Tuesday, July 3, 2018

இப்படி செய்தால்தான் சிலை திருட்டை இனிமேல் தடுக்க முடியும்

இனிமேல் சாமி சிலை செய்யும் போது  அதை ரோபோ மாடலில் செய்துவிட்டால் சிலையை திருடும் போது அந்த சிலை பளார் என்று ஒரு அரை கொடுக்குமல்லவா...அல்லது திருடன் திருடன் என்று கத்தவாது செய்யுமல்லவா அல்லது  எலக் ட்ரிக் ஷாக்காவது  கொடுக்கும் அல்லவா அல்லது சிலைககளை வேனில் கடத்தி செல்லும் போது கடவுளே காப்பாற்று  என்று சத்தம் போட்டு உதவியாவது கேட்கும் அல்லவா.....


அதுமட்டுல்ல

இந்த ரோபோ சிலையில் உள்ள கையில் உங்கள் க்ரெடிட்கார்ட்டை தேய்த்து அமவுண்டை எண்டர் செய்தால் அது ஆட்டோமெட்டிக்காக சார்ஜ் செய்து கொள்ளும் அல்லவா. இதனால் உண்டியல்  உள்ள பணம் திருடர்கள் கையில் போகாது அல்லவா


அது போல குருக்களுக்கு பதிலாக அர்ச்சனை செய்ய ரோபோக்களை வைத்தால் எந்த சாதிக்காரன் குருக்களாக இருக்க வேண்டும் என்ற பிரச்சனை தீரும் அல்லவா


கடவுளே கண் திறந்து பார் என்றால் பார்க்கும் அல்லவா?பேசாத சியலையாக இல்லாமல் பேசும் சிலையாக மாறிவிடும் அல்லவா?


இந்த டிஜிட்டல் இந்தியாவில் இதெல்லாம் சாத்தியம்தானே

யோசிங்க..பாதுகாப்பான சாமி சிலையை செய்யுங்க..காரணம் இது நவின உலகம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. திருட்டுப் போவதெல்லாம் பழங்காலச் சிலைகள் தானே

    ReplyDelete
  2. ​// சிலைகளை வேனில் கடத்தி செல்லும்போது கடவுளே காப்பாற்று என்று சத்தம் போட்டு //

    மனிதனே காப்பாற்று என்றுதான் சத்தம் போடவேண்டும்! :)

    ஜி எம் பி ஸார் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.

    ReplyDelete
  3. யோசனை நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  4. ரோபோ சிலை திருட்டுப் போனால்.. “மதுரைத்தமிழனே காப்பாத்துங்கோ” எனக் கத்துறமாதிரிச் செய்தால் இன்னும் நல்லாயிருக்குமே:)

    ReplyDelete
    Replies
    1. ஹையோ ஹையோ நான் சொல்ல நினைச்சத இந்த ஞானி சொல்லிப்புட்டார்....ஹா ஹா ஹா ஹா..அதிரா மதுரை தமிழன் பூரிக்கட்டை அடி வாங்கும் மதுரை வீரன் தானே!!! அப்பூடி நினைச்சுத்தானே சொன்னீங்க...ஹிஹிஹி

      கீதா

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.