உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, June 8, 2018

கந்த புராணமா காண்டம் புராணமா சிவக்குமாரின் மோட்டிவேசனல் ஸ்பீச்

AvargalUnmaigal
கந்த புராணமா காண்டம் புராணமா சிவக்குமாரின் மோட்டிவேசனல் ஸ்பீச்


ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கல்லூரியில்  நடிகர் சிவக்குமார் பேசிய பேச்சு இப்போது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி அவரை காரி துப்புக்கி கொண்டிருக்கின்றனர், அவரின் பேச்சை கேட்கும் போது அவர் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கை அப்படியே தகர்ந்து தலை குப்புற விழுந்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்

அப்படி அவர் என்ன பேசினார் என்று பார்ப்பதற்கு முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியது ஏன் இப்போது வைரலாக பரவி வருகிறது என்பதற்கு காரணம் என்ன வென்று பார்த்தால் அதுவும் வியக்கத்தான் வைக்கிறது.. கடந்த மாதம் எஸ்வி சேகர் ஊடக பெண் செய்தியாளர்களை பற்றிய அவதூறு தகவலுக்கு பின் அவர் மீதுவழக்கு தொடுத்து அவரை கைது செய்ய தேடிவருகிறார்கள் அப்படி அவரை போலீஸ் போலியாக தேடுவது போல நடித்து கொண்டிருக்கும் போது எஸ்வி சேகர் அவர் குடும்பத்தில் உள்ள அதிகார பதவியில் இருப்பவரின் அதிகாரத்தை பயன்படுத்தி கோர்ட்டில் தன்னை கைது செய்யவதற்கு தடை வாங்கி வைத்து இருந்தார். அந்த தடை உத்தரவும் காலவாதியாக போன பின்பு பொதுமக்களின் அழுத்ததிற்கு பயந்து இப்போது ஆளும் முதலமைச்சர் எடப்பாடி அவரை கைது செய்ய உத்தரவுவிட்டாலும் விடலாம் என்ற செய்தி கசிந்ததன் காரணமாக தான் மட்டும் இப்படி தவறாக பேசி வெளியில் உலா வரவில்லை எடப்பாடியின் சாதியை சார்ந்த கவுண்டரான நடிகர் சிவக்குமாரும் பெண்களை பற்றி அவதூறாக பேசி இருக்கிறார் என்ற வீடியோவை வைரலாக ப்ரவவிட்டு  உன் சாதிக்காரர் சிவக்குமாரை வெளியே விட்டு என்னை மட்டும் கைது செய்ய உத்தரவு இடுவாயா என்று எடப்பாடிக்கு செக் வைத்திருக்கிறார். இப்படி செக் வைக்க ப்ளான் போட்டது   தலைமை செயலாளர்தானாம்...

சரி எது எப்படியோ ஆனால் அப்படி என்ன சிவக்குமார் பேசிவிட்டார் என்று கேட்பவர்களுக்காக் அந்த வீடியோவை இங்கே உங்கள் பார்வைக்காக வைக்கிறேன். அந்த வீடியோ இப்போது யூட்டியூப் நிறுவனத்தால் இப்போது நீக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அந்த வீடியோ பலராலும் காப்பி செய்யப்பட்டு இருக்கிறதுஇளைய பெண் சமுகம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடங்கும் சிவக்குமாரின் இந்த  பேச்சு உணர்ச்சிகரமாக உள்ளத்தைத் தொட வேண்டும் என்ற எண்ணத்தில்   இளைய சமுதாயத்தை இழிவுபடுத்தும் ரீதியில்  இப்படி பேசுவது மிகவும்  கடுமையான கண்டனத்துக்குரியது.

நாட்டில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தை  மிகப் பிரமாண்டமாக  திரித்து  உங்களுடைய இந்த ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டு எந்த அளவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா? இப்படிச் பேசுவதற்கு உங்களுக்கு கொஞ்சம் கூட நா கூசவில்லையா? தமிழ்க் கலாச்சாரம், தமிழர் பண்பாடு என்று வீர வசனம் பேசும் நீங்களா இப்படி பேசுவது மிஸ்டர் சிவக்குமார்

மிஸ்டர் சிவக்குமார் இப்படியான நிகழ்வுகள் நடக்கவில்லை என்று நான் மறுக்கவில்லை அப்படி நடந்தது உண்மைதான் ஆனால் நீங்கள் சொல்வது போல ஐடி நிறுவனத்தின் கழிவறைக் குழாயை சுத்தம் செய்தபோது 2 டன் ஆணுறை கிடைத்தது என்பதுதான் தவறானது... உண்மையில் நடந்தது என்னவென்றால் ஐடி நிறுவனத்தின் கழிவு நீர் குழாய்கள் அடைப்பட்டு இருந்தது அதற்குகாக காரணத்தை கண்டறிந்த போது அது உபயோகப்படுத்திய காண்டத்தை யாரோ டாய்லெட்மூலம் போட்டதால் ஏற்பட்டு இருக்கிறது. அதை சுத்தம் செய்யும் போது அந்த காண்டங்களோடு அதனால் அடைபட்ட கழிவுகள் வேண்டுமானல் இரண்டு டன் இருந்திருக்கலாம் ஆனால் அதை நீங்கள் இரண்டு டன் காண்டம் என்று திரித்து சொல்வது உங்கள் மனத்திற்கு தவறாக படவில்லையா? அல்லது அது கூட புரியாமல்தான் நீங்கள் பேசி இருக்கிறீர்களா? ஒரு காண்டத்தின் எடை என்னவென்று உங்களுக்கு தெரியுமா இரண்டு டன் காண்டம் என்று சொல்லும் போது உங்கள் அறிவு வேலை செய்யவில்லையா? நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அந்த ஐடி ஆபிஸில் யாரும் வேலை செய்யாமல் 24 மணிநேரமும் காண்டத்தை உபயோகித்து செக்ஸ் மட்டும்தான் செய்து கொண்டு இருந்திருப்பார்கள் வேலை ஏதும் செய்து இருக்க முடியாதுஐடி துறையை விமர்சிக்கும் உங்களுக்கு சினிமாதுறையில் இதைவிட கேவலமாக நடக்கும் விஷ்யங்கள் தெரியாதா அப்படி தெரியாத அப்பாவியாக நீங்கள் இருந்தால் உங்கள் மருமகளிடம் பேசி பாருங்கள் அவர்கள் கதைகதையாக சொல்லுவார்கள் .எந்தத்துறையிலும் ஒரு சில தவறுகள்  நடந்து கொண்டுதான் இருக்கின்றன.,மிஸ்டர் சிவக்குமார் நீங்கள் இருந்த சினிமாத்துறையில் நடக்கும் தவறுகளை உங்களால் இப்படி பட்டவர்த்தனமாக பேச முடியுமா?நல்ல அறிவுள்ள மனிதனும்கூட சில தேவையற்ற பேச்சினால் அதனை இழக்கின்றான். அதற்கு சிவக்குமாரும் விலக்கு அல்ல கம்பராமாயணத்தை படித்த அவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறலை நன்கு படித்து இருந்தால் யாகவராயினும் நா காக்க என்ற குறள் அவருக்கு ஞாபகம் வந்து இருக்கும் அவரும் இப்படி பேசுவதில் இருந்து  காப்பாற்ற பட்டு இருப்பார்


என்ன இருந்தாலும் சினிமாக்காரன் சினிமாக்காரன்தான். அவனுக்குத் தெரிந்த சினிமாக் கம்பனிகளைப் போல IT கம்பனிகளையும் நினைத்துக் கொண்டான்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

@avargal unmaigal

சிவக்குமார் நீங்கள் தவ்றாக பேசியதற்கு இளைய சமுதாயத்திடம் மன்னிப்பு கேளுங்கள் அதுதான் பெரிய மனிதருக்கு அடையாளம். அப்படி நீங்கள் கேட்கவில்லை யென்றால் இந்த மனிதன் படிப்பத்து இராமயனம் ஆனால் இடிப்பது என்னவோ பெருமாள் கோயில் சென்று சொல்வதுபோல ஆகிவிடும் காலம் கடந்தாலும் மன்ன்னிப்பு கேட்பது தவறில்லை அதைவிட்டுவிட்டு  யூட்டியுப்பில் நீங்கள் பேசிய பேச்சை நீக்க மட்டும் முயற்சி செய்வது உங்கள் மீதான அழுக்கை துடைத்துவிடாது

6 comments :

 1. சரியான கேள்விதான் கேட்டு இருக்கின்றீர்கள் நண்பரே.

  சிவகுமார் தன்மையானவர். என்ற இமேஜ் உடைபட்டு விட்டதே...

  காணொளி காண்கிறேன்.

  ReplyDelete
 2. அந்தப் பேச்சை நானும் கேட்டேன். அப்போதே 2 டன் என்றபோது சற்றே உறுத்தியது. இப்போதுதான் முழு விவரத்தையும் அறியமுடிகிறது.

  ReplyDelete
 3. ஆம் இந்தக் காணொளியை நான் முன்பே பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்.ஆம் இந்தக் காணொளி அவர் முகத்தில் அவர் பூசிக்கொண்ட அசிங்கமே

  ReplyDelete
 4. சில நேரங்களில் சற்று கூடுதலாகக் அழுத்டம் கொடுக்கக் கூறலாம் லிடெரலாக எடுத்துக்கொள்ளலாமா அதுபோல்தான் இந்த இரண்டு டன் சமாச்சாரமுமென்று நினைக்கிறேன்

  ReplyDelete
 5. Like GMB sir pointed out, Two tonnes, that you can not take it literally. What it means is people have premarital sex casually and use condom. It is possible for girls to get pregnant because Condom does not protect 100%.

  Let me ask you this. What do they do if they get pregnant? Are they ready to be a single mom and deliver their "first baby"? Or they want to abort their first child? Do you have an answer for me??

  He is in his seventies and so he finds that wrong. I dont see anything wrong with that. He tells not to have sex with someone and marry another person. Marry the same guy you sleep with- even if you get pregnant it is ok then.

  What is wrong in his suggestion?

  I dont understand. I am not a fan of Sivakumar. But preaches something which he believed as right when he grew up. SV sekar was not arrested because it is his freedom of speech. Here, also it is freedom of speech.

  People form opinion based on how they brought up. Sivakumar talks like a sevey-year old man. He could live a successful life without getting involved in premarital sex. I AM DAMN sure that is possible even today.

  What are you trying to say, MT?

  ReplyDelete
 6. சிவக்குமாரா இப்படிப் பேசினார்
  வேதனையாக இருக்கிறது

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog