Thursday, June 14, 2018

@avargalUnmaigal
வானிலை அறிக்கையும் இந்திய நீதிபதிகளின் தீர்ப்பும் ஒன்றுதானோ?


18 எம்.எல்.ஏக்கள் வழக்கிற்கான தீர்ப்பை பற்றி கடந்த இரண்டு நாட்களாக செய்தி சேனல்களிலும் சமுக வளைதளங்களிலும் விமர்சித்து வருகிறார்கள்.. அட முட்டாள்களே மத்திய அரசின் மனநிலைக்கு ஏற்றவாறு தீர்ப்பு சொல்லுவதுதானே இந்திய நீதிபதிகளின் வேலை. அப்படி இருக்கும் போது நல்ல தீர்ப்பு வரும் என்று நீங்கள் நினைப்பது உங்களின் மூட்டாள்தனத்தைதானே காட்டுகிறது...





அதனால போங்கடே போய் வேற வேலையை பாருங்க 

டிஸ்கி: இனிமேல் தவறுகளுக்கு தண்டனை இந்திய கோர்ட்டில் கிடைக்கப்போவதில்லை.... கடவுள் ஒருத்தர்தான் கொடுக்கமுடியும்


கவுண்டமணி
avargalunmaigal
: டேய் கூமுட்டைதலையா இங்கே வா

செந்தில் : என்னண்ணே

கவுண்டமணி : இன்னிக்குதானே 18 எம்.எல்.ஏ வழக்குக்கு தீர்ப்பு சொல்லுறாங்க?

செந்தில் : என்னண்ணே நாட்டு நடப்பு உங்களுக்கு கொஞ்சம் கூட தெரியலன்னே தீர்ப்பு சொல்லுறாங்க இல்லை....... சொல்லிட்டாங்கண்ணே

கவுண்டமணி :அப்ப அந்த வழக்கு முடிஞ்சிடுச்சா?

செந்தில் : இல்லேண்ணே

கவுண்டமணி : என்ன இல்லேண்ணே நொள்ளைனேனுட்டு தீர்ப்பு சொன்னா வழக்கு முடிஞ்சிடுத்துன்னுதான்னே அர்த்தம்

செந்தில் : அண்ணே தீர்ப்பு சொன்னாங்க ஆனால் வழக்கு முடியலைன்ணே

கவுண்டமணி : அடேய் உன்னை அடிச்சு கொல்லப்போறேன் இப்படி லூசு தனமாக பேசுவதற்கு . இதுக்குதான் பெரியவிங்க சொன்னாய்ங்க் அறிவாளிங்ககிட்ட சகவாசம் வைச்சினும் என்று

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. மழை வந்தாலும் வரும், வராமலும் போகலாம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.