Saturday, July 14, 2018

கொல்லப்பட்ட கல்லூரிப் பெண் குடும்பத்திற்கு எடப்பாடி ஐந்து லட்சம் கொடுத்து வழக்கை திசை திருப்புகிறாரா? ஏன் ஏதற்கு?


பேரிடர் மேலாண்மை பயிற்சியிளாரால் தள்ளி கொல்லப்பட்ட கல்லூரிப் பெண்


பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது குதிக்க பயந்த பெண்ணை பயிற்சியாளர் தள்ளியாதால் அந்த பெண் இறந்து போய்விட்டார்.. இதை அறிந்த தமிழக முதல்வர் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு தொகை தந்து  அந்த பயிற்சியாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க உத்தரவு இட்டு இருக்கிறார்..

பொதுவாக இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது அந்த நிகழ்விற்கு காரணமானவர்களையும் அந்த கல்லூரி நிர்வாக டைரக்டரையும் கைது செய்வதுதான் இது வரை நடந்து இருக்கிறது.. உதாரணமாக இதற்கு முன் நடந்த சம்பவங்களின் போது அதாவது ஸ்கூல் பஸ்சில் குழந்தைகள் பயணம் செய்யும் போது டிரைவரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டால் அந்த இடிரைவரை கைது செய்வது மட்டுமல்லாமல் அந்த பள்ளியின் நிர்வாகத்தலைவரையும் அரசு கைது செய்து வழக்கு தொடுக்கும்...


ஆனால் இங்கு பயிற்சியாளைரை மட்டும் கைது செய்துவிட்டு நிவாரண தொகையை அரசு வழங்கி இருக்கிறது.. இப்போது அரசு மட்டுமல்ல அதோடு  ஒட்டுமொத்த ஊடகங்களும் பயிற்சியாளர் ஆறுமுகம்  அவர் போலியான ஆவணம் கொடுத்தார் என்றெல்லாம் முழுக்க குற்றச்சாட்டையும் அவர் மீதே வைக்கின்றன.

ஆனால் அர்சு சரி ஊடகங்களும் சரி நிகழ்வு நடந்த கல்லூரியின் பெயரைக் கூட சொல்லவில்லை. தவறான ஒருவரை பயிற்சியாளராக நியமித்தது அந்த கல்லூரி நிர்வாகத்தின் தவறு என்பதை எந்த தமிழ் ஊடகமும் எழுதவில்லை அர்சும் நடவடிக்கை எடுக்கவில்லை

 வீடியோ வைராலாகி  பாதிப்பு என்கிறபோது தவறு அனைத்தையும் அந்த பயிற்சியாளர் மீது வைக்கப்படுகிறது. மிகச் சிறிய திருட்டு செயலுக்குக் பெயரோடு... முகவரியோடு... படத்தைப் போடும் ஊடகங்கள்... கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி என்று மட்டும் செய்தி தருகிறது. இது நல்ல ஊடக தர்ம்மமா... இந்த தர்மத்திற்கு ஊடகங்கள் பெற்ற பலன் என்ன என்பது அதன் உரிமையாளருக்கே தெரிந்த வெளிச்சம்



அந்த வீடியோவை பார்த்த எவருக்கும் தவறு அந்த பயிற்சியாளர்  மீது என்பதில் மாற்று கருத்து  ஏதும் இருக்க முடியாது அதே சமயத்தில்  அவரின்  தகுதியை முழுமையாகப் பார்க்காமல், அவரை பயிற்சியாளராக நியமித்த அந்தக் கல்லூரி நிர்வாகம்தான் முதல் குற்றவாளி இருக்க முடியும். ஆனால் பயிற்சியாளரை மட்டுமே குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கிஅந்த கல்லூரிப் பெயரைக் காப்பாற்றுவது எதற்கு? ஏன்  அதற்க்கு அத்தனை ஊடகங்களும் துணை போகிறது என்பது மட்டுமல்ல தமிழக அரசும் துணைப் போகிறது என்பது கேள்வி...


அந்த கேள்விக்கு பதிலும் இணையத்தில் கசிந்து இருக்கிறது..... அது இதுதான்


இந்த கல்லூரியின் உரிமையாளர் அதிமுக கட்சியை சேர்ந்த பிரபல எம்.பி யாம் அவரது மனைவிதான் கல்லூரியின் தலைவராம். அதனால்தான் கல்லூரி மீது நடவடிக்கை எடுத்து அவ்ர்களிடம் இருந்து பணம் பெற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கொடுக்காமல் முதல்வர் தானே மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுத்திருக்கிறார்.



குகையில் சிக்கியவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவது தாய்லாந்து
கல்லூரியில் படிக்க சென்றவரை தள்ளிவிட்டு உயிரை பறிப்பது தமிழ்நாடு

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. இதை ஒருமாதம் பேசுவோம் தேர்தல் வந்தால் இது மறந்து விடும் பிறகு கொண்டாட்டம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாசம் எல்லாம் மிக அதிகம்.........

      Delete
  2. Replies
    1. அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கும் அதை பார்க்கும் நமக்கும்தான் கொடுமையாக தோன்றுகிறது ஆனால் அதற்கு காரணமானவர்களுக்கு நத்திங்க்

      Delete
  3. செய்தியே வேதனை அளிக்கிறது. என்ன நடக்கிறது? என்ன பேசினாலும் எந்த மாற்றமும் வரப் போவதிலை. கில்லர்ஜி சொன்னதை வழி மொழிகிறோம்

    ReplyDelete
    Replies
    1. லட்சங்களை வாங்கி போட்டுக் கொண்டு இருந்தால் மாற்றம் வராது தவ்றுக்காரணமானவர்களை சட்டம் தண்டிக்கும் என்று எதிர்பார்க்க்காமல் நாம் சட்டத்தை எடுத்து தண்டணை கொடுத்தால் நிச்சயம் மாற்றம் வரும்

      Delete
  4. வீடியோ பார்த்துட்டு அதிர்ந்துட்டேன்.

    கீழ நிறபவங்க வலையை சரியாய் பிடிக்காததால் முதலில் குதித்த பெண்ணுக்கு காயம் பட்டும் அந்தாள் அந்த பெண்ணை தள்ளி விடுறாப்ல. இத்தனைக்கும் அந்த பொண்ணு குதிக்க மாட்டேங்குது.

    சொல்லி வச்ச மாதிரி எல்லா ஊடகமும் இப்படி இருந்தால் எப்படி?! இதுக்குதான் நான் நியூஸ் சேனலே வைப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. உயிர்கள் மிக மலிவாக போகிவிட்டது என்ன பேசி என்ன பயன்

      Delete
  5. வீடியோவைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இந்த செய்தியோடு தாய்லாந்து செய்தியை ஒப்பிடவே முடியாது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. கொடுமை... உயிருக்கான மதிப்பு இங்கே ரொம்பவே குறைவு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.