Friday, January 26, 2018

மோடியை தவறான பாதையில் அழைத்து செல்வது யார்?

கடந்த பொது தேர்ததலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக அறுவடை செய்த மோடி தமிழக களத்தில் அப்படி செய்ய முடியாமல் போய்விட்டது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஒரு சிறந்த தலைவன் என்பவன், தான் எப்படி இவ்வளவு அதிக இடத்தில் வெற்றி பெற்றேன் என்று மகிழ்ச்சி கொள்வதில்லை. மாறாக ஏன்   ஒரு சிறுபகுதியில் நாம் தோல்வியுற்றோம் அதை எப்படி நாம் சரி செய்வது என்றுதான் சிந்தித்து செயலாற்றுவான்.. ஆனால் மோடியோ அதற்கு எதிர்மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மோடி ஜெயலலிதாவை தன் கூட்டணில் சேர்த்து கொள்ள முயற்சித்த போது அதில் இருந்து ஜெயலலிதா நழுவி மிகப்  பெரிய வெற்றியை தமிழகத்தில் பெற்றார். அப்படி அவர் பெற்ற வெற்றியை மதித்து அவருக்கு  என ஒரு இடத்தை மோடி தராமல் தான் அனைத்து இடங்களிலும் ஆமோக வெற்றி பெற்றதால் அவர் தன் வழிக்கு வருவார் என்று தப்பு கணக்கு போட்டு காயை நகர்த்தினார் மோடி .அது மிகப் பெரிய தவறு. ஜெயலலிதா தன் அதிகாரத்திற்கு பயந்து வெளியில் இருந்து ஆதரவு கண்டிப்பாக தருவார் என்று நினைத்துவிட்டார். அப்படி அவர் நினைப்பதற்கு பதிலாக நாம் ஜெயலலிதாவிற்கு வெளியில் இருந்து நாம் ஆதரவு தந்து அவரது கோரிக்கைகளை நிறைவேற்றி மறைமுகமாக  தனக்கு ஆதரவாக செயல்படுத்தி இருக்க வேண்டும் அதுதான் சாணக்கியத்தனம் ஆனால் அது மோடியிடம் இல்லை.. அவரிடம் இருப்பது எல்லாம் அடாவடித்தனமே. அதானல் ஜெயலலிதாவின் மீது உள்ள சொத்து குவிப்பு வழக்கை வைத்து அவரிடம் விளையாடினார் அதை ஜெயலலிதா மட்டுமல்ல தமிழக மக்களும் கூட ரசிக்கவில்லை.காரணம் ஜெயலிதாவின் அந்த சொத்து குவிப்பைவிட அதன் பின் மிக அதிகமான அளவில் ஊழல் செய்ததை பார்த்த மக்களுக்கு அந்த வழக்கு சாதாரண ஒரு வழக்காகவே தெரிந்தது.

அதுமட்டுமல்லாமல் தன்னிடம் மண்டியிடாத ஜெயலலிதாவை எதிர்ப்பதாக நினைத்து மோடி தமிழக மக்களை பல பிரச்சனைகளில் வஞ்சித்துவிட்டார்


மேலும் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத போது மத்திய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எடுத்து சொல்வதில் மோடி அரசு தவறிவிட்டாதாகவே தமிழக மக்கள் கருதுகின்றனர்.. அதுமட்டுமல்லாமல் சசிகலாவுடன் சேர்ந்து கூட்டு சதிப் பண்ணியதாகவும்  சதிதிட்டம் நினைத்த படி நிறைவேறிய பின் அதற்கு உடந்தையாக இருந்தவர்களை இப்போது சிறையில் அடைத்துவிட்டு டம்மிகளை வைத்து நாடகமாடி தமிழகத்தில் மறைமுக ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது என்பதை பால் குடிக்கும் குழந்தை கூட அறியும்.


ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் மத உணர்வுகளை தூண்டிவிட்டு தாம் நினைப்பதை நடத்தலாம் என்று பாஜக இந்திய தலைமை நினைத்து கொண்டிருக்கிறது அதை தனக்கு சாதகமாக்கி குருமுர்த்தி போன்றவர்கள் தவறான ஆலோசனைகள் சொல்லி பாஜகவை தமிழக்த்தில் உண்டு இல்லை என்று ஆக்கிகொண்டிருக்கிறார்கள்

//துக்ளக்’ ஆண்டு விழாவில்  ஆடிட்டர் குருமூர்த்தி பேசியது. ‘நாங்கள் சசிகலாவைச் சிறைக்கு அனுப்பி, அவரிடமிருந்து அ.தி.மு.க-வைக் காப்பாற்றி, பிரிந்துகிடந்த ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிகளை இணைத்து, இரட்டை இலையை மீட்டுக் கொடுத்தோம். ஆனால், அதன்பிறகும் அந்தக் கட்சி வலிமைபெற முடியவில்லை’ என்பதுதான் அவர் பேச்சின் சாரம். //

குருமுர்த்தியின் இந்த மாதிரி ஆலோசனைகள் அறிவுகளை மோடி மற்றும் பாஜக தலைமைக்கு சொல்லி இப்படி செய்தால் நாம் சொன்னபடி கேட்கும் அதிமுக நமக்கு கிடைக்கும் என்று கனவு கோட்டை கட்டினார்... ஆனால் குருமுர்த்தியின் சாணக்கியதனம் இங்கு வேகவில்லை அதனால் பாஜக வலு பெறமுடியாமல் போய்விட்டது என்று சொலவதற்கு பதிலாக எடப்பாடியின் தலைமையிலான அதிமுக கட்சி வலிமைபெற முடியவில்லை என்று துக்ளக் கூட்டத்தில் பேசி சென்றுஇருக்கிறார். அதாவது கிழே விழுந்தாலும் தன் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல மாமா குருமுர்த்தி பேசி சென்று இருக்கிறார்


மகாபாரதம் கரைத்து குடித்தவர் அல்லவா அதனால் முதல் வியூகம் தோற்றதும் தனது இரண்டாவது வியூமாக ஆன்மிக அரசியல் வீயூகத்தை வகுத்து இதில் ரஜினி என்ற வீரியம் குறைந்த ஒரு  அஸ்திரத்தை மிக அதிக அளவு விலை கொடுத்து இறக்கி இருக்கிறார்கள்....பாவம் இந்த அஸ்திரமும் குருமுர்த்தியின் முந்தையை அஸ்திரத்தை போலவே மண்னை கவ்வ போகிறது.

மகாபாரத்தை கரைத்து குடித்த குருமுர்த்திக்கு ஒன்று தெரியவில்லை....மோடியின் கூட்டம் கெளரவர் கூட்டதை போன்றது அது வெல்ல முடியாது வெல்பவர்கள் பாண்டவர்கள் அதாவது நல்ல   எண்ணம் கொண்ட தமிழர்கள்தான் எப்போது குருமுர்த்தி ரஜினியின் மூலம் ஆன்மிக அரசியலை அறிமுகப்படித்தினாரோ அந்த நிமிஷத்தில் ஆன்மிகம் தமிழகத்தில் செருப்படிதான் வாங்கி கொண்டிருக்கிறது


தமிழர்களுக்கும் தமிழர் பிரச்சனைகளுக்கும் மனம் உவந்து உதவினால்தான் தமிழக மக்கள் மனதில் அமர முடியும் என்று இவ்வளவிற்கு பின்பும் மோடி அறியாமல் இருந்தால் அவருக்கு புத்தி என்பதே இல்லை என்பதுதான் அர்த்தம். இது கூட புரியாமல் மோடி இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரே என்பதுதான் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது அதுமட்டுமல்ல சிறிது கூட நல்லது செய்ய ஏன் தலைவர்களுக்கு மனம் வரவில்லை என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது


ஒன்று மட்டும் மோடி புரிந்து கொள்ள வேண்டும் மற்ற மண்ணில் மத உணர்வை தூண்டிவிட்டு வெற்றி பெற்றது போல தமிழக மண்ணிலும் அது போல் செய்தால் நாம் வெற்றி கொள்வோம் என நினைத்து இப்போது செயல்படுகிறார் அவர் நினைப்து தவறு என்று  அவர் கட்சியை சார்ந்த தமிழக தலைவர்களுக்கு நன்கு தெரிந்தும் அதை மறுத்து சொல்ல தைரியமில்லாமல் மோடி  செய்வது சரி என்று பூம் பூம் மாடுகளாக தலையாட்டி கொண்டிருக்கிறார்கள்.. உண்மையை சொல்ல வேண்டுமானால் மோடிக்கு தமிழர்கள் எதிரிகள் அல்ல தங்கள் பதவியை தக்க வைத்து கொள்ள மிக சுயநலவாதிகளாக இருக்கும் தமிழக பாஜக தலைவர்கள்தான் முதல் எதிரிகள்... அவர்கள் மட்டும் சரியான தலைவர்களாக இருந்தால் மோடியின் செல்வாக்கு தமிழகத்தில் அதிகரித்து இருக்கும்

டிஸ்கி : தமிழர்கள் நல்லவர்கள் உணர்ச்சி மிக்கவர்கள் அவர்கள் மிகவும் ஏமாளிகள்...அதனால் அவர்களுக்கு நல்லது  செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை அது போல கெட்டதும் கண்டிப்பாக செய்யக் கூடாது  ஆனால் நல்லது செய்வது போல நடித்தால் மட்டுமே போதும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

யானைக்கும் அடி சறுக்கும் அது போல மோடிக்கும் அடி சறுக்கும் அதுவும் தமிழகத்தில் நல்லாவே சறுக்கும்
கொசுறு :
சோவிற்கு அதிகம் புத்தி உண்டு அது போல குருமுர்த்திக்கும் புத்தி அதிகம் உண்டு ஆனால் என்ன குருமூர்த்தியிடம் இருப்பது என்னவோ கெட்ட புத்திதான் அதுதான் வித்தியாசம்

7 comments:

  1. Replies
    1. ஏங்க நீங்க ரொம்ப புத்திசாலிங்க இங்கே ஒருத்தன் முட்டாள்தனமாக ஏதோ எழுதி வருகிறான் அதையும் படித்து நீங்கள் கருத்து சொல்லுறீங்க அப்ப நீங்க எவ்வளவு பெரிய புத்திசாலிங்க... இப்படி ங்கே கருத்து சொல்வதற்குபதிலாக புத்திசாலிதனமாக நீங்கள் உங்கள் கட்சியை பற்றி ஏதாவது எழுதி வெளியிடலாமே

      Delete
  2. மோடியை தவறாக நடத்துவது யார் ?
    மக்களை திசை திருப்ப வேண்டும் . அவ்வளவுதான் !
    அதற்கு என்ன வழி ?
    இருக்கவே இருக்கு பத்திரிகைகள் .
    இந்திரன் சந்திரன் என்று எவனையாவது வைத்து எழுத வேணும் .
    அப்புறம் அன்னார் சொன்னார் இன்னார் சொன்னார் என்று சொல்லணும் .
    வாசுதேவ் ,நித்தி போன்றவர்கள் பெரிய ஆள் ஆனது இப்படித்தான் .
    Perception is Reality !
    ஜெயா நடத்திய ஆட்சி காட்டு தர்பார் -எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்
    ஜெயா என்ற பேர் கூடச் சொல்லக்கூடாது - அம்மா என்றுதான் சொல்லணும் .
    அவர் பத்திரிக்கைகளை காலடியில் போட்டு வைத்திருந்தார் .
    தி மு க கட்சி ஊழல் கட்சி - அதை நடத்தியது தீய சக்தி !
    இப்படியே பிரச்சாரம் நடந்தது !
    சொன்னதை திரும்பிச் சொல் - மக்கள் நம்புவார்கள் - கபில்ஸ்

    ஜெயாவை காட்டிலும் மோடி ஒன்றும் மோசமில்லை !

    நாராயணன் .எச் ராஜா , பொன்னார் ,டுமிழிசை போன்றவர்கள் மோடி
    புகழ் பாடி இருக்க வேண்டும் - அதற்கு பதில் தன்புகழ் பேசினார்கள் !


    ReplyDelete
  3. நிச்சயம் தமிழகம் பாடம் புகட்ட வேண்டும் மோடிக்கு!

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் போன பொது தேர்தலில் செய்துவிட்டார்களே ஒரு தடவை வாங்கிய பத்தாது போலிருக்கிறது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.