Sunday, April 14, 2019

ஊதிப் பெரிதாக்கப்பட்ட பிம்பம் மோடி!

ஒரு சிறப்பானத் திட்டத்தை வடிவமைத்து, அது கடினமானத் திட்டமாக இருந்தாலும், யாருக்கும் சிரமமில்லாத முறையில் அமல்படுத்துபவரே சிறந்த நிர்வாகி! தான் தோன்றியாகாச் செயல்படாமல், அத்துறையின் வல்லுனர்களின் கருத்துக்களையும் கேட்டு,அவர்களையும் திட்டத்தில் பங்குபெற வைப்பதுதான், தலைமைக்கான முக்கிய அம்சம்!

ஆனால், பணமதிப்பு போன்ற மோசமானத் திட்டத்தை யாரிடமும் கேட்காமல் அறிவித்தது, தொடர்ந்து பல நாட்கள் சாதாரண மக்களை தெருவில் அலைய விட்டது, சிறு குறு தொழில்களை அதில் பாதிப்படைய வைத்தது, குறிக்கோள்களை மாற்றிக் கொண்டேயிருந்தது, அப்படி மாற்றிய எல்லாக் குறிக்கோள்களிலும் தோல்வியையே தழுவியது என்று, ஒரு மோசமானத் திட்டத்தை, இன்னும் மோசமான முறையில் அமல்படுத்தியவரைத்தான் சிறந்த நிர்வாகி என்ற பிம்பத்தில் அடைத்து வைக்கப் பார்க்கிறோம்!

ஜிஎஸ்டி வரி விதிப்பை, முதல்வராக இருந்த சமயத்திலெல்லாம் எதிர்த்து விட்டு, பிரதமர் ஆன உடன் அதைக் கொண்டு வந்ததைக் கூட விட்டு விடலாம்! ஆனால், அதையும் சொதப்பலான முறையில் அமல்படுத்தி, தொடர்ந்து வரி விகிதத்தை மாற்றிக் கொண்டு, ஏற்கனவே பண மதிப்பிழப்பில் அடிபட்டிருந்த சிறு குறு தொழில்களை இன்னும் பாதிப்படைய வைத்த ஒருவரைத்தான் சிறந்த நிர்வாகி என்று கட்டமைக்கிறார்கள்!

குஜராத் கலவரத்தில் இவருக்கு பங்கிருக்கிறதா இல்லையா என்ற பிரச்சனையைக் கூட விட்டுவிடலாம்! ஆனால், தான் முதல்வராக இருந்த சமயத்தில், தன் மாநிலத்தில் அவ்வளவு பெரிய கலவரத்தைக் கூட கட்டுப்படுத்த முடியாதவர் எப்படி சிறந்த தலைவர்? சிறந்த நிர்வாகி? அப்போது அமைதியாக வேடிக்க பார்த்தது போல்தான், கடந்த 5 வருடங்களில் நடக்கும் அனைத்து வன்முறைச் சம்பவங்களையும் வேடிக்கை பார்க்கிறார்!

வேறு எதற்காக இல்லாவிடினும், இந்த வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்துபவர்களைக் கூட கண்டிக்காதவர், அதைத் தடுக்க முடியாதவர் எப்படி சிறந்தத் தலைவர் அல்லது சிறந்த நிர்வாகி ஆக முடியும்?!

ஆதார், ஜிஎஸ்டி, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம், அந்நிய முதலீடு, என எல்லாவற்றையும் காங்கிரஸ் கொண்டு வந்தபோது எதிர்த்து விட்டு, இப்போது அதையே முழு மூச்சாக செய்து கொண்டிருக்கிறார்!

ஒரு திட்டம் தேவையா, தேவையற்றதா என்பதைக் கூட முழுதாக கண்டறிய முடியாதவர், அதைத் தொடர்வேனா அல்லது நீக்குவேனா என்பதைக் கூடச் சரியாக சொல்லத் தெரியாதவர் எப்படி சிறந்த நிர்வாகி? இன்னமும் ஜிஎஸ்டியை காங்கிரஸ் அமல் படுத்திய முறையை மட்டும்தான் விமர்சிக்கிறதே ஒழிய, திட்டமே தவறு என்று சொல்லவில்லை!

ஒரு திட்டம் வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி, காங்கிரஸ் கொண்டு வந்த தகவல் உரிமைச் சட்டம், நூறு நாள் வேலை வாய்ப்பு, ஜிஎஸ்டி, ஆதார் போன்று பிஜேபியினர் தாமாகச் சிந்தித்து உருவாக்கிய திட்டம் என்று ஏதேனும் இருக்கிறதா?

ஆக, ஒரு நல்லத் திட்டத்தை அமல்படுத்த முடியாத, கலவரத்தைக் கட்டுபடுத்த முடியாத, வளர்ச்சியைக் கொண்டு வரமுடியாத ஒருவர் எப்படி சிறந்த நிர்வாகி ஆக முடியும்? இங்கு நடப்பது, தெலுங்கு படத்துக்கு இணையான வெற்று பில்டப்புகள் மட்டுமே!

எழுதியவர் நரேஷ் குமார் நாகராஜன்


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : எனக்கு இப்போது முன்பு போல அதிக அரசியல் பதிவுகள் எழுத நேரம் இல்லாததாலும்  மேலும் மோடியை ஆதரித்தவர்களில்  பலர் இப்போது அவரின் செயல்பாடுகளை  அவரின் ஆட்சியில் கண்டு ஏமாற்றம் அடைந்த பலரும் அவரை விமர்சித்து எழுதி வருவதால் அதையே நானும் எழுதுவதால் என்ன பலன் அதனால் அவரை விமர்சித்து எழுதுபவர்களின் பதிவை மறு பதிவு செய்யாலாம் என்று எண்ணத்தில் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறேன் இந்த பதிவை எழுதிய ஒரிஜினல் நரேஷ் குமார் நாகராஜன் அவர்களுக்கு எனது நன்றி

3 comments:

  1. மக்களை தெருவில் அலைய விட்டது என்பதற்கு பதில் பட்டினியோடு (காசிருந்தும்) அலைய விட்டது என்று சொல்வது தான் மிக பொருத்தமாக இருக்கும்.
    பணமதிப்பிழப்பிறகு அடுத்த நாள், கையில் ஆயிரம் ரூபாய் நோட்டாக காசு வைத்திருந்தும் தெருவில் நானும் அலைந்திருக்கிறேன். அந்த ஒரு நாள் மறக்க முடியாத ஒரு நாள்.

    இந்த பத்திவைப் படித்தவுடன் தான், நான் அடைந்த அந்த ஒரு நாள் துன்பத்தையும், ஜிஎஸ்டியினால் ஏற்பட்ட /ஏற்பட்டிருக்கொண்டிருக்கிற நஷ்டங்களையும் பதிவாக சீக்கிரம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  2. யூ ஆர் ஆண்டி இந்தியன்...

    ReplyDelete
  3. IT IS TRUE THAT ALL SUFFERED FOR ONE OR TWO DAYS DUE TO DEMONISATION. THE POLITICAL PARTIES OPPOSE HIM BECAUSE THIER HUGE AMOUNT COULD NOT BE BROUGHT TO LEGAL ACCOUNT .IN SPITE OF THIS WE ATE NOW READING IN NEWSPAPERS THAT CRORE OF RUPEES HAVE BEEN SEIZED BY ELECTION TEAM .OF ALL THE LEADERS WE HAVE TO VOTE FOR A LEADER WHO HAS FAITH IN OUR NATION AND IN OUR TRADITION

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.