Sunday, November 25, 2018

@avargalunmaigal
கஜா-- நடிகர்கள் தலைவர்கள் அல்ல அடிமைகள் தமிழக தலைவர்களும் அல்ல


கஜா சைக்லோன்  தமிழகத்தில் நாலு  மாவட்டங்களில் மக்களின் வாழ்வு ஆதாரங்களை அடியோடு அழித்து மக்களை மட்டும் அப்படியே விட்டு சென்று இருக்கிறது. இது ஒரு சாதாரண அழிவு அல்ல பெரும் அழிவு..இப்படி நாலு  மாவட்டங்களை மட்டும் அழித்த கஜா ஒட்டு மொத்த தமிழகத்தையே அழிக்காமல் மற்ற மாவட்டங்களை விட்டு விட்டு சென்றதில் பெரும் மகிழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும். அழிந்த மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அழியாத மாவட்டங்களை சார்ந்தவர்கள் உதவி கை தூக்கி அவர்களின் வாழ்வை மீண்டும் சீரமைக்க உதவ வேண்டும் என்ற நோக்கில் கஜா அந்த பகுதிகளை விட்டு சென்றதாகவே நான் கருதுகிறேன்

@avargalUnmaigal
கஜா புயல் வரும் முன் அந்த புயலில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு பல முயற்சிகள் எடுத்து மக்களை பாதுகாத்து எல்லோரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்ற தமிழக அரசு அந்த புயல் மக்களின் வாழ்வு ஆதாரத்தை பாதித்த பின் அந்த வாழ்வு ஆதாரத்தை திரும்ப பெற்று தருவதில் அவ்வளவு வேகமாகவும், சரியான திட்டமிடுதல் இல்லாமல் சுணங்கி இருப்பது போன்ற தகவல்கள்தான் வந்து கொண்டிருக்கின்றன. இதறகு காரணம் இப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர்கள் தலைவர்கள் அல்ல சந்தர்ப்பவாத அரசியலால் தலைமை பதிவுக்கு வந்த சுயநல அடிமைகள்தான். அவர்களுக்கு சிறந்த தலைவர்கள் போல சிந்தித்து செயல்படும் திறமைகள் இல்லாததில் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சிறந்த தலைவர்களாக இருந்து இருந்தால் உள்ளாட்சி அமைப்புக்களின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும் உள்ளாட்சி தேர்தலும் நடந்து உள்ளாட்சி தலைவர்களும் மக்கள் பணியில் ஈடுப்பட்டு இருக்க வாய்ப்ப்புக்கள் இருந்திருக்கும் இயற்கைச் சீரழிவுகள் வந்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் கடைநிலை வரை சென்று சேர உள்ளாட்சி அமைப்புகள் அவசியம். அது கூட தெரியாதவர்கள்தான் நம்மை ஆளும் தலைவர்கள்

புயல் அடித்து ஒய்ந்த பின் புயலால் ஏற்பட்ட அழிவை பற்றி பேசுவதை விட்டுவிட்டு நடிகர்கள் அரசியலுக்கு வர ஆசைப்படுகிறார்கள் முதல்வர் ஆக ஆசைப்படுகிறார்கள் ஆனால் பண உதவிகள் செய்ய மட்டும் தயங்குகிறார்கள் என்ற பேச்சுதான் சமுக வலைதளங்களில் முதன்மையாக பேசப்பட்டது....

புயல் வருகிறது என்றதும் அரசாங்கம் முன்னேச்சரிக்கை நடிவடிக்கைகள் எடுக்கிறதோ இல்லையோ அதை பற்றி நாம் பேசுவதைவிட புயல் வரப் போகிறது என்றதும் நடிகர்கள் உடனடியாக நிவாரணத் தொகையை ரெடி பண்ணி வைத்து கொண்டு உடனடியாக அதை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகம் இருக்கிறது. என்னமோ நாம் அவர்களிடம் இதற்காக பணத்தை கொடுத்து வைத்த மாதிரியும் அதை அவர்கள் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று சொல்வது மாதிரியாகவும் இருக்கிறது அப்படி அவர்கள் உடனடியாக தொகையை கொடுக்காவிட்டால் அவர்களை பற்றி மீம்ஸ்களை வெளியிட்டு காலி பண்ணிக் கொண்டு இருக்கிறோம்

நடிகர்களை கேள்வி கேட்பவர்கள் தலைவர்களை கேள்வி கேட்பதில்லை...எடப்பாடி தமிழக அரசின் சார்பாக 1000 கோடிநிவாரணத் தொகையை தமிழக அரசு சார்பில் வழங்க உத்தரவு இட்டார். ஆனால் அவர் தனது சொந்த சம்பாத்தியத்தில் இருந்து ஒரு  பைசா தரவில்லை. அதுபோல அதிமுக கட்சி சார்பாகவும் அவர் நிதி ஒதுக்கியதாக ஒரு செய்தியும் பார்க்கவில்லை .மேலும் அது போல எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் திமுக கட்சி சார்பாக நிவாரணத் தொகையை கொடுத்து இருக்கிறார் அவரும் தன் சொந்த வருமானத்தில் இருந்து ஒரு சல்லி பைசாவை அவரும் அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் எவரும் கொடுக்கவில்லை. மேலும் தமிழகத்தில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் எந்த அளவிற்கு நிவாரணத் தொகையை அள்ளிக் கொடுத்தார்கள் என்பது பற்றிய தகவுலும் இல்லை...

கஷ்டப்படும் நடிகர் சங்கத்துக்கு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ரூ.2.5 கோடி நன்கொடை கொடுத்தார் ஆனால் அதே நபர் கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்த 4 மாவட்ட மக்களுக்காக ஒரு கோடி ரூபாயை மட்டும் நன்கொடையாக கொடுத்து இருக்கிறார் இதையாவது கொடுக்க மனம் வந்த அவரை பாராட்டுவோம்...


மேலும் இந்தியாவிற்கு எந்தவிதத்திலும் பலன் தராத ரூவாண்ட நாட்டிற்கு  1000 கோடிக்கும் மேலும் நிதி உதவியும் 1000 கணக்கான பசு மாடுகளையும் கொடுத்த பிரதமர் மோடி தன் நாட்டு மக்களுக்கு உடனடியாக ஏதும் ஒதுக்கவில்லை அதைப்பற்றி பேசினால் ஆண்டி இண்டியன் ஆகிவிடுவோம்..


இவர்கள்தான் தலைவர்கள் இவர்கள் நம் வாழ்வு ஆதாரங்களை மீட்டு தருவார்கள் என்று  பொதுமக்கள் நம்பிக் கொண்டிருந்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.


அப்படியானால் நாம் என்ன செய்யலாம் .....


உடனடி தேவைகளை அரசாங்கம் செய்கிறதோ இல்லையோ பல சமுக ஆர்வலர்களும் பொது மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அது போதுமானதா என்றால் இல்லைதான். அதனால் பெரிய நிருவனங்களும் களத்தில் இறங்கி மக்களைகை தூக்கி விட முயலாம்

பசுவை தெய்வமாக கருதும் வசதி படைத்த பிராமணர்கள் பசுக்களை விலைக்கு வாங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு தானாமாக கொடுக்கலாம் அது போல கோயிலுக்கு சென்று ஆடு வெட்டி சோறுபோடும் மற்றயை இந்துக்கள் ஆடுகள் பலி கொடுப்பதற்கு பதிலாக ஆடுகளை தானமாக கொடுப்பதாக வேண்டிக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம் . இஸ்லாமியர்கள் இன்னொரு பக்ரீத் வந்துவிட்டதாக நினைத்து ஆடுகளை வாங்கி தரலாம் அது போல நிறைய கோழிகளை வாங்கி கிறிஸ்துவர்களும் தானமாக கொடுக்கலாம் இது போல பல உதவிகளை நிறைய பேர் செய்யும் போது பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு ஆதாரங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வர சிறிது உதவாலம். அது போல பிரமாண்டமாக திருமணங்களை செய்வதற்கு பதிலாக அதன் செலவை குறைத்து அதன் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வை உயர்த்த முய்றசிக்கலாம்... அது போல பிறந்த நாள் கொண்டாத்திற்கு செலவிடுவதை குறைத்து அதன் செலவின் ஒரு பகுதியை மரக் கன்றுகள் வாங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து அழிந்த மரங்களை மீண்டும் உயிர்பிக்க செய்யலாம் அல்லது இடிந்த வீட்டின் ஒரு பகுதியையாவது சீர் செய்ய பண உதவி செய்யலாம் அது போல பாதிக்கபடாத  5 அலாது பத்து குடும்பங்கள் சேர்ந்து ஒரு  குடும்பத்தையாவது தூக்கிவிடலாம் இப்படி பாதிக்கபடாத மாவட்டங்களை சேர்ந்தவர்கள் செய்தாலே போதும் மீண்டும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழலாம்

அதன் பின் எல்லா மக்களும் சேர்ந்து முதல்வரையும் அமைச்சர்களையும் சாலை வசதி மருத்துவவசதி மின்சார வசதி கலவி வசதி போன்றவைகளை மிக விரைவாக செய்து தர வற்புறுத்த வேண்டும் அப்படி அவர்கள் செய்து தர முயலாத போது அவர்கனின் நடமாட்டம் தமிழகத்தில் இருக்காமல் செய்ய வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அவர்கள் தமிழகத்தில் வைத்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள் நிறுவனங்களை செயல்படாமல் முடக்குங்கள் விவசாய நிலங்களை வைத்து இருந்தால் அதில் வேலை செய்யாமல் தவிருங்கள் அவர்களுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கி அவர்களை நம் வழிக்கு கொண்டு வாருங்கள் இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்றால் நம்மால்  மக்களுக்கு சேவை செய்ய நியமித்தவர்கள் அதை செய்யாமல் இருக்கும் போது அதற்கு பரிகாரமாக இப்படி செய்வதில் தப்பேதுமில்லை என்றுதான் சொல்வேன்,

அப்படியெல்லாம் செய்யாமல் தேர்தல் வருட்டும் அப்போது அவர்களை தோற்கடிக்க செய்வோம் என்று வெட்டி பேச்சு பேச வேண்டாம்  அவர்கள் வெற்றி பெறுகிறோமா தோற்கிறோமோ என்று எல்லாம் கவலைப்படுவதில்லை பதவியில் இருக்கும் போது எத்தனை பரம்பரைக்கு சொத்துக்கள் சேர்க்க முடியுமோ அத்தனை பரம்பரைகளுக்கு சொத்து சேர்த்து கொண்டிருப்பார்கள் காரணம் இப்போது ஆள்பவர்களும் இனிமேல் வந்த ஆளப்போகிறவ்ர்களும் மக்கள் நலனை நினைத்து செயல்படும் தலைவர்கள் அல்ல தங்களின் சுயநலத்தை எண்ணி செயல்படும் தலைவர்கள்தான்



அதனால் சொல்லுகிறேன் விழுந்த நாம் மீண்டும் எழுந்து நடமாட நாமே நமக்கு உதவி கொள்ள வேண்டும் அடுத்தவர்களை அதுவும் தலைவர்களை நம்பி இருப்பதில் பலன் ஏதுமில்லை


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்(டி.ஜே.துரை)

#2018_கஜா_தமிழ்நாடு
#CycloneGaja_Tamil_Nadu

4 comments:

  1. ந்ல்ல ஆலோசனைகள். த்ற்காலிக நிவாரண உதவிகள் அதிக பட்சம் ஒரு மாதம் தொடரலாம். நீங்கள் கூறியுள்ள எதிர்காலம் கருதி செய்யப்பட வேண்டிஅ உதவிகள் உண்மையில் கவனிக்கத் தக்கவை. பத்திரிகைகள் கஜா செய்திகளை பரப்ரப்பாக வெளியிட்டு லாபம் சம்பாதித்தன. எந்த பத்த்ரிகையாவது நிவாரணப் பணிகள் செய்துள்ள தாக இதுவரை கேள்விப் படவில்லை. ஊர் ஊராக குறைகளை சுட்டிக்காட்ட சென்ற பட்திரிகை யாளர்கள் குறைந்த பட்சம் வாட்டர் பாட்டில்களாவது வாங்கி சென்று உதவி இருக்கலாம்.

    ReplyDelete
  2. நல்ல ஆலோசனைகள்.

    எத்தனை இழப்புகள். வேதனை தரும் நடவடிக்கைகள் நிறையவே நடக்கின்றன.

    ReplyDelete
  3. புயலால் சீரழிந்தவர்களில் மின் இணைப்பு குடிநீர்வசதி போன்றவற்றைச் சீர் செய்ய வேண்டியவர்களும்பாதிக்கப்பட்டவர்கள் தானே கூடியவரை யாரையும் குறை சொல்லாமல் இருப்பதே மேல் அரசங்கத்தைக் குறை கூறினால் எல்லாம் சரியாகுமா விழுந்து பாழ்பட்ட தென்னைகள் மீண்டும்நடப்பட்டு பலந்தரா இன்னும் பல ஆண்டுகள் ஆகும் அவர்களடு வலி நமக்குத் தெரியாது முடிந்தவரை உதவுவோம் புயல் வலம் போனால் என்ன இடம்போனால் என்ன நம்மைத்தாக்காமல் இருந்தால் மகிழ்ச்சி என்றுஇருப்போரே அதிகம்

    ReplyDelete
  4. உங்களது பதிவுகள் மிகவும் அருமை.
    நானும் எனது பதிவுகளை வெளியிடுகிறேன் எனது பக்கங்களில்.படித்து பார்க்கவும்
    https://thiraviyakazhani.blogspot.com/2018/11/night-time.html

    #திரவியகழனி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.