கள் டிவி பார்த்து கெட்டு போகதிர்கள் என்று சொல்வது உண்டு ஆனால் இப்பொழுது காலம் போகும் போக்கில் நாம் தான் நமது பெற்றோர்களை இந்த டிவிக்களிடம் இருந்த காப்பாற்ற வேண்டியிருக்கிறது.

கிழேயுள்ள செய்தி தினமலர் நாளிதழில் வெளிவந்தது.



பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில், திங்கள் முதல் வெள்ளி வரை, பகல் 1.30 மணி முதல் 2.00 மணி வரை ஒளிபரப்பாகும் மெகா தொடரில், தன் மனைவியின் முதல் கணவருக்கு, மூன்றாவது கணவர் பெண் பார்க்கும் படலம் அரங்கேறிக் கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், அப் பெண்ணின் முதல் கணவன், இரண்டாவது கணவரின் தந்தை மற்றும் மூன்றாவது கணவர் ஆகிய அனைவரும் ஒரே வீட்டில் வாழ்வது போலவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதுவா இன்றைய கூட்டுக் குடும்பம்?

அதே தொடரில், திருமணமாகாத பெண், தன் அக்காவின், திருமணமான கொழுந்தனாரை மணம் முடிக்க விரும்பி, அவனின் மனைவியை கொலை செய்ய, பாயசத்தில் விஷம் வைக்கிறாள். அது, அவனின் தாயார் மரணத்திற்கே காரணமாகி விடுகிறது. குடும்பப் பெண்கள் கோவிலுக்குச் சென்று வருவது போல், வாரம் இருமுறை போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் கைதிகளாக செல்கின்றனர்.

என்ன கொடுமை சார் இது?

என் கல்லூரியின் நாற்பது நாள் விடுமுறையில், என் அம்மா பார்த்துக் கொண்டிருந்த இந்த தொடரை, நான் பார்த்த போது அதிர்ந்து விட்டேன். தமிழ் கலாசாரத்தை இப்படி இழிவாக சித்தரிப்பதை தவிர்ப்பது நன்று. அப்படியே இது போன்ற மெகா தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப் பானாலும், என் அம்மா போன்று வீட்டில் இருக்கும் பெண்கள், இத்தகைய தொடர்களை பார்க்காமல் புறக்கணிப்பது நன்று.

— பெயர் வெளியிட விரும்பாத பொறியியல் கல்லூரி மாணவி.





ரஜினிகாந்த் அரசியலுக்குதான் வரவில்லை ஆனால் ஒரு மக்கள் இயக்கத்தை ஆரம்பித்து இந்த மாதிரி கலாச்சார சீர்கேடுகளுக்கு எதிராக போரட செய்யலாமே? நம் தமிழக மக்களுக்கு தேவை ஒரு நல்ல தலைவர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றால் பரவாயில்லை ஆனால் தன்னை வாழ வைத்த தமிழகத்துக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் இதன் மூலம் விடுவிக்கிறேன். இதை படிக்கும் பதிவாளர்கள் இது பற்றி மேலும் எழுதி அவரின் கவனத்தை இழுத்து தமிழ் காலாச்சாரத்தை இந்த டிவிகளில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்

அன்புடன்

Maduari Tamil Guy

6 comments:

  1. நிஜமாவா?. இப்படியா சீர்யல்கள் வருது.. நான் பார்ப்பதில்லை என்பதால் தெரியவில்லை..

    :(

    கண்டிக்கப்படவேண்டியது.

    ReplyDelete
  2. இப்படியும் கதைகளா வருது???!!! :-(((

    சொன்ன விஷயம் சரிதான். ஆனா, ரஜினியை எதுக்கு இழுக்குறீங்க இதில? இதைச் சொன்னா, அப்படியே அவர் படங்களையும் பாக்காதீங்கன்னு சொல்லணும், தேவையா? :-))))))

    ReplyDelete
  3. ரஜினியை வம்புக்கு இழுக்கலை. இன்னும் கலங்கப்பாடாத தலைவன் எல்லாமக்களும் ஆதரிக்கும் நபர். அதனால்தான் சொன்னேன் அரசியல் தலைவன் ஆக வேண்டாம் என்று.. ஆனால் ஒரு இயக்கத்துக்கு தலைவன் ஆகி தமிழர்களுக்கு பாடுபட வேண்டும்மென்று.

    கருத்துகள் வழங்கியதற்கு நன்றி ஹுசைனம்மா....

    ReplyDelete
  4. ரஜினியை வம்புக்கு இழுக்கலை. இன்னும் கலங்கப்பாடாத தலைவன் எல்லாமக்களும் ஆதரிக்கும் நபர். அதனால்தான் சொன்னேன் அரசியல் தலைவன் ஆக வேண்டாம் என்று.. ஆனால் ஒரு இயக்கத்துக்கு தலைவன் ஆகி தமிழர்களுக்கு பாடுபட வேண்டும்மென்று.

    கருத்துகள் வழங்கியதற்கு நன்றி ஹுசைனம்மா....

    ReplyDelete
  5. ரஜினியை வம்புக்கு இழுக்கலை. இன்னும் கலங்கப்பாடாத தலைவன் எல்லாமக்களும் ஆதரிக்கும் நபர். அதனால்தான் சொன்னேன் அரசியல் தலைவன் ஆக வேண்டாம் என்று.. ஆனால் ஒரு இயக்கத்துக்கு தலைவன் ஆகி தமிழர்களுக்கு பாடுபட வேண்டும்மென்று.

    கருத்துகள் வழங்கியதற்கு நன்றி ஹுசைனம்மா....

    ReplyDelete
  6. இப்படி கதைகள் வருது தெரியாது

    அவ்வளவா சீரியல் பார்பபதிலலை
    ஏதாவது ஒன்று தான் பார்ப்பது,,

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.