Saturday, March 30, 2019

@avargal unmaigal
Irfan's  cartoon for the Outlook magazine
தேர்தல் விதிமுறைகளை மீறிய தேர்தல் கமிஷன்

தேர்தல் தேதி அறிவித்த  பின்னர் எந்த புதிய திட்டங்களையும் அரசு சார்பாக அறிவிக்க கூடாது என்பது மட்டுமல்ல அது பற்றியும் பேசக்கூடாது.. ஆனால் பிரதமர் மிஷன் சக்தி பற்றி நேஷனல் டிவிகளில் உரையாற்றி இருக்கிறார். இது மிகவும் தவறு இதற்காகவே இவர்  இந்த தேர்தலில் நிறக் தகுதி இழந்தவராகி விடுவார்... இதனை காரணம் காட்டி தேர்தல் கமிஷன் இவரது வேட்பு மனுவை நிராகரிக்க கூட செய்யலாம்...ஆனால் இப்போது இருக்கும் தேர்தல் கமிஷன் இந்த பிரதமரின் வெற்றிக்காக பாடும்படும் பாஜக கட்சி ஆபிஸ் போல செயல்பட்டுவருகிறது என்பதை விட மிக கேவலமான செயல் வேறு ஏதும் இருக்க முடியாது...


இதை எந்த தலைமை நீதிபதிகளும் பொதுவில் பேசி அறிக்கை விடமாட்டார்கள் ஆனால் இந்த நீதிபதிகள் தேவையில்லாத விஷயத்தில் மட்டும் பொது அறிக்கைகளை வெளிவிட்டு முக்கிய விஷயங்கள் தேச நலன் சார்பான விஷயங்களில் மட்டும் பேசாமல் மிக்ஸர் சாப்பிட்டு கொண்டு இருப்பார்கள்...

நம்மால் முடிந்தது எல்லாம் இப்படி ஒரு பதிவை போட்டுவிட்டு கிண்டலாக பாரத் மாதாகி ஜெ என்று சொல்லிவிட்டு செல்வதுதான்


Election Comission gives clean chit to PM Narendra Modi's speech on Mission Shakti CPI-M leader @SitaramYechury had approached the EC alleging that the PM's address violated the model code. #CEC #NarendraModi #MissionShakti #ELECTION2019 


விண்வெளித்துறையில் இந்தியா வியத்தகு சாதனையை  நிகழ்த்தியுள்ளது” : பிரதமர் மோடி
ஆமாம்.. உண்மை.. நன்றி நேரு🙏🏻.. இந்தியா🇮🇳 விண்வெளியில் எப்படி சாதிக்கவேண்டும் என்று கனவு கண்டு அதை நிஜமாக்க 1958ல் DRDO & 1962ல் ISRO அமைப்பை உருவாக்கியதற்கு.. அதற்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கியதற்கு.. இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாம் சாதிக்கும் அனைத்திற்கும் நீங்கள் உருவாக்கிய அறிவியல் சார்ந்த இந்தியா தான் காரணம்..

நன்றி அடுத்து வந்த பிரதமர்களுக்கு🙏🏻.. இதுவரை பல வியக்கும் சாதனைகளை விளம்பரமே இன்றி செய்ததற்கு..

நன்றி🙏🏻 மன்மோகன்சிங்❤️.. உங்கள் ஆட்சியில் தான் மற்ற துறைகளை போல DRDO, ISRO மாபெரும் சாதனைகளை நிறைய செய்துள்ளது.. (Advanced PSLV, GSLV, சந்திரான்யான் [நிலவுக்கு], மங்கள்யான் [செவ்வாய் கிரகத்திற்கு], Advanced Agni மற்றும் பல.. அடுக்கிக்கொண்டே போகலாம்).. இன்று கூட உங்கள் சாதனையை தான் மோடி தனது தேர்தல் விளம்பரத்திற்கு பயன்படுத்தினார்..

விண்வெளியில் இயங்கிக்கொண்டு இருக்கும் சாட்டிலைட்டை ஏவுகணை மூலம் அழிக்கும் தொழில்நுட்பம் 2010ம் ஆண்டில் மன்மோகன் ஆட்சியில் உருவாக்கப்பட்டு 2012ம் ஆண்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டும் விட்டது..

மோடி சாதனை சாதனை என்று விளம்பரம் செய்யும் அனைத்தும் மன்மோகன் ஆட்சியில் தினசரி நிகழ்வுகள்.. பாவம் சரியாக விளம்பரம் செய்ய தெரியவில்லை..

மிஸ்டர் மோடி.. நீங்கள் என்ன தான் கம்பு சுத்தினாலும் காங்கிரஸ் சாதனைகளை தாண்டி நீங்கள் செய்த ஒரே காரியம் "பணமதிப்பிழப்பு" மட்டும் தான்.. அது எவ்வளவு பெரிய ஊழல் என்பது ஊருக்கே தெரியும்..

@காங்கிரஸ் தலைவர்களுக்கு , உங்கள் சாதனைகளை விளம்பரம் செய்ய தெரியவில்லை என்றால் அவை எல்லாமே மோடி சாதனைகள் தான்.. அப்படி தான் அவர் விளம்பரம் செய்வார்... இனியாவது மோடியை திட்டுவதோடு சேர்த்து உங்கள் சாதனைகளையும் மக்களுக்கு கொண்டுசெல்லுங்கள்..

28-April-2012: 'India attains the capability to target, destroy space satellites in orbit'
Anti-satellite capability can target space satellites and act as deterrent against India's powerful neighbours.



Reference:  https://www.indiatoday.in/magazine/nation/story/20120507-agni-v-launch-india-takes-on-china-drdo-vijay-saraswat-758208-2012-04-28?fbclid=IwAR3mtKoCX3H-lbq1T8twrFG6f_JFQcwPjIhQsAlAuO9CB23Bog65hnVaobE

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. தேர்தல் கமிஷனே அரசு நியமிப்பதுதானே...

    ReplyDelete
  2. எல்லா சாதனைகளும் மோடியின் சாதனியே

    ReplyDelete
  3. ஓ, இது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகுமா ? என்று பிஜேபியினர் கேட்பார்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.