Thursday, August 9, 2018

கலைஞரை புகழ்ந்ததும் போதும் அதுபோல இகழ்ந்ததும் போதும் இனிமேல் நடப்பதை பார்ப்போம்


கடந்த 10 நாட்களுக்கு மேலாக  எந்த அளவிற்கு கலைஞரை புகழந்து பேசினார்களோ அது போல பல மனச்சிதைவு கொண்ட மக்கள் அவரை இகழ்ந்தும் பேசினார்கள். இப்படி பட்ட மனச் சிதைவு கொண்டவர்கள் எல்லாக் கட்சிகளிலும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் எந்த கட்சியிலும் சேராமலும் இருக்கின்றனர். இப்படிபட்டவர்கள்தான் பெரிய தலைவர்களை இகழ்ந்து பேசிவருகின்றனர். இங்கே நான் இகழ்ந்து பேசுவது என்று சொல்லும் போது அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி கிண்டல் கேலி செய்வதை சொல்லவில்லை தரம் குறைந்த வார்த்தைகளால் அவதூறு பேசி வருவதை சொல்லுகிறேன்.


சரி எது எப்படியோ கடந்த 10 நாட்களுக்கு மேலாக கலைஞரை புகழந்தோ இகழ்ந்தோ பேசியும் பிரேக்கிங்க் நீயூஸ் போட்டு விவாதித்தும் வந்து இருக்கிறோம்.. ஆனால் இனிமேல் அதை பற்றி பேசிக் கொண்டிருப்பதால் எந்த வித பயனும் ஏற்படப்போவதில்லை..கலைஞர் மீண்டும் வந்து நமக்கு உதவப் போவதில்லை.


இதற்கு முன் பல தலைவர்களின் மறைவுக்கு பின் நாம் பார்த்தோம் என்றால் அடுத்த கட்ட தலைவர்கள் அவர்கள் சாதாரண தலைவர்கள் அல்ல பொது மக்கள் செல்வாக்கு பெற்ற பெரும் தலைவர்களாக பலர் இருந்து வந்தனர். ஆனால் ஜெயலலிதா கலைஞர் மறைவுக்கு பின் அப்படிப்பட்ட தலைவர்கள் இல்லை.... ஏன் சாதாரண தலைவர்கள் கூட இல்லை என்று சொல்லாம்.(இவர்களை எல்லாம் பெரும் தலைவர்கள் என்று எப்படி சொல்லலாம் என்று அறிவுஜீவிகள் கேட்க கூடும் அவர்களுக்கு சொல்லிக் கொள்வது தமிழர்களின் தகுதிக்கு இவர்கள்தான் பெரும் தலைவர்கள் அதைவிட அதிகம் எதிர்பார்ப்பது தவறே)

இப்போது தமிழகத்தில் இருக்கும் தலைவர்கள் என்றால் மனதில் தோன்றுவது டாக்டர். இராமதாஸ் அய்யாவும் வை.கோவும்தான்...ஆனால் ராமதாஸ் சாதியக்கட்சி என்ற வட்டத்தில் சிக்கி இருக்கிறார். அடுத்தாக நல்ல தலைவர் என்று சொன்னால் வைகோவை சொல்லலாம்.....இவர் நல்ல தலைவாரக இருந்தாலும் மக்களின் வாக்கை அறுவடை செய்ய முடியாதவராக இருக்கிறார்...

இவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் எல்லாம் அவரவர்களின் கட்சி தலைவர்களாகத்தான் என் கண்ணுக்கு தெரிகிறார்கள்


கலைஞரின் மறைவால் கொஞ்சம் தோய்ந்து போயிருந்த திமுகவிற்கு அனுதாபத்தால் சிறிது புத்துயிர் ஏற்பட்டு இருக்கிறது. இதை அந்த கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில்தான் அந்த கட்சியின் வளர்ச்சி இருக்கிறது.. நல்லா கவனியுங்கள் தமிழக மக்களின் வளர்ச்சி அல்ல அந்த கட்சியின் வளர்ச்சி இருக்கிறது என்றுதான் நான் சொல்லி இருக்கிறேன்.

ஸ்டாலின் திமுகவின் தலைவராகி அடுத்த கட்ட தலைவராக வந்தாலும் இதற்கு முன் உள்ள தலைவர்கள் போல அவரும் செயல்படுவாரா என்பது இன்னும் கேள்விகுறியாகவே இருக்கிறது. கலைஞர் உடல் நிலை சரியில்லாத போது அவர் நன்கு கவனித்து கொண்டது போல ஒரு பிம்பத்தை தோற்றுவிக்க முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் உண்மையாக பார்த்தால் கலைஞரை அவர் மட்டும் நன்கு கவனித்து கொள்ளவில்லை. கலைஞரின் ஒட்டு மொத்த குடும்பத்தில் உள்ள அனைவருமே நன்கு கவனித்து கொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் கட்சி சார்பாக கலைஞரை பார்க்க வந்த அனைவரையும் பொறுமையாக ஸ்டாலின் பார்த்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆம் அதை அவர்தான் செய்ய முடியும் காரணம் அவர்தான் செயல்தலைவர் அதை அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செய்துதான் ஆக வேண்டும்... அந்த பதவியில் வேறு யாராக இருந்தாலும் இதையே அவர்கள் செய்து இருப்பார்கள்

சரி ஸ்டாலின் முன்பு இருந்த மிக சிறந்த தலைவர்கள் போல பிரகாசிக்க என்ன செய்யவேண்டும் என்று பார்த்தோமானால் முதலில் அன்பழகனுக்கு ரிட்டையர்மெண்ட் கொடுத்துவிட வேண்டும். அடுத்து தன் பிள்ளை உதயநீதியை கட்சியில் முன்னேடுத்து செல்லாமல் ராசா மற்றும் கனிமொழிக்கு கட்சியின் இரண்டாம் கட்ட பதவிகளை நம்பி கொடுத்து அரவணைத்து கட்சியை நடத்தி செல்ல வேண்டும். முடிந்தால் வைகோ திருமாள்வளவன் வேல்முருகன் அனைவரையும் உள் இழுத்து கொள்ளவேண்டும் அல்லது உற்ற நட்புக்களாக்கி கொள்ளவேண்டும்

அதிமுகவில் இப்போது உள்ள தலைவர்களை பற்றி கவலைக் கொள்ள வேண்டாம் அவர்கள் தேர்தல் என்று ஒன்று வந்தால் காணாமல் போய்விடுவார்கள் அது போல  ரஜினி ஒரு வேளை அதிமுக தலைவாரக வந்தாலும் அவரால் பிரகாசிக்க முடியாது காரணம் அவரால் சுய முடிவெடுத்து ஏதும் செய்ய முடியாது அவரின் பின்புலம் யார் இருப்பது என்பது சிறு வயது பிள்ளைகளுக்கு கூட தெரியும்


மிக மிக முக்கியமாக கவனிக்க  வேண்டியது கட்சியின் கொள்கைகள்...திராவிடக் கொள்கைகள்  திராவிடக் கொள்கைகள்  என்று இத்து போன பல கொள்கைகளை இன்னும் பேசிக் கொண்டிருக்காமல் அதை  சற்று மாற்றி காலத்திற்க்கு ஏற்ப புதிய கொள்கைகளை தைரியமாக அறிவித்து முன்னேடுத்து செல்ல வேண்டும்

மாணவர்கள் கல்வி மற்றும் வேளைவாய்ப்பு பிரச்சனைகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும் கல்வி நிலையங்களில் நடக்கும் நன் கொடைகொள்ளைகளுக்கு எதிராக போராட வேண்டும்


மேலும் இளைஞர்களை ஊக்குவித்து அவர்களை கட்சிப் பணியில் ஈடுபட வைத்து அதற்கேற்ற பாசறைகள் ஏற்படுத்தி தொடர்ந்து செயல்பட வேண்டும் புதியவர்களுக்கு பொறுப்பை கொடுத்து களப்பணியில் தீவிரமாக பணி செய்ய வைக்க வேண்டும் (இந்த இடத்தில் வேண்டுமானால் உதயநீதியை பயன்படுத்தி கொள்ளலாம் அப்படி பயன்படுத்தும்போது அதில் அவர் முழுநேரமும் அதில் கவனம் செலுத்துபடி இருக்க செய்யவேண்டும்)


மதப் பிரச்சனைகளுக்கு பதிலாக மக்கள் பிரச்சனைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் இப்படியெல்லாம் செய்தால் என்றும் பேசப்படும் தலைவாரக வரலாம்...


அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. மாற்றத்திற்கு வழி கோரும் புதிய சிந்தனை. தமிழகத்தின் எதிர்கால முன்னேற்றத்தை நினைத்தால் ஒரு பதட்டம் ஏற்படுவது உண்மை. உங்கள் பதிவிலும் அது தெரிகிறது .
    மனதில் தோண்டும் கேள்விகளுக்கு விடைகளை பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போல உள்ளவர்கள் இன்னும் சிறப்பாக ஒரு பதிவு எழுதி வெளியிடலாமே.....நான் எழுதுவது எப்போதும் லோக்கல் லெவல் அதாவது அந்த கால தினதந்தி ஸ்டைல் பதிவுகள்....உங்களின் லெவல் அதிகமெனப்தால் அதில் இன்னும் சிறப்பான செய்திகள் இருக்கும்.. கண்டிப்பாக எழுதுங்கள்

      Delete
  2. நல்ல அலசலும் பரிந்துரையும் சகோ. உங்க அளவிற்கு அரசியல் அறிவு எனக்கில்லை.
    தமிழ்நாட்டில் சிறந்த தலைவருக்குப் பஞ்சமிருக்கப்போவதில்லை..அவர்கள் வெளிவர வேண்டும்..தமிழ்நாட்டிற்கு நல்லது செய்யவேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம் சகோ

    ReplyDelete
    Replies
    1. ஹலோ சகோ கிண்டல் எல்லாம் பண்ணாதீங்க எனக்கு எல்லாம் அரசியல் அறிவு இல்லை... நானும் உங்களை மாதிரிதான்.. என்ன நான் ஆண் என்பதால் மனசில் பட்டதை வெளியே சொல்லுகிறேன். ஆனால் நீங்கள் பெண்ணாக பிறந்துவிட்டதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறீங்க அவ்வளவுதான் வித்தியாசம்

      Delete
    2. கலைஞரின் மறைவு உங்களை மீண்டும் இணையத்திற்கு வர செய்து இருக்கிறது போல இருக்கே ...சரி உங்களின் கவி வீச்சில் இன்னும் தமிழ் தலைவனுக்கு இரங்கற்பா கவிதை வரவில்லையே

      Delete
  3. அருமையான பதிவு.
    நாட்டுக்கு நலம் தர மக்கள் பிரச்சனைகளுக்கு செவிசாய்த்தலே மிக அவசியம்.

    ReplyDelete
  4. கால மாறுதலுக்கேற்ப அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் தம்மை மாற்றிக்கொண்டு பயணித்தால் மட்டுமே இப்போதுள்ள சூழலை எதிர்கொள்ள முடியும்.

    ReplyDelete
  5. நம் நாட்டில் விமர்சனங்களுக்கு பஞ்சமில்லையே...!

    ReplyDelete
  6. வைகோ.வை நல்ல தலைவர் என்று சொல்லி குண்டு போட்டுவிட்டீர்களே... அவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்றல்லவா? அவருக்குமே எதைச் செய்தால் வெளிச்சத்தில் இருக்கலாம் என்று திட்டமிட்டு அதற்கேற்றவாறு செய்யக்கூடியவர் அல்லவா? மற்றபடி பிரச்சனைகளைப் பற்றி அவர் என்று கவலைப்பட்டார்? (குடி மோசம் என்று சொல்லிப் போராட்டம் நடத்தி, தன் மகன் சிகரெட் ஏஜெண்டாக மாதம் 40 லட்சங்களுக்கு மேல் சம்பாதிப்பதை மறைத்தார். விஜயகாந்தை முதல்வராக்க முனைந்தார். ஸ்டாலினைக் குறை சொன்னதால் திமுகவினர் அவரை காவிரி மருத்துவமனைக்கு சென்றமுறை அனுமதிக்கவில்லை. பிறகு ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று தன் முக்கியக் கொள்கையையே காவுகொடுத்துவிட்டார். சகோதரி ஜெயலலிதா என்று சாமரம் வீசியவர், ஜெ. மறைந்தவுடன், ஜெயலலிதா என்று ஒருமையில் பேச ஆரம்பித்துவிட்டார். இப்போது கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கொடுக்கவேண்டும் என்று மைக்கில் 'கத்துகிறார்'-இதில் என்ன உள்குத்து இருக்கோ)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.