Saturday, March 9, 2019


இந்த காலத்து புள்ளைங்கள்தான் ரொம்ப ஸ்மார்ட்டா அப்ப இந்த காலத்து பெரிசுகள்?

இந்த காலத்து புள்ளைங்கள்தான் ரொம்ப ஸ்மார்ட்டா அப்ப அந்த காலத்து குழந்தைகள்  அதாவது இந்த பெரிசுகள் ஸ்மார்ட் இல்லையா என்ன?



இந்த கால பெற்றோர்கள் சொல்லுவது இந்த காலத்து  புள்ளைங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காங்க என்பதுதான்...அப்படியா எதை வைச்சி சொல்லிறீங்கன்னு கேட்டால் ஸ்மார்ட் போனை அவங்க கையாளுவைதை வச்சு சொல்லுறோம் என்கிறார்கள்..... இந்த காலத்து புள்ளைங்களுக்கு சோறு ஊட்டும் போதே அவங்க கையில் ஸ்மார்ட் போனை கொடுத்துவிட்டுதானே ஊட்டுறீங்க..அப்படி இருக்கும் போது அவங்க அதை கையாள்வது மிக சுலபம்தானே அதில் என்ன வியக்க ஆச்ச்சிரியப்படுவதற்கு இருக்கு இதே போனை 30 வருஷங்களுக்கு முன்பு இருந்த குழந்தைகள் கையில் கொடுத்து இருந்தால் இந்த கால பெரிசுகளும் ஸ்மார்ட்டாகத்தான் இருந்திருக்கும்

இந்த கால ஸ்மார்ட் குழந்தைகள் பெரியவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று சொல்லி கேலி செய்து  கொண்டு அந்த கால பெரிசுகள்
கண்டுபிடித்த டெக்னாலஜியை உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் இதுதான் அவர்களின் ஸ்மார்ட்தனமா என்ன?


இந்த கால பெற்றோர்கள் சொல்லுவது இந்த காலத்து  புள்ளைங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காங்க இப்ப பாருங்க அவங்க என்னம்மா படிக்கிறாங்க என்று சொலவது எல்லோர்காதிலும்  விழுந்திருக்கும்...

இந்த காலத்து புள்ளைங்க பள்ளிக்கூடத்தில் மட்டும் படிக்காமல் பள்ளி முடிந்ததும் ட்யூசன் அது இது என்று மீண்டும் பள்ளியில் படித்ததையே மீண்டும் வெளியில் உள்ள டீச்சர்களிடம் படித்து வருகிறார்கள் அது மட்டுமல்ல சனி ஞாயிறுகளில் கூட பல பள்ளிகளில் ஸ்பெஷ்ல் வகுப்பு நடை பெறுகிறது..அதுமட்டுமல்லாமல் இப்போது உள்ள டெக்னாலிஜியின் உதவி கொண்டு கம்பியூட்டரில் மூலம் பல தகவல்களை  மிக சிறப்பான விளக்கத்துடன் புரிந்து கொள்ள முடிகிறது... சரி  இதோட முடிந்து விடுகிறதா என்று பார்த்தால் பள்ளி கூட நிர்வாகம் தங்கள் பள்லியில் படிக்கும் பிள்ளைகளின் பேப்பர் திருத்தும் உடத்தை சேஸ் செய்து அனைவரும் மிக சிறந்த மார்க்குகள் எடுக்க குறுக்கு வழியில் முய்ற்சிகள் பலவும் செய்து வருகின்றது.... இப்படியெல்லாம் செய்து இந்த கால குழந்தைகள் எடுக்கும் அதிக மார்க்குகளை வைத்து அப்பாடி நம்ம குழந்தைகள் எவ்வளவு ஸ்மார்ட் என்று புளங்ககாயிதம் அடைகிறார்கள்...


இப்ப்டி ஸ்மார்ட்டான குழந்தைகளுக்கு சாதாரண பிரச்சனைகள் வந்தால் கூட எப்படி முடிவுகள் எடுப்பது என்பது கூட தெரியவில்லை.இந்த கால குழந்தைகள் ஸ்மார்ட்டாம் ஆனால் அவர்களுக்கு மன உளைச்சல் அதிகமாம் நல்ல மார்க்குகள் எடுக்கும் ஸ்மார்ர்டான குழந்தைகளுக்கு அந்த மன உளைச்சலில் இருந்து மீண்டு வர தெரியவில்லையாம் அப்படிப்பட்ட குழந்தைகள்தாம் ஸ்மார்ட்டாம்


இந்த காலத்து குழந்தைகள் ஸ்மார்ட்டாம் அப்படியான்ல் இன்றைய பள்ளிகூடங்கள் மோட்டிவேஷன் கூட்டங்கள் ஏதற்காம் ஸ்மார்ட்னஸ் இல்லாத குழந்தைகளுக்கு வேண்டுமானால் மோடிவேஷன் கூட்டங்கள் நடத்தலாம் ஆனால் ஸ்மார்ட்டான குழந்தைகளுக்கு எதற்கு..


அந்த கால குழந்தைகள் அதவாது இந்த கால பெரிசுகள் அரசாங்க பள்ளிகள் படித்துதான் வளர்ந்தார்கள் அவர்களிலும் பலர் நூற்றுக்கு நூறு மார்க்குகளை வாங்கிதான் வந்தார்கள் அவர்களுக்கு எல்லாம் ஸ்பெஷல் க்ளாஸ் என்றால் கூட என்னவென்று தெரியாது.... அவர்களுக்கு  தகவல் வேண்டுமென்றால் நூலகத்திற்கு சென்றுதான் திரட்ட வேண்டும்... அப்படிபட்ட தகவல்களை திரட்ட கூடிய நல்ல நூலகங்கள் தமிழகத்தில் சில மாவட்டங்களின் தலை நகரத்தில் மட்டுமே இருந்தன இப்பொழுது உள்ள படி கம்பியூட்டரில் தகவல்களை திரட்டும் வாய்ப்பு இருந்ததே இல்லை....
அவர்களுக்கு உதவியாக இருந்தது எல்லாம் அவர்களின் பெற்றொர்களும் கோனார் நோட்ஸ்க்கள் மட்டுமே..அப்படி படித்து வந்த அந்த கால குழந்தைகள்தான் இந்த கால பெரிசுகள் அப்படி படித்து இன்று பல பதவிகளில் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் எல்லாம் ஸ்மார்ட் அல்ல ஆனால் இந்த கால குழந்தைகள்தான் ஸ்மார்ட்டா?

படிக்காதவர்க
ள் படிக்க
கேப்டனின் முடிவுதான் இறுதி முடிவு? 


வடிவேல் ஏன் இப்போது நடிப்பதில்லை 


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. மிகச் சரியாக இந்த விடயத்தை அலசி இருக்கின்றீர்கள் நண்பரே...
    100க்கு100 உண்மை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி

      Delete
  2. நல்ல அலசல். பாராட்டுகள் மதுரைத் தமிழன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்க்ட் ஜி

      Delete
  3. சூப்பர் மதுர....செம பதிவு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கீதா சேச்சி ஹீஹீ

      Delete
  4. இக்காலக் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் ஃபோனை ஆராயத் தெரிந்த அளவிற்குத் தங்கள் வாழ்க்கையை ஆராயத் தெரியவில்லை. வாழ்க்கையை சீராக வழத் தெரியவில்லை. பல வீடுகளில் குழந்தைகள் செல்ஃபொன்னில் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று பெருமையாகப் பெற்றோரே பேசும் போது....அதுவும் இப்போதைய ஒரு வயதுக் குழந்தைகளைப் பற்றி 30 வயது கூட நிரம்பாத பெற்றோரும் பெருமையாகப் பேசும் போது குழந்தைகளுக்கு அது இன்னும் சப்போர்ட்டிவாத்தானே இருக்கு....கல்வியும் சரி அப்படித்தான்..இதற்கெல்லாம் பெற்றோரும் ஒரு காரணம் என்று சொல்லலாம் இல்லையா..இப்போதையக் காலக்கட்டத்தில் ஆய கலைகள் 64ல் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலான விஷயம்.

    ஒவ்வொரு வரியும் நச் மதுரை சகோ! பாராட்டுகள்!

    கீதா

    ReplyDelete
  5. வருகைக்கும் விரிவான கருத்திற்கும் நன்றி டாக்டர் அம்மே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.