Tuesday, April 3, 2018

@avargalunmaigal
போலீசார் இளைஞர்கள் உரசல் விவகாரங்கள்.


 சென்னை தி.நகரில் கம்பத்தோடு சேர்த்து வைத்து இளைஞர் ஒருவரைப் போக்குவரத்து போலீஸார் தாக்கும் வீடியோ அனைவரையும் பதற வைக்கிறது. இந்தச் சம்பவத்தில் நடந்தது என்ன என்ற முழு வீடியோ வெளியாகியுள்ளது.  முழு வீடியோ காண இங்கே க்ளிக்   செய்யவும்

சென்னை தி.நகருக்கு அம்மாவையும் சகோதரியையும்  அழைத்துக்கொண்டு டூவீலரில் வந்த பிரகாஷ் என்ற இளைஞரை போக்குவரத்து போலீஸார் கம்பத்தோடு சேர்த்து வைத்து  தாக்குகினாகள். காரணம் ஹெல்மேட் இல்லாமல் வந்ததுமட்டுமில்லாமல் மூன்று பேர் அதில் வந்ததும்தான்

இளைஞரும் அவர் குடும்பமும் செய்தது தவறுதான் ஆனால் அதே நேரத்தில் பாதுகாவலர்கள் செய்வதும் தவறுதான். தவறு செய்தவனை சட்டப்படி பிடிப்பதுமட்டுமே அவர்கள் வேலை தண்டிப்பது அல்ல

பைக்கில் மூன்று பேர் செல்வது தவறு என்றால் அது போல பஸ்ஸில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேல் ஏற்றி செல்வதும் தவறுதானே அதற்கு யாரை குற்றம் சொல்லாம் தேவையான் அளவு பஸ்சை விடாத அரசங்கத்தையா அல்லது அதிகமான அளவு ஏற்றி சென்ற பஸ் டிரைவரையா அல்லது அதில் தொங்கி கொண்டு பயணம் செய்பவர்களையா? அல்லது அதை கண்டும் காணாத மாதிரி இருக்கும் காவலர்களையா?


இது பற்றிய செய்திகள் பார்க்கும் போது என் கண்ணில் பட்ட பதிவு இது அதை படித்து புரிந்து கொள்ளுங்கள்



 பதிவை எழுதியவர் ஏழுமலை வெங்கடேசன்  அவ்ரகளுக்கு நன்றி



போலீசார் இளைஞர்கள் உரசல் விவகாரங்கள்.
இரண்டு முக்கியமான அம்சங்கள் சொல்லத்தோணுது..

ஒன்று அண்மைக்காலமாக இளைஞர்களை இஷ்டத்திற்கும் ஹீரோவாக ஏற்றிவிடும் போக்கு.

என்ன வேணும்னாலும் செய் மச்சி..,
நீ எவ்ளோ பெரிய ஆளா இருந்தா எனக்கென்ன..
நாங்கள்லாம் யாருன்னு தெரியுமில்ல..

சட்டத்தின் பின் விளைவுகளை பற்றி தெரியாமல் உதார்விட்டு பிறகு மாட்டிக்கொண்டு அழுவது. பாதிக்கப்படுவது..

ரயில்ல கத்தியோட சுத்தறது. போலீஸ் பேரி காடை டூ வீலர்ல இழுத்துகிட்டுபோறதெல்லாம் மேற்படி ரகமே

ஒருத்தனை அடித்துவிட்டேன் என்று ஒரு வீரமாக மற்றவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம். அந்த தாக்குதல் தொடர்பாக கைதானால் என்ன நடக்கும்?

போலீஸ் ஸ்டேஷன் பூஜையில் ஆரம்பிக்கும். பின்னாடி ரிமாண்ட்ல ஜெயிலுக்கு போகணும். அங்கி ருக்கும் மற்ற கைதிகள் புது அடிமை சிக்கிட்டாண்டா என்று கண்டமேனிக்கு எடுபிடியாக்கி வேடிக்கை பார்ப்பார்கள்..கக்கூஸ் போய் வருவதற்குள்.. அது ஒருத்தனின் மூக்கு, கண்களின் பலத்தை பொறுத்தது.

பழகிப்போகும்வரை தூக்கமே வராது..டெய்லி ஜாமின் பத்துன தகவல் வராதான்னு ஏங்கி ஏங்கியே சாக வேண்டியதுதான்..

வெளியே ஜாமின் வாங்க குடும்பமே பணத்தை பொறட்டி செலவு பண்ணிகிட்டு நாயா அலையும். எப்படியோ வெளியே வந்துட்டாலும் டெம்பரரி நிம்மதிதான்.

சில வருஷம் கழிச்சி சார்ஜ் ஷீட் போட்ட பிறகு கோர்ட்ல இருந்து சம்மன் வரும். அப்போதைக்கு எங்கே என்ன வேலை பார்த்துகிட்டு இருந்தாலும் ஓடிப்போயி கூண்டுல நிக்கணும். வருஷ்க்கணக்கா கேஸ் நடக்கும். அப்பப்போ பணம், வக்கீல் பீசா கரையும். எல்லாத்தையும் விட நிம்மதியா ஜோலி பாக்கமுடியாது.

சென்னையில வீட்டை வெச்சிகிட்டு குற்றாலத்துக்கு குளிக்கப்போய் தகராறு பண்ணி வெட்டு குத்தாகி மாட்டிகிட்டு பின்னாடி திருநெல்வேலி கோர்ட்டுக்கும் மெட்ராஸ் வீட்டுக்கும் அலையற கோஷ்ட்டிகளை கேட்டுப்பாருங்க, வாய்விட்டு கதறுவானுங்க.

தீர்ப்புல ஜெயில் தண்டனை கிடைச்சா அப்பீலுக்கு ஓடணும்..

நாம டெய்லி பேப்பர்ல அசால்ட்டா கைதுன்னு படிக்கிற கிரைம் மேட்டர்க்கு பின்னாடி ஒவ்வொருத்தன் கதையும் இப்படித்தான் போகும்..

இப்போதைய தமிழ் சினிமாக்களில் ஹீரோவை பில்டப் கொடுத்து ஏத்திவிடும் ஒவ்வொரு காட்சியும் எந்த வகையில் சட்டமீறல், எத்தனை வருடம் ஜெயில் கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டே போகலாம்

இரண்டாவது விவகாரம், காவல்துறை. பொதுமக்க ளையும், சட்ட மீறல் நபர்களையும் கையாளும்போது காட்டும் வெறித்தனமான வெளிப்பாடு.

யாராக இருந்தாலும் வாடா போடா.. நான் நெனச்சா உன் மேல என்ன கேஸ் வேணும்னாலும் போட்டு உள்ள தள்ள முடியும்ன்ற திமிர்த்தனம்.

சரி, ஒருத்தனை அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளே தள்ளிட்டு அப்படியென்ன வாழ்க்கையில் சாதிக்கப் போறோம் என்ற யோசனையோ, மனசாட்சியுடன் உறவாடும் பழக்கமோ கிடையாது.

குற்றத்திற்குண்டான சட்ட தண்டனைக்கு அப்பாற் பட்டு கொடுமைப்படுத்துவது அல்லது குற்றமே செய்யாத ஒருவனை சட்ட சிக்கலில் மாட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது போன்றவை பெரும்பாலும் சம்மந்தப்பட்டவர்களை சீற்றம் கொள்ளவே செய்யும்..

கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் சாதாரண இரண்டு இளைஞர்கள் போலீசாரின் ஏடாகூடா ட்ரீட்மெண்ட்டால், ஒரு டிஐஜியின் குடும்பத்தையே கூண்டோடு போட்டுத்தள்ளுவார்கள்.

சொல்லிக்கிட்டே இருந்தா போய்கிட்டே இருக்கும்

பதிவை பேஸ்புக்கில் எழுதி பதிந்தவர் ஏழுமலை வெங்கடேசன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. தவறு இருவர்மேலயும்தான்.அந்த பையன் செஞ்சது தப்பு. அதை ஒப்புக்கிட்டு இருக்கனும். அதைவிட்டு வாட்ஸ் அப், விடியோன்ன்னு போனதால போலீசார் காண்டாகி அடிச்சிருக்காங்க.

    ReplyDelete
  2. வெட்கமில்லை இங்கு யாருக்கும் எதிலும் வெட்கமில்லை

    ReplyDelete
  3. போலீஸ் செய்வது தவறு தான் ஆனால் பொதுமக்கள் கொஞ்சம் கூட ரூல்ஸைக் கடைபிடிக்காமல் இருப்பதும் தவறுதானே. நாட்டுப்பற்று என்பது மேடைகளில் முழங்குவது மட்டுமா என்ன? அடிப்படை விதிமுறைகளைப் பின்பற்றுவதும்தானே. இல்லையா? அதுவும் சென்னை போன்ற ட்ராஃபிக் ஊர்களில் மூன்றுபேர், ஹெல்மெட் இல்லாமல் என்பது தவறி ஒரு பெண் கீழே விழுந்தாலும் பேராபத்து இல்லையா...சுதந்திரம் என்பது மக்களால் சரியாகப் புரிந்து கொள்ளபடாததால் வருவதே இவை...இதில் போலீஸாரும் அடக்கம். எல்லோருமேஎல்லாவற்றையும் உரிமை, சுதந்திரம் என்று பேசுவதால்...நம் நாட்டில் இதற்கானவை சரியாகப் புலப்படுத்தப்படவில்லை என்ஃபோர்ஸ்மென்டும் இல்லை...

    இருவரின் கருத்தும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.