Thursday, February 22, 2018

@avargalUnmaigal #avargalUnmaigal #ikamalhaasan
தமிழகத்திற்கு புதிய கட்சிகள் தேவையா?


தமிழகத்தில் ஏகப்பட்ட கட்சிகள் இருக்கும் போது இன்னொரு புதுக்கட்சி தேவையா என்றால் ஆம் தேவைதான் என்பேன்.காரணம் அத்தனை கட்சிகள் இருந்தும்  கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வளர்ச்சி என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது . இன்றைய தினத்தில் திமுகவைவிட்டால் வேறு எந்த கட்சியும் ஸ்ட் ராங்காக இல்லை அப்படி ஸ்ட்ராங்க இருக்கும் திமுகவின் கட்சியின் செயல் தலைவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பாவது மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் வண்ணம் செயல்படவில்லை அல்லது முடியவில்லை என்றே கூறலாம். அவர் கலைஞரின் பிள்ளையாக இருக்கலாம கலைஞரிடம் அரசியல் பாடம் கற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம். ஆனால் கலைஞரின் சாதுர்யம் அவரிடம் இல்லாதது மிக குறையாகவே இருக்கிறது. சில சமயங்களில் அவர் அவசரக் குடுக்கையாகவும் பல சமயங்களில் மிக நிதானமாகவும் தன்னை நல்லவனாக நிலை நிறுத்தவும் செயல்படுகிறார். ஆனால் இது எல்லாம் மக்களை கவர செய்வதில்லை.இதுமட்டுமல்லாமல் அவசரக் குடுக்கையாக தன் மகனையும் வாரிசாக களம் இறக்குகிறார். இதற்கான நேரம் அதுவல்ல என்று கூட அவருக்கு புரியவில்லை ஹும்ம்

இப்படிப்பட்ட சூழ்நிலை தமிழகத்தில் நிலவும் போது கமல் கட்சி ஆரம்பிப்பது வரவேற்கத்தக்கதுதான். இப்படி அவர் ஆரம்பிக்கும் போது  கமலின் தனி மனித ஒழுக்கத்தை பற்றி பலரும் விமர்சிக்கிறார்கள். இது அவரின் தனிப்பட்ட விஷய்ம் அதை அரசியலில் சம்பந்தப்படுத்துவது சரியில்லை என்பது என் கருத்து... இப்போது தமிழகத்தை ஆளும் எடப்பாடியும் சரி பன்னீர் செல்வமும் சரி பெண்கள் விஷயத்தில் ஒழுக்கமாகத்தான் இது வரை இருந்து வந்திருக்கிறார்கள் அதற்காக அவர்கள் தமிழகத்தை இப்படி கீழ்தரமாக ஆண்டு கொண்டு இருப்பதை சரியென்று யாராலும் ஒத்துக் கொள்ள முடியுமா என்ன?


அதனால் கமல் மட்டுமல்ல ரஜினி கூட கட்சி ஆரம்பிக்கட்டும் களத்தில் இறங்கட்டும் அவர்களின் செயல்பாடுகள் இதற்கு முந்தைய கட்சிகளின் செயல்பாடுகளைவிட நன்றாக இருந்தால்தானே மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். இல்லை இல்லை எங்கள் மக்கள் முட்டாள்கள் அவர்களுக்கு யார் நல்லவர் கெட்டவர் என்பது தெரியாமல் கவர்ச்சிக்கு மயங்கி தவ்றான தலைவர்களை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்று சொன்னால் மூட்டாள்களுக்கு முட்டாள் தனமான தலைவர்கள்தான் தேவை என்று மற்றவர்கள் ஒதுங்கி கொள்ள வேண்டியதுதான் அல்லது வேறு மாநிலங்களுக்கு அல்லது வேறு நாடுகளுக்கு சென்றுவிட வேண்டியதுதான.


அரசியலுக்கு வரும் கமல் மற்றும்  ரஜினியை பார்க்கும் போது எனக்கு தோன்றுவது இதுதான் ரஜினி வேறு மாநிலத்தில் இருந்து வந்த கரும்பு போல இருந்தாலும் அவரின் நிதானத்தால் கரும்பு காய்ந்து போய்,  மக்கள் சுவைக்க முடியாத காயந்த கட்டையாக மாறிவருகிறார்.  ஆனால் கமலோ சொந்த மண்ணில் விளைந்த கரும்பாக இருந்தாலும் அது பிராமண நிலத்தில் விளைந்த கரும்பாக பார்க்கபடுகிறார்... ஆனால் இந்த இரண்டு கரும்பையும் இன்று மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து கடைவிரித்திருக்கும் ஒனர் மோடியாகத்தான் இருக்கிறார் என்பது அநேக மக்களின் கருத்தாக இருப்பதால் அதை பார்த்து ரசிக்கிறார்களே தவிர வாங்கி சுவைத்து மகிழ்வார்களா என்பது இன்னும் சந்தேகத்திற்கு இடமாகவே இருக்கிறது...


சரி எது எப்படியோ கமல் நேற்று ஆரம்பித்த கட்சியை பார்க்கும் போது அவர் கட்சியை ஆரம்பித்தாரா அல்லது ஏதோ ஒரு பிராண்டிற்கான பொருளை அறிமுகப்படுத்தினாரா என்று எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. ஒரு கட்சி ஆரம்பித்து அதை அறிமுகப்படுத்தும் போது பேசும் பேச்சு மக்களை சுண்டிக் கவர்ந்து இழுக்குமாறு இருக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லைதான் என்று சொல்ல வேண்டும்.  இளைஞர்களை தன் வசைபடுத்திவிட வேண்டும் என்று நினைத்து அப்துல்கலாமையும் கேஜ்ரிவாலையும் இழுத்து இருக்கிறார்கள்... ஆனால் அதனால் இளைய சமுதாயம் விட்டில் பூச்சிகளாக்  வந்து விழுவதில்லை. நேற்றைய கட்சி அறிமுக நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சியான்னு நினைக்க வைத்துவிட்டது.. ஆம் அது பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலும் அதுவும் சரியாக நடக்கவில்லை அதை நன்றாக நடத்த விஜ்ய்டிவியால்  மட்டுமே முடியும் கமலால் முடியவில்லை என்பது தெரிகிறது.



#avargalUnmaigal
ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது கமல் ரஜினியை விட சற்று தைரியாமகவும் பட்டென்று மனதில் பட்டதை முழுங்காமல் சொல்ல முயல்பவர் அதுமட்டுமல்லாமல் சற்று  சிந்திக்கவும் தெரிந்தவர் என்று புரிகிறது..


நேற்றைய கமலின் பேச்சைவிட 2017 நவம்பர் மாதத்தில் ஆங்கில சேனலுக்கு அளித்த இண்டர்வூயுவை பார்க்கும் போது வாவ் என்று நினைக்க தோன்றியது வாவ் எவ்வளவு அழகாக சிந்தித்து பேசுகிறார். நிச்சயம் இப்படி இங்கே பேசியதை கிராமப்புற மக்கள் புரியும்படி பேசினால் அடுத்த தலைவராக தமிழகத்தில் வலம் வர நிச்சயம் வாய்ப்புண்டு என்றே நினைக்க தோன்றுகிறது அதுமட்டுமல்லாமல் உங்கள் மேடைகளில் சிநேகன் அந்த காம்டி நடிகர் போன்றவர்களை மேடையில் ஏற்றாமல் இருப்பதே நல்லது..

அது போல சும்மா அப்துல்கலாம் கேஜ்ரிவால் என்று அவர்களை முன்னிருத்தாமல் சகாயம் ஐ.ஏ.எஸ் போன்ற மனிதர்களை கட்சியின் இரண்டாம் நிலைக்கு கொண்டு வந்து முன்னிருததுங்கள் முடிந்தால் சகாயத்தை உங்கள் கட்சியின் செயலாளராகவோ அல்லது பொருளாராகவோ முன்னிருத்துங்கள் அப்படி செய்தால் மக்களின் கவனம் உங்கள் கட்சியின் மேல் நிச்சயம் படியும் ஆனால் அப்படி செய்ய உங்களால் முடியுமா அல்லது அப்படி செய்ய உங்களை மோடி அனுமதிப்பாரா என்று தெரியவில்லை.

கமலஹாசா உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் தமிழகம் எல்லா துறையிலும்  மற்ற மாநிலங்களைவிட சிறந்துதான் இருக்கிறது... தமிழ் மக்கள் எல்லாத் துறையிலும் உலகெங்கிலும் சிறந்துதான் விளங்குகிறார்கள் ஆனால் இப்போது தமிழகத்தை ஆள்பவர்களால் அரசியலால்  தலை குனிந்து மற்றவர்களின் கேலிப்பார்வைக்குரியவர்களாக தலை குனிந்து நிற்கிறார்கள். இதை மாற்ற உங்களால் முடியும் என்றால் உங்களை நிச்சயம்  அரசியலுக்கு வாருங்கள்


டிஸ்கி:  எனக்கும் கமலுக்கும் முன்விரோதமோ, முன்பாசமோ ஒன்னுமேயில்லைங்கோ.... அது போலத்தான் ரஜினியும் கூட

டிஸ்கி 2:  சட்டமன்ற தேர்தல் வந்தால் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். ஸ்டாலின் வந்தால் நிச்சயம் சிறிது காலத்திற்காவது நல்ல ஆட்சியை தருவார் என்ற் நம்பிக்கை இருக்கிறது காரணம் கடந்த கால தவறுகளில் இருந்து அவர் மிகப் பெரிய  நல்ல பாடத்தை கற்று கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.. ஆனால் என்ன தன் கட்சிகாரகளை தவிர வெளியாட்களை கவர சரியாக முயற்சி அவர் எடுக்காதது மாதிரிதான் இருக்கிறது.. தேர்தல் களம் எப்படி அமையப் போகிறது என்று தெரியவில்லை ஆனால் இப்போதைய சூழ்நிலையில் மற்ற கட்சிகளை விட அதிக இடங்களை பெற வாய்ப்புள்ள கட்சியாகவே திமுக இருக்கிறது ஆனால் இந்த அதிக இடம் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு இருக்குமா என்பது சந்தேகமே ஆனால் தேர்தலுக்கு அப்புறம் வெளியே இருந்து அடுதத நிலையில் உள்ள கட்சி ஆதரவு கொடுத்தால் ஸ்டாலிந்தான் அடுத்த முதல்வர்.. இது இன்றைய சூழ்நிலை ஆனால் பணத்திற்கு முன்னால் தமிழக மக்களின் எண்ணங்கள் மாறுவதால் யாராலும் இவர்தான் ஆட்சியை பிடிப்பார் என்று உறுதியாக  சொல்ல முடியும்


ஒரு வேளை ஸ்டாலின் வர முடியவில்லை என்றால் இந்த எடுப்பட்டு போன எடப்பாடி பன்னீர் செல்வம் ஆட்சிக்கு பதிலாக  யார் வேண்டுமானாலும் வரலாம்

கொசறு

தலைமை சரியில்லாத அதிமுகவின் வோட்டுக்களை யார் கைப்பற்றுவது என்பதன் போட்டியே ரஜினி கமலின் அரசியல் வரவு ஆனால் மீடியா பேசுவதோ திமுகவின் வாக்கு வங்கியை கைப்பற்றவே இவர்கள் வருகிறார்கள் என்று



மக்கள் நீதி மய்யம்.. தேர்தலுக்கு அப்புறம் மாயமாக போய்விடக் கூடாது


ஸ்டாலின் : காதிதப் பூக்கள் மணக்காது....  ///நறுமண காகித்தால் செய்யப்ப்பட்ட பூக்கள் மணக்கும்////

கமல் : நான் பூ அல்ல விதை.../// கருவேல மர விதையாக இருந்துவிடாதீர்கள்??


கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்


(கடவுள் பாதி.. மிருகம் பாதி...... )இடது பாதி வலது பாதி
கலந்து செய்த கலவை நான்.....

வெளியே மிருகம்... உள்ளே கடவுள்...( வெளியே பகுத்தறிவு உள்ளே ஆன்மிகம் )
விளங்க முடியா கவிதை நான்.....

இப்படிக்கு
மய்ய ஒனர்

கேட்கிற கேள்விக்கு எல்லாம் டக்டக்ன்னு பதில் சொன்னா அது கமல் பயந்து தலையை சொறிந்தால் அது ரஜினி... தலையை சுத்திடுச்சு ரஜினி

நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை; என்னுடைய நம்பிக்கை அப்படி- #கமல்ஹாசன் கலாமின் இறுதிச்சடங்கில் பங்கேற்காதது பற்றிய கேள்விக்கு கமல் பதில்.. அப்போ சிவாஜி இருதி ஊர்வலத்தில் பங்கேற்றது என்ன சினிமா அரசியலா?

கமல்: அப்துல் கலாமின் சாவில் இருந்துதான் நான் எந்த இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்பதில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

எழுத்தாளரும் கவிஞரும் மேலும் பன்முக திறமை கொண்ட பதிவர் அகிலா பேஸ்புக்கில் பதிந்த வரிகள் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை இங்கே பதிகிறேன்

வழக்கமாக நாம் பார்க்கும் அரசியல் மேடையின் முகம் மாறியிருந்தது வித்தியாசம். (வரிசையாக தலைவர்கள் படம் அடுக்காதது)

கமலின் பேச்சு, அரசியல்வாதியின் தீர்க்கமான மக்களுக்கான பேச்சாய் இல்லாமல், இலக்கியவாதியின் பேச்சைப் போல அனுமானமிக்கதாய் மொழி ஜாலம் மிக்கதாய் இருந்தது ஒரு குறை.

'என்னை ஒதுக்கிவிடாதீர்கள்' என்று மக்களிடம் கெஞ்சுவதான பதற்றம் கமலிடம், பேச்சிலும் உடல்மொழியிலும் காணப்பட்டது நிஜம்.

தொலைக்காட்சியில் காட்டும் திரைப்பட விருது விழாக்கள், பட இசை வெளியீட்டு விழாக்கள் போல், நேற்றைய கட்சி தொடங்கிய விழாவையும் மக்கள் கடந்து போக வாய்ப்புள்ளது.

களம் பொதுவானது. யார் வேண்டுமானாலும் வரட்டும்.
செயல்பாடுகள் கவனிக்கப்பட வேண்டியவை. பொறுத்திருப்போம்.

~ அகிலா..

4 comments:

  1. நாடாள வரும் நடிகர்களின் வித்தியாசத்தை அறிந்து கொண்டேன் தலைவரே....

    ReplyDelete
  2. டிஸ்கி, பின்குறிப்பு, ஊசிக்குறிப்பு என்று பிற்சேர்க்கையே நீண்டு கொண்டே போகிறதே...! இருப்பினும் ஈசல் போல காட்சிகள் ஆரம்பிப்பதும் ஒரு தந்திரமே!

    ReplyDelete
  3. எவனும் நல்லது செய்ய வரவில்லை ஜெ... இல்லாத காரணத்தை வைத்து நாமலும் முயல்வோமே நம்மையும் தமிழக வரலாற்றில் பதிப்போமே என்ற சிந்தையே கமல்-ரஜினி வரவு.

    பணந்துக்காக அல்ல, சம்பாரித்த பணத்தை பாதுகாக்க.

    ReplyDelete
  4. ரஜினியை விட கமல் தெளிவாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர். நாத்திகப் பேச்சு காரணமாக கமலை பிராம்மணர்களும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவதில்லை மற்றவர்களும் அவர ஏற்றிக் கொள்ளாததும் அவரது துரதிர்ஷ்டமே. அவருடிய அறிவுஜீவி பேச்சுகளால் அந்நியப்பட்டுப் போகிறார். சகாயம ஐ ஏ. எஸ் அவர்களை மக்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள்.ஏனெனில் பெரும்பாலானவர்கள் நேர்மையை ஆச்சர்யத்துடன் பார்ப்பவர்களே அன்றி ஆதரிப்பவர்கள் அல்ல.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.