உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, May 9, 2018

டைம்ஸ் நவ் விவாதத்தில் அபிமன்யுவாக மாறிய பிரகாஷ் ராஜ்...

@avargalunmaigal
வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் அபிமன்யுவாக தெரிகிறார் பிரகாஷ் ராஜ்  ப்ரகாஷ் ராஜ் ,வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக   அட்டகாசமாக களம் ஆடிக் கொண்டிருக்கிறார் .  ஆனால் சினிமாவில் ஹிரோவாக நடித்து சூப்பர் ஸ்டார் உலக நாயகன என்று பெயர் எடுத்துவர்கள் எல்லாம் ஜீரோவாகி காமெடி பீஸாகி கொண்டிருக்கிறார்கள்... பாலச்சந்தரிடம் நடிக்க கற்றுக் கொண்டோம் என்று சொன்ன இவர்கள் அட்லீஸ்ட்  பிரகாஷ் ராஜ்விடம் அரசியல் கொஞ்சமாவது கற்று வந்திருக்கலாம்..எப்படி ஒரு காலத்தில் எல்லோரும் ஜெயலலிதாவை எதிர்க்காமல்  வாய் முடிக் கிடந்தார்களோ அது போலத்தான் இப்போது சர்வாதிகார மோடியை எதிர்த்து பேசாமல் வாய் மூடி கோழைகளாக இருக்கிறார்கள்..பிரச்சனைகளை கண்டும் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் மோடி?' என்று ட்வீட்  செய்து துவசம் செய்கிறார் ப்ரகாஷ் ராஜ்.  இதற்கு பதில் சொல்ல தைரியமில்லாத மோடி இதன் தொடர்ச்சியாக பாஜக பிரமுகர்கள் மூலம் இவரை டார்கெட் செய்து பேச ஆரம்பிக்க வைத்திருக்கிறார்... ஆனால் அதையும் அசராமல் திருப்பி அடிக்கிறார்   பிரகாஷ் ராஜ்May 4, 2018 டைம்ஸ் நவ் சேனல் நடத்திய ஹிந்துத்வா மீதான விவாதத்தில் சுப்ரணிமய சுவாமியுடன் நேருக்கு நேர்  விவாதத்தில் மிக் தைரியமாக அதே நேரத்தில் மிக அசல்ட்டாக எதிர்கொள்கிறார் பிரகாஷ் ராஜ். பாஜாகவின் ம்ற்றொரு ஜால்ராடிவியியான டைம்ஸ் நவ் டிவியின் நெறியாளர் ராகுல் ஸ்ரீவத்சவ், சுப்பிர மணிய சுவாமி ஓய்வு பெற்ற காவல்துறை உயர அதிகாரி கேள்விகளுக்கு நம்ம சூப்பார் ஸ்டார் சொன்ன மாதிரி அப்படியே எனக்கு தலை சுத்திடுச்சு என்று சொல்லாமல்  பிரகாஷ் ராஜ்அபிமன்யுவாக மாறி  அந்த விவாதத்தில்  ரௌத்ரமாக யுத்தம் செய்வது போல வாதம் செய்தார்.

@avargalunmaigal

ஒன்று நிச்சயம் எப்படி அபிமன்யுவை நேரில் நின்று போர் செய்து ஜெயிக்க முடியாது என்று பின்புறமாக தாக்கி ஜெயித்தார்களோ அப்படித்தான் இந்த மோடியும் அவர் ஆட்களும் இவரை பின் முதுகில் குத்தி விழச் செய்வார்கள்..... அப்படி ஒரு தோல்லிவியை பிரகாஷ் ராஜ் சந்திக்க நேர்ந்தால் அது மிக கெளரமான தோல்விதான்


இவரின் கேள்விகளுக்கு பதில் சொல்லத தெரியாத ஹார்வேட் பல்கலைகழகத்தில் படித்த சுப்பிரமனிய சாமி கூட பிரகாஷ் ராஜ்ஜை ஒரு வில்லனாக காட்ட முயற்சித்து தோற்றூதான் போனார்

ரஜினி கமல் மட்டுமல்ல நம் தமிழகத்தில் உள்ள எந்த தலைவர்களுக்கும் ஏன் எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினுக்கும் கூட பிரகாஷ் ராஜ் போல பேசவோ அல்லது எதிர்க்கவோ இயலவில்லை என்பதுதான் வெட்க கேடாக இருக்கிறது


ஹெட்ஸ் ஆப் டூ யூ மிஸ்டர் பிரகாஷ் ராஜ்..........அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. மடியில் கனமில்லாட்டி வழியில் பயமில்ல,ரஜினியெல்லா நல்லா சேத்து வச்சிருக்காரு அத காப்பாத்தனும், பத்தாததுக்கு வம்ப வெலக்குடுத்து வாங்குற குடும்பம், எதுலயாவது மாட்டிக்குவானுங்க அவனுங்களயும் காப்பாத்தனும், எவனயும் பகைச்சா என்ன பண்ணுவானுங்களோனு பயம்,அவர் ஒரு சூழ்நிலை கைதி

  ReplyDelete
 2. காணொளி பிறகு காண்பேன்.

  ReplyDelete
 3. கதாநாயகனாக "நடிப்பவனுக்கு" அவர் எப்பவுமே வில்லன் தான் சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும்..!!

  ReplyDelete
 4. ஓ! பிரகாஷ் ராஜும் அரசியலில் இறங்கிவிட்டாரா?

  கீதா

  ReplyDelete
 5. டைம்ஸ் நௌ காணொளியைப் பார்க்கும்போது நெறியாளராகவரும் ஸ்ரீ வத்சன் ஒரு பாஜக அனுதாபி என்று பேச்சில் தெரிகிறது

  ReplyDelete
 6. I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
  Nice One...
  For Tamil News Visit..
  https://www.maalaimalar.com/ | https://www.dailythanthi.com/

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog