Saturday, November 24, 2018

அமெரிக்க வாழ் இந்துக்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்

அமெரிக்காவில் பல்வேறு மதத்தை சார்ந்த இந்தியர்கள் வந்து வசிக்கிறார்கள். இவர்களில் கிறிஸ்துவர்களுக்கு அவர்களின் மத பண்டிகைகளின் போது அரசாங்கமே விடுமுறை அளித்துவிடுவதால் அவர்கள் அந்த தினங்களில் தங்கள் பண்டிகைகளை தங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் செலவிடுகிறார்கள் அது போல இஸ்லாமியர்கள் அனைவரும் அராசங்கம்  விடுமுறை அளிக்காவிட்டாலும் அனைத்து இஸ்லாமியர்களும் லீவு எடுத்து தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவுகள் நட்புக்களுடன் கொண்டாடி மகிழ்கிறார்கள் அது போலத்தான் சீக்கியர்களும் கொண்டாடுகிறார்கள்... ஆனால் இங்கு உள்ள இந்துக்கள் மட்டும் காலையில் எழுந்து குளித்து சாமிகும்பிட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிடுகிறார்கள் அதன் பின் வார இறுதிநாளில்தான் பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள் இதில் வேற இங்குள்ள பல பள்ளிகளில் தீபாவளி பண்டிகைக்கு பள்ளி விடுமுறைவிட்டும் பல குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளை தனியாக வீட்டில் விட்டு தாங்கள் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். இங்கு வந்து அதிகம் பணம் சம்பாதித்தும் தங்கள் மத பண்டிகை நாட்களில் ஒரு நாளுக்கு கூட விடுமுறை எடுத்து குடும்பத்துடன் இருந்து சந்தோஷமாக கொண்டாடமல் இருப்பது எதற்க்காக என்பது எனக்கு புரியவில்லை.. (இதில் சில இந்துக்கள் விதிவிலக்கு அதில் என்  நண்பரின் குடும்பத்தினரும் ஒருவர் அவர்கள் வீட்டில் அன்று எல்லோரும் விடுமுறை எடுத்து கொண்டாடுவது மட்டுமல்ல எங்களை போன்றவர்களையும் இரவில் கூப்பிட்டு விருந்து வைத்துவிடுவார்)ஒரு வேளை இதைப்படிக்கும்
 உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லிவிட்டு போங்கள்



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்(டி.ஜே.துரை)

5 comments:

  1. ஆச்சர்யம்தான். மம்மி டாடி வீட்டில் இல்ல என்று கொண்டாடுவதற்காக இருக்குமோ?

    ReplyDelete
  2. பண்டிகை நாளிலும்பணிக்குச்செல்கிறார்கள் என்று சந்தோஷப்படாம......

    ReplyDelete
  3. உழைப்பே உயர்வு என்பது அவர்களுக்கு புரிந்து இருப்பதால்....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.