Sunday, November 17, 2019

ஜனநாயக நாட்டில்  சர்வதிகார அடக்குமுறையும் கம்யூனிச நாட்டில் ஜனநாயக வழிமுறைகளும் பின்பற்றப்படும் அதிசயம்


கடந்த பல மாதங்களாக ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள் ஹாங்காங்கின் எக்னாமி மிகவும் பாதிக்கப்படுகிறது இந்த போராட்டங்களால் அது மட்டுமல்ல மக்களின் இயல்பு வாழ்க்கை நிலையும் பாதிக்கப்படுகிறது.. உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான சீனாவால் அதன் ஆட்சிக்கும் ஆளுமைக்கும் உட்பட்ட ஹாங்காங் மக்கள் போராடுவதைத் தடுக்க மிகவும் சிரமப்படுகிறது..ஆனால் சீனா நினைத்தால் தன் இரும்புக் கரங்களைக் கொண்டு அடக்க முடியும் சீன வரலாற்றைப் பார்த்தாலே இது நமக்குத் தெள்ளத் தெளிவாகப் புரியும்


அதுமட்டுமல்ல சீன அரசு நினைத்தால் மோடி அரசைப் போல தங்களது உரிமைக்காகப் போராடுவது தனது சொந்த மக்களாக இருந்தாலும் கூடமக்கள் எங்கும் செல்ல முடியாத வகையில் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும் என்பதுடன், அவர்களது அனைத்து இணைய மற்றும் செல்போன் மற்றும் வீட்டுத் தொலைப்பேசி தொடர்புகள் இடைநிறுத்தம் செய்யவும் முடியும். அது போல ஆயிரக் கணக்கான மக்களைத் தடுப்பு காவலில் மோடி அரசைப் போல வைக்க முடியும் ஹாங்காங்க் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுவதுடன், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும் முட முடியும்.  மக்களும் அவர்களின் குரல்களுக்கும்  முற்றுப்புள்ளி வைக்கப்படுவதை இந்த உலகம் பார்த்துக் கொண்டு இருக்கும்படி செய்ய முடியும்.


அடக்குமுறையை அன்றாட வாழ்வில் அதிகரித்து மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு  இடைஞ்சல்களை விளைவிக்க முடியும். இப்படிச் செய்வதன் மூலம்,உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை அங்குப் பரவலாக்குவதுடன்  , ஊரடங்கு என்ற பேரில் மக்கள் மருத்துவமனைக்குச் செல்லவோ அல்லது மருந்துகளைப் பெறவோ முடியாத நிலையும், மருத்துவர்கள் வேலைக்கு வர வசதிகள் செய்து கொடுக்க நிலையையும் மோடி அரசு காஷ்மீரில் ஏற்படுத்தியுள்ளதைப் போலச் சீனாவாலும் செய்ய முடியும்.


இப்படி எல்லாம் சீனா அரசு செய்துவிட்டு  ஹாங்காங் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று அரசு தரப்பில் அறிக்கைகள் விட்டு ...நோபல் பரிசு தனக்குத் தர லாபி செய்து அதை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியும். ஆனால் சீனாவில் நடப்பது என்னவோ இந்தியாவைப் போன்ற ஜனநாயக ஆட்சி முறையில் நடக்கும் அடக்கும் முறை அரசு ஆட்சி இல்லாமல் கம்யூனிசம் முறையில் நடக்கும் காந்திய வழி ஆட்சி என்பதால் சீனா வல்லரசாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது




அதே நேரத்தில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கும் இந்தியாவோ பாகிஸ்தான் நம்பர் 2 வாக மாறிக் கொண்டிருக்கிறது..   வல்லரசாக மாற வேண்டிய இந்தியா பாகிஸ்தானாக மாறிக் கொண்டு இருக்கிறது



ஜனநாயக நாட்டில்  சர்வதிகார அடக்குமுறையும் கம்யூனிச நாட்டில் ஜனநாயக வழிமுறைகளும் பின்பற்றப்படும் அதிசயம்  இதுவே


எங்கெல்லாம் வேலிகள் உறுதியாக கட்டமைக்கப்படும் போது அங்கெல்லாம் அதை தாண்டி குதிக்கும் கால்களுக்கும் வலிமை மிக அதிகமாகிவிடுகிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.