Thursday, October 10, 2019

மதுரைக்காரர்களே உங்கள் குறும்புக்கு அளவே  இல்லையா என்ன?

பாரதப் பிரதமரே சீன அதிபரே!

அசுத்தமாக இருக்கும் எங்கள் மாமதுரையை சுத்தம் செய்ய உங்களை அன்போட அழைக்கிறோம்.

எங்க நகரம் வாருங்கள் சுத்தம் செய்து தாருங்கள்

இப்படிக்கு
மதுரைவாசிகள்

அடேய் மதுரைவாசிகளே உங்கள் போஸ்டர் குறும்புகளுக்கு அளவே இல்லையா? அவங்க நாடுக்கு அதிபர்களடா சுகாதரத்துறை அதிகாரிகள் இல்லையடா




மஹாபலிபுரத்தை க்ளீன் இந்தியா திட்டம் மூலம் சுத்தம் செய்து  தந்த  பாரத பிரதமர் மோடிஜிக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள்


அந்த காலத்துல பள்ளிகூடத்திற்கு இன்ஸ்பெக் ஷனுக்கு கல்வி அதிகாரிகள் வருவார்கள்  அப்படி வரும் போது பள்ளிகூடங்களை சுத்தம் செய்து அழகுபடுத்தி வைப்பார்கள் அது போலத்தான் சீன அதிபர் செல்லும் பாதைகளில் இருக்கும் வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு அரசே வண்ணமடித்துக் கொடுக்கிறது. சிறுசிறு மராமத்துப் பணிகளையும் செய்து கொடுக்கிறது.



மோடி மற்றும் சீன அதிபர் வருகைக்கு எதிர்கட்சியை சேர்ந்த ஸ்டாலின் கூட வரவேற்று அறிக்கை விட்டுவிட்டார் ஆனால் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு தமிழக பாஜக தலைவராக வரவேற்று அறிக்கை விட பாஜகவில் பாஜக தமிழக தலைவர் இல்லையே # என்ன சோதனைடா

ஆணாதிக்கம் மிக்க #மோடிஜி அவர்களே சின அதிபருடனான விருந்திற்கு #ரஜினியை அழைத்த நீங்க #நயன்தாராவையும் அழைக்காதது உங்கள் ஆணாதிக்கத்தை காண்பிக்கிறது... விருந்தில் பெண்ணுக்கு இட உரிமை இல்லையா? #GoBackModi


சீனா அதிபரை சந்திக்கும் மோடி அவருக்கு விருந்து வைக்கிறாராம் அதற்கு  ஸ்டாலினுக்கும் அழைப்பு போய்யிருக்காம்... ஒருவேளை அவர் போனால் அவர் சந்திப்பது சீன அதிபரை என்று நூறுதடவை சொல்லி அனுப்புங்கள் இல்லைன்னா மஹாபலிபுரம் வந்தும் ட்ரெம்ப் அவர்களே வருக வருக என சொல்லப் போகிறார்


தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் : ஸ்டாலின்

அப்ப உள்ளாட்சி தேர்தலே நடக்காதா?



நானெல்லாம் #GoBackModi   என்று சொல்ல முடியாது.. ஏனென்றால் அமெரிக்க வந்துட்டு அவர் போய்யிட்டார். போன ஆளை பார்த்து #GoBackModi  என்று சொல்லவது என்ன நல்லாவா இருக்கு.. அதனால நானெல்லாம் #GoBackModi  என்று சொல்ல மாட்டேன்..ஆனால் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு #GoBackModi  என்று சொல்ல உரிமை இருக்கு... ஆனால் என்ன இருந்தாலும் அவர் உங்க பிரதமர் அல்லவா அதனால #GoBackModi  என்று சொல்ல வேண்டாம்... நான் சொல்லுறதை சொல்லிட்டேன் ஆனால் #GoBackModi  என்று சொல்லுறதும் சொல்லாததும் உங்கள் இஷ்டம்.#GoBackModi  #GoBackModi  #GoBackModi  என்று சொல்ல மாட்டிங்க என்று நான் நம்புறேன்

#WelcomeXiJinping
#வருக_ஸிஜின்பிங்
#欢迎习近平
#Huānyíng_xíjìnpíng


அன்புடன்
மதுரைத்தமிழன்

பயந்திட்டியா குமாரு

1 comments:

  1. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாமே:)).. ட்றுத்தைப் பார்த்தால் தெரியாதோ?:)):- நான் தலைப்புக்குப் பதில் சொன்னேன்:)))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.