Sunday, February 23, 2020

ட்ரெம்ப் இந்திய வருகைக்காக பல கோடி செலவு செய்து அழகு படுத்துவது தேவையா?

மோடி இந்திய வருகைக்காக பல கோடி செலவு செய்து அழகு படுத்துவது தேவையா என்றால் நிச்சயம் தேவைதான்...உலகின் வல்லரசாக கருதப்படும் ஒரு நாட்டின் அதிபர் வருகையில் அழகு படுத்தி அவரது நல்ல அபிமானத்தையும் மட்டுமல்ல நமது கெளரவத்தையும் காப்பாற்ற செலவு செய்வது சரிதான்..



இல்லை இல்லை அது தப்பு என்று சொல்லுபவர்கள் யார் என்று பார்த்தால் தங்கள் வீட்டிற்கு தங்கள் உடன் வேலை பார்க்கும் உயர் அதிகாரி தன் குடும்பத்துடன் அவரின் வீட்டிற்கு விஜய
ம் செய்யப் போகிறார் என்றால் உடனே வீட்டை சுத்தம் செய்து சிறிது அழகுபடுத்தி தயார் செய்பவராகத்தான் இருப்பார்.


பொதுவாகவே நம் இந்தியர்களின் குடும்ப பழக்க வழக்கப்படி நாம் தினசரி வீட்டை பெருக்கி சுத்தம் செய்தாலும் நமது நண்பர்களோ அல்லது உயர் பதவிகளில் இருப்பவர்களோ அல்லது குடும்பத்தில் சற்று வசதி அதிகம் படைத்தவர்கலோ ஏதாவது ஒரு காரணத்திற்காக நமது வீடுகளுக்கு  வரப் போகிறார்கள் என்றால் நாம் நிச்சயம் சற்று எக்ஸ்ட்ரா அக்கறை எடுத்து மேலும் சுத்தம் செய்து தடபுடலாக விருந்தும் செய்து வைப்போம் அப்படி செய்வதைத்தான் கெளரவமாக கருதுவோம்.


அது போலத்தான் இப்போதையை பிரதமரும் வல்லரசு நாட்டில் இருந்து வரும் அதிபரின் முன்னாள் இந்தியாவின் கெளரவம் காப்பாற்ரபட வேண்டும் அதனால் தான் மட்டுமல்ல இந்தியாவும் பலன் பெறும் என்று நினைத்து நாட்டை அழகு படுத்துகிறார் அதில் என்ன தப்பு?


யார் எப்படியோ எங்கள் நாட்டு அதிபர் இந்தியா வரும் போது மோடி செய்யும் கவனிப்புக்களுக்காக நான் அவரை பாராட்டுகிறேன்


தாங்க்ஸ் மோடி


ஆஹா நானும் மோடியை பாராட்டி பதிவுகள் இட்டுவிட்டேன். இனிமேல் யாரும் நான் எப்ப பார்த்தாலும் மோடியை நையாண்டி மட்டுமே செய்து பதிவுகள் போடுகிறேன் அல்லது எதிர்த்து பதிவுகள் போடுகிறேன் என்று சொல்ல முடியாது


அப்ப நான் வரட்டா?


கொசுறு  #GoBackModi என்று எதிர்கட்சிகள் சொன்னது போல அமெரிக்காவில் உள்ள எதிர்கட்சிகள் #Don’t come back. ட்ரெம்ப் என்று ஆரம்பிக்காமல் இருப்பது ஆச்சிரியமே


அமெரிக்க அதிபர் ட்ரெம்பின் வருகையை ஒட்டி காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு #ட்ரெம்ப் சார் நாங்க ரொம்ப நல்லவங்க



உலகெங்கும் ஒரு வியாபாரி தன்னிடம் பொருளை வாங்கும் கன்ஸ்யூமருக்குதான் மிக சிறந்த வரவேற்ப்பு கொடுப்பான்,, ஆனால் இந்தியாவிலோ அது முற்றிலும் மாற்றம் ஒரு வியாபாரிக்கு பல கோடி செலவழித்து சிவப்பு கார்பெட் விரித்து வரவேற்கும் முறை இருக்கிறது.. அமெரிக்க அதிபராக ட்ரெம்ப் வரவில்லை  தன் நாட்டுக் குப்பைகளை இந்தியாவின் தலையில் கட்ட வருகிறார் அதற்குதான் இந்த தடபுடல் வரவேற்ப்பு...



ட்ரெம்புக்கு இவ்வளவு கோடிக்கணக்கில் செலவு செய்து வரவேற்ற்பு கொடுத்து காரியத்தை சாதிப்பதைவிட மிக் அதிக செலவில்லாமல் காரியத்தை சாதிக்கலாம்,, அதுதானுங்க சில அழகிய பெண்களை அவர் பக்கதில் உலா வர செய்தாலே போதும்.... இது தெரியாதவர் எல்லாம் இந்தியாவின் சாணக்கியராம்



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. அதுதானே மோடியைப் பாராட்டுறீங்களேன்னு நானும் ஆச்சரியமாகப் பார்த்தேன் ...

    ReplyDelete
    Replies
    1. யார் நல்லது செய்தாலும் பாராட்டனும் என்று எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வந்ததால் பாராட்டி பதிவு எழுதி விட்டேன்

      Delete
  2. எது எப்படியோ டரம்பால் அஹமதாபாத் களை கட்டி இருக்கும் ஹௌடி க்கு பதில் நமஸ்தே

    ReplyDelete
    Replies

    1. நாட்டின் பெயரை சொல்லி ட்ரெம்பும் மோடியும் தங்கள் சொந்த பிஸினஸ் டீலை முடித்து கொண்டிருப்பார்கள்... இந்தியர்களுக்கு சில நாள் இந்த நிகழ்வு ஒரு கலை நிகழ்ச்சி அவ்வளவுதான்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.