Sunday, January 28, 2018

எனக்குள் இருக்கும் பயம் ?

எனக்குள் இருக்கும் பயம் என்னென்னா  பாஜக இந்திய தலைமை ஹெச்.ராஜா, தமிழிசை, கேடி.ராகவன் பொன்.ராதா போன்றவர்களை தூக்கி ஏறிஞ்சுவிட்டுவிட்டு வேற  நல்ல தலைவர்கள் யாரையாவது போட்டு விடுவாங்களோ என்றுதான் பயம் வருகிறது அப்படி செஞ்சவிட்டால் பாஜக தமிழகத்தில் வளருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்பதுதான். என் பயம் சரிதானா மக்களே

இப்போது தமிழகத்தில் நடக்கும்
ஆட்சியை கலைத்தால்
தமிழக மக்களுக்கு நல்லது


அது போல
தமிழக பாஜக
தலைவர்களை கலைத்தால்
பாஜகவிற்கு நல்லது

ஆனால் இது இரண்டும் நடக்காது.ஹும்ம்

செய்தி :#ரஜினி மக்கள் மன்ற சார்பில் விவசாய அணியை உருவாக்க #ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணி வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விவசாயம் தவிர கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கும் தனி தனி அணி உருவாக வாய்ப்பு.

அப்படியே ரஜினி மனைவி நடத்தும் ஸ்கூலில் வேலை பார்ப்பவர்களின் பிரச்சனைகளை தீர்க்க அதற்கு ஒரு அணியை ஏற்படுத்திவிடுங்கள்.


பேசாமல் ஜீயர் சுவாமிகளை ஸ்டாலினுக்கு எதிராக நிற்க வைத்தால் தமிழகம் சும்மா அதிரும்ல

ஆயூத பூஜை அன்று பூஜை செய்யப்பட்ட இந்திய இராணுவவிமானங்கள் பயன்பாட்டுக்கு வருவது இரண்டு முறைமட்டும்தான் ஒன்று குடியரசு தினம் மற்றொன்று சுதந்திர தினம்... நிலமை இப்படி இருக்க பல கோடி செலவழித்து வெளிநாட்டில் இருந்து புதிய ராணுவவிமானங்கள் வாங்குவது தேவையா என்ன?




பாஜக தலைவர்களை ஸ்டாலின் புறம்போக்கு என்று திட்டியது தவறா என்றால் இல்லை என்று சொல்லாம். ஏனென்றால் இந்த புறம்போக்குகள்தான் தமிழர்களை ஜல்லிகட்டு சமயத்தில் பொறுக்கிகள் என்று அழைத்தனர். அதனால் புறம்போக்கு என்று மட்டுமல்ல மற்ற அசிங்கமான வார்த்தைகளை இவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதில் தப்பே இல்லை


கர்நாடகாவில் பா.ஜ.க.ஆட்சி அமைந்தால் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்

இந்தியாவையே ஆள்வது அவர்கள்தான் என்று மறந்து போய்விட்டாரோ அல்லது மோடியால் இது முடியாதோ என்று மறைமுகமாக கேலி செய்கிறாரோ என்னவோ

அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. கூத்து நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. கூத்தாகத்தான் இருக்கிறது ஆனால் அது தமிழர்களுக்கு நல்லது இல்லையே அதுவும் தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு..

      Delete
  2. ஒரே காழ்ப்புண்ர்ச்சி போல் இருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. ஐயா நீங்கள் நம்மபதிவர்கள் எழுதும் பதிவுகளைமட்டும் படித்து வருகிறீர்கள் என்றுமட்டும் தெரிகிறது நீங்கள் பேஸ்புக் டிவிட்டர் பக்கம் கொஞ்சம் போய் பாருங்கள் அப்போது தெரியும் அதுமட்டுமல்ல நம் பதிவர்கள் இங்கே பதிவு எழுதும் போது மிக நல்லவர்கள் போல வேஷம் போடுவதும் பேஸ்புக் டிவிட்டர் வலைதளங்களில் ஒரு முகமும் காட்டி வருகின்றனர்.

      ஆனால் அங்கேயும் இங்கேயும் நான் ஒரே மாதிரிதான் எழுதிவருகிறேன்.... சொல்லப் போனால் நான் அங்கே சொல்வதைத்தான் இங்கே இப்போது தொகுத்து அளிக்கிறேன் அவ்வளவுதான் நான் பல செய்திகளை படிக்கும் போது என்னுள் எழும் எண்ணங்களை ஒளிவு மறைவு இல்லாமல் பட்டென்று சொல்லிவிடுகிறேன் சிலருக்கு அது குத்துகிறது


      இன்று நான் போட்ட பதிவில் எது காழ்புணர்ச்சி என்று குறிப்பாக சொல்லிக்காட்டினால் நல்லது .ஏதோ பொத்தாம் பொதுவாக சொல்ல வேண்டாம் ஒரு வேளை நான் தவறாக சொல்லி இருந்தால் அதை திருத்தி கொள்வேன்

      Delete
  3. கேலிசெய்வது போல இல்லை
    எல்லாம் நிஜம்போலத்தான் படுகிறது

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இப்படி நினைக்கிறீர்கள் ஆனால் பால சுப்ரமணியம் சார் வேறு மாதிரி அல்லவா நினைக்கிறார்.பார்வைகள் பலவிதம் அது ஒவ்வொன்றும் ஒருவிதம்

      Delete
  4. படிக்கும் செய்திகளிலிருந்து பதிவுகள் தயார் செய்து விடுகிறீர்கள்!!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் நீங்கள் சொன்னது 100 சதவிகிதம் உண்மை

      Delete
  5. உ(ண்)மை யெல்லாம் கண்டிக்க ஆளுங்க இல்லேன்ற தைரியம்..😜. ..ம்..ம் ஆ(ளு)டுங்க..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நீர் எங்கே போய் ஒழிஞ்சுகிட்டீர்?

      Delete
    2. ஒழிஞ்சிட்டேன்னுதான் தான்
      நிறையபேர் நெனச்சுகிட்டாங்க. கொஞ்சம் படிக்கிற வேலை இருந்தது. அதனால ஒளிஞ்சிருந்து படிச்சேன். தமிழா.. தமிழை தயவு செய்து கவனத்துடன் கையாளவும்.. & this is Not only In the name of language this our soul,faith,& our breath. இதையெல்லாம் ஊருக்குள்ள சொல்லுங்க. முக்கியமா ட்ரம்புகிட்ட சொல்லுங்க.

      Delete
    3. ஒழிஞ்சிட்டேன்னுதான் தான்
      நிறையபேர் நெனச்சுகிட்டாங்க. கொஞ்சம் படிக்கிற வேலை இருந்தது. அதனால ஒளிஞ்சிருந்து படிச்சேன். தமிழா.. தமிழை தயவு செய்து கவனத்துடன் கையாளவும்.. & this is Not only In the name of language this our soul,faith,& our breath. இதையெல்லாம் ஊருக்குள்ள சொல்லுங்க. முக்கியமா ட்ரம்புகிட்ட சொல்லுங்க.

      Delete
  6. நிஜத்தை கேலியாக சொல்லும் பாங்கு!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.