Friday, March 30, 2018

எச்சில் எலும்பு துண்டுகளுக்காக மோடியை எதிர்பார்க்கும் தமிழக தலைவர்கள் இருக்கும் வரை

கொஞ்சமாவது மக்கள் நலனுக்காக செயல்படும் தலைவரை பார்த்தவர்கள் இப்போதுதான் முதல் முறையாக பார்க்க்கிறார்கள் முற்றிலும் தன் சுயநலத்துக்காக செயல்படும் தலைவரை

காவிரிப் பிரச்சனை தமிழக மக்களுக்கு வாழ்வாதார பிரச்சனையாக இருக்கலாம் ஆனால் இது மோடிக்கு கெளரவப் பிரச்சனை...அதாவாது வரும் கர்னாடாக மாநிலத்தில் கணிசமான சீட்டுக்கள் வாங்கிவிடனும் இல்லையென்றால் அது அவரின் எதிர்கால அரசியலுக்கு ஆபுத்து இதை அவர் நன்கு உணர்ந்தே இருக்கிறார். இப்போதைய கர்நாடக கள நிலவரப்படி காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றுதான் தகவல்கள் வருகின்றன இதை அறியாதவரா மோடி அதனால்தான் அங்கு தோற்றாலும் பரவாயீல்லை ஆனால் முன்பைவிட சற்று அதிக சீட்டுக்களை பெற்றுவிட வேண்டும் என நினைத்து செயல்படுகிறார். இப்படி ஒரு சூழ்னிலை அங்கு இருக்கும் சமயத்தில் சட்டத்தை மதித்து வாரியம் அமைத்தால் அதை அங்குள்ள மாநில காங்கிரஸ் தங்களுக்கு சாதகமக பயன்படுத்திக் கொள்ளும் அதனால்தான் சட்டத்தை நிறைவேற்ற தாமதிக்கிறார். அதுமட்டுமல்ல அவர் என்னதான் தமிழக மக்களுக்கு நல்லது செய்தாலும் இங்குள்ள தமிழக மக்கள் அவருக்கு ஆமோக ஆதரவு அளிக்கமாட்டார்கள் என்பது அறியாதவர் அல்ல அதனால் கர்நாடகவிற்கு ஆதரவு தந்தாதாலாவது சில் சீட்டுக்கள் அதிகம் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால் தேர்தலுக்கு அப்புறம் தமிழகத்திற்கு சாதகமாக மாற்றலாம் என்று நினைத்து இருப்பார்.

அதுமட்டுமல்ல தமிழக தலைவர்கள் அவர்கள் எந்தக்கட்சியாக இருந்தாலும் எலும்பு துண்டுக்கு எதிர்பார்த்து இருக்கும் நாய்கள்தான் என்று அறிந்திருக்கிறார் அதனால் தமிழகத்தில் அவ்ரால் நேரடியாக ஆட்சியை பிடிக்க முடியாது என்றாலும்

நாலு எலும்பு துண்டுகளை தூக்கி போட்டால் இங்குள்ள தலைவர்கள் வாலாட்டிக் கொண்டு தனக்கு ஆதரவு தருவார்கள் என்பதையும் அவர் நன்கு தெரிந்து வைத்து இருக்கிறார் இவ்வளவுதானய்ய விஷயம்..

அதனால் தமிழகத்தில் இருக்கும் பக்தால்ஸும் சரி பாஜக அபிமானிகளும் சரி கவலை இல்லாமல் ராம் ராஜ்யம் அமைப்பதை பற்றி தொடரந்து  பேசிக் கொண்டு வாருங்கள்

ஜெய்ஹிந்த்


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. இந்தளவுக்கு மோசமான ஆட்சியை இதுவரை எந்த முதலமைச்சரும். அவரது அமைச்சரவை சகாக்களும் கொடுத்திருக்க மாட்டாங்கன்னுதான் நினைக்குறேன். ஊடகத்தாலும், மக்களாலும் வெறுப்போடு பார்க்கும் கருணாநிதி ஐயாக்கூட இப்படிப்பட்ட கேடுக்கெட்ட ஆட்சியை கொடுத்ததில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.