Sunday, October 6, 2019


ச்சே வீக்கென்ட்ல இப்படியெல்லாம் வா யோசிப்பாங்க


நம்மிடம் இல்லாத ஒன்றை....நமக்கு தேவையே இல்லாத ஒன்றை...நம் வாழ்க்கைக்கு மிக தேவையானதாக உணரவைத்து  அதை வாங்க தூண்டுவதுதான் விளம்பரம்...இதை புரிந்து கொள்ளாத அறிவாளிகள்தான் இன்றைய உலகில் மிக அதிகம் # சனிக்கிழமை இரவு சரக்கு அடித்து விட்டு யோசிக்கையில் புத்தியில் உதித்தது இது

உங்கள் வாழ்க்கையில் தினம் தோறும் நீங்க செய்ய விரும்பாத ஒன்றை முதலில் செய்து முடித்துவிடுங்கள். அதன் பின் கஷ்டங்கள் என்பதே இல்லாமல் போய்விடும்.  #சனிக்கிழமை இரவு சரக்கு அடித்து விட்டு காலையில் எழும் போது யோசிக்கையில் புத்தியில் உதித்தது இது


வாழ்க்கையில் சந்தோஷமே இல்லை என்று சொல்பவர்கள் நீங்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மற்றவர்களை சந்தோஷப்படுத்தியதே இல்லை என்பதுதான் அதற்கு காரணமாக இருக்க முடியும் .# ஞாயிற்று கிழமை காலையில் காபி குடிக்கும் போது யோசித்தது


தனிமை மிக பெரிய கொடுமை அதனால் தனிமையில் இருக்கும் இன்னொருவருடன் சேர்ந்தால்  தனிமை தனியே ஒடிப் போய்விடும்... #ஞாயிற்றுகிழமை  காலை பசியுடன் இருக்கும் போது புத்தியில் உதித்தது


மனைவியிடமும் அல்லது வேறு யாரிடமும் பொய் மட்டும் சொல்லிவிட்டால் அந்த பொய்யை காலம் முழுவதும் ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் பொய்யனாகிவிடுவோம் அதனால் உண்மையை அப்போதே சொல்லிவிடுவதே மேல் #ஞாயிற்றுகிழமை  காலை ஆப்பம் சாப்பிடும் போது புத்தியில் உதித்தது


நதியின் ஒட்ட
த்திற்கு ஏற்ப எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் செல்வது உயிரற்ற பிணம்தான் அது போலத்தான் மோடியின் ஆட்சி ஒட்டத்திற்கு ஏற்ப பிணம் என்ற சங்கிகள் கூட்டம் ஒடிக் கொண்டு இருக்கிறது ஆனால் உயிர் உள்ள உடலானது நதியின் இழுப்புக்கு ஏற்றவாறு அல்ல  அதை எதிர்த்து போராடி கரை சேர முயலும். தமிழர்களும் அப்படித்தான் மோடியை எதிர்த்து கரை சேர முயன்று கொண்டிருக்கிறார்கள் # ஞாயிற்றுகிழமை  காலை தமிழ் செய்திகள் பார்த்து கொண்டிருக்கும் போது புத்தியில் உதித்தது


நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு வேகமாக செல்ல வேண்டும் என்று மக்கள் நினைத்து காரை வாங்கி கொண்டு டிராபிக் சிக்னலில் மணிக்  கணக்கில் மாட்டிக் கொண்டு நிற்கிறது இன்றைய சமுகம் #ஞாயிற்றுகிழமை  மதியம் பசியுடன் இருக்கும் போது புத்தியில் உதித்தது


வயதான பெற்றோர் சொல்வது எல்லாம் முட்டாள் தனமானது என்று கருதும் இளையசமுதாயத்திற்கு வருங்காலத்தில் தாங்களும் முட்டாள்களாக  மாறப்போவது தெரியுமோ ? #ஞாயிற்றுகிழமை  மதியம் பழைய சாம்பருடன் வாழைக்காய் கூட்டு சாப்பிடும் போது புத்தியில் உதித்தது


மோடிக்கு லவ் லெட்டர் எழுதினால் அது தேசதுரோக வழக்காகிவிடுமா  என்று அமெரிக்காவில் வாழும் குஜராத்தி ஒல்டு லேடி கேட்குது . அதற்கு நான் என்ன பதில் சொல்ல சட்ட விபரங்கள் தெரிந்தவர்கள் பதிலளிக்கவும் # ஞாயிற்றுகிழமை  மாலை நாயுடன் வாக் செய்யும் போது  புத்தியில் உதித்தது


காதலிக்க தாமதம் செய்யாதீர்கள் ஏனென்றால் நீங்கள் பெற வேண்டிய ஏராளமான முத்தங்களை வீணாக இழக்க வேண்டி இருக்கும்.. #ஞாயிற்றுகிழமை  இரவு  சரக்கு அடித்து கொண்டு இருக்கும் போது  ஞாபகத்தில்  வந்ததது .


திமுக என்பது ஜனநாயக கட்சி .அதன் தலைவர்கள் கலைஞர் குடும்பத்தினரால் ஜனநாயக முறைப்படித்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
#ஞாயிற்றுகிழமை  இரவு மனைவி செய்த மஸ்ரூம் பிரியாணி சாப்பிடும் போது மனதில் உதித்தது


முட்டாளுடன்  வாதம் செய்தால் யார் முட்டாள் என்று பார்ப்பவர்களுக்கு தெரியாது அது போலத்தான் சங்கிகளுடனும்/பக்தால்ஸுடனும் வாக்குவாதம் செய்தால் யாரு சங்கி என்று பார்ப்பவருக்கு தெரியாது # இரவு தூங்க செல்லும் முன் காபி குடிக்கும் போது மனதில் உதித்தது


வாழைத்தொடையினிலே  நான் வசமிழந்த வேளையிலே ஒரு ஏழைப் போல தோன்றிடுவேனே.....தூங்கி கொண்டிருக்கும் போது கனவில் உதித்தது..



அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. ஹா ஹா வுடன் சில நல்ல கருத்துகளும்...அது சரி ராத்திரி தூங்கப் போகும் முன் காபி குடிப்பீங்களா? ஆ தூக்கம் வருமா?

    கீதா

    ReplyDelete
  2. புத்தியில் எல்லாம் உதிச்சிருக்கு ஆனா ஒழுங்கா அதிராவின் புளொக்கில் கொமெண்ட் போடோணும் என உதிக்கல்லியே கர்ர்ர்ர்ர்:)...

    ReplyDelete
  3. நதியின் ஓட்டத்திற்கு ஏற்ப - ஏங்க இது உங்களுக்கே நியாயமாப் படுதா? ரெண்டு தொகுதி தமிழர்களும் ரெண்டு கட்சிகளும் எவ்வளவு தரப்போறாங்க என்று பையோட காத்துக்கிட்டிருக்காங்க. இதுல நியாயம், நேர்மைன்னு சொல்லறீங்களே

    ReplyDelete
  4. காதலிக்க தாமதம் செய்யாதீர்கள் - நல்லாச் சொன்னீங்க. உங்களை நம்பிப் புறப்பட்டால், கன்னத்தில் எத்தனை பளீர் விழும்னுதான் எண்ணணும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.