Tuesday, July 10, 2018


கண் கலங்க வைக்கும் வீடியோவும் என்னை கண்கலங்க வைத்த நிகழ்வும்



நீயூஜெர்சியில் வசிக்கும் பேஸ்புக் பெண் பதிவர் கவிதா அவ்ர்களின் பெற்றோர்கள் இந்தியாவில்  இருந்து அமெரிக்க வந்து இருக்கிறார்கள் க.டந்த வாரத்தில் இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

அம்மா இருக்கும்போது, வீட்டில் இருந்து வேலை செய்யவது மஹா தப்பு..... சும்மா திண்ணுக்கிட்ட இருக்கேன்...!!
காலையில் : அடை, தேங்காய் சட்னி
நொறுக்குக்கு : அதிரசம், முறுக்கு
லஞ்ச்: பாவக்காய் புளிக்குழம்பு, கீரை கூட்டு + சம்திங் ஸ்பெஷல் ஃப்ரை
மறுபிடியும் அதிரசம் ஒன்னு உள்ள போகுது..... உண்ட மயக்கம் வேற கண்ண கட்டுது!!

ஆபிஸ் போன்னா ஃப்ரைடே பீட்ஸா ஒட இருந்துருப்பேன்.....!!
#இன்னும் 2-3 நாள் என்ஜோய் பண்றேன்... கண்ணு வச்சுராதீங்க!


என்று பதிவு இட்டு இருந்தார்



அதற்கு நான் அம்மா சமைத்து போட்டு சாப்பிட கொடுத்து வைச்சிருக்கணும்.....அந்த அதிர்ஷடம் எனக்கு இல்லை. பட் டோண்ட் வொரி இதற்கு எல்லாம் கண்ணு போடமாட்டேன்... எஞ்சாய்

என்று பதில் கருத்து சொல்லிவிட்ட சில நொடிகளில் என் கண்களில் இருந்து கண்ணிர்  வழிந்தோட ஆரம்பித்தது சில துளிகள் அல்ல அருவியாகவே வந்தது. நல்லவேளை வீட்டில் யாரும் இல்லை.. 

அப்போது என் மனதிற்குள் வந்தது இந்த சிறுவனின் முகம்தான்....என்னவோ தெரியவில்லை அந்த நேரத்தில் அந்த சிறுவனை போலவே நானும் இந்த வயதில் மீஸ்ஸிங் மாம் எம்று தோன்றியதுமட்டுமல்லமால் அழுகவும் செய்தேன்.



Reporter Ask The Syrian kid Are You gonna Miss Your Mom Kid Replay Emotinel #HearTouching Incedence


இப்படித்தான் நானும் சிரித்து கொண்டே அழுகிறேன்..


அவர்களை பொறுத்தவரை நான் எதற்கும் அழமாட்டேன் கவலைப்படமாட்டேன் என்பதுதான் அவர்களின் நினைப்பு..

உண்மையிலே என் தாயார் இறந்த செய்தி கேட்வுடன் மனதிற்க்கு ஷாக்காக இருந்தாலும் கண்ணில் இருந்து சில துளி கண்ணீர் மட்டுமே வந்தது அதையும் மறைத்து கொண்டேன். அவர்களின் சாவிற்கும் போகமுடியவில்லை காரணம் உடலை எட்டு மணி நேரத்திற்கு மேல் வைக்கும் வழக்கம் எங்கள் மதத்தில் கிடையாது அதுமட்டுமல்ல அவர்கள் இறந்த செய்தி கேட்டது வெள்ளிகிழமை இரவு நேரத்தில் அதுவும் நான் இந்த நாட்டைவிட்டு வெளியேறிய வேண்டுமானால் அரசு அனுமதி பெற்றே செல்ல வேண்டிய சுழ்நிலை  சரி அவர்கள் அனும்தி பெறாமலே சென்றோம் என்றாலும் அம்மாவின் உடலை பார்க்க முடியாது இந்த சூழ்னிலையால் செல்லவில்லை(இது நடந்து 15 ஆண்டுகளாகிவிட்டன)


மேலும்  என்னப் பொறுத்த வரையில் இறந்தவர்களின் உடலை பார்க்க விரும்பமாட்டேன் காரணம் அவர்களின் நினைவு மீண்டும் வரும் போது அந்த இறந்த உடல்தான் முதலில் மனக் கண்ணில் வந்து நிற்கும்...அவர்கள் செய்த பல நல்ல நிகழ்வுகள் பின் தள்ளப்படும்..

அதனால்தான் என்னவோ அம்மாவை இறுதி நேரத்தில் பார்க்காததால் என்னை பொருத்தவரையில் இன்னும் அவர்கள் இந்தியாவில் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கிறேன்..

அதுமட்டுமல்லா சின்ன வயசில் இருந்தே மனதில் யாரும் இறந்தவர்களுக்காக அழுவதில்லை இறந்தவர்களால் நமக்கு ஏற்படும் இழப்புக்களால்தான் நாம் அழுகிறோம் என்று நினைப்பு இருந்து கொண்டே இருக்கிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்

30 comments:

  1. பதிவும், காணொளியும் மனம் கனக்க வைத்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. காணொளி என்னையும் மனம் கலங்க வைத்துவிட்டது கில்லர்ஜி

      Delete
  2. மனம் கனமாகி விட்டது இந்தப்பதிவைப்படித்ததும்!
    உங்களின் எண்ண‌ங்கள் என் மன உணர்வுகளைப்பிரதிபலித்தது போல இருந்தன!

    ReplyDelete
    Replies
    1. மனோசாமிநாதனம்மா
      காணொளியை பார்க்கும் யாரும் மனம் கலங்கவே செய்வார்கள்

      Delete
  3. என் தந்தையின் இழப்பும் மிகச் சிறுவனாய் இருக்கையில் என்பதால் இச்சிறுவனாய் என்னை நினைத்து வருந்துவதைத் தவிர்க்க இயலவில்லை

    ReplyDelete
    Replies
    1. ரமணி சார் இழப்பும் அதனோடு கூடிய வருத்தமான நினைப்பும் என்றும் நீங்காதவை நம் வாழ்வில்

      Delete
  4. மனிதன் அழுவான், பழங்கள் அழுகும். நீங்கள் என்ன செய்தீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. கந்தசாமி ஸாரை இங்கு பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது? நலமா ஸார்?

      Delete

    2. கந்தசாமி சார் நான் இறப்பின் போது அழுவதில்லை ஆனால் சில நாட்கள் அல்லது பல நாட்கள் கழித்து இழப்பை நினைத்து அழுவதுண்டு... அழுததுண்டு அதுவும் அம்மாவீற்கு மட்டுமே

      Delete
  5. காணொளி நொடியில் என் கண்களையும் ஈரமாக்கியது.

    நீங்கள் அம்மாவைப் பார்க்காத நிலை பற்றிக் குறிப்பிட்டிருப்பதும் மனதைக் கனக்கச் செய்தது.

    இம்மாதிரி சூழ்நிலைகளை...

    என்ன சொல்ல. கஷ்டமாக இருக்கிறது.​

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் எதிலும் அதிக பிடிப்பு இல்லாமலும் ஆசைகள் இல்லாமலும் இருக்கும் எனக்கே சில சம்யங்களில் மனம் கலங்குகிறதே ...ஆனால் அதிக பிடிப்பு ஆசைகள் கொண்டவர்களை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை... அவர்கள் மிகவும் நொருங்கித்தான் போவார்கள்

      Delete
  6. மனம் கனத்து போனது .
    நினைவுகளில் என்றும் வாழ்வார்கள் அம்மா.
    குழந்தை அழுத போது கண்கள் கலங்கி விட்டது.
    குழந்தையின் மனநிலைதான் இப்போது உங்களுக்கும்
    ஆறுதல் அடையுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி கோமதியம்மா

      Delete
  7. இந்த பதிவு கந்தசாமிஐயாவை இழுத்து வந்திருக்கிறது என்பதே மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அவரின் வருகை எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது அவரால் முன்பு போல எழுத முடியவில்லை எனனினைக்கிறேன்... அவர் எழுதாவிட்டாலும் பரவாயில்லை உடல் நலத்துடன் இருந்தாலே மகிழ்ச்சி வாழ்க் வளமுடன்

      Delete
  8. ட்றுத் படித்ததும் என் நினைவுகளும் நிறையவே கிளறப்பட்டு எனக்கும் கண்கள் முட்டி விட்டது.. அதனால ஓடி விட்டேன், பின்பு நினைத்தேன் வாழ்க்கையில் சில விசயங்களுக்கு நாம் ஓடி ஒளியக்கூடாது.. சிலதை எதிர்நோக்கியே தீரோணும் அதில் ஒன்றுதான் இந்த இழப்பு என்பது...
    “இழந்தவை யாவும் இழந்தவைதானே?”.. இருப்பவற்றையும் ஒருநாள் இழக்கத்தானே போகிறோம்.. நாமும் இபோ இருப்பது மட்டும்தானே உறுதி அடுத்த நொடி இருப்போமா என்பது நமக்குத் தெரியாதே..

    பட்டினத்தார் என நினைக்கிறேன் அவர் சொன்ன ஒரு வரி நினைவுக்கு வருகிறது...

    “இறந்த உடலைப் பார்த்து அழுகிறது.. இறக்கப்போகும் உடல்” என்பது போல... நாமு போகத்தானே போகிறோம் என மனதை தேற்றிடோணும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பட்டினத்தார் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்

      Delete
  9. போஸ்ட் படிச்சு வரும்போது.. நீங்க அடுத்த நொடியே கண்கலங்கி விட்டேன் என்றதும் எனக்கு திக் என ஆச்சு.. அதாவது அந்தப் பெண்ணின் அம்மாவுக்குத்தான் ஏதோ ஆகிவிட்டதென ஒரு கணம் நினைச்சிட்டேன்.. அவ நீடூழி வாழோணும்..

    உண்மையில் வெளிநாட்டில் குடும்பத்தைப் பிரிஞ்சு இருப்போரின் நிலைமைதான் அதிகம் கவலையானது.

    நாங்கள் கனடா போயிருந்தோம் ஹொலிடேயில்.. நல்லா இருந்த அப்பா, கொஞ்சம் சோர்வாகி டக்கு டக்கென இரு வாரத்தில் மிக சோர்வாகிட்டார்ர்.. இன்ஃபெக்‌ஷன் என்றார்கள்... அவரை பாடிப் பார்க்க மனதுக்கு கஸ்டமாக இருந்தது, ஏனெனில் எப்பவும் அப்பா ஒரு யங் போய் போலவே இருப்பார், சன் கிளாஸ் போட்டு ஒரு பாக்கும் தோளில் போட்டு டக்கு டக்கென நடந்து போவார்ர்.. தன் உடம்பில் வலு கவனம் ஸ்லிம்மாகவே இருந்தார்.. உணவுக்கட்டுப்பாடு எக்ஸசைஸ் என எப்பவும் சுறுசுறுப்பாகவே இருப்பார்.. அப்படிப்பட்ட அப்பா இப்படி சோர்வாகி இருந்ததும்.. மனதுக்கு தாங்க முடியாமல் ஆகிவிட்டது.

    நம் ரிக்கெட் முடிந்துவிட்டது.. வியாளன் நைட் பிளைட்.. ஸ்கூலும் தொடங்கப்போகிறது.. எதுக்கும் போய் திரும்ப வருவோம்.. அவர் சோர்வாக மட்டும்தானே இருக்கிறார் என நினைத்து வெள்ளி காலை இங்கு வந்திறங்கினோம்.. வந்திட்டோம் என சொன்னோம் அப்பா ஃபோனில் பேசினார்.. “எப்படி ஆச்சி சுகமாக எல்லோரும் போய்ச் சேர்ந்திட்டீங்களோ” என என்னோடு அவர் பேசிய கடசி வார்த்தை அது...

    பேசி 12 மணி நேரம்கூட ஆகவில்லை அவர் போய் விட்டார்... உடனே ரிக்கெட் போட்டு அதுவும் டிரெக்ட் ஃபிளைட் கிடைக்கவில்லை நியூயோர்க் போய், போய்ச் சேர்ந்தோம்ம்... எதுவும் மறக்க முடியாதது.. இப்படியானவற்றை நினைக்க விரும்புவதில்லை நான்.. ஆனாலும் நினைக்காமலும் இருக்க விரும்புவதில்லை:(.

    ReplyDelete
    Replies
    1. அவரை அப்படிப் பார்க்க மனதுக்கு கஸ்டமாக இருந்தது என்பது.. பாடிப்பார்க்க என தவறாக வந்துவிட்டது..

      Delete
    2. எனது தாயார் இறப்பதற்கு முதல் நாள் என் குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி போன் செய்துவிட்டு அடுத்த நாள் இறந்து போனார்.. அடுத்த நாள் அவர் எப்போதும் போல அப்பாவிற்கும் அண்ணனுக்கும் சமைத்து கொடுத்து இரவில் டிவி பார்த்துவிட்டு 11 மணியளவில் உறங்கஸ் சென்று இருக்கிறார். அதிகாலை நாலு மணியளவிற்கு குறட்டை சத்தம் போல ஒரு சத்தம் வந்தாக அப்பா கூறினார்.. அம்மா எப்போது ஐந்து மணிக்கு எழுந்து பிரார்த்தனை செய்துவிட்டு அப்பாவிற்கு காபி பொட்டு கொடுப்பார் அன்று 6 மணியாகியும் எழ்ந்திருக்காததால் அப்பா என்னவன பார்த்த போது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்திருக்கிறார் அடுத்த வீட்டில் உள்ள டாக்டரை அழைத்து பார்த்த போது இறந்து சில மணினேறம் ஆகிவிட்டது என்று சொன்னாராம்.. ஹும்ம்ம்

      Delete
  10. ஒருஉணமையைப் பகிர்ந்து கொள்கிறேன் சாவு இறப்பு போன்றவை என் மனதில் எந்த சலனத்தையும் எழுப்புமா தெரியவில்லை சமீபத்தில் என் தம்பி ஒருவனின் மரணச் செய்தி கெட்டதும் ஓ ஓ என்றுஇருந்து விட்டேன்

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் சலனங்கள் உடனடியாக தோன்றுவதில்லை என்பது என்னவோ உண்மைதான் ஜி,எம்.பி சார்

      Delete
  11. முதன்முதலாய் பர்சனலான ஒரு சோகத்தை பகிர்ந்துக்கொண்டிருக்கீங்க. அம்மாதான் உங்க மகள் ரூபத்தில் பக்கத்திலேயே இருக்காங்களே!

    ReplyDelete
    Replies
    1. ராஜிம்மா பல பதிவுகளில் பெர்ஷன்ல் விஷயங்களை நகைச்சுவையாக சொல்லி சென்று இருக்கிறேன்... இது சோகமாக வந்ததற்கு காரணம் அம்மாவின் நினைவலைகள் மீண்டும் வந்ததும் அதுமட்டுமல்லால் என் வீட்டு நாய்குட்டியை முடிவெட்ட அதற்கான இடத்தில் விட்டு முன்று மணிநேரம் பிரிந்து இருந்ததும்தான் காரணம் அவனை விட்டு வரும் போது என்னை தனியாக விட்டு செல்லாதே என்று அவன் பரபர்த்தது என் கண்முன்னால் நிழலாடியது.. ஐ லவ் கிம் சோ மச்

      Delete
  12. ஆமா, இந்த விடியோவில் நிருபர் கேட்பது அம்மாவை பத்தி இல்ல, கேர்ள் ஃப்ரெண்ட் பத்தின்னு ஒரு பேச்சு உலாவுதே! எது உண்மையா?!

    ReplyDelete
    Replies
    1. அந்த நிருபர் பேட்டி எடுத்தது என்னை என்றால் அந்த வதந்தி உண்மையாக கூட இருக்க வாய்ப்புண்டு

      Delete
  13. என் அப்பாவும் கையை மடித்து படுத்தவர் தூக்கத்திலேயே போய் விட்டார்கள் 51 வயதில் அம்மா குறட்டை சத்தம் வரவில்லை என்றபோதுதான் அப்பா இறந்து விட்டார்கள் என்றே தெரிந்தது எனக்கு 17 வயது திருமணம் ஆகி விட்டது. நான் அருகில் இல்லை. அப்பாவுக்கு 51 வயது. இப்போது நினைத்தாலும் கண்கலங்கி விடும் நான் அப்பா செல்லம். அம்மா கண்டிப்பு அப்பா செல்லம் எங்கள் வீட்டில்.
    என் அக்கா, 25 வயது, என் அண்ணன் 32 வயது இப்படி உறவுகளை இழந்து வாடி ருக்கிறேன் அதிரா சொன்னது போல் மனதை தேற்ரிக் கொண்டு வாழ்கிறோம்.

    உண்டு பண்ணி வைக்கிறான் கொண்டு கொண்டு கொண்டு போகிறான் மாயவித்தை செய்யும் அம்பலவாணன் .

    ReplyDelete
  14. சினிமாவில் இறப்பை மிகைப் படுத்திக் காட்டுபோது நமக்கும் அழுகை வந்து விடும். ஆனால் நடப்பில் அப்படி இல்லை என்பது உண்மைதான். அழாவிட்டால் கல் மனதுக்காரன் என்று கோறி விடுவார்களொ என்ற்தான் பலரும் அழுவதாக எனக்கும் தோன்றுகிறது. பழைய நினைவுகளை அசை போடும்போதுதான் இனம் புரியாத பாரம் மனதை அழுத்தும்.

    ReplyDelete
  15. உங்கள் பதிவு என்னவோ செய்தது என்றால் அந்தக் காணொளி. மனதைக் கலங்க வைத்துவிட்டது. என்னதான் அத்தருணத்தில் நாம் துக்கத்தை மறைத்துக் கொண்டாலும் அந்த நினைவுகள் வேறு சொல சமயங்களில் நம் மனதைக் கலங்க வைத்து நாம் அழுதுவிடுவோம்தான். உங்கள் பதிவு எங்கள் இருவருக்குமே அவரவர் பெற்றோரின் நினைவுகள் என்று பலவற்றை எழுப்பிவிட்டது.

    கீதா: அக்கருத்துடன் மதுரை என் அம்மா இருந்த போதை விட அவர்கள் இல்லாத போது நிறைய ஃபீல் செய்திருக்கிறேன். பல தருணங்களில் அவரை நினைப்பதுண்டு. 52 வயதிலேயே இறந்துவிட்டார். அதே போன்று என் அத்தையும் 50 வயத்ல் போய்விட்டார். முதலில் அத்தை அடுத்து அம்மா. என்று...என் மனதைக் கலக்கிய தருணங்கள். இப்போது உங்கள் பதிவு அதைக் கிளறியது கூடவோ அச்சிறுவன்....

    ReplyDelete
  16. காணொளி வேதனையின் உச்சம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.