Friday, June 29, 2018

பாம்பே ஹல்வா மிக எளிதில் செய்யலாம்?

அதிரா, ஏஞ்சல் ,கீதா, மதுரைத்தமிழன் இந்த நாலு பேரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள் அப்போது ஏஞ்சல் கிச்சனுக்கு போய் சாப்பிட ஸ்வீட் எடுத்து வர சென்று இருக்கும் வேளையில் அதிரா ஏஞ்சலைபற்றி  சொல்லிக் கொண்டிருந்தார்

ஏஞ்சல் டாக்டரிடம் சென்றாராம்

டாக்டர்  எனக்கு ஸ்வீட் பிடிக்காது என்றாலும் உடம்பை குறைக்க நீங்கள் சொன்ன மாதிரி தினமும் அல்வா சாப்பிடுகிறேன்  ஆனால் உடம்பு குறையாவதற்கு பதிலாக கூடிக் கொண்டே போகிறது.....



அதற்கு அந்த டாக்டர் ஏஞ்சல் நான் தினமும் அளவா சாப்பிடுங்க என்று சொன்னது உங்கள் காதில் தப்பா விழுந்திருக்கிறது என்று சொன்னாராம்.. (ஒரு வேளை ஏஞ்சலுக்கு வயதாகிவிட்டதால் காது சரியாக கேட்கவில்லையோ என்னவோ....)

இந்த விஷயத்தை அதிரா சொல்லிக் கொண்டிருக்கும் போது எல்லோரும் சாப்பிட ஸ்வீட்ஸ் எடுத்து வருகிறார் ஏஞ்சல் அதில் மற்ற ஸ்வீட்ஸ் ஏராளமாக இருந்தாலும்  ஒரே ஒரு அல்வா துண்டு மட்டும் இருக்கிறது அதுவும் சின்ன துண்டாக இருக்கிறது

 மூவரும் பங்கு போட்டுக் கொள்ள முடியாத அளவுக்கு மிகச் சின்ன அல்வா துண்டு அது ! அதனால் அவர்கள் ஒருமுடிவுக்கு வருகிறார்கள். நாம் இப்போதைக்கு இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் மூடிவைத்துவிட்டு, இன்றிரவு படுத்துத் தூங்குவோம். மூவரில் யாருக்கும் அற்புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவருக்கே இந்த அல்வா துண்டு.. . என்று தீர்மானித்துக் கொள்கிறார்கள்..

மறுநாள் காலையில் மூன்று பேரும் தாங்கள் முதல்நாள் ராத்திரி கண்ட கனவைபகிர்ந்து கொள்ள, அல்வா இருக்கும் பாத்திரத்தைச் சுற்றி உட்காருகிறார்கள்..

முதலில் அதிரா நேற்றிரவு என் கனவிலே முருகர் வந்தார். என்னை அவர் தன் பூந்தோட்டத்துக்குள் அழைத்துக் கொண்டு போய் பல அற்புதங்களைச் செய்து காண்பித்தார்.. . என்றார்
.
.அடுத்து, கீதா தான் கண்ட கனவைச் சொன்னார் - நேற்றிரவு என் கனவில் புள்ளையார்யப்பா  வந்தார். ஆனால், அவரை நான் என் பூந்தோட்டத்துக்கே அழைத்துப்போய்  அங்கே விளையாடிக் கொண்டிருந்த பைரவர்களை மற்றும் அவருக்கே பல அற்புதமான விஷயங்களைக் காண்பித்தேன்.. ..

கடைசியாக மதுரைத்தமிழன் பேச ஆரம்பித்தான். நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால் நாங்கள் பூந்தோட்டத்துக்கு எல்லாம் போகவில்லை ! கடவுள் என்னைப் பார்த்து, அடேய் முட்டாளே.. . எதிரிலேயே சுவையான அல்வா துண்டை வைத்துக்கொண்டு கனா கண்டு கொண்டிருக்கிறாயே.. ..முதலில் தூக்கத்தை விட்டொழி ! உடனே எழுந்துபோய் அந்த அல்வா துண்டைச் சாப்பிடு ! என்று கடுங்கோபத்துடன் கட்டளையிட்டார். கடவுள் சொல்வதை நாம் மீறுவது சரியாகுமா ? அதனால் நானும் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் அல்வாவைச் சாப்பிட்டுவிட்டேன் என்று சொன்னேன்

மற்ற இருவரும் திடுக்கிட்டுப் போய் பாத்திரத்தைத் திறக்க. . . உள்ளே அல்வாவைக் காணோம் அதை பார்த்து அழுக ஆரம்பிக்க அவர்களை சமாதானப்படுத்தி அவர்களுக்காக நான் பாம்பே ஹல்வா உடனடியாக செய்ய ஆரம்பித்தேன்

பாம்பே அல்வாவை காராச்சி அல்வா  என்றும் அழைப்பார்கள் அது  ஒன்றுமில்லை சோளமாவில் அதாவது கார்ன் ப்ள்வரில் செய்யப்படும் அல்வாதான் இது. அந்த அல்வா செய்ய தேவையானவற்றையும் செய்முறையையும் சொல்லுகிறேன் செய்து பாருங்கள்
தேவையானவை

    கார்ன் ப்ளவர் அதாவது சோளமாவு - 1 கப்
    சீனி- 2 1/2 கப்
    வாட்டர் - 4  கப்
   மிக்ஸட்  நட்ஸ் உலர்ந்த ப்ரூட் - 1 கப் 
 முந்திரி,பாதாம்,பிஸ்தா, பேரிச்சை, உலர்    திராட்சை
    ஏலக்காய் - 1
    நெய் - 1 கப்
    எலுமிச்சம் பழம் 1
    கலர் பவுடர்( ஆரஞ்சு)

செய்முறை
சோள மாவை 2 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

கனமான பாத்திரத்தில்   2 கப் தண்ணீர் விட்டு அதில் சீனி 2 1/2  கப் சேர்த்து பிசுக்கு பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.இந்த பதம் வரும் போது எலுமிச்ச சாரை சிறிதளவுவிடவும்

அதன் பின்  கரைத்த வைத்த மாவை ஊற்றி விடாமல் 20 நிமிடம் கிளறவும்.
முதலில் மாவு வெகும் போது சிறிது கட்டியாகுவது போலத் தெரியும்  ஆனால் அதன் பின் ஒரே சீராக வெந்து, பளபளப்பாகும்.

இந்த நிலை வரும் போது மிக்ஸட்  நட்ஸ் உலர்ந்த ப்ரூட் (சிறு துண்டுகளாக நறுக்கியது) சேர்த்துக் கிளறவும். இப்போது    நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக  சேர்த்து, கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். நன்றாக கெட்டிபதம் வந்ததும்     நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவிடவும்.      ஆறிய பின், துண்டுகளாகப் போட்டு, பரிமாறவும்.

இதை செய்வது மிக எளிது.. (ஏஞ்சல்) கை உடைந்து கட்டுப் போட்டவர்கள் சிறிது நாள் கழித்து செய்தால் அவர்கள் பிஸியோதிரபி செய்ய வேண்டியது இல்லை இதை செய்வதால் பணம் மிச்சமாகும்..

மாமி :ஏங்க எங்க அம்மாகிட்ட போனில் பேசும் போது

" கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டே இருக்கீங்க  ஏன்?"

மதுரைத்தமிழன் :"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.. அதுனாலதான்




அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. அல்வா நல்லாத்தான் கொடுக்குறீங்க...

    ReplyDelete
  2. ஹாஹாஆ :) கனவுதான் செம கலக்கல் .
    என்னது அல்வாவா //அளவாவா :)) நான் காப்பிலேயே சுகர் போட மாட்டேனே :)
    நல்லவேளை ஹல்வானதும் கோதுமையில் சொல்லப்போறீங்களோன்னு பயந்தேன் :)

    கார்ன் flour ஒன்னும் அலர்ஜிலாம் கொடுக்காதில்லை ?. இப்பெல்லாம் எதையும் புதுசா ட்ரை பண்ணவே பயமாயிருக்கு

    ReplyDelete
    Replies
    1. கனவு ஜோக் இணையத்தில் படித்தது அதை டிங்கரிங்க் பண்ணி இதில் சேர்த்து இருக்கிறேன் அவ்வளவுதான்

      ஹலோ உண்மையை சொல்லுங்க நீங்க காபியே போடுறதில்லைதானே.. உங்க கணவர்தானே உங்களுக்கு பெட் காபி போட்டு தருகிறார்

      அல்வாவை எந்த பொருளையும் கொண்டு செய்யலாம்..... நூற்றுக்கணக்கான அல்வா செய்யலாம் ஏன் பாவக்காய் கொண்டும் அல்வா செய்யலாம்

      எனக்கு பொண்ணுங்கனா அலர்ஜியே இல்லை

      Delete
  3. ஆனா எனக்கு தங்கமான மனசு :) நான் சாப்பிடாட்டியும் என் கணவருக்கு பிடிக்கும் என்பதால் நிச்சயம் செய்வேன் இந்த ரெசிபியை

    ReplyDelete
    Replies
    1. பார்த்து அவசரப்ப்டாமல் செய்யுங்கள் அல்லது கணவரை உதவிக்கு கூப்பிட்டு கொள்ளுங்கள் இல்லை என்றால் உங்கள் கையை உடைத்த பழி என் மீது வந்து விழும்

      Delete
  4. அல்வா எனக்கு ரொம்ப பிடிக்கும்ண்ணே. செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. இது ரொம்ப சிம்பிள் & பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்...செய்வதோடு நின்றுவிடாமல் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுங்கள்.....ஒரு உதவி பலவித உணவுவகைகளை முதில் முறையாக செய்தாலும் அது நன்றாக வந்துவிடுகிறது. ஆனால் அதிரசம் மட்டும் இன்னும் சரியாக வர மாட்டேங்கிறது...முடிந்தால் நீங்களோ அல்லது இதைபடிக்கும் யாராவதோ அதிரசம் செய்வது எப்படி என்பதை பதிவாக போடுங்கள்

      Delete
  5. தேவையானவைல எலுமிச்சை பழம் இருக்கு, ஆனா, அல்வா செய்முறைல எலுமிச்சை வரலியே! நடுவால எலுமிச்சை காணாம போயிட்டுதா?!

    ReplyDelete
    Replies
    1. எலுமிச்சம் பழம் நாம் செய்த அல்வாவை பார்த்து யாரும் திருஷ்டி போட்டுடக்கூடாதுன்னு அல்வா பக்கத்தில் வைக்கவேண்டும்ஹீஹீ ....எனிவே
      ஞாபகபடுத்தியற்கு நன்றி அதன் உபயோகத்தை பதிவில் இணைத்துவிட்டேன்

      Delete
  6. மதுரை தமிழன் புத்திசாலி என்பதை கனவு சொல்கிறது.

    ஹல்வா செய்முறை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  7. நன்றாக அல்வா கொடுத்தீர்கள் ஐ மீன் அல்வா செய்தீர்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.