Sunday, February 16, 2020

@avargal unmaigal #avargalunmaigal #tamilcharam
தமிழ்மணம் செயல் இழந்த நிலையில் தமிழில் இணைய தளங்களில் எழுதுபவர்களுக்கு  ஒரு மகிழ்ச்சியான செய்தி.


 அமெரிக்கத் தமிழரான ஆரூர் பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களால் தொடங்கப்பட்டதுதான் தமிழ்ச்சரம்.காம்  உலகத் தமிழர்களின் வலைத்தள எழுத்துகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) எனும் இணையதளத்தை அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள்.


தமிழில் எழுதுபவர்களையும், வாசிப்பவர்களையும் ஊக்குவிப்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்ட இந்தத் தளத்தின் வழியாக உலகத் தமிழர்கள் தங்கள் ரசனைக்கு ஏற்ற எழுத்துகளை வாசித்து மகிழ்வார்கள் என நம்பி இதனை ஆரம்பித்து இருக்கிறார்கள்


பேஸ்புக் டிவிட்டர் போன்ற இணைய தள வருகையால் வலைத்தளத்தில் எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது  அதுமட்டுமல்லாமல் தமிழ் மணம் இண்டலி  போன்ற திரட்டிகள் மற்றும் கூகுல் ப்ள்ஸ் போன்றவைகளின் மூலம் வலைத்தளம் வந்து வாசித்துக் கொண்டிருந்த பலர் அவைகள் செயல் இழந்துவிட்டதால் வலைத்தளம் வந்து படிப்பது எண்ணிக்கை குறைந்துவிட்டது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


இதனை அறிந்த தமிழில் மிக ஆர்வம் உள்ள ஆரூர் பாஸ்கர் போன்ற பலர் தமிழ் எழுத்தை இந்த வலைத்தளங்கள் மூலம் மீண்டும் உலகளவில் வசிக்கும் பல தமிழர்களைச் சென்று அடையும் முயற்சியில் ஈடுப்பட்டதன் விளைவே இந்த  தமிழ்ச்சரம்.காம். இவர்கள்  தமிழ் தமிழ் என்று பேசிக் கொண்டிருக்காமல் அதன் வளர்ச்சிக்குச் செயல்வடிவம் இந்த தமிழ்ச்சரம்.காம் என்பது மூலம் காட்டி இருக்கிறார்கள். அவர்களை நாம் பாராட்டி வாழ்த்துவதோடு அவர்களின் சேவையைப் பயன்படுத்தி தமிழர்களின் எழுத்துகளை மீண்டும் உலகறியச் செய்வோம்.


இன்று ஊடகங்களில் மற்றும் சமுக இணைய தளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில்  உள்ள மிகப் பிரபலமான பலரும் இந்த வலைத்தளங்களில் தமது எழுத்துக்களால் பலரையும் வசிகரித்து ஒரு காலத்தில் வளம் வந்தவர்களே. வலைத்தளம் ஒரு பொக்கிஷம் அங்கு எழுதும் நம் எழுத்துக்கள் என்று அழியா வண்ணம் கல்லி பொறித்த எழுத்துக்கள் போல நிற்கும் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் எழுதுபவர்கள் சோப்பு குமிழிகள் போலத்தான் சில நிமிஷத்தில் மறைவது போல சில நாட்களில் ம்றைந்துவிடும்


அதனால் நாம் வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதுவோம் அப்படி எழுது எழுத்துக்கள் பலரைச் சென்று அடைய தமிழ்ச்சரம்.காம் மை பயன்படுத்துவோம்..


முன்பு தமிழ்மணம் இண்டலி கூகுல் ப்ள்ஸ் மூலம் தினசரி 3000 முதல் 5000 ஆயிரம் பார்வையாளர்கள் சராசரியாக வந்து கொண்டிருந்த எனது வலைத்தளம் இன்று தினசரி சராசரியாக 600 முதல் ஆயிரம் பார்வையாளர்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது... இது மேலும் அதிகரித்து பழையபடி வலம் வர தமிழ்ச்சரம்.காம் உதவும் என்று நம்புகிறேன்..


இது போல உங்களது தளமும் பல பார்வையாளர்களை வரவழைக்க தமிழ்ச்சரம்.காம்-ல் இணையுங்கள் உங்கள் எழுத்துக்களை உலகெங்கும் அடையச் செய்யுங்கள்


தமிழ்ச்சரம் பற்றிய இந்தத் தகவலை உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிருங்கள். நன்றி !!



நன்றி


அன்புடன்
மதுரைத்தமிழன்

28 comments:

  1. மீண்டும் ஒரு பொற்காலம் வரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வலையுலக பயன்பாடு பற்றி அநேகருக்கு இன்னும் போதிய அறிவு இல்லை அதனால்தான் பிரச்சனை அது புரிந்தால் நிச்சயம் மீண்டும் ஒரு பொற்காலம் வரும்.

      Delete
  2. ஸூப்பர் மேட்டர் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. இதற்கு ஆருர் பாஸ்கர் அவர்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்

      Delete
  3. உங்களுக்கு சிறந்த இணைய அனுபவத்தை வழங்க நாங்கள் குக்கிகள் (cookies) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். இந்தத் தளத்தை தொடர்ந்து பார்வையிடுவதன் மூலம் நீங்கள் எங்கள் குக்கீகளின் பயன்பாட்டை ஒப்புக்கொள்கிறீர்கள்

    இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் உள்ளே நம்மை அனுமதிப்பது இல்லை. இது எதற்கு? புதுவிதமாக உள்ளதே?

    ReplyDelete
    Replies
    1. EU cookie law என்பதை கூகுலில் சர்ச் பண்ணிபடியுங்கள் நண்பரே... அதன் பின் உங்களின் கேள்விக்கு விடை கிடைக்கும்

      Delete
  4. நல்ல செய்தி.. நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே வலைத்தளத்தில் எழுதுபவர்களுக்கு இது உற்சாகம் தரும் செய்திதான்

      Delete
  5. மகிழ்ச்சியான செய்தி புதிய படைப்புகளை முகனூலில் எழுத மனம் வரவில்லை.அது செய்தித்தாள் போலத்தான் செயல்படுகிறதும் வலைப்பதிவுகள் மீண்டும் எழுச்சிபெற்றால் நல்ல படைப்புகள் உருவாகும்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதும் உண்மைதான்...

      Delete
  6. படிப்பதற்கும் உலவுவதற்கும் எளிதாக இருக்கிறது. நல்லது. தொடர்வோம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பழையபடி எல்லோரும் எழுத தொடங்க தமிழ்சாரம் உதவும் என நம்ம்பி நாம் தொடர்வோம்

      Delete
  7. மகிழ்வான விடயம் சகோ.. ஆரூர் பாஸ்கர் சகோவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு நாம் நன்றி சொல்ல கடமைபட்டு இருக்கிறோம்....உங்களுடைய நன்றிகளுடன் எனது மனம்மார்ந்த நன்றிகள் ஆரூர் பாஸ்கருக்கு

      Delete
  8. பாராட்டுகள். மகிழ்ச்சி. எப்படி இணைவது என்று சொல்லவில்லையே. லடுத்து என்ன செய்ய வேண்டும்?

    ReplyDelete
    Replies

    1. தமிழ்ச்சாரம் தளத்திற்கு சென்று அதில் இணைக்க என்பதை க்ளிக் செய்து அதில் கேட்டு இருக்கும் வலைத்தள விபரங்களை பூர்த்தி செய்து இறுதியில் Im not a robot மற்றும் மேற்கண்ட வலைத்தளத்தின் ஒரே உரிமையாளர் நான். நீங்கள் எங்களின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் ஓப்புக்கொள்கிறீர்கள். என்பதை செலக்ட் செய்து சப்மிட் செய்யவும்... அதன் பின் தமிழ்ச்சர நிர்வாகிகள் உங்கள் வலைத்தளத்தை அப்ருவ் செய்த பின் உங்கள் உங்கள் பதிவுகள் அங்கு வெளியாகும்

      Delete
  9. எனது ப்ளாக்கரை தமிழ்சரத்தில் இணைக்க முடியவில்லை. எவ்வாறு இணைப்பது?

    ReplyDelete
    Replies

    1. தமிழ்ச்சாரம் தளத்திற்கு சென்று அதில் இணைக்க என்பதை க்ளிக் செய்து அதில் கேட்டு இருக்கும் வலைத்தள விபரங்களை பூர்த்தி செய்து இறுதியில் Im not a robot மற்றும் மேற்கண்ட வலைத்தளத்தின் ஒரே உரிமையாளர் நான். நீங்கள் எங்களின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் ஓப்புக்கொள்கிறீர்கள். என்பதை செலக்ட் செய்து சப்மிட் செய்யவும்... அதன் பின் தமிழ்ச்சர நிர்வாகிகள் உங்கள் வலைத்தளத்தை அப்ருவ் செய்த பின் உங்கள் உங்கள் பதிவுகள் அங்கு வெளியாகும்

      Delete
  10. ஒருமுறை தளத்தை இணைத்தால் போதும். அதன் பதிவுகளைத் தானாகத் திரட்டிக் கொள்ளும்.

    அமேசான் டைனமோடிபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எண்ணிக்கை வரம்பில்லா வலைப்பதிவையும் தானாகத் திரட்டிக் கொள்ளும் திறனுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு கொண்டு பதிவைத் தானாக வகைபிரித்து வாசகர்களுக்குப் பிரித்துக் காட்டும். கணித்தமிழில் Text classification நுட்பம் இங்கே கையாளப்படுகிறது.



    இன்றைய பதிவு, இந்த வாரப்பதிவு, கடந்த வாரம், முன்னணி 25 பதிவுகள் என்று காலவாரியாகவும் படிக்கலாம். தேடல் பெட்டியில் குறிச்சொல் இட்டும் தேடிப் படிக்கலாம்.

    ReplyDelete
  11. சொன்னதைச் செய்து விட்டேன். ஆயினும் இணைக்கபடவில்லை. உதவவும் ...

    ReplyDelete
    Replies
    1. சிக்கலை விரைவில் சீர் செய்ய tamilcharam@gmail.com அல்லது neechalkaran@gmail.com மின்னஞ்சல் செய்லாம்

      Delete
  12. ஐயம் ஏற்பட்டு மீண்டும் தலைப்பைப் பார்த்தேன். இது தமிழ் சாரமில்லை .. தமிழ் சரம் :)

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் தமிழ்சரம் என்பதுதான் சரி..... எழுத்துபிழையை சுட்டிக்காட்டையதற்கு நன்றி

      Delete
  13. அந்தக் காலத்தில் நிறைய தளங்களுக்குச் சென்றதுபோல இப்போது செல்ல முடிவதில்லை. அதற்கான தளம் இல்லை. அப்புறம் எனக்குப் பிடித்த தளங்களின் யூ ஆர் எல் மட்டும் சேகரித்து வைத்திருந்தேன். நேரம் கிடைக்கும்போது சென்று விட்டுப்போனவைகளைப் படித்துவிடுவேன். பிறகு அந்த ஃபைலும் காணாமல் போன பிறகு எங்கும் போய்ப் படிக்க முடிவதில்லை.

    பார்ப்போம். இந்த வலை திரட்டி எப்படி இருக்கிறது என்று.

    ReplyDelete
  14. ஆருர் பாஸ்கர் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றும் அனைவருக்கும் என் நன்றிகள், வாழ்த்துகள். தமிழ்ச்சரம் வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு மிக விரிந்த வாசாகர் வட்டத்தை உருவாக்கிக்கொடுக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. ஒருகட்டத்தில் தமிழ்மணம் இன்று தமிழ்ச்சரம். வாழ்க தமிழ் வளர்க இணையத்தமிழ்.

    ReplyDelete
  15. மகிழ்ச்சி, நன்றி. 2 நாட்கள் ஆகும் என செய்தி வருது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.