Sunday, June 16, 2019

@avargal unmaigal
அறம் வெங்காயம் ஜெய்மோகன்

பிரபல எழுத்தாளன் என்றால் அவன் அறிவாளியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவன் முட்டாளாகவும் இருக்கலாம் என்பதற்கு ஜெய்மோகன் ஒரு எடுத்துக்காட்டு

எழுதுவற்கும் பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன... எழுதும் போது தனிமையில் உட்கார்ந்து நன்றாக சிந்தித்து எழுதி அழித்து திருத்தி எழுதி மீண்டும் அதேயே செய்து கடைசியில் ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்துவிடலாம்.  பொது வெளியில் பேசுவதற்கும் முன்னேற்பாடாக பேசி பேசி பழகி  பொது மேடையில் பேசிவிடாலாம்.. இதை எந்த முட்டாளும் முயற்சி செய்தால் செய்துவிடலாம்  யாரும் செய்யலாம்..

ஆனால் ஒரு பிரச்சனைகளின் போது அதை சமாளிக்க உடனடி தீர்வு காண வேண்டுமென்றால் அல்லது பிரச்சனைகளின் போது சமார்த்தியமாக பேச வேண்டுமென்றால் அதுக்கு கொஞ்சமாவது அறிவு வேண்டும்...சாமர்த்தியம் வேண்டும்... அது ஜெயமோகனிடம் இல்லை என்பது எல்லோருக்கும் இந்த புளிச்சமாவு விஷயத்தில் தெரிந்துவிட்டது.

வாசகர்கள் எழுத்தாளர்களின் தகுதிக்கு மீறி அவர்களை கொண்டாடுவதால்  இந்த மாதிரி உள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு கொம்பு முளைத்து விடுகிறது. இப்படி கொம்பு முளைத்த எழுத்தாளர்கள் பொது மக்களை மட்டுமல்ல சக எழுத்தாளனையும் கூட மதிப்பதில்லை


ஜெயமோகன் தாக்கபட்டது எல்லாம் யதார்த்தமான நிகழ்வுதான் சாதாரணமாக நம்மில் யாராவது கடைக்கு போயி மாவு பாக்கெட் வாங்கிட்டு வந்து அது புளித்துபோனால் ஒன்று தூக்கி  எறிந்து விட்டு மற்ற வேலையை பார்ப்போம் அல்லது   வாங்கின கடைக்கு போய் இந்த மாவு புளிச்சிருக்கு வேற மாவு கொடுங்க அல்லது பணத்தை திருப்பி கொடுங்க என்போம் அதற்கு கடைக்காரர்  ஒன்று பணத்தை திருப்பி தருவார் இல்லையென்றால் வாங்கியது வாங்கியதுதன் மாவு புளித்தால் நான் என்ன பண்ணுறது என்று சொல்லி மறுப்பார்.பல சமயங்களில் வாடிக்கையாளர்களுக்கும் கடைக்கார்களுக்கு உள்ள உறவை பொறுத்துதான் தீர்வு கிடைக்கும்


அதைவிட்டுட்டு கடைக்காரன் மனைவியிடம் கத்தி பேசினால் பதிலுக்கு கடைக்காரனும் தனது பங்கிற்கு கத்திதான் பேசுவான்.

நானும் அமெரிக்காவில் ரீடெய்ல் இன்டஸ்ட் ரியில்தான் வேலை செய்தவன்தான்.... கஸ்டமர்கள்  சொல்வது ஆல்வேய்ஸ் ரைட்  என்று சொன்னாலும் அவர்கள் வாங்கிய பொருட்களில் பிரச்சனைகள் இருந்தால் அதை அமைதியாக் சொல்லி தீர்வு கேட்டால்தான் காரியம் நடக்கும் அதைவிட்டு விட்டு கத்தி கூச்சல் போட்டால் போடா போ நீ எங்க வேண்டுமானலும் ரிப்போர்ட் பண்ணு அல்லது கோர்ட்டுக்கு கூட போ என்று சொல்லி அதுக்கு மேலும் அவர் கத்தி கொண்டிருந்தால் செக்குரிட்டியை கூப்பிட்டு வெளியே தள்ளிவிடுவார்கள்... ஆனாலபட்ட அமெரிக்காவிலே இப்படி இருக்கும் போது அதுவும் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஒரு கட்சிகாரன் நடத்துக் கடையில் போய் கத்தி கூச்சல் போட்டால் அடி உதைதான் கிடைக்கும்..

ஜெயமோகன் பெரிய பிரபல எழுத்தாளனாக இருக்கலாம் ஆனால் அந்த பிரபலம் எல்லாம் அன்றாட பொழைப்புக்கு வேலை செய்பவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்பது அவசியமில்லை



திரைப் படங்களிலும், தனது எழுத்துக்களிலும் ஆயிரமாயிரம் பார்வையாளர்களுக்கும், வாசகர்களுக்கும் புத்தி சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கொஞ்சமாவது சமார்த்தியம் இருந்திருந்தால்  தமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி நகராட்சி அதிகாரிகளிடமோ அல்லது உணவுத்துறை அதிகாரிகளிடமோ சொல்லி அந்த கடைக்காரர் மீது புகார் கொடுத்து தரமற்ற பொருட்களை வீற்கும் அந்த கடையின் மீது நடவடிக்கை எடுக்க செய்து இருக்க வேண்டும்... ஆனால் படிக்காதவன் பாமரன் போல அந்த கடைக்காரனிடம் சண்டை போட்டு  ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி தனக்கு தெரிந்த எம்பியிடம் சொல்லி அந்த கடைக்காரர் மீது வழ்க்கு தொடுக்க சொல்லி நாடகமாடுவது எல்லாம் சின்ன புள்ளைத்தனமாகத்தான் இருக்கிறது

@avargalUnmaigal

ஒருவனை பழி வாங்கணும்னு ஹாஸ்பிடலில் பொய்யாக அட்மிட் ஆகறார்.ஆனா இப்படிபட்ட அவருக்கு முட்டுக்கொடுக்குறாங்க இந்த நடுநிலைவாதிங்க இப்படிபட்ட ஆளை சமுகவலைத்தளங்களில் கிண்டல் கேளி செய்து பதிலுக்கு பதில் போட்டா இது அறமா என்று கேள்வி கேட்கிறார்கள் 

இப்ப்டி ஜெயமோகனுக்காக அறம் அது இது என்று பேசுபவர்கள்... அந்த கடைக்காரன் செய்தது தவ்றுதான் அதனால் அவனை முரடன் குடிகாரன் அவன் செய்தது தவறு என்று மட்டும்தானே பேச வேண்டும் அதைவிட்டு அவன் ஏதோ ஒரு கட்சியில் இருக்கிறான் அவனுக்கு அந்த கட்சி நிரிவாகி சபோர்ட் அது இது வென்றுமட்டும் பேசுவது சரியா இவர்கள் செய்வது தவறாக இருந்தாலும் அதற்கு அந்த கட்சியும் கட்சி தலைவரும் என்ன செய்வார்... அவர் என்ன கட்சிகாரர்களுக்கு தினமும் என்ன நீதி போதனை வகுப்பா எடுத்து கொண்டு இருக்கிறார்.  அந்த முரட்டு கடைக்காரானுக்கு ஒரு கட்சி நிர்வாகி உதவுகிறார் என்றால் இந்த முன் கோப ஜெயமோகனுக்கு எந்த கட்சி எம்பி உதவுகிறார். அது மட்டும் அறமா என்ன?

இப்படி மாவு கடைக்காரிடம் நியாயத்திற்காக போராடிவர் ரயிலில் செல்லும் போது அதில் வீற்கும் உணவை வாங்கி இது என்ன உணவா தரம் கெட்டு இருக்கிறதே என்று சொல்லி ரயில்வே மந்திரி முகத்தில் வீசி நியாயம் கேட்பாரா?

என்ன எழவோ பெரிய இலக்கியவாதி என்று பேசப்பட்டவர் இனி வரும் நாளில் புளிச்சமாவுஜெமோ என்று பேர் எடுத்து விட்டார்..!! மானம் மரியாதை போனதுதான் மிச்சம்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : சில மாதங்களுக்கு ஜெயமோகனை சந்திக்கும் அவரின் வாசகர்களுக்கு அவரை சந்தித்தால் தோசை சாப்பிட வரீங்களா என்று மட்டும் கேட்டு வீடாதீர்கள் அப்புறம்  அந்த கடைக்காரனுக்கு நேர்ந்த கதிதான்உங்களுக்கும்


எல்லோரும் மாவாட்ட கற்றுக் கொள்ளனும் ஜெயமோகன் அட்வைஸ்  Ellorum Mavatta

கொசுறு:

நெட்டில் சுட்டவை

அந்த கடைகாரர் எதுக்கு @jeyamohanwriter மூஞ்சில குத்துனாரு? "மாவு புளிச்சிருக்குன்னு"சொல்றதுக்கு பதிலா வாய் தவறி "இந்தம்மாவ புடிச்சிருக்குன்னு" பக்கத்துல இருந்த கடைகாரர் பொண்டாட்டிய பாத்து சொல்லிட்டாராம்!.😂
@Aravind Raja


அடிபட்டு
மாவுக்கட்டுப்போட்டா
அது சம்பவம்.

மாவுக்காகவே
அடிபட்டு கட்டுப்போட்டா
அது சரித்திரம்.


நான் பெரிய எழுத்தாளர். நிறைய புக்கெல்லாம் எழுதியிருக்கேன். எனக்கு புளிக்காத தோசை மாவு குடு

7 comments:

  1. உங்கள் டிஸ்கிக்கு எனது டிஸ்கி:
    "அப்படி உங்களோட ஈர வெங்காயம் தோசை சாப்பிட்டாலும், "புளித்த மாவில்" செய்த தோசை மாதிரி இருக்கு என்று மட்டும் சொல்லிவிடாதீங்க!

    ReplyDelete
  2. எழுத்தாளருக்கே புத்தி இல்லாத போது..எழுத்தாளு எழுதியதை படித்த படித்தாளுக்கு புத்தி இருக்க போகிறது

    ReplyDelete
  3. ஏன்யா தரம் குறைந்த பொருளை விற்பனை செய்த வரைப் பற்றி பேசமாட்டீர்களோ. ஊடக தர்மம். திராவிட நெடி அடிக்கிறது.

    ReplyDelete
  4. தரம் குறைந்த பொருள் விற்பவர், சாதாரண கடைக்காரர். அவரை டீல் பண்ணும் வழி இதுவல்ல. ஒருவேளை அவர் ரவுடியாக இருந்து 'போய்யா வித்தது வித்ததுதான்' என்று சொன்னால், 100 ரூ நஷ்டம், அவனுக்கு ஒரு கஸ்டமர் போயிருக்கும், இன்னும் பல கஸ்டமர்களை அவர் இழந்திருக்கக்கூடும்.

    எறும்பை நசுக்க நம் பலத்தை பிரயோகித்தால், கண்ட இடங்களில் கடி வாங்குவதைத் தவிர்க்க முடியாது.

    இந்த விஷயத்தில் கட்சி, எழுத்தாளர் என்பதெல்லாம் செல்லுபடியாகாது. ஜெயமோகன் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனது நல்ல நகைச்சுவைக் காட்சி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.