Saturday, May 19, 2018

@avargalunmaigal
வெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக..


தேசமெங்கிலும் இருக்கும்  மோடி மற்றும் பாஜகவின் அபிமானிகள் பலரின் அதிருப்தியை சம்பாதித்த பெரும்பிழையை கர்நாடகத்தில் பாஜக செய்து இருக்கிறது


தன் சாம்ராஜ்யத்தை இந்தியா முழுவதும் விரிக்க அதிகார வெறி கொண்ட மோடி முயற்சித்தார். அந்த முயற்சியின் காரணமாக தென் இந்திய கோட்டையை பிடிக்க அதன் நுழைவு வாயிலான கர்நாடக்த்தில் களம் இறங்கினார். அதன் காரணமாக வெளிநாட்டிலே  தன் நேரத்தை செலவிடுவதையும் குறைத்தார் ஏன் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை படித்து பார்த்து அதன் படி செயல்பட கூட நேரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டிற்கே பதில் அளித்துவிட்டு கர்நாடகம் முழுவதும் தன் அதிகாரத்தை முழுவதும் பயன் படுத்தி சுழண்ரு வந்தார். இப்போது வீசுவது மோடி அலை அல்ல ,அது சுறாவளி என்றும் சொல்லி சுழன்றார். அவர் முயற்சியும் தோல்வி அடையவில்லை மற்ற கட்சிகளை விட அதிகம் இடம் பிடித்து வெற்றியும் அடைந்தார். ஆனால் அப்படி அடைந்த வெற்றி தான் நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு கிடைத்த வெற்றி அல்ல என்ற போது அதிகார வெறி அவர் கண்னை மறைத்தது என்றே சொல்ல வேண்டும். அதனால் அவர் எடுத்த முயற்சி யானைக்கும் அடி சருக்கும் என்று சொல்வது போல மோடிக்கும் சறுக்கும் என்பதை நிறுபித்துவிட்டது


தனது அதிகாரத்தை பயன்படுத்தி  கவர்னர் மூலம் அவசரப்பட்டு ஆட்சி அமைக்க  போன போது முதல் சருக்கல் அதனை தொடர்ந்து  எடியூராப்பா, பதவி தருகிறேன் என்று காங்கிரஸ் எம்.எல்,ஏ,யிடம் பேசிய டேப்பும் 100 கோடி நியுஸ் எல்லாம் மோடியின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பையும் அவரின் ஆதரவாளர்களிடம் இருந்தும் துடைத்து போட்டுவிட்டது, மோடியின்  ஆதரவாளர்களிடம் இருக்கும் ஒரு எண்ணம் கெளரவத்தோடும் மரியாதையோடும் சில நாட்கள் வெயிட் செய்திருந்தால், சில எம்.எல்,ஏக்கள் தாமாகவே வந்திருப்பார்கள்; பிஜேபியின் இமேஜ் பாதிக்கப்பட்டிருக்காது என்பதுதான்.

கடந்த பொது தேர்தலின் போது மோடி மட்டுமல்ல அவரின் கட்சியும்  ஒரு மத சார்பு கட்சியாக இருந்தாலும்  அது  காங்கிரஸ் போல  ஒரு மோசமான கட்சி அல்ல மோடி நிச்சயம் இந்தியாவை தலை நிமிர செய்வார் என்று பலரும் கருதினர் ( இதற்கு தென் மாநிலங்கள் விதிவிலக்கு ) அதனாலேயே ஆமோக வெற்றியும் பெற்றார்கள் ஆனால் இப்போது அவர்கள் செய்யும் செயல்களால் இவர்கள் காங்கிரஸுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல அவர்களோடு ஒப்பிடும் போது மிகவும் மோசம் என்று மக்கள் நினைத்து இருந்த வேளையில் பாஜக இந்த மாதிரியான கேவல செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கி தாங்கள்  கொஞ்சமாவது மரியாதைக்குட்பட்ட தேசிய கட்சி . நாங்கள் சரியான கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கத் தவற மாட்டோம் என்று நிரூபிக்கக் கிடைத்த மிக சிறந்த நல்ல வாய்ப்பைத் தவற விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களின் அதிகார ஆட்சி  வெறியும் அவசரமும் அவர்கள் கண்ணை மறைத்து விட்டன..!

சிறிது காலம் பொறுத்திருந்தாலாவது  நிச்சயம் காங்கிரஸ் & மஜதக்குள் உட்பூசல் ஏற்பட்டு, தானாகவே கட்சித்தாவல் நடந்திருக்கும்,பாஜகவின்  மரியாதை இந்த அளவிற்கு தேசிய அளவில் டேமேஜ் ஆகி இருக்காது. இனிமேல் பாஜக என்ன செய்தாலும் அது மேலும் பாஜகவிற்குதான் அவப்பெயரை சம்பாதித்து கொடுக்கும் 


உலக வரலாற்றை எடுத்து பார்த்தால் உலகத்தையே ஒரே குடை கீழ் வைத்து இருந்த பிரிட்டிஷ்காரகள் எங்கோ ஒரு இடத்தில் முதலில் சருக்க ஆரம்பிக்க அதன் பின் தொடர்ந்து அவர்கள் சருக்கி இப்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நமக்கு தெரியும் அது போல உலகில உள்ள மன்னர்கள் ஆகட்டும் அல்லது தலைவர்கள் ஆகட்டும் எல்லோரும் உச்சியை தொட்டபின் சில காலங்கள் கழித்து அவர்களுக்கு இறங்கு முகமாகவே இருந்து இருக்கிறது அது போலத்தான் மோடிக்கும் இது சருக்கும் நேரம் அதில் இருந்து அவர் மீண்டு சரித்திரத்தை மாற்றி எழுதுவாரா என்பது அவரின் அடுத்து வரும் செய்கைகளை பொருத்துதான் இருக்கிறது.


சின்ன பையன் மற்றும் பப்பு பப்பு என்று கேலி செய்யப்படும் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இந்த தேர்தலின் போது மிக முக்கியபாங்காற்றி மோடியை நன்றாக ஒட ஒடவிட்டு வேலை பார்க்க செய்து இருக்கிறார். தேர்தல்  முடிவு தெரிந்தவுடன் உடனே நிபந்தனையற்ற முழு ஆதரவு குமாரசாமிக்கு கொடுத்து மிக சிறப்பான முவ்வை செய்து ஸ்மார்ட்டாக செயல்பட்டு இருக்கிறார். இவரின் இந்த ஒரு முவினால் மோடி மற்றும் அமித்ஷாவின் சாணக்கிய தனத்திற்கு பலத்த அடி கிடைத்து உள்ளது.


ராகுல் காந்தி பாஜக மாதிரி தாங்கள் ஆட்சி அமைக்க பல கோடிகள் கொடுத்து ஆதரவு கேட்டு ஆட்சி அமைத்திருந்தாலும் அது எந்தநேரத்திலும் எளிதாக உடைந்து போக வாய்ப்புக்கள் உண்டு.. ஆனால் அப்படி செய்யாமல் இப்படி மூவ் செய்ததினால் தனது முக்கிய எதிரிக்கு நல்லா ஆப் அடித்து இருக்கிறார். ராகுல் காந்தி இப்படி செய்ததினால் மற்ற மாநிலக்கட்சிகளின் பார்வைகள் இவர் மீது படிந்து இருக்கிறது என்பதை பல அரசியல் விமர்சகர்களும் ஒத்துக் கொள்வார்கள்


மோடி இந்த தோல்வியில் இருந்து உடனடியாக பாடம் கற்று கொண்டு செயல்பட்டு இருக்கிறார். மோடியின் ஆட்சியில் நீதி துறை அவரின் பேச்சிற்கு ஏற்ப செயல்படும் பாஜக மன்றமாக மாறி இருக்கிறது... இதனால் நீதித்துறை மீது மக்கள்ளுக்கு இருந்த நம்பிக்கை அடியோடு போய்விட்டது. அதுமட்டடுமல்லாமல் அறிவிப்பு இல்லாத எம்ர்ஜென்சியாகவே கருத தொடங்கி இருக்கின்றனர்... இப்படி இந்திய மக்கள் கவலைப்படுவதை பற்றி மோடிக்கும் கவலையில்லை... ஆனால் அவர் கவலைபடுவதெல்லாம் உலக நாடுகளின் எண்ணங்களை பற்றிதான் பல உலக நாடுகளின் தலைவர்களின் மனதில் மோடி ஜனநாயகத்தை தூக்கி மிதித்துவிட்டு  சர்வாதிகாரியாக மாறி வருகிறார் என்று நினைப்பு முளைக்க தொடங்கி இருக்கிறது.. எப்போதும் உலகத்தின் மற்ற நாட்டு தலைவர்கள் அவர்கள் நாட்டை மட்டுமல்ல மற்ற நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் அறிந்து அதற்கேற்ப மூவ் செய்து கொண்டிருப்பார்கள் அதற்காக அவர்களுக்கு அவர்கள் நாட்டை சேர்ந்த உளவுத்துறைகள் உண்மையான தகவல்களை தேடி தந்து கொண்டடே இருக்கும் அப்படி அவர்கள் தரும் இந்தியாவை பற்றி தகவல்கள் மிக நல்லபடியாக இல்லை என்ப்துதான் இங்கே கவனிக்க தக்கது, இதனால் இந்தியாவிற்கு வரும் அன்னிய முதலீடுகள் பாதிக்க்ப்படும் காரணம் சர்வாதிகார நாட்டில் முதலிடு செய்வது பாதுக்காப்பானது அல்ல மேலும் புரட்சிகள் கலவரம் வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தால் பிஸினஸ்கள் பாதிக்கப்படும் இதை அறியாதவர்கள் முதலாளிகளே அல்ல...


நிலமை இப்படி இருக்க நீதி துறையின் மீது இருக்கும் அவமதிப்பை நீக்குவதற்காக அவர் எடுத்த ஒரு முடிவுதான் இந்த கர்நாடக தேர்தலில் நீதிமன்றம் எடுத்த முடிவு.. மோடி நினத்து இருந்தால் நீதி மன்றத்தை தனக்கு சாதகமாக நடக்கும்படி செய்து இருக்க முடியும் ஆனால் அப்படி செய்யாமல் அதன் சுதந்திரத்தில் தலையிடாமல் செயல்பட்டது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். க்ர்நாடக தேர்தல் முடிவுகள் வர ஆர்ம்பித்ததுமே அவருக்கு நிலமை தெரிந்துவிட்டது அதனால்தான் அவர் அமைதிகாத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து இப்படி செய்து இருக்கிறார், அது தெரியாமல் லோக்கல் தலைவர்கள் அவர்கள் பாட்டுக்கு ஆட்டம் போட இவர் தன் வழியில் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் எனலாம்..


இவர் ஆட்டத்தின் விளைவாக நீதிமன்றமே நல்லவன் போல நாடகமாடி மக்களின் மனதில் நல்லெண்னத்தை விளைவித்து இருக்கிறது. அதனால்தான் இப்போது மக்கள் நீதி இன்னும் சாகவில்லை என்று சந்தோஷத்தில் ஆர்பரித்து கொண்டிருக்கிறார்கள்..


அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

  1. மோடியை மக்கள் புரிந்து கொண்டார்கள்.
    மோடிதான் மக்களை புரிந்து கொள்ளவில்லை.

    ReplyDelete
  2. தன் முகத்தில் கரி பூசப்படுவதிலிருந்து மிக சாதுரியமாக உச்ச நீதிமன்றம் தப்பிவிட்டது என்பதே உண்மை நண்பரே...சரியான பதிவு

    ReplyDelete
  3. பொறுமையுடன் காத்திருங்கள் காலம் நல்ல பதிலைத்தரும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.