Tuesday, July 16, 2019

நெல்லைத்தமிழனால் மதுரைத்தமிழனுக்கு  ஏற்படவிருந்த ஆபத்து



நெல்லைத்தமிழன் என்பவர் எங்கள் ப்ளாக் என்ற வலைத்தளத்தில் கடந்த திங்கள் அன்று  மோர்க்கூழ் என்ற சமையல் குறிப்பு இட்டு இருந்தார்.

அது இதுதான்.


மோர்க்கூழுக்குத் தேவையானவை  ******(இருவருக்குப் போதுமானது)******* இது இப்போதுதான் கண்ணிற்கு படுகிறது ஹும்

மோர் மிளகாய்  5 (நீளமாக இருந்தால்.) உருண்டைனா 7-8 கூட போடலாம், காரம் வேணும் என்றால்)
அரிசி மாவு – 1  கப்
மோர் அல்லது கூழான தயிர் – 1  1/2  கப்
தண்ணீர் 3 1/2 அல்லது 4 கப்
உப்பு தேவையான அளவு



நல்லெண்ணெய்  5 மேசைக்கரண்டி
கடுகு 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 சிட்டிகை
கருவேப்பிலை 3 ஆர்க்


செய்முறை

முதலில் அரிசி மாவு, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்துகொள்ளவும். அதில் தண்ணீர் விட்டு (சொன்ன அளவு) நன்றாகக் கரைத்துக்கொள்ளுங்கள்.

கடாயில் நல்லெண்ணெய் முழுவதும் (5 ஸ்பூன்) விட்டு, சுட்டவுடன், அதில் மோர் மிளகாய் கிள்ளிப்போட்டு வறுத்துக்கொள்ளவும். ஓரளவு வறுபடும்போது, அதில்  பெருங்காயம், கடுகு,  உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பிறகு கருவேப்பிலை சேர்க்கவும்.

இதனுடன் கரைத்துவைத்துள்ள அரிசிமாவு கலவையைச் சேர்க்கவும். அது ரொம்ப நீர்க்க இருக்கும்.

நல்லா கிளறணும். தீயை மிதமாக வைத்துக் கிளறினால், கொஞ்சம் கொஞ்சமாக அது கெட்டிப்படும்.

இடையில் கொஞ்சம் நல்லெண்ணெய் விடலாம். எண்ணெய் விட விட, மோர்க்கூழ் அருமையாக வரும்.

இந்த மாதிரி உணவு ஐட்டங்கள் என்றால் என் மனைவிக்கு பிடிக்கும் என்பதால் அதுவும் என் மனைவி சைடு உறவினரான நெல்லைத்தமிழன் போட்டு சமையல் குறிப்பு என்பதால் அதை செய்து மனைவியை கொஞ்சம் அசத்தலாம் என்று நினைத்து இன்று செய்தேன்

ஆனால் அதில் என்ன பிரச்சனை வந்தது என்றால் அவர் போட்ட பதிவு இந்தியாவின் திங்கள் கிழமை காலையில் வெளி வந்தது... அதாவது என் நாட்டு மணிப்படி ஞாயிற்று கிழமை இரவு. அன்று இரவு கோடைக்காலத்திற்கு ஏற்ற குளிர் பாணம் தாயாரித்து நான் அருந்தி கொண்டே  நெல்லைத்தமிழனின் மோர்கூழ் குறிப்பை படித்தேன்

அந்த குறிப்பை செவ்வாய்கிழமை இரவு ஞாபகத்தில் வைத்து தயாரிக்க தொடங்கினேன்.. அவரின் ரிசிப்பியில் ஒரு கப் அரிசி மாவு எடுத்து செய்து தன் பையனுக்கு செய்து கொடுத்தாக  சொல்லி இருந்தார். அதில் அவர் சாப்பிட்டதாக சொல்லவில்லை என நினைக்கிறேன்..

அவர் சொன்ன அளவை வைத்து ஒரு கப் ஒரு ஆளுக்கு என்றால் எங்கள் வீட்டில் என்னை சேர்த்து மூன்று பேர் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அளவு குறைத்தே சாப்பிடுவோம் என்பதால் மூன்று கப் எடுத்த்து செய்தால் இரண்டு வேளைக்கு வரும் என்று கருதி 3 கப் அரிசி மாவு எடுத்து செய்ய தொடங்கினேன் அதற்கு ஏற்றவாறு அவர் சொன்ன மற்ற தேவையான பொருட்களையும் 3  கப் அரிசி மாவிற்கு தேவையான அளவு எடுத்து தாயாரிக்க ஆரம்பித்தேன்
@avargalunmaigal

அதை செய்ய ஒரு பெரிய பாத்திரம் தேவையாக இருந்தது. இதை பண்ணும் போது நான் நினைத்தது என்ன்வென்றால் பண்ணி முடிக்கும் போது அது சுண்டி மிக குறைந்த அளவாகிவிடும் என்றும் நினைத்து இருந்தேன்... மனைவி ஆபிஸ் முடிந்து காரில் வந்து கொண்டிருக்கும் போது இன்று என்ன சமையல் பண்ணிறீங்க டின்னருக்கு என்று கேட்டாள் நானும் உன் உறவினரில் ஒரு போட்ட சமையல்  குறிப்பில் இருந்த மோர்கூழ் பண்ணுகிறேன் அதுமட்டுமல்ல உன்னுடைய மற்ற உறவினர்களும்  அதை பாராட்டி இருக்கிறாகள் அதை படித்து செய்கிறென் என்று சொல்லிவிட்டேன்

அதன் பின் ஒடினேன் ஒடினேன் வாழ்க்கையின் ஒரத்திற்கே ஒடினேன் என்று பாராசக்தியில் சிவாஜி வசனம் பேசுவது போல நானும் மோர்கூழை கிளறினேன் கிளறினேன்  கை வழிக்க வழிக்க கிளறிக் கொண்டே இருந்தேன் ஆனால் அது கெட்டியாகும் போது அளவு குறையாமல் இருந்தது.


என்னடா இந்த மதுரைத்தமிழனுக்கு வந்த பிரச்சனையாக இருக்கிறதே இந்த அளவை பார்த்தால் மனைவிக்கு நெஞ்சுவலியே வந்துடுமே அப்படி அவளுக்கு நெஞ்சு வலித்தால்  என் உடம்புக்கு வழி பூரிக்கட்டையால் வந்துவிடுமே.... இந்த நிலைமையை எப்படி சாமாளிக்கைற்து என்று போன் பண்ணி நெல்லைத்தமிழ்னிடமா கேட்பது அது நடக்கிற காரியாமா என்று யோசித்து கொண்டே மனைவிக்கு ஒரு போனை போட்டு எங்கு வந்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன் இன்னும் 25 நிமிடத்தில் வீடு வந்துவிடுவதாக சொன்னது மட்டுமில்லாமல் நன்றாக பசிக்கிறது அதனால் சீக்கிரம் செய்து முடியுங்கள் என்று வேறு உத்தரவும் போட்டாள்..



சரி என்ரு சொல்லிவிட்டேன் ஆனால் அதன் பின் உடம்பு எல்லாம் பதறியது என்ன செய்வது என்று சட்டென்று யோசித்து வேறு ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பாதிக்கும் மேல் இந்த மோர்கூழை எடுத்து காராஜ்ஜில் ஒழித்து வைத்துவிட்டு மீதியை தொடர்ந்து கிளறினேன்... இதில் எண்ணெய் அதிகம்விட்டால் நல்ல டெஸ்டாக இரூக்கும் என்று வேறு சொன்னதால் அதையும் தாராளமாக வீய்டு கிளறத் தொடங்கினேன்  அது முடியும் தருணத்தில் மனைவி வீட்டுக்கு வந்ததும் மிகவும் பணிவாக அடியே உண் உறவினர் சொன்ன முறைப்படி செய்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் பார்த்த்துவிட்டு சொல்லேன்  என்று கேட்டதும் அவள் வந்து பார்த்துவிட்டு என்னங்க் இவ்வளவு அதிகமாக செய்யுறீங்க எதையும் உங்களுக்கு கொஞ்சம் குறைவா செய்யத் தெரியாதா என்று சத்தம் போட்டுவிட்டு டெஸ்ட் பார்த்தாள்..... நன்றாக வந்து இருக்கிறது என்று சொல்லிவிட்டு பண்னியதை தட்டில் எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தால் பாவம் நல்ல பசி மயக்கமாக இருந்திருக்கும் போல அதனால் வேறு ஏதும் சொல்லாமல் சாப்பிட்டுவிட்டாள். என் குழந்தையும் சாப்பீட்டு விட்டது இதை சாப்பிட்ட எல்லோருக்க்கும் மோர்மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாய் போட்டு செய்து இருந்தால் இன்னும் சுள் என்று நன்றாக உறைத்து இருக்குமே என்று நினைக்க தோன்றியது


நல்லவேளை எனது சமார்த்தியத்தால் தலைக்கு வந்ததது தலைபாகையோடு போன மாதிரி ஆனது... நாளை மனைவி வேலைக்கு போனதும் காராஜில் ஒழித்து வைத்த மீதி மோர்க்கூழை எடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் நன்றாக கட்டி போட்டு குப்பை தொட்டியில் போட்டுவிடனும்


நெல்லைத்தமிழன் போட்ட சமையல் குறிப்பால் மதுரைத்தமிழனின் உயிர் போய் மீண்டும் வந்தது எல்லாம் அத்தி வரதர் காட்சி தந்ததன் புண்ணியமாகத்தான் இருக்கனும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :  மோர்கூழ் குறிப்பை இங்கு மறு பதிவு செய்து இருக்கிறேன் அதற்காக எங்கள்ப்ளாக்கிற்கும் நெல்லைத்தமிழனுக்கும் எனது நன்றிகள்

10 comments:

  1. ஏனிந்த விபரீத சோதனை...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் பண்ணி வாழ்க்கையை நடத்துவதே சோதனைதானே அதையே துணிந்து செய்யும் போது இதெல்லாம் ஒன்றுமே இல்லையே தனபாலன்

      Delete
  2. எதையும் சிரிக்கும்படி நகைச்சுவையா எழுதறது உங்களுக்கு ரொம்ப சுலபமா வருது மதுரைத்தமிழன் (வேறு என்ன செய்ய.. சோகக் கதையை அழுதுகிட்டே எழுதினால் சோகம் குறையுமா என்று நீங்க கேட்கறீங்க).

    சினிமாவில், 'காட்டாத ப்ளூஃபர்ஸ்' என்பதுபோல, உங்களுக்குச் சொல்றேன். முதல்ல நான் போட்ட அளவே பெரிய இலுப்புச் சட்டி முழுவதும் வந்துடுச்சு (தண்ணீர் சேர்த்து). அப்புறம் 3 நிமிஷம் கிளறுகிறேன், மாவு கெட்டியான பாடில்லை. ஆனா ஒண்ணு தெரியும். கிளறாம இருந்தால் அடில கட்டியாகி கந்தர்கோளமாயிடும்னு. ஆனா கொஞ்ச நேரத்துலயே சரியாயிடுச்சு.

    இதுல எவ்வளவுக்கவ்வளவு மோர்மிளகாய் வறுத்துச் சேர்க்கிறீங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு டேஸ்டியா இருக்கும் (மோர் மிளகாயில் ஏற்கனவே உப்பு உண்டு ஞாபகம்).

    நல்லவேளை...ஞாயிறு இரவே இந்தச் சோதனையில் ஈடுபடலை. அப்புறம் மயக்கத்துல, தண்ணீருக்குப் பதிலா வோட்கா போட்டிருந்தீங்கன்னா..... என்ன ஆயிருக்கும்? (எல்லோரும் சூப்பர் சூப்பர்னு சொல்லியிருப்பாங்க என்கிறீர்களா?)

    ReplyDelete
    Replies
    1. அடராமா நான் உயிர்பயத்தில் நடந்ததை எழுதினால் உங்களுக்கு மிகவும் நகைச்சுவையாக எழுது வருகிறது என்று இந்த நெல்லைதமிழன் சொல்லுகிறார் ஹும்ம்ம்

      நான் நன்றாக குடித்தாலும் இது வரை மயக்கம் ஏதும் வந்ததில்லை சில சமயங்களின் நண்பர்கள் வரும் போது என் மனைவி அவர்களிடம் இவருக்கு மயக்கம் வரும் அளவிற்கு கொடுத்து அவரை பேச வையுங்கள் அப்போதாவது ஏதாவது மறைத்து வைத்த உண்மைகளை பேசுவார் என்று சொல்லுவார் ஆனால் அதற்கு சரியென தலையாட்டும் நண்பர்கள் இறுதியில் அவர்கள் மயக்கமாகி உளறும் சம்பவங்கள் நடந்து இருக்கின்றன

      Delete
  3. ஹா ஹா ஹா ஹா செம மதுரை சிரிச்சு முடிலை. ஃபார்முக்கு வந்துட்டீங்க!! ஹிஹிஹி

    அது சரி நெல்லையின் பதிவை ஒழுங்கா வாசிக்கலை நீங்க .கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..அவர் ஒரு கப் மாவு இருவருக்குன்னுதான் போட்டிருந்தார். அதை லேட்டா தெரிஞ்சு இப்ப மேல போட்டு...ஹா ஹா ஹா ஹா..

    எப்படியோ ஒப்ப்தேத்திட்டீங்கல்ல..சமாளிச்சு பூரிக்கட்டை அடிவாங்காம...

    ஏன் ஒளிச்சு வைச்சத தூரப் போடணும்...அதை இன்னும் கொஞ்ம் கிளறினா நல்லா உதிர் உப்புமாவாகியிருக்குமே மோர்க்கூழ் உதிர் உப்புமானு இன்னொரு ஐட்டமும் செஞ்சேன்னு கொடுத்து டபுள் போனஸ் கிடைச்சுருக்கும்ல...அடுத்தவாட்டி நீங்க ஏதாவது குளறுபடி செஞ்சாலும் பூரிக்கட்டை அடியிலிருந்து தப்பிச்சுருக்கலாம்ல!!!!!!!!!!!!!!!!!!!!!

    சூப்பரா செஞ்சுருக்கீங்க

    கீதா

    ReplyDelete
    Replies

    1. உங்களை போன்றவர்கள் பக்கத்தில் இருந்திருந்தால் இப்படி ஒளிச்சு தூக்கி போட அவசியம் இருந்திருக்காது. உடனே உங்களுக்கு போன போட்டு எங்க வீட்டுக்கு வாங்க உங்களுக்கு பிடித்த டிபன் உங்களுக்காகவே செய்து இருக்கிறேன் என்று சொல்லி சமாளித்து இருப்பேன்....ஹீஹீ

      Delete
  4. நேற்று மோர்கூழ் விடாமல் கிளறியதாலோ அல்லது அதை சாப்பிட்டதாலோ இன்று உடல் முழுவதும் வலியாகவும் டையர்டாகவும் இருப்பதால் வேலை செல்லாமல் மட்டம் போட்டுவிட்டேன் வழக்கமாக பூரிக்கட்டையால் அடிவாங்கும் போதுதான் மட்டம் போடுவேன் ஆனால் இந்த நெல்லைதமிழன் போட்ட சமையல் குறிப்பால் இப்படி நடக்கும் என்று எனக்கு தெரியாது.... வேலைக்கு போகவில்லையென்றால் சம்பளம் கட்டு அதனால் நெல்லைதமிழன் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கலாமா என்று யோசித்து வருகிறேன் அப்பதான் அடுத்த சமையல் குறிப்பு போடும் போது disclaimer போட்டு பதிவு போடுவார்

    ReplyDelete
    Replies
    1. உங்க ஞாபகார்த்தமா இனி டிஸ்கிளெய்மர் இந்தியாவுக்கு வெளியே உள்ளவங்களுக்கு.

      இந்தியாவுக்குள் இருப்பவங்க பல தேத்திலும் ஒரே ஐட்டம் செய்முறையைப் படித்துவிட்டு தங்களுக்குத் தோன்றிய வித்த்தில் செய்வாங்க. அதனால் பயமில்லை

      Delete
  5. நீண்ட நேரம் கிளறினால் கூழ் உப்புமா ஆகிவிடுமே...!

    பதிவை ரசித்தேன். கேராஜ் சென்று பாருங்கள். நீங்கள் அங்கு வைத்திருக்கும் மீதிக்கூழில் சில எலிகள் ஒட்டிக்கொண்டு தப்பிக்க முடியாமல் இருக்கக் கூடும்!

    ReplyDelete
    Replies
    1. உப்புமாவாக ஆகவில்லை காரணம் நீங்கள் எண்ணெய் நீறையவிட்டால் நன்றாக இருக்கும் என்று அங்கு சொல்லி இருந்ததால் எண்ணெயை மிக மிக தாராளமாக விட்டுவிட்டேன் . நேற்று சூடாக ஆப்பிடும் போது ஒன்றும் தெரியவில்லை மீதி இருந்ததை இன்று மதியம் சாப்பிடலாம் என்று நினைத்து திறந்து பார்த்தால் சட்டியின் அடியில் நிறைய எண்ணெய் இருந்தது அதை பார்த்த பின் சாப்பிட தோன்றாமல் நீண்ட நாட்களுக்கு அப்புறம் மேகி பண்ணி சாப்பிட்டோம்.....இன்று வேலைக்கு போகாமல் மட்டம் போட்டுவிட்டேன்

      இங்கு எலி . கரப்பான் பூச்சி பல்லி தொந்தரவு கிடையாது.. எங்கள் வீடு சிறு ரிவருக்கு அருகில் மரங்கள் செடிகள் சூழ்ந்து காடுகளுக்கு மத்தியில் இருப்பது போல இருப்பதால் காராஜில் மட்டும் வேறு சில பூச்சிகள் எப்போதாவது வரும் அவ்வளவுதான்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.