Saturday, July 13, 2019

இதற்கு எல்லாம் மத்திய அரசை குறை சொல்லக் கூடாது

அஞ்சலக தேர்வை ஆங்கிலத்திலும் ஹிந்தியில் மட்டும் எழுதலாம்னு அறிவிப்பு  வந்திருக்காம்.

இதற்கு எல்லாம் மத்திய அரசை குறை சொல்லக் கூடாது... மத்திய அரசுதமிழ்நாட்டில் ஒரு சர்வே எடுத்து பார்த்துவிட்டுதான் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறதாம் அந்த சர்வேயில் தெரிய வந்த விஷயம் தமிழகத்தில் படித்தவர்களுக்கு தமிழ் நன்றாக பேச மட்டும் வருகிறதாம் எழுத படிக்க தெரியவில்லையாம் அப்படிப்பட்டவர்களுக்கு தமிழில் டெஸ்ட் வைத்தால் கேள்விகளை படிக்க வோ  அப்படி படித்த கேள்விகளுக்கு தமிழில் பதில்  எழுத தெரியதாம்... அதுமட்டுமல்ல தமிழில் பேச எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு பொது அறிவு மிக குறைவாக இருப்பதோடு காலேஜ் டிகிரி கூட இல்லையாம்..




அதனால்தான் மத்திய அரசு ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் எழுத முடியும் என்று அறிவித்திருக்கிறதாம்

#Facts வெரிஃபைடு நம்மபாதவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் படித்த ஆண் மற்றும் பெண்ணிடம் நாலு வார்த்தை தப்பு இல்லாமல் எழுதி காட்டச் சொல்லுங்கள்

ஹிந்தியை எதிர்ப்போம் ஆனால் அதே சமயத்தில் தமிழும் ஒழுங்காக படிக்க மாட்டோம் . வேலை வேண்டும் ஆனால் வேலை செய்யாமல் சம்பளம் மட்டும் வாங்க இதுதான் எங்க கொள்கை தமிழர்கள் வாழ்க்கை


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. //ஹிந்தியை எதிர்ப்போம் ஆனால் அதே சமயத்தில் தமிழும் ஒழுங்காக படிக்க மாட்டோம்//

    இது நிதர்சனமான உண்மை நண்பரே

    ReplyDelete
  2. உண்மையத்தான் சொல்லியிருக்கீங்க மதுரைத் தமிழன். நல்ல தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டு இளைஞர்களில் 3-4% இருப்பாங்களா என்றே எனக்குச் சந்தேகம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.