Thursday, March 15, 2018

@avargal unmaigal
திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி செய்தது சரியா?



/திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி .தனக்கு கற்று கொடுத்த கரூர் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்த காட்சி./


இந்த ஆட்சியாளர்    தன்னை வளர்த்துவிட்ட ஆசிரியர்களுக்கு மரியாதை இப்படி செலுத்துவது  சரியென்றால் ஜெயலலிதா காலில் விழுந்த பன்னீர் செல்வமும் மற்றைய அடிமைகளும் செய்தது சரிதான். காரணம் இந்த ஆட்சியாள உயர் நிலைக்கு வந்தற்கு எப்படி ஆசிரியர்கள் காரணமோ அப்படித்தானே இந்த பன்னீர் செல்வமும் பிற அடிமைகளும் இந்த சமுகத்தில் பெரிய ஆளாக வந்ததற்கு ஜெயலலிதான் காரணம்

ஜெயலலிதாவின் காலில் விழுந்தவர்களை பன்னிகள் என்று திட்டிய சமுகம்  அதை பணிவு என்று ஏன் சொல்லவில்லை.தன்னை வளர்த்தவரின் காலில் பண்பாட்டுபடிதானே விழுந்தார்கள். அயோக்கியர்களே பண்பாகத்தானே பொதுவிடத்தில் நடக்கிறார்கள் அங்கே மட்டும் நாம் ஏன் பண்பாட்டை பார்க்கவில்லை கலாச்சாரத்தை பார்க்கவில்லை, அதுமட்டுமல்ல அவர்களைதானே ஆட்சியாளாரக தேர்ந்தெடுத்து அழகு பார்க்கிறோம் சகாயம மற்றும் இந்த கந்தசாமியைவா ஆட்சியில் அமர்த்தப் போகிறோம்


இந்த திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி மிக நல்லவர் நல்ல காரியங்கள் பல செய்து வருகின்றார் என்றும் அறிந்து கொண்டேன், அவர் நல்லவர் எனப்தில் எனக்கு துளிக் கூட மாற்று கருத்து இல்லை ஆனால் இப்படி விழுந்து வணங்கியது எனக்கு சரியாக படவில்லை.

உண்மையில் அவர் அந்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்ய நினைத்தால் அவர் அலுவலகத்திலே அவரது மேஜையிலே அந்த ஆசிரியர்களின் படத்தை வைத்து நான் உயர காரணமாக இருந்தவர்கள் அவர்களுக்கு என்றென்ரும் எனது நன்றிகள் என எழுதி வைத்திருக்கலாம் அல்லது அவரின் அலுவலகத்திற்கு வெளியே இப்படி எழுதி மிகப் பெரிய புகைப்படத்தை வைத்திருக்கலாம்தானே அல்லது எங்கெங்கு அவருக்கு பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு எல்லாம் முதலில் வணக்கம் சொல்லிவிட்டு இந்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்து நன்றி சொல்லிவிட்டு அதன் பின் பேச்சை ஆரம்பிக்கலாமே அதுதானே சிறப்பு. அல்லது தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களை வீட்டில் பார்த்தால் வணங்கலாமே.


ஆனால் பொது இடத்தில் இப்படி மிக உயர்ந்த பதவியில் இருப்பது கொஞ்சம் கூட சரியில்லை

என்னைப் பொறுத்தவரை பெற்றோர்கள் காலில் விழுவதையே தவறு என்று நினைப்பவன் அதனால் எனக்கு இது மிக தவறாகப்படுகிறது..


இப்படி நான் சொல்லும் போது  இது நமது கலாச்சாரம் பண்பாடு என்று யாரும் கம்பு சுற்ற வேண்டாம்... அப்படி கலாச்சாரம் பண்பாடு அதை காப்பாற்றுகிறோம் என்று சொன்னால் இந்த ஆட்சியாளர் இந்த கல்வி நிறுவன கூட்டத்திற்கு நம் கலாச்சாரம் பண்பாட்டுபடி அதை காக்க வேட்டி அல்லவா கட்டி வந்திருக்க வேண்டும் அப்படியே ஓருவரை வணங்குவது என்றால் முதலில் காலில் அணிந்து இருக்கும் ஷு வையும் அல்லவா கலட்டி இருக்க வேண்டும்

இப்படி நான் சொன்னவுடன் ஆட்சியாளர் என்றால் அவர் பேண்ட் சர்ட் ஷூதான் போட்டு வரவேண்டும் இப்படி எல்லாம் வேஷ்டி கட்டி வரக் கூடாது என்றும் சொல்ல வேண்டாம் சட்டத்தில் அப்படி எங்கும் இப்படித்தான் டிரெஸ்கோட் உள்ளது என்று பொய் சொல்ல வேண்டாம் அப்படி இருந்தால் பெண் ஆட்சியாளர்கள் எப்படி சேலையிலும் சுரிதாரிலும் வர முடியும்..

இந்த ஆட்சியாளர் காலில் விழுந்த போட்டோவை பலரும் ஷேர் செய்து இப்படி கருத்தையும் சொல்லி இருக்கிறார்கள்( இதில் சிவப்பு கலரில் இருப்பது என் கருத்து )

//கற்றுக் கொடுத்தவர்களைக் கடவுளாக மதிக்கத்தெரிந்ததால் தான் இந்த உயர்வு.. வணங்குகிறேன்.//
(இப்படி வணங்காமலே பலர் வாழ்க்கையில் மிக நேர்மையாக உயர்ந்தும் மிக மிக நல்ல மனிதர்களாக இருக்கிறார்களே... ஆசிரியர்களை கடவுளாக்கி அவர்கள் முன்னால் சில்லரை காசுக்களை தூக்கி எறிய வேண்டாம். அவர்களை சக மனிதர்களாக மதித்தாலே அதுவே மிக நல்லது உண்மையாவே சொல்லுங்கள் எத்தனை பேர் உண்மையிலே உங்கள் ஆசிரியர்களை மதித்து இருக்கிறீர்கள் அப்படி மதித்தவர்களில் யாரவது அந்த ஆசிரியர்களை தங்கள் வீட்டு விஷேசங்களுக்கு அழைத்து மரியாதை செய்து இருக்கிறீர்களா அல்லது உங்கள் பேஸ்புக்கிலாவது ஒரு படம் போட்டு நான் மதிக்கும் மனிதர் இவர் என்று ஒரு வரி செய்தியாவது போட்டு இருக்கிறீர்களா என்ன? யோசியுங்க)

//உயர்வு வரும்போது பணிவும் ஒருங்கே வருவது ஒருசிலருக்குத்தான்.. ஆட்சியர் இன்னும் பல உயரங்கள் அடைய வாழ்த்துக்கள்//

பணிவான ஒருவர் உயர்வு அடைவதுதான் சிறப்பு. அதனைத்தான் நாம் ஊக்கப்படுத்த வேண்டும் அப்படி உயர்வாக வருபவர் என்றும் பணிவாக இருப்பார். (அதற்காக காலில் விழுவதுமட்டும்தான் பணிவு என்று நினைக்க வேண்டாம் இது எப்படி எனக்கு இருக்கிறது என்றால் மிக வசதியான பெண்மணி கழுத்தில் நகைகள் அணியாமல் சாதாரண சேலை அணிந்து வந்தால் எல்லோரும் உடனே  கண்ணை மூடிக் கொண்டு ஆஹா ஒகோ என்று பாராட்டுவதும் அதே மாதிரி சாதாரண குடும்பத்தில் ஓருவர் வந்தால் இகழ்வதும் மாதிரி இருக்கிறது)

 //குருவே சரணம்! மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக.வாழ்க பெருந்தன்மை கொண்ட மனம்.நெகிழ வைத்த காட்சி , இனி இது போன்ற நிகழ்வுகளால் எதிர்காலம் ஆசிரியர், மாணவ உறவுகள் மேன்மையடையும்.//

இது முன்னுதாரணம் அல்ல மோசமான உதாரணம்.. முன்னுதாரணம் என்பது தவறு செய்பவர்களை அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் துணிச்சலாக எதிர்ப்பதுதான் உதாரணம். சகாயத்தை பாருங்கள் அவர்தான் முன்னுதாரணம்

//உன்னதமான தருணம் . இதில் அனைவருக்கும் மரியாதை செலுத்தி தனக்கும் , தன்னுடைய பதவிக்கும் கௌரவத்தை சேர்த்துவிட்டார் ,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்//

தன் பதவிக்கு இழுக்கைதான் சேர்த்து இருக்கிறார்.


//ஆசிரியரிடம் இனி அவருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இவர் அரசியல்வாதியில்லை இதை வைத்து நல்ல பெயர் எடுத்து ஓட்டு வேட்டையாட. போலித்தனமில்லாத மரியாதை மிக அழகானது. தாழ்வதால் உயரும் தருணம் இது.//

பணிவது வேறு தாழ்வது வேறு பணிந்து போகலாமே தவிர யாரும் யாருக்கும் தாழ்ந்து போகக் கூடாது. எதிர்பார்ப்பு இல்லாத மனிதரே இல்லை



அன்புடன்
மதுரைத்தமிழன்

Photo Courtesy :Anbalagan Geetha
டிஸ்கி : உயர்திரு. கந்தசாமி அவர்களே நீங்கள் விழுந்து வணங்கியது என் மனதில் தவறாக பட்டதால் என் மனதில்பட்டதை சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதான் உங்களை குறை கூறும் எண்ணம் ஏதுமில்லை . மேலும் நல்ல பதவி உயர்வு பெற்று வாழ வாழ்த்துக்கள். ஒருவேளை என் பதிவு உங்கள் கண்ணில்பட்டால் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்ய நினைத்தால் உங்கள் அலுவலகத்திலே உங்களது  மேஜையிலே அந்த ஆசிரியர்களின் படத்தை வைத்து நான் உயர காரணமாக இருந்தவர்கள் அவர்களுக்கு என்றென்றும் எனது நன்றிகள் என எழுதி வையுங்கள். இது எனது வேண்டுகோள்... இப்படி செய்வீங்க என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

8 comments:

  1. தங்கள் கேள்வி நியாயமானது தான் என்றாலும், தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியரின் காலில் விழுவது எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி விழுவது, ஆனால் இந்த அரசியல்வாதிகள் காலில் விழுவதோ ஒவ்வொரு நொடிக்கும் ஒரு எதிர்பார்ப்பும், நயவஞ்சகமும் கொண்ட பணிவு.
    - பார்கவ் கேசவன் (கருத்துக்களம்)

    ReplyDelete
  2. உங்கள் விளக்கங்கள் அனைத்தும் சரியே நண்பரே...

    அதேநேரம் இதை குரு வணக்கம் என்று மட்டுமே பார்ப்போம் இப்படி செய்ய வேண்டுமென்ற அவசியமில்லாதவர் இப்படி செய்யவும் மனம் வேண்டும்.

    மேலும் இப்படி விளம்பரமாவோம் மதுரைத் தமிழரின் பதிவில்கூட வருவோமென்று நினைத்திருக்கலாம்.

    ஜனதிபதி அப்துல் கலாம் நிர்வாணச் சாமியாரை வணங்கி காலடியில் அமர்ந்தாரே... அதை விடவா குற்றம் ?

    ஜெ... உயிரோடு இருக்கும்போது அ.தி.மு.க.வில் இருந்த ஒருகோடி பேர் மட்டுமல்ல... மேலே சொன்ன பன்றிகள்வரை உலுத்த ஜென்மங்கள்தானே...

    ReplyDelete
  3. வணங்கியதில் தவறில்லை. அதை விளம்பரம் போலச் செய்வதுதான் உறுத்தி இருக்கிறது. ஒருவேளை நமது இந்த செயல் மாணவர்களுக்கு மனதில் அவரவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதையை உண்டாக்கலாம் என்று நினைத்திருக்கலாம் அவர்.

    ReplyDelete
  4. உங்கள் பதிவு சரிதான் நியாயமானதுதான் ஆனாலும் பரவாயில்லை சகோ..ஆனால் தான் உயர்னிலையில் இருக்கிறோம் என்றும் எண்ணாமல் (நார்மலாக அரசு அதிகாரிகள் செய்வது உங்களுக்குத் தெரியும்தானே!) பப்ளிக்காக ஆசிரியர்களை வணங்குவது நாம்மற்றொரு கோணத்திலும் பார்க்கலாம்தான்...ஒரு முன்மாதிரியாக....கலாமை நாம் உதாரணமாகச் சொல்வதில்லையா அது போல இவர் ஒர் உதாரணமாகலாம் இல்லையா...

    கீதா

    ReplyDelete
  5. ஜெயலலிதாவை வணங்குவதும் தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவரை வணங்குவதையும் ஒப்பிடுவது சரியன்றூ. Jeyalalitha did not teach them anything worthy. அதில் போலித்தன்மை மேலும் சுயநலம் உண்டு. கடவுள வணங்குவதும் அவரவர் சுயநலத்த்துக்கே!

    ஒரு சிலர் தன் ஆசிரியரைப் பார்க்கும்போது தான் சிறூமியராய் இருக்கும்போது எப்படி அவரைப் பார்த்தார்களோ அந்நிலைக்கு செல்வதுண்டு. அதேபோல்தான் இவர் உணர்ந்து இருக்கலாம். இதெல்லாம் தனிப்பட்ட ஒருவரின் உணர்வு, அதை எடைபோட உங்களூக்கோ எனக்கோ தகுதி கிடையாது. சாதாரண கல்லை கடவுள் என்றூ கற்பனை செய்து விழுந்து விழுந்து வணங்கும் ஆத்திகர்கள் கோடி. அதையெல்லாம் உங்களால் விமர்சிக்க முடியாது. ஏனென்றால் நீங்களூம் அவ்வகை.

    This guy is real and he did teach him. There is no imagination here- like you pray your "non-existing" God, whom I would say "unreal"!

    This is not fake. I think he truly expresses his feelings. This is what makes him feel good. There is nothing wrong in it, imho.

    ReplyDelete
  6. Replies
    1. இந்த பின்னுட்டத்தை தவிர வேறு எந்த பின்னுட்டமும் வரவில்லை ஸ்பேமிலும் செக் செய்துவிட்டேன் முரளி

      Delete
  7. காலில் விழுவதுதான் பணிவு என்கின்ற கருத்து தவறானது என்பதில் நானும் உங்களுடன் உடன்படுகிறேன். அதை பலர் முன்னிலையில் செய்வது சுய விளம்பரமின்றி வேறு எவ்வகையில் கருதப்படல் வேண்டும் என்று ஒருவருமே எழுதவில்லையே!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.