Saturday, July 28, 2018

கலைஞர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்டா

 மனிதனாக பிறந்தவர்  வாழ்வில் பெறவேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நிறைவாக வாழ்ந்து கொண்டிருப்பவர்  கலைஞர். மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா,  காமராஜர் மட்டுமல்ல வாழும் தலைவர்களான வாஜ்பாய், சோனியா ,மோடி வரை யாரும் அந்த செல்வங்களை நிறைவாக பெறவில்லை.

சில தலைவர்களை போல மர்ம மரணமும் கலைஞருக்கு ஏற்படபோவதில்லை தன் சொந்த நாட்டு மக்களால் அவர் சுட்டு கொல்லப்படப் போவதுமில்லை.  அந்நிய நாட்டு மக்களாலும் அவர் சுட்டு சாவப் போவதில்லை. பெரும் விபத்து ஏற்பட்டு தூர் மரணமும் ஏற்படப் போவதில்லை கலைஞருக்கு  மரணம் என்ற ஒன்று ஏற்படுமாயின் நூறுசதவிகித  இயற்கையான நிறைவான மரணமாகத்தான் இருக்கும் . அவர் தெய்வமும் அல்ல இறந்தால் அவர் மீண்டும் உயிர்தெழுவதற்கு அவர் தலைவர். அதனால்தான் அவர் மரணத்தோட போராடி போராடி வெற்றி பெற்று கொண்டிருக்கிறார் இன்றும் வெற்றி பெற்று இருக்கிறார்.


அந்த வெற்றியை தக்க வைக்க கலைஞர் அன்றுமட்டுமல்ல இன்றும்  இந்த நிமிடம் வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். இந்த போராட்டத்தில் அவர் தோல்வி அடைந்தாலும் அதுவும் அவரின் வெற்றியாகத்தான் வரலாற்றில் குறிப்பிடப்படும்....# கலைஞர் தலைவன்டா


வாழ்வின் முடிவிலிருந்து எந்த மருத்துவத்தாலும், மருத்துவராலும் காப்பாற்ற முடியாது. நாம் சேர்த்த எதிலிருந்தும் ஓர் குன்றின்மணி அளவுகூட எடுத்துச் செல்ல முடியாது. நாம்  பூவுலகிற்கு வரும்போது எதையும் கொண்டுவரவில்லை. பூவுலகை விட்டுப்போகும்போது ஏதும் கொண்டு செல்லப் போவதுமில்லை. இது சத்தியமான யதார்த்தமான நிஜம்.



அன்புடன்
மதுரைத்தமிழன்
#Great leader #kalaignar #karunanidhi

9 comments:

  1. ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் எனக்கு கலைஞர் ஐயாவை பிடிக்கும். இனி அவர் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மூப்பினால் உண்டாகும் வேதனையை அனுபவிக்கனும். அதனால், இதோடு அவர் மரணித்தால் அவருக்கு நல்லது.

    ReplyDelete
    Replies
    1. என் விருப்பமும் இதுதான்.

      Delete
  2. அவரின் நலவிரும்பிகள் கலைஞர் ஐயா வேதனைக்கு ஆளாகாம மரணிக்கனும்ன்னு நினைச்சு மனசை தேத்திக்கனும். இதுதான் அவருக்கு அவர்கள் காட்டும் உண்மையான அன்பின் வெளிப்பாடாகும்.

    ReplyDelete
  3. அவர் தெய்வமும் அல்ல இறந்தால் அவர் மீண்டும் உயிர்தெழுவதற்கு

    இது மட்டுமே உண்மை.
    ஏற்றுக்கொண்டர்களுக்கே தலைவன்
    ஏற்றுக்கொள்ளாதவர்கு தலைவலி.

    ReplyDelete
  4. அவரைத் தெய்வம்னு யாரும் சொன்னதில்லையே.உனக்கு ஏன் திருகு வலி?

    ReplyDelete
  5. கலைஞரின் அரசியலை விட அவரது தமிழ்ப்புலமை அதிகம்பிடிக்கும் பள்ளியில் அதிகம்படிக்காஅவிட்டாலும் தமிழ் இலக்கியங்களில் அவரது புலமை ஆச்சரியப்படுத்தும்

    ReplyDelete
  6. நலம்பெறுவார் என்னும் நம்பிக்கை இருக்கின்றது

    ReplyDelete
  7. எல்லாம் சரி, ஏன் சார் இந்த ஏகவசனம்?!

    சம்மந்தமில்லாத ஒரு விசயம்

    மதிமாறன்னு ஒரு ஆள் தன்னை பேச்சாளன்னு சொல்லிக்கிட்டு அலைகிறாரு தெரியுமில்ல? அவருக்கு கலைஞர்னு உச்சரிப்பு வரமாட்டேன்கிது. கலைஞ்சர், கலைஞ்சர்னே சொல்றாரு. :)

    ஞ உச்சரிக்கத் தெரியாத ஒரே பேச்சாளர் இவர்தான்னு நினைக்கிறேன். ;)

    ReplyDelete
  8. நலம் பெற வேண்டுமென்பது எல்லாரின் விருப்பமும் .

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.