Tuesday, January 16, 2018

@avargalunmaigal


இருபாலாருக்கும் பயன்படும் சிறுநீர் கழிக்க உதவும் மொபைல் கழிவறை


நான் இணையத்தில் உலா வரும் போது என் கண்ணில் பட்ட இந்த பொருள் மிக உபயோகமாக இருக்கும் என்பதால் அதை இங்கே பதிகிறேன். ஆண்கள் பெண்கள் முதியோர் மட்டுமல்ல உடல்நலமின்மையால் படுக்கையை விட்டு நகரமுடியாதவர்களுக்கு  இந்த  மொபைல் கழிவறை மிக உபயோகமாக இருக்கும்  என நான் நினைக்கிறேன்

மேலும் பஸ்ஸில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் போது  இந்த கண்டுபிடிப்பு மிகவும் பயன்படக் கூடும்.. இப்போது இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் சர்க்கரை வியாதிக்காரர்கள் மிகவும் அதிகரித்து இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் போது அவர்களால் சிறுநீரை அடக்கமுடியாமல் தவிக்க்கிறார்கள் அது போல பெண்களும் ஆண்களை போல கண்ட இடங்களில் போகமுடியாமல் சிறுநீரை அடக்கி அடக்கி கடைசியில் சிறுநிரக கோளாறால் அவதிப்படுகின்றனர்..

இப்படிபட்ட சூழ்நிலையில் இந்த மொபைல் கழிவறையை வாங்கி பயன்படுத்தலாம்... இது தற்போது அமெரிக்காவில் விற்பனையாகிறது.. ஆனால் இது இந்தியாவில் கடைகளில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அமேசான் டாட்காம் இண்டியாவில் கிடைக்கிறது

@avargalUnmaigal
கிழே உள்ள லிங்கில் சென்று பாருங்கள் உங்கள் வசதிக்கேற்ப பல மாடல்களில் குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரை இருக்கிறது

https://www.amazon.in/YUMSUM-Female-Unisex-Urination-Reusable/dp/B071X6Z5WW/ref=sr_1_fkmr1_4?ie=UTF8&qid=1516161448&sr=8-4-fkmr1&keywords=Unisex+Travel+Urinal+Portable+Mobile+Toilet+Urinal


https://www.amazon.in/s/ref=nb_sb_noss/262-2160465-9687550?url=search-alias%3Daps&field-keywords=Unisex+Travel+Urinal+Portable+Mobile+Toilet+Urinal+

https://www.amazon.in/Generic-Portable-Outdoor-Emergency-Traffic/dp/B0775RW1PN/ref=sr_1_fkmr0_1?ie=UTF8&qid=1516161448&sr=8-1-fkmr0&keywords=Unisex+Travel+Urinal+Portable+Mobile+Toilet+Urinal


வெட்கப்பட வேண்டாம் ...கூச்சபடவேண்டாம்  வாங்கி பயன்படுத்துங்கள் சிறுநீரக கோளாறில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : ஹீஹீ பதிவு எப்படி பயனுள்ளதாக இருக்கிறதா? இல்லை பழையபடி அரசியல் பதிவுக்ளை போடாவா?

14 comments:

  1. பயனுள்ள விடயமே...

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி

      Delete
  2. நிச்சயம் பயனுள்ள விஷயமே
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரமணி சார்

      Delete
  3. டிஸ்கியில் என் சிரிப்பு மதுரை...உண்மையிலேயே. நல்ல பயனுள்ள பதிவு...

    கீதா: பொதுக்கழிப்பிடங்கள் இருக்கும் லட்சன்னத்திற்கு இது மிகவும் பயனுள்ளது..யப்பா ...இப்படியே போடுங்கப்பா....

    ReplyDelete
    Replies
    1. இங்கே வயதானவர்களையும் குழந்தைகளையும் காரில் நீண்ட ரோட் ட்ரிப் அழைத்து செல்லும் போது மிகவும் பயன்படும்.. இந்தியாவில் அதுவும் பெண்களுக்கு மிகவும் பயன்படும் மார்க்கெட்டிங்க் செய்தால் சிறப்பாக விற்கும் என்பது என் எண்ணம்

      Delete
  4. உபயோகிக்கும் முறை பற்றி விளங்கவில்லை பார்த்தால் விளங்கலாம்

    ReplyDelete
    Replies

    1. இதில் உள்ள படத்தை பார்த்தாலே எளிதில் விளங்குமே.... நாம் கழிக்கும் சிறுநீர் இதன் மூலம் யூஸ் அன் த்ரோ பாட்டிலில் அடைக்கப்பட்டு தூக்கி எறிந்துவிடலாம்... பொது கழிப்பிடம் இல்லாத இடங்களில் அல்லது மிகவும் அசுத்தமாக இருக்கும் இடத்தில் இதைப் பயன்படுத்தலாம் முக்கியமாக பெண்களுக்கு இது உதவும்

      Delete
  5. வணக்கம் சகோதரரே!

    பயனுள்ள நல்ல பதிவும் பகிர்வும்!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies

    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இளமதிம்மா

      Delete
  6. ரொம்பவே பயனுள்ள பகிர்வு சக்கரை நோயாளிகளுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் நன்றி

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள, அறிந்துகொள்ளவேண்டியதைப் பற்றிய பகிர்வு.

    ReplyDelete
  8. hope this is help for my mother thanks for posting

    ReplyDelete
  9. பெண்களுக்கு மட்டுமே இது பயன்படும் ... ஆண்களுக்கு பாட்டில் மட்டும் போதும்... லைவ் டெலிவெரி ....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.