Saturday, May 25, 2019

@avargal unmaigal
மோடியின் வெற்றியும் மக்களின் தோல்வியும்

மோடி அதிக மெஜாரிட்டியோட ஜெயிச்சுட்டார். இதற்கு அவர் செய்த சாதனைகள்தான் காரணம் என்று சொன்னால் புத்தியுள்ளவன் சிரிப்பான். மோடியின் இந்த வெற்றிக்கு காரணம் அவரின் நடிப்பும்  அதிகாரப்பதவியில் இருந்து கொண்டு தேர்தலை சந்திப்பதும் அமித்ஷாவின் கடும் உழைப்பையும்தான் சொல்ல வேண்டும் அதுமட்டுமல்லாமல் எதிர்கட்சிகள் ஒன்றுபடாமல் தேர்தலுக்கு அப்புறம் கூட்டணி வைத்து கொள்ளலாம் என்ற சுயநலம்தான் மோடியை இந்த அளவிற்கு வெற்றி பெற செய்து இருக்க வேண்டும்..


மோசமான ஒருவனை அவன் தகுதிக்கு மீறிய தலைமை பதவியை கொடுத்து அழகு பார்த்து அதன் பின் அவன் செய்யும் தவறுகளை அறிந்து நீக்க முயல செய்வது அப்படி எளிதான காரியம் அல்ல அந்த பதவியை அடைந்துவிட்ட பின் அதன் அதிகார ருசியை அனுபவித்த பின் அந்த ப
வியை தொடர்ந்து வைத்து கொள்ள அவன் எந்த செயலையும் செய்ய முயற்சிப்பான் என்பதை உலகவரலாற்றில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும் அதுதான் மோடியின் விஷயத்திலும் நடந்து கொண்டு இருக்கிறது

இந்த தேர்தலின் மூலம் தெரிந்து கொண்டது என்னவென்றால் , இந்திய மக்களுக்கு தேவை, யார் நல்லா நடிப்பார்கள் என்பதுதான் அது அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி நடிகர்களாக இருந்தாலும் சரி

மோடியை போல திமுக தமிழகத்தில் பெற்ற வெற்றிக்கு ஸ்டாலினின் திறமைதான் காரணம் என்றால் புத்தியுள்ளவன் மட்டுமல்ல புத்தியில்லாதவன் கூட வாய்விட்டு சிரிப்பான்.. இங்கு திமுக வெற்றி பெற்றதற்கு காரணம் மோடியின் மீதும் பாஜக மீதும் உள்ள வெறுப்பு மட்டும்தான் காரணம் ...ஸ்டாலின் திறமை என்று சொன்னால் சட்டசபை இடைத்தேர்தலிலும் அவர் முழு வெற்றியை பெற்று இருக்கனும் அப்படி இல்லாத போதே அவரின் திறமையில் சந்தேகம் வரத்தான் செய்யும்.

 பிஜேபி மட்டும் அதிமுகவை பிளவுபடாமல் இருக்க நினைத்து  செயலபட்டு இருந்தால் ஸ்டாலின் பாடு மிகவும் திண்டாட்டமாகத்தான் இருந்திருக்கும்... சொல்லப் போனால் ஸ்டாலின் இந்த அளவு வெற்றிக்கு ஸ்டாலின் உழைத்ததைவிட பாஜக உழைத்ததுதான் மிக அதிகம்



பாஜக தமிழகத்திலும் எளிதில் வெற்றி பெற்று இருக்கலாம் ஆனால் அவர்கள் இங்கு தோல்வியுற்றதற்கு காரணம் எந்த மண்ணில் என்ன விதைக்கனும் என்றும் தெரியாததால் தவறான விதையை விதைத்து அதன் பலனை அனுபவித்து இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்..



பாஜகவின் பக்கம் இந்தியாவின் பல மாநிலத்தை சார்ந்த அறிவாளி மக்கள் துணை நிற்கலாம்.  ஆனால் முட்டாள் தமிழர்கள் தர்மத்தின் பக்கம் நின்று இருக்கிறார்கள். தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும் அதன் பின் தர்மமே மீண்டு ஜெயிக்கும் ஆனால் அதற்கு மிக அதிகம் கஷடங்களை அனுபவிக்கனும்



எனது இந்த  "இந்தியா வல்லரசு ஆக வேண்டுமானால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்"   பதிவிற்கு மிக சரியான கருத்தை சொன்ன  ராஜ்ஸ்ரீ  மற்றும் ஜிஎம்பி சார் சொன்ன கருத்தை சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்

@ராஜ்ஸ்ரீ :  மதுரை தமிழன், இதற்கு முந்தைய பதிவை நீங்கள் மிக சரியாகவே எழுதியிருந்தீர்கள். ஹிட்லர் முதல் ஐந்து வருடங்களுடன் தன் ஆட்சி காலத்தை முடித்து கொண்டிருந்தால் அவர் தான் உலகில் தோன்றிய மிக சிறந்த தலைவராக இருந்திருப்பார் என்று படித்திருக்கிறேன். மஹிந்த ராஜபக்ஷ போரை முடிவுக்கு கொண்டு வந்தவுடன் அரசியலிலிருந்து விலகி இருந்தால் கடைசி சிங்களவர் இருக்கும் வரை அவர் தான் இலங்கையில் குலதெய்வமாக இருந்திருப்பார். அவரின் இரண்டாவது ஆட்சி காலத்தில் தன் மக்களாலேயே மோசமாக தோற்கடிக்கப்பட்டார். இது என் வாழ்நாளில் கண்ணால் கண்ட உண்மை. சொல்லி புரிய வைப்பதை விட பட்டு தெரிந்து கொள்வது அதிக காலம் நினைவில் நிற்கும். சற்று பொறுமையாக இருங்கள்.


@ஜிஎம்பி :As I have been telling we get only what we deserve



கொசுறு : தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லுவது  தலைவர்கள்  வெற்றி பெறுகிறார்கள் ஆனால் மக்கள் தொடர்ந்து தோல்வியடைகிறார்கள். 


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள் கார்த்தி சிதம்பரம் / தயாநிதி / பாலு / ஜெகத்ரக்ஷகன் / ராஜா / கனிமொழி .. இவர்களுக்கெல்லாம் ஓட்டு போட்டவர்களா? நல்ல நகைச்சுவை!

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையாக இருந்தால் சிரிக்கனும் ஜி அதைவிட்டுவிட்டு கேள்விகள் கேட்க கூடாது

      Delete
  2. நீங்கள் மேலே சொன்னவர்களுக்கு "அண்ணன்" மார்கள்தானே மோடி அமித்ஷா மற்றும் பலர் முதலில் அண்ணன்மார்களை துரத்தி அடித்தால் பயத்தில் தம்பிமார்கள் கொஞ்சமாவது மாறத்தானே செய்வார்கள்..... அடிப்பட்ட அண்ணன்மார்கள் தம்பிமார்களுக்கு புத்தி சொல்லமாட்டர்களா என்ன?

    ReplyDelete
  3. எனக்கும் ராஜ்ஸ்ரீ நினைத்தது நினைக்கத்தோன்றியது அதுவே ஒரு பதிவாக என் தளத்தில் விரைவில்

    ReplyDelete
  4. மிகச் சரியான பதிவு தமிழரே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.