Sunday, May 5, 2019

@avargalunmaigal
Sometimes சில நேரங்களில்   படவிமர்சனம்


2018 மே 1 ல் வெளிவந்த படத்தை 2019 மே 1 ல் பார்க்கும் வாய்ப்புகிட்டியது இந்த Sometimes தமிழ்படம் நெட்ஃபிக்ஸின் வெளியிடு

இந்த படத்தில்  நடித்தவர்கள் பிரகாஷ் ராஜ், அஞ்சலி ராவ் , அஸ்ரிதா கிங்கினி , கண்ணைராம் , எம்.எஸ் பாஸ்கர் , நாசர் , பாண்டியன்  , ரெயில் ரவி , சைவம் ரவி , ஷிரியா ரெட்டி

இயக்குனர்: பிரியதர்ஷன் 110 நிமிடம் ஒடும் இந்த படம் ஆரம்பம் முதல் இறுதிவரை நம்மை சீட்டில் உட்கார வைத்து விடுகிறது...

கதை இதுதான் ஒரு இரத்த சோதனை நடத்தும் நிலையத்திற்கு நிறைய பேர் காலையில் வருகிறார்கள் அதில் ஏழு பேர்  AIDS  எய்ட்ஸ் டெஸ்டிற்கான இரத்த பரி சோதனை நடத்த வருகிறார்கள்.அவர்கள் இரத்த டெஸ்ட் கொடுத்துவிட்டு அதற்கான ரிசல்ட்டை பெற மாலை வரை காத்து இருக்க வேண்டியிருக்கிறது..அந்த நிலையத்தில் காலையில் பரிசோதனை செய்தால் மாலையில்தான் அனைவருக்கும் அதன் ரிசல்ட்டை கையில் தருவார்கள்...ஆனால் இவர்களின் ஒருத்தருக்கு அந்த டெஸ்ட் சோதனை செய்ய சில மணிநேரங்கள் மட்டுமே ஆகும் என்று தெரியும் அதனால் அவன் மாலை வரை டென்ஷனோடு  காத்திருக்க விருப்பமில்லை அதனால் அந்த நிலையத்தில் வேலை பார்க்கும் பெண்ணிடம் லஞ்சம் கொடுத்து அதன் ரிசல்டை சீக்கிரம் வாங்க முயற்சிக்கிறான் ஆனால் அங்கு வேலை பார்க்கும் பெண்ணிற்கோ பணத்தேவை அதிகம் அதனால் இந்த இளைஞன் கொடுக்கும் பணம் பத்தாது என்று சொல்லி மறுக்கிறாள். அவன் உடனே அங்கு வெயிட் செய்யும் மற்ற 6 பேர்களிடம் பேசி அனைவரது ரிசல்ட்டையும் வாங்கிவிடலாம் நீங்களும் பணம் கொடுத்தால் என்று சொல்லி அவர்களிடம் இருந்து வாங்கி கொடுக்கிறான்.


பணம் வாங்கிய பெண்ணோ உள்ளே சோதனை செய்யும் ஆட்களில் ஒருவருக்கு சிறிது பணம் கொடுத்து ரிசல்ட்டை பெற முயற்சிக்கிறார் ஆனால் அவரால் முழு ரிப்போர்ட்டை வாங்க முடியாமல்  அந்த ஏழு பேரில் ஆறு பேருக்கு  எய்ட்ஸ் இல்லை ஆனால் ஒருவருக்கு மட்டும் எய்ட்ஸ் இருக்கிறது என்று மட்டும் சொல்லிவிட்டு ஒழிந்து கொள்கிறாள் மாலையில் ஒருவர் பின் ஒருவராக ரிசல்ட் பார்து வாங்கி தனக்கு இல்லை தனக்கு இல்லை என்று சொல்லி செல்லும் போது இறுதியில் யாருக்கு இருக்கிறது அதன் பின் என்ன முடிவு ஏற்படுகிறது என்பதுதான் படத்தின் ட்வீஸ்ட்.. மிக சிறப்பான முறையில் எடுத்து நம்மையும் டென்ஷனுக்குள்ளாக்கி இருக்கிறார்கள்....படம் பார்த்தது முடித்த போது மனதில் ஒருவித மான உணர்வு தோன்றி நம் மனதை கலங்க வைக்கிறது.. என்னை பொறுத்த வரையில் கடந்த வருடங்களில் வந்த தமிழ் படங்களில் இதுதான் சிறந்த படம் என்று சொல்லலாம்



The film was released on 1 May 2018 on Netflix. The film was among the top ten shortlisted films for the 74th Golden Globe Awards, but did not get nominated

வாய்ப்பு கிடைத்தவர்கள் நெட்பிலிக்ஸில் பார்க்கவும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. ஆச்சர்யமான திரைக்கதை...
    நல்ல அறிமுகம்

    ReplyDelete
  2. ஒரு வித்தியாசமான கதை

    ReplyDelete
  3. ஒரு வித்தியாசமான கதை

    ReplyDelete
  4. அட! இப்படி ஒரு படம் வந்ததா? கதையே வித்தியாசமாக இருக்கிறதே. தியேட்டருக்கு வரலையோ? வராதோ இப்படி நெட்ஃப்ளிக்ஸ் எடுக்கும் படங்கள்?

    நீங்கள் கொடுத்த லிங்கில் பார்க்க முயற்சி செய்கிறோம்

    துளசிதரன், கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.