Tuesday, November 19, 2024

 விவாகரத்திற்குப் பின் விரோதிகளாக இருக்க வேண்டியதில்லை
 

 



கணவன் மனைவிக்கிடையே  ஒரு வித எதிர்பார்ப்புகள் உரிமைகள் இருக்கும். அவைகள் சரிவரக் கிடைக்காத பட்சத்தில் கணவன் மனைவி என்ற உறவே தேவையில்லாமல் போய்விடுகிறது. அதன் விளைவே விவாகரத்து. கணவன் மனைவி என்ற உறவு ஒத்துப் போகாததால் அந்த உறவிலிருந்து விலகி விடுவோம் என்று முடிவு எடுத்து விலகிக் கொள்கிறார்கள். ஆனால் அப்படி விவாகரத்து செய்து கொள்ளும் இந்தியத் தம்பதிகள் அதன் பிறகு ஒருவரை ஒருவர் மிக விரோதியாகவே பார்க்கிறார்கள். அப்படி அவர்கள் பார்க்கவில்லை என்றாலும் அவர்களைச் சுற்றியுள்ள உறவுகள் அவர்களை விரோதி ஆக்கிவிடுகிறார்கள்..

ஆனால் அமெரிக்காவில் நான் பார்த்த வரையில் விவாகரத்து ஆனவர்கள் விரோதிகள் போலப் பார்ப்பது இல்லை என்பது நிஜம். இதைக் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபன் என்ற முறையில்  நான் இங்குப் பார்த்த அனுபவத்தில் இதைச் சொல்லுகிறேன்

இதற்கு உதாரணமாக எனது அமெரிக்க நண்பரைச் சொல்லாம்.. இவர் ஒரு அமெரிக்கர் வியட்நாம் வாரில் கப்பற்படையில் பணியாற்றியவர். இவர் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் என் கூட வேலை செய்தார். அவரின் மனைவியைப் பலமுறை சந்தித்தும் இருக்கிறேன். ஒரு முறை  அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார் அவரை சந்திக்கும் போது அங்கிருந்து அவரை கவனித்துக் கொள்ளும் பெண்மணியை எனக்கு அறிமுகப்படுத்தினார். இவர்தான் என் முதல் மனைவி என்று சொன்னது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. அவரின் தற்போதைய மனைவி வேலை காரணமாக வேறு மாநிலத்திற்குச் சென்று இருந்தால் இவரை முதல் மனைவி வந்து  கவனித்துக் கொண்டார்.

அதுமட்டுமல்ல இவரின் பிறந்த நாள் விழாவிற்கு என்னை அழைத்து இருந்தார். அங்குச் சென்று இருந்த போதும் அவரது முதல் மனைவியும் அந்த பார்ர்டியில் கலந்து கொண்டு டான்ஸ் அடிக் கொண்டிருந்தார்.  தற்போதைய மனைவியும் எந்தவித விருப்பு வெறுப்பு இல்லாமல் மிகச் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார். இந்தியரான எனக்கு இது மிகவும் வியப்பைத்தான் தந்தது.

அதன் பின் அவரிடம் இன்னும் கொஞ்சம் பெர்சனலாக பேசிய போதுதான் அவர் எனக்கு விளக்கிச் சொன்னார் நாங்கள் கணவன் மனைவி என்ற உறவைமட்டும்தான் துண்டித்துக் கொண்டோம் ஆனால் எங்களிடையே இருந்த  நட்பை நாங்கள் விலக்கி கொள்ளவில்லை அதுமட்டுமல்ல அவள் என்  பெண்ணிற்குத் தாய் அது போலத்தான் அவளின் பெண்ணிற்கும் நான் தந்தை இந்த உறைவை எதாலும் பிரிக்க முடியாது அதுதான் எங்கள் நட்பின் தொடர்ச்சிக்குக் காரணம் என்று சொன்னார்

நமக்குத்தான் அமெரிக்கர்கள் என்றாலே ரொம்ப மோசம் என்று ஒரு நினைப்பு ஆனால் அவர்கள் மிகவும் பண்பாடாகவே நடந்து கொள்கிறார்கள் . நாம்தான் பண்பாடற்ற  முறையில் நடந்து  கொள்கிறோம். இவர் மட்டுமல்ல நான் பழகிய வேறு சில அமெரிக்க நட்புகளும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள்

இப்போது ரஹ்மான் சாயிரா பானு தமப்திகலின் விவகாரத்து செய்து நமக்கு அதிர்ச்சியைத்தான் அளிக்கிறது. காரணம் பல மேடைகளில் அவர்கள் மிக அன்னியோகமாக நடந்து கொண்டவர்கள் இப்படிச் செய்கிறார்களே என்று... பலரும் இந்த செய்தியைக் கேட்டு மிக அமைதியான ரஹ்மானுக்கா இப்படி ஒரு நிலை என்று கேட்கிறார்கள் அவர் பொதுவெளியில் அமைதியானவராக இருக்கலாம் ஆனால் அப்படியேதான் வீட்டிலும் இருப்பார் என்று சொல்லமுடியாது. மேலும் அவரது மனைவி பிரபலமானவரின் மனைவி என்ற அந்தஸ்தில் இருந்தாலும் அவருக்கு வேண்டிய சின்ன ஆசைகள் எதிர்பார்ப்புகள் அவரது திருமண வாழ்வில் கிடைக்காமலிருந்து இருக்கலாம். அவர்களின் பிள்ளைகளோ நன்கு வளர்ந்துவிட்டார்கள் .அதன் பின் தனக்காக வாழ நினைத்து பானு இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கலாம்.

இவர்களின் முடிவுகள் எப்படி இருந்தாலும் ஒரு நல்ல நட்புகள் போல மீதியுள்ள நாட்களை ஒருத்தர் மீது ஒருத்தர் அவதூறுகளை வீசாமல் கழிக்கலாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.