Monday, September 23, 2019

@avargalunmaigal
#HowdyModi சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பற்றிய தகவல்கள்

#HowdyModi சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை வலைத்தளத்தில் பதியவில்லை என்றால் வருங்கால சமுகம் உண்மையான வரலாரை அறியாமல் போய்விடும் என்பதால் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்ததை இங்கே பதிவிடுகிறேன்

மோடியின் அமெரிக்க பொதுக் கூட்டத்தில் ட்ரெம்ப் கலந்து கொள்வது மோடிக்கு பெருமையான விஷயமாக இருக்கலாம் ஆனால் அதற்கு அவர் கொடுக்கப் போகும் விலையை நினைச்சா பாவம் இந்திய மக்கள் என நினைக்க தோன்றுகிறது


அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரப் போகும் மோடியின் வருகையை வரவேற்கிறேன்.

அமெரிக்காவில் முக்கியமான சில ஒப்பந்தங்களை மோடி அரசு  அமெரிக்காவுடன் செய்ய இருக்கிறது. இதில் முக்கியமான ஒன்று
பத்து P8I நெப்ட்யூன் கடலோர ரோந்து மற்றும் நீர்மூழ்கிகளை கண்காணிக்கும் விமானங்களை இந்தியா வாங்குகிறது. 3 பில்லியன் டாலர் இதற்கு செலவாகும்.

மேலும் இது போல பல ஒப்பந்தங்கள்.. இப்ப சொல்லுங்க இதெல்லாம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தராதா என்ன?

===========================

மோடியின் அமெரிக்க பயணம் என்பது வெட்டுக்கிளியை பிடிக்க யானையில் சவாரி செய்வது போலத்தான்

மோடியை பார்க்க என்பதை விட அந்த விழாவில் நடக்கும் பல்வேறு ஆடல் பாடல் நிக்ழ்ச்சியை இலவசமாக காண வந்தவர்கள்தான் அதிகம்.. இங்கே இது போன்ற  நிகழ்வை காண தலைக்கு 30 டாலராவது கொடுக்க வேண்டும் அப்படில்லாமல் வீக்கென்டை இலவசமாக கொண்டா வந்த வெட்டி இந்தியர்களின் கூட்டம் தான் இது
-----------------------------------------------------

பொய் சொல்லக் கூடாது என்று சொல்லிதான் பிள்ளைகளை வளர்ப்பார்கள் ஆனால் மோடியின் அமெரிக்க பேச்சை கேட்ட பின் அவரின் தாயார் பொய் பேசனும் என்று சொல்லித்தான் வளர்த்து இருப்பார் போல இருக்கும் #HowdyModi


--------------------------------------

இந்தியாவில் 24 மணிநேரத்தில் தொழில் தொடங்க முடியும் #HowdyModi நிகழ்வில் மோடி பேச்சு :
தமிழன் மைண்ட் வாய்ஸ் : ஒருவேளை சாமோசா கடை தொடங்குவதைத்தான் இப்படி சொல்லுகிறாரோ என்னவோ\\\

---------------------------------------------------

#மோடி ஜி அவர்களின் #குருநாதர்
ஸ்ரீ #தயாநந்த #குருஜி 108 வயதில் இன்று #முக்தி #அடைந்தார்.!#ஓம் #சாந்தி.

ஒரு வேளை மோடி அமெரிக்காவில் பேசிய பேச்சை கேட்டதால் அவர் முக்தி அடைந்தாரோ என்னவோ


==================================

என்டர்டெய்முக்காக தாய் நாட்டிலிருந்து வந்த கோமாளிய பார்ப்பது சகஜம்தான


///50000 அமெரிக்க இந்தியர்கள் ஆர்ப்பரித்துக் கைதட்ட, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருக்க//
இவ்வளவு கூட்டம் கூடியும் அங்கே பொய் மூட்டைகளை அவுத்து விடுகிறாரே என்று ட்ரெம்ப் வாய் பிளந்து கேட்டு கொண்டிருந்தார் எனப்துதான் உண்மை.. இந்தியாவின் பொருளாதாரம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது கூட தெரியாத முட்டாள் அல்ல அமெரிக்க அதிபர்


மோடிஜி அவர்கள் சொன்ன பொய் மூட்டையில் இருந்து ஒரு சாம்பிள் இந்தியாவில் 24 மணிநேரத்தில் தொழில் தொடங்க முடியும் #HowdyModi நிகழ்வில் மோடி பேச்சு : ஒருவேளை சாமோசா கடை தொடங்குவதைத்தான் இப்படி சொல்லுகிறாரோ என்னவோ போங்க

ஆதார் அட்டையை வாங்க அல்லது அதில் ஒரு திருத்தத்தை செய்ய ஒரு சாமான்யன்  நமது பாஷையில் சொல்லுனும் என்றால் ஒரு மத்தியமர் என்ன பாடுபடுகிறார் என்பது இந்தியர்களுக்கு தெரியாதா என்ன? இந்த லட்சணத்தில் 24 மணிநேரத்தில் தொழில் தொடங்க முடியும்  என்று அடித்து விடுவதெல்லாம் மோடி அவர்களால் மட்டுமே முடியும்




ஹூஸ்டனில்  ட்ரெம்பின் தேர்தல் பிரச்சாரத்தை பாரத பிரதமர் திரு.மோடி. #HowdyModi  தன் சொந்த செலவில் நடத்தி சென்று இருக்கிறார் உலகில் இப்படி எந்த தலைவரும் இன்னொரு நாட்டின் தலைவருக்காக இப்படி தேர்தல் பிரச்சாரம் செய்தது இல்லை #Thank you modi


மோடிக்கு விசா தர மறுத்த அமெரிக்கா இன்று மோடிக்கு விசா கொடுத்து பெருமை படுத்துகிறதாம் என்று பக்தால்ஸ் பெருமை படுகிறார்கள்.. அடேய் அமெரிக்கா விசா கொடுத்தது மோடிக்கு அல்ல இந்திய பிரதமர் என்ற பெருமை மிக்க பதவிக்குத்தான்... அந்த பதவி இல்லாமல் மீண்டும் மோடி வந்தால் மறுபடியும் விசா தர மறுக்கப்படலாம்.. அதனால ரொம்ப துள்ளாதேங்க


என்னமோ அமெரிக்கர்கள் இவரை கூப்பிட்டு விழா எடுத்து மாதிரி பேசுறாங்க... இங்க விழா எடுத்தது இங்கு வாழும் பிஸினஸ் செய்யும் ஹிந்திகாரகள் குஜராத்திகள்  சேர்ந்து ஏற்பாடு செய்த விழா அவர்களுக்கு மோடியால் காரியம் ஆகணும் மோடிக்கு இவர்களால் பெயர் கிடைக்கணும் அவ்வளவுதானே தவிர வேறு ஒன்றுமில்லை.. இவ்வளவு கூட்டம் கூடியதற்கு காரணம் மோடியை பார்க்க என்பதை விட அந்த விழாவில் நடக்கும் பல்வேறு ஆடல் பாடல் நிக்ழ்ச்சியை இலவசமாக காண வந்தவர்கள்தான் அதிகம்..அதுமட்டுமல்ல என்டர்டெய்முக்காக தாய் நாட்டிலிருந்து வந்த கோமாளிய பார்ப்பது சகஜம்தான இங்கே இது போன்ற  நிகழ்வை காண தலைக்கு 30 டாலராவது கொடுக்க வேண்டும் அப்படில்லாமல் வீக்கென்டை இலவசமாக கொண்டாட வந்த வெட்டி இந்தியர்களின் கூட்டம் தான் இது.


ஹூஸ்டனில்  வாய்கிழிய பேசிய பாரத பிரதமர் திரு.மோடி. #HowdyModi  ஒரு வார்த்தை கூட H1B  விசா பற்றி ஒரு வார்த்தை கூட பேசல அப்படி பேசி இருந்தால் மேடையில் ட்ரெம்ப் மோடி தலையில ரெண்டு போடு போட்டு அனுப்பி இருப்பார்



அமெரிக்காவில் #HowdyModi  நிகழ்விற்க்கு கூட்டம் கூடியது  . இந்த என்டர்டெய்முக்காகத்தான்

organizers of the “Howdy, Modi!” event that was kicked off with a 90-minute cultural program featuring 400 costumed dancers, were delighted to welcome Trump.



இந்திய பொருளாதாரம் போட்டோஷாப் டாக்குமெண்ட்டில்தான் நல்லா இருக்கு....


அமெரிக்காவில் #HowdyModi  நிகழ்விற்க்கு கூட்டத்தால் நடந்த ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னெவென்றால் பாகிஸ்தான்காரர்களின் வயிறு நல்லா எரிஞ்சதுதான்



தமிழகத்தில் 50 லட்சம் பேர் பா.ஜ.கவில் சேர்ந்துள்ளனர்- பொன்.ராதாகிருஷ்ணன்


இந்த 50 லட்சம் பேருக்கும் தாங்கள் பாஜகவில் சேர்ந்தது இதுவரை தெரியாது என்பதுதான்  முக்கிய செய்தி


மானமுள்ள தமிழன் இந்த நிகழ்விற்கு போகமாட்டான் அங்கே போனவன் எல்லாம் மூளை கெட்ட இந்திகாரப் பயபபுள்ளைங்க அதனாலதான் இந்தியில் பேசுகிறார்






இந்திய பிரதமரின் இந்த அமெரிக்க விஜயத்தால் இந்தியாவுக்கு உண்மையில் என்னென்ன நன்மைகள் விளையுமா விளையாதா என்பது  யாருக்கும் தெரியாது. ஆனால் மோடியின் விஜயத்தை டிரம்ப் மிக அருமையாகப் பயன் படுத்திக்கொண்டார் என்பது மட்டும் உண்மை

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. H-1B விசா என்றால் என்ன எனபது இவருக்கு தெரியாதோ என்னவோ? அத்துடன் கூடியிருக்கற குஜராத்தி பிசினஸ் கூட்டத்துல இதப்பத்தி பேசினா கைத்தட்டல் கிடைக்டகாதேன்னு நினைச்சிருப்பார்

    ReplyDelete
    Replies
    1. குஜராத்திகளுக்கு H1 விசா பற்றி எல்லாம் கவலைப்படமாட்டார்கள் அவர்கள் கள்ளத்தனமாக வந்து விடுவார்கள்

      Delete
  2. அப் பார் ட்ரம்ப் கி சர்க்கார் என்றால் என்ன

    ReplyDelete
    Replies
    1. ஹிந்தி தெரியாது சார்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.