Friday, July 13, 2018

தமிழக மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிக்கும் தமிழக அரசு


பேரிடரின் போது  எப்படியாகிலும் உயிர் தப்பித்தால் போதும் என்பதுதான் ஒவ்வொருவரின்  குறிக்கோளாக இருக்கும். அந்த சமயங்களில் நீந்த தெரியாவில்லை என்றாலும் கப்பலில் இருந்து கடலுக்கும் பெரிய பில்டிங்கில்  நெருப்பெனில் எவ்வளவு உயரத்திலிருந்தும் கீழே குதிப்போம் அப்படித்தான் 911 போதும் நீயூயாரக் டிவின் டவரில் இருந்து பலரும்  குதித்தனர்

ஆனால் அதே நேரத்தில் தேவையேபடாத ஒரு நேரத்தில் பயிற்சிக்காக குதிக்க சொன்னாலும் பலரும் குதிக்க தயங்குவார்கள்  துணிவும் வராது.

 பயத்துடன் அந்தப் பெண் குதிக்கத் தயங்கிக் கொண்டிருந்தது கண்கூடாகத் தெரிகிறது. சிறிதும் பொறுப்பின்றி ஒரு வில்லனைப் போல் அந்தப் பெண்ணை பயிற்சியாளர் தள்ளி விடுகிறார். நாம் தள்ளிவிடுவதற்கும் அவர்களாகவே குதிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உணடு,  அதிலும் இந்த பெண் உடகார்ந்து இருக்கிறார்....     கட்டிடத்திலிருந்து சிறிதும் விலகாமல் அந்தப் பெண்ணின் உடல் காங்க்ரீட் சுவர்களில் தலை அடிபட்டு அம்மம்மா....

இந்த  கல்லூரி மாணவியை இரண்டாம் மாடியிலிருந்து உட்கார்ந்த நிலையிலிருந்து தள்ளி விட்டு ஒத்திகை பார்த்தைக் காணச் சகிக்கவே இல்லை. இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் இப்படி சொல்லி இருக்கிறதாம்
.

இந்த  கல்லூரி மாணவியை இரண்டாம் மாடியிலிருந்து உட்கார்ந்த நிலையிலிருந்து தள்ளி விட்டு ஒத்திகை பார்த்தைக் காணச் சகிக்கவே இல்லை. இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் இப்படி சொல்லி இருக்கிறதாம்


பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி தவறி விழுந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம்- கல்லூரி நிர்வாகம்



கோவையில் மாணவிக்கு பயிற்சி அளித்த விவகாரத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்திற்கு தொடர்பில்லை.மாணவிக்கு பயிற்சி அளித்ததாக கூறப்படுபவர், எங்கள் குழுவை சேர்ந்தவர் அல்ல - தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் விளக்கம்

பேரிடர் மேலாண்மை பயிற்சிங்க்குற பேர்ல ஒரு கொலை பண்ணிருக்காய்ங்க அதற்கு முதலமைச்சர் வழக்கம் போல ஐந்து லட்சம் பணம் கொடுத்து இருக்கிறார். இப்படி மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுப்பதில் கர்ணனையும் மிஞ்சிவிடுவார் போல இருக்கு..


எடப்பாடி சார் அந்த  தவறான பயிற்சி அளித்த அந்த பயிற்சியாளரை கைது செய்த அரசாங்கம் தரமற்றஅந்த பயிற்சியாளரை பணிக்கு எடுத்த அந்த கல்லூரி நிர்வாக குழுவினரை கைது செய்யாதது ஏன்? அதுமட்டுமல்ல அந்த கல்லூரி நிவாக குழுவினரை நியமித்த்த கல்லூரி ஒன்ரை கைது செய்யாது ஏன்... இப்படி ஒரு பயிற்சி அதுவும் பெண் பிள்ளைகளை வைத்து நடத்தும் போது அதற்கு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்கீங்க என்று விசாரிக்காத நிர்வாகத்தினரையும் கைது செய்து சிறையில் அடைப்பதுதான் சரி,,,,


நேற்றைய செய்தியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளியின் சுவர்கள்  ஒரு சிறு மழைக்கே சுவர்கள் உதிர தொடங்கி இருக்கின்றன என்று வந்தது... அப்படி ஒரு பள்ளிக்கட்டிடம் கட்டும் போது அதன் தரத்தை சோதிக்க அதிகாரிகள் இல்லையா? ஒரு வேளை பிள்ளைகள் படிக்கு பொழுது அந்த கட்டிடம் உடைந்து நூற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் சாகும் போதுதான் நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா? அல்லது செத்த பின் தலைக்கு ஒரு லட்சமோ அல்லது சில லட்சமோ கொடுத்தால் போதும் என்று இருப்பீர்களா?

இந்த நிமிஷத்தில் அந்த பள்ளியை கட்டிய எஞ்சினயர்ஸ் மற்றும் அத்ற்கு சொந்தக்காரர்களை இந்நேரம் பிடித்து தோலை உரித்து எடுத்து இருக்க வேண்டாமா என்ன?


 ஒரு சில தினங்களுக்கு முன்பு கடலூர் கோண்டூரில்  காலை இரண்டு சக்கர வாகனத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்றவர் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் விழாமல் இருக்க முயற்சி செய்த போது நிலை தடுமாறியதில் தாய் கையில் இருந்த 1 வயது ஆண் குழந்தை கீழே விழ இந்த குழந்தையை தாய் எடுக்க முயற்சிக்கும் போது தாய் கண்முன்னே அந்த குழந்தை தலையில் அரசு பேருந்து ஏறி குழந்தை மூலை வெளியில் வந்து உயிர் இழந்தது. இது ஏதோ சாதாரண விபத்து அல்ல தாய், தந்தை கண் முன் நடத்த கொடுர விபத்து....

இந்த விபத்திற்கு காரணமான சாலை ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை ஆனால் விபத்து நடந்த 15 நிமிடத்தில் இந்த பள்ளம் மூடப்படுகின்றது, அப்ப பணி முடிந்த பிறகும் இந்த பள்ளம் திறந்து உள்ளது என்று தானே அர்த்தம்.....

ஒரு சிறு குழந்தை உயிர் இழந்த பின்புதான் இதை மூட வேண்டுமா, உயிர் இழப்புக்கு யார் காரணம்?


தரமற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியரை கைது பண்னிய அரசு இது போல தரமற்ற எஞ்னியரிங்க் கல்லூரிகளில் தரமற்ற ஆசிரியர்களால் நடத்தப்பட்டு லட்சக் கணக்கில் பணத்தை கொட்டி படிக்கும் மாணவர்கள் படித்து முடித்த பின் அந்த தரமற்ற கல்வியால் சமுதாயத்தில் வேலை கிடைக்காமல் பல பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது வேலைக்கு ஏண்டா போகலை என்று கேட்கும் பெற்றோர்களை விரக்தியால் வெட்டிக் கொள்ளுகிறார்கள்... இது எல்லாம் உங்கள் கண்ணில் படவில்லையா? அல்லது எவன் எப்படி போனால் பரவாயில்லை எவன் செத்தாலும் அவன் குடும்பத்திற்கு மொய் எழுதும் முதலமைச்சராக இருக்கப் போகிறீர்களா?



அரசியல் தலைவர்களின் வேலை ஆட்சியை தக்க வைப்பது அல்ல  ஆளும் மாநிலத்தில் உள்ள மக்களை தக்க வைப்பதுதான்  என்பது உங்களுக்கு தெரியுமா?


நான்கு ஆண்டு பதவியில் அதிக அளவில் உலக் நாடுகளுக்கு பயணம் செய்தவர் மோடி என்பதை கின்னஸ் நிறுவனத்திற்கு தெரிவித்து அதனை சாதனையாக அறிவிக்க சொன்ன எதிர்கட்சிகள்  அது போல எடப்பாடியை அதிக அளவு மொய் பணம் வைத்து சாதித்தவர் என்று கின்னஸ் நிர்வாகத்தினருக்கு தெரிவிக்கலாமே?




அன்புடன்
மதுரைத்தமிழன்


4 comments:

  1. மனம் கனத்து போன காட்சி. அந்த பெண் குழந்தை இறந்த செய்தியை கூட அவர்கள் வீட்டுக்கு தாமதமாய் தெரிவித்த செய்தியை அந்த பெண்ணின் பெற்றோர் சொல்கிறார்கள்.


    பயிற்சி பெற்றவர்கள் அப்படி குதித்து காட்டினால் போதுமே! இப்படி பயிற்சி இல்லாதவர்களை குதிக்க வைப்பது தவறு , அதுவும் அந்த பெண்ணே குதித்து இருந்தாலும் பராவயில்லை அவளை தள்ளி விட்டது கொடுமை.

    ReplyDelete
    Replies

    1. ஆமாம் கோமதியம்மா மனம் கனத்துதான் போகிறது.......... அந்த பயிற்சியாளரை மட்டுமல்ல கல்லூரி நிர்வாகில் அனைவரையும் சில வருங்களுக்காவது சிறையில் போட்டால்தான் வருங்காஅலத்திலாவது கொஞ்சம் கவனமாக செயல்படுவார்கள்

      Delete
  2. வீடியோ பார்த்து மனம் கலங்கி விட்டது. கோமதி சகோதரி/அக்கா அவர்கள் சொல்லியதேதான் எங்கள் கருத்தும். இப்படியுமா என்று மனம் பதைபதைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மனம் கனத்துதான் போகிறது....

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.