Monday, January 1, 2018

@avargalUnmaigal
உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்

அட்வைஸ்/ஆலோசனை என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். சில நேரங்களில் நாம் அதை விரும்புகிறோம்; சில நேரங்களில் நாம் அதைவிரும்புவதில்லை. சில நேரங்களில் அது நல்லதாகவும் இருக்கிறது மற்ற நேரங்களில் அது  கொடூரமானதாகவும் தெரிகிறது.எது எப்படியோ சில நேரங்களில் சில அறிவுரைகள்  நம்மோடு ஒட்டிக் கொள்கிறது இருக்கிறது. அப்படி பட்ட அறிவுரைகள் நம் பாட்டியிடம் இருந்தோ , அம்மா அப்பாக்களிடம் இருந்தோ, நண்பர்களிடம் இருந்தோ, ஆசிரியர்களிடம் இருந்தோ , உடன் வேலைப்பார்ப்பவர்களிடம் இருந்தோ,  படிக்கும் புத்தகங்களில் இருந்தோ அல்லது பாடல் வரிகளில் இருந்தோ நமக்கு கிடைத்திருக்கும் . அப்படிப்பட்ட அறிவுரைகள் நம் வாழ்வை மாற்றி இருக்கும் அல்லது நமக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்த்து இருக்கும் அல்லது நாம் முன்னேற ஒரு வழியை காண்பித்து இருக்கும். எப்படியோ அறிவுரைகள் இன்று நமக்கு பயன்படுக்கிறதோ இல்லையோ அல்லது வேறு யாருக்காவது உடனேயாவதோ அல்லது எப்பதாவது அவர்களுக்கு தேவைப்பட்டால் பயன்படலாம்.. அதனால் எனக்கு பயன்பட்ட என் வாழ்வை மாற்றிய அட்வைஸை இங்கே பதிந்து செல்லுகிறேன்



நான் மதுரையில் வசித்த போது  மதுரைக்கலூரியில்  முதலாமாண்டு எம்.ஏ. பொருளாதரம் எடுத்து படித்த போது பிரச்சனையின் காரணமாக தற்கொலை பண்ணிக் கொள்வது என்று முடிவு செய்து மூட்டை பூச்சி மருந்து வாங்கி வைத்து கொண்டு மனதை குழப்பி கொண்டு இருந்த சமயம் .நான் படித்த புத்தகத்தில் வந்த ஒரு வரிதான் என்னை அந்த தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியது (அந்த புத்தக்தை படித்து உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் உங்களை இப்படி பதிவுகள் எழுதி கொல்கிறேன் என்பது வேறு விஷயம்)

என்னிடம் உள்ள மோசமான பழக்கம் மற்றவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டு அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்து சந்தோஷப்படுத்தும் நான், எனக்கு எந்தவித பிரச்சனைகள் வந்தாலும் கஷ்டங்கள் வந்தாலும் அடுத்தவர்களிடம் சொல்லாமல் என்னால் முடிந்தவரை அதை சாமாளிப்பேன் இல்லையென்றால் கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பேன்... யாரிடமும் எப்போதும் உதவிகள் கேட்டு செல்லமாட்டேன்.

இப்படிபட்ட குணமுடைய நான் என் கல்லுரிப் பருவத்தின் போதும் அப்படி இருந்ததால் பிரச்சனைகளை சமாளிக்க தெரியாமல், அப்போது என்னை சுற்றி நல்ல நண்பர்கள் இருந்த போதிலும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்து இருந்தேன் ..அந்த சமயத்தில் நான் படித்த புத்தகத்தில் "தற்கொலை செய்து கொண்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று நினைத்து தற்கொலை செய்யுமுன் கொஞ்சம் நில்லுங்கள். இந்த நிமிஷத்தில் இருந்து நீங்கள் தற்கொலை செய்து கொண்டாதாகவே நினைத்து மீண்டும் புதிதாக பிறந்தமாதிரி நினைத்து வாழ்க்கையை தொடருங்கள் உங்கள் பிரச்சனைகளை எளிதில் தீர்க்க முடியும் அப்படியும் முடியவில்லை என்றால் அதன்பின் தற்கொலை செய்து கொள்ளுங்கள்" என்ற வரி அந்த புத்தகத்தில் இருந்தது.

என் பிரச்சனைகளை நான் யாரிடமும் சொல்லாமல், அதே நேரத்தில் யாரவது ஏதாவது சொல்லி எனக்கு கைகொடுக்க மாட்டார்களா .அடவைஸ் சொல்லாமாட்டார்களா என்று நினைத்து, அப்படி சொல்லதா நிலையில் தற்கொலைக்கு முடிவு செய்து மனம் குழம்பிகிடந்த நேரத்தில் இந்த வரிகள்தான் என் வாழ்க்கையை மாற்றி போட்டு இன்று நல்ல மனைவி மற்றும் குழந்தை அழகான நாய்குட்டி மற்றும் நண்பர்கள் மதிக்கும் அளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்


இதை இங்கே இன்று சொல்லக் காரணம் புத்தாண்டு தினத்தில் அரசியல் பேசுவதை கொஞ்சம் நிறுத்திவிட்டு படிப்பவர்களுக்கு ஒரு நல்ல விஷயம் சொல்லுவோம் என்று நினைத்தாலும், அதுமட்டுமல்லாமல் பேஸ்புக்கில் நண்பர் ஜோதிஜி சில நபர்கள் அவரின் சிந்தனைகளை செயல்களை மாற்ற உதவியதாக எழுதியதை படித்ததாலும் , மேலும் தமிழக செய்திகளை பார்க்கும் போது இப்போது தற்கொலைகள் அதிகமாவது போல தெரிவதாலும் இதை பதிந்து செல்லுகிறேன்

தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தவர்களா நீங்கள் அப்படியெனில் நான் புத்தக்த்தில் படித்த வரிகளின் படி நீங்கள் இறந்துவிட்டதாக நினைத்து கொண்டு அதே நேரத்தில் இன்றுதான் புதிதாக பிறந்தோம் என்று நினைத்து வாழ்க்கையை ஆரம்பியுங்கள் அல்லது உங்கள் உறவுகளையும் நட்புக்களையும் விட்டுவிட்டு விண்ணுலகம் செல்ல முடிவு எடுத்த நீங்கள் .அதற்கு பதிலாக பிரச்சனைகளுக்குரிய இடத்தை ஊரை அல்லது மாநிலத்தைவிட்டு வேறு ஒரு பகுதிகளுக்கு தனியே சென்று புதிய வாழ்க்கையை அடிமட்டத்தில் இருந்து தொடங்குங்கள் . கசந்த வாழ்க்கை இனிக்க தொடங்கும்..

எனது வலைத்தள சக பதிவர்களுக்கும் ரீடர்கள் மற்றும் சைலண்ட் ரீடர்களுக்கும் எனது மனம் மார்ந்த இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். நட்புகளே தனிதனியாக சொல்லி உங்கள் இன்பாக்ஸ்களை மெயில் பாக்ஸ்களை குப்பையாக்காமல் இங்கேயே வாழ்த்தி செல்லுகிறேன்

@avargalunmaigal   #useful #advice



அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இந்த பதிவை தொடர் பதிவாக்க விரும்பி சில நட்புக்களுக்கு அழைப்பு விடுவிக்கிறேன்....உங்களுக்கு பயன்பட்ட அறிவுரைகளை /ஆலோசனைகளை பதிவாக பதியுங்கள்அது அம்மா அப்பா  பாட்டி சொன்ன அறிவரைகளாக இருக்கலாம் படிப்பை/வேலையை சார்ந்தும் இருக்கலாம் அல்லது உங்கள் வாழ்க்கையை மாற்றி போட்ட அறிவுரை அல்லது ஆலோசனையாக இருக்கலாம் அதை எழுதி  உங்கள் தளங்களில் " உங்களிடம் சில வார்த்தைகள்... கேட்டால் கேளுங்கள்  " என்ற தலைப்பில் பதிவிடவும்... அப்படி பதிவிட்ட பின் உங்களுக்கு தெரிந்த மேலும் ஐந்து பேர்களுக்கு அழைப்புவிடுவித்து எழுத சொல்லுங்கள் அவர்களுக்கு வலைத்தளம் இல்லையெனில் பேஸ்புக்கிலாவது எழுத சொல்லுங்கள்... முடிந்தால் அதற்கான லிங்கை எனக்கு அனுப்புங்கள்  நன்றி

1. ஏஞ்சல்- காகிதபூக்கள்
2.அதிரா - என் பக்கம்
3.ராஜி -காணாமல் போனகனவுகள்
4.ஜோதிஜி -தேவியர் இல்லம்
5.நிஷா -  ஆல்பஸ் தென்றல்

நிறைபேருக்கு அழைப்புவிட்டால் மற்றவர்கள் அழைப்புவிட ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்பதால்தான் இவர்களோட நிறுத்தி கொள்கிறேன் அது போல அழைப்பு விடுவிப்பவர்களும் 5 பேர்களுக்கு மேல் அழைப்பு விடுவிக்க வேண்டாம்...


அன்புடன்
மதுரைத்தமிழன்


91 comments:

  1. பயனுள்ள அறிவுரை
    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் இந்த தலைப்பில் ஒரு பதிவு எழுதுங்கள் கரந்தையாரே

      Delete
  2. கடந்த இரண்டு மாதமாக அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பக் கூட முடியாத அளவிற்கு
    வேலைப்பளு இருந்தாலும் உருவாகும் மனச்சோர்வை வாசிக்கும் எழுத்துக்கள் என்னை மேம்படுத்துகின்றது. எப்போதும் வலைபதிவில் ஒரு கட்டுரை எழுதி முடித்தவுடன் சொல்ல முடியாத அளவிற்கு மனம் லேசாகிவிடும். எழுத முடியாத சமயங்களில் புத்தகங்கள், வலைபதிவுகள், பேஸ்புக் என்று இரவில் வந்து அலைந்து திரிவதுண்டு. மனதிற்கு உண்டான மருந்து கிடைத்ததும் இயல்பாகிவிடும். நீங்கள் அழைப்பு விடுத்தமைக்கு நன்றி. முயற்சி செய்கின்றேன். நான் வேறு எவருக்கும் அழைப்பு விடுக்க மாட்டேன். விருப்பம் உள்ளவர்கள் தொடரட்டும். நன்றி நண்பா. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மற்றவர்களிடம் இருந்து நீங்கள் நிறையக் கற்றுக் கொண்டிருக்கும் போது நான் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.அதனால்தான் உங்களுக்கு இங்கே அழைப்பு விடுவித்தேன்..இங்கே அழைப்புவிடுவித்தது உங்கள் பார்வையில்படுமோ படாதோ என்று நினைத்தேன்... இங்கே அழைப்பு வைத்ததை உங்களிடம் இன்பாக்ஸில் சொல்லவும் தயங்கினேன் காரணம் பிரபலமானவர்களை தொந்தரவு படுத்தலாமா என்றும் அவர்களுக்கு இதெல்லாம் சாதாரணமான கத்துகுட்டி விஷயங்களாக இருக்கும் என்பதால்.

      ஆனால் என் அதிர்ஷ்டம் இந்த பதிவு உங்கள் கண்ணில் பட்டு இருக்கிறது.. நேரம் கிடைத்தால் எழுதுங்கள் ஜி

      Delete
  3. தங்களிடம் இருந்து ஒரு வித்தியாசமான பதிவு. சில வருடங்களுக்கு முன் நண்பன் ஒருவன் பண இழப்பினால் தன் இன்னுயிரை எடுத்து கொண்டான். தற்கொலைக்கும் ஒரு நாள் முன்னர் அடியேனை அழைத்து இந்த வார இறுதி என்ன செய்கிறாய்? குடும்பத்தோடு உன் இல்லத்திற்கு வரட்டும்மா.. அனைவரும் சேர்ந்து கோல்ப் ஆடுவோம் என்று வியாழன் சொன்னவன்.. வெள்ளி மதியம் அலுவகலைத்தில் இருந்து வீட்டில் மனைவி பிள்ளைகள் வருமுன் அடித்து பிடித்து ஓடி.. மாய்த்து கொண்டான்.

    என்னால் நம்பவே முடியவில்லை...

    நல்ல பதிவு.. உபயோகமான அறிவுரை. தங்களை காப்பாற்றிய அந்த வார்த்தைகளுக்கு நாங்கள் நன்றி சொல்லி கொள்கிறோம்.

    பின் குறிப்பு :

    அது என்ன நீங்க எழுத சொன்ன அஞ்சு பேருல 80% தாய்க்குலம். நாங்க எல்லாம் அறிவுரை கொடுக்க லாயக்கு இல்லைனு முடிவே பண்ணிடீங்களா?

    ReplyDelete
    Replies
    1. நம்பினால் நம்புங்கள்...உங்கள் பெயரைத்தான் முதலில் எழுத நினைத்தேன் நீங்கள் இணையத்தில் இருந்து விலக நினைத்ததால் அழைப்பு விடுவிக்கவில்லை... உங்களுக்கு அனுபவ அறிவு அதிகம் என்று தெரியும்...

      இங்கு அதிகம் பெண்களை அழைத்தற்கு காரணம் நாம் அழைத்தால் அழைத்த மரியாதைக்காகவாவது எழுதுவார்கள் ஆண்களுக்கு அழைப்பு விடுவித்தால் இவனுக்கு வேறு வேலையில்லை என்று போய்விடுவார்கள்

      Delete
    2. உங்க பேஸ்புக் துறவறத்தை தூக்கி ஏறிந்துவிட்டு மீண்டும் வாருங்கள் என் பதிவை படித்த ஒருவர் எங்க உங்க நண்பர் விசுவை காணவில்லை என்று கேட்கிறார் அவரிடம் உங்கள் துறவரத்தை சொன்னதும் வருத்ததுடன் சென்றுவிட்டார்

      Delete
    3. அட! இப்போதாச்சும், இந்த புது வருடத்திலாச்சும், பெண்களுக்கு மட்டி மருவாதை எல்லாம் தெரியும் எனும் மாபெரும் உண்மையை புரிந்து கொண்டீர்களே சாரே. அதுக்கு பெரிய்ய்ய்ய்ய பாராட்டு விழா நடத்தணுமே. பெண்களை அதான் எங்களை நீங்கள் V:I:P லிஸ்டில் சேர்த்ததனால் தான் என நினைத்திருந்தேன்.வி.ஐ.பி என்றதும் பெரிதாய் நினைக்க வேண்டாமுங்க. வேலை இல்லாமல் வெட்டியாய் இருக்கின்றோம் என நினைப்பீர்கள் என நான் நினைத்தேன். ச்ச்ச்ச்ச்ச்சும்மா

      Delete
    4. பதிவு எழுதி அதில் என்னை அழைத்து அதை பேஸ்புக்கில் கூறியதற்கும் நன்றிகள். எழுதிரலாம். எழுத வேண்டும். கிறிஸ்மஸ் நீயூ இயர் இன்னும் ஒரு நாள் கூட ஓய்வாய் இல்லை. வியாழன், வெள்ளியில் ஓய்வு கிடைக்குமானால் எழுதுகின்றேன். காசா பணமா நகை, நட்டு, சொத்து பத்தையா கேட்டீர்கள். வருடத்தின் முதல் பதிவை போட்டு முதல் நாள் வந்து ஆலோசனை, அறிவுரை கொடு என அம்பூட்டு ஆசையாக கேட்கும் போது சும்மா கேப்பில் கிடா வெட்டும் நாங்கள் ச்ச்ச்ச்ச்ச்சும்மா இருப்போமா? இராமாயணம், மகாபாரதம் ரேஞ்சுக்கு எழுதித்தள்ளிர மாட்டோமா? அதை விட பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய புராணம் எழுதிரலாம் சார்.

      கொசுறாய் சமீமமாய் எந்த பதிவும் படிக்கவில்லை. எழுதவும் இல்லை.அதனால் வலையுலக விபரமும் அதிகம் தெரியவில்லை. எல்லோருமே நலம் தானே?

      Delete
    5. இப்படியான பதிவுகள் இடும் போது அதிலும் பதிவர்களை அழைத்து தொடர்பதிவாய் இடும் போதாச்சும் பின்னூட்டசெட்டிங்கை மாத்தி விடலாமே சார். பின்னூட்டங்கள் இட்டு அதை நீங்கள் அப்ரூவர் செய்து காத்திருந்து பதில் சொல்ல்ல்ல்ல முடியல்ல.

      Delete
    6. அட புத்தாண்டில் ஒரு புள்ளை நம்மை சாருன்னு அழைக்கிறது....

      Delete

    7. பிஸியா இருக்கும் நேரத்தில் அழைத்தால்தான் பதிவு சிறியதாக இருக்கும் என நினைத்தேன்... இராமயணம் மகாபாரதம் எல்லாம் மிக சிறியது ஆனால் நிஷாயணம்தான் கன்னித்தீவு போல நீண்டு இருக்கும் ஹீஹீ நீங்களும் பூரிக்கட்டையை எடுக்கும் முன் ஒடிப் போகிறேன்

      Delete
  4. முன்பு இப்படி ஒரு சுற்று இடம் பெற்றது.
    2018 இல் மீண்டும் ஒரு சுற்று தொடங்கியாச்சா!

    புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வலையுலகம் நிலையாக நிற்க கூடாது அல்லவா அதனால்தான் இந்த புத்தாண்டி ஒட செய்யும் முயற்சியாக ஆரம்பித்து வைக்கிறேன்... எவ்வளவு தூரம் ஒடும் என்று பார்ப்போம்

      Delete
  5. நல்லவேளை. இல்லாவிடில் இந்த தமிழ் வலைப்பதிவு உலகிற்கு ஒரு நல்ல வலைப்பதிவர் கிடைக்காமல் போயிருப்பார். எல்லாம் சரி ... ஆனால் என்ன காரணத்திற்காக அந்த தற்கொலை முயற்சியில் இறங்கினீர்கள் என்று சொல்லவே இல்லையே.

    ReplyDelete
    Replies
    1. வேறென்னவா இருக்கும்?! ஈவ் டீசிங்க் செஞ்சு எங்காவது மாத்து வாங்கி இருப்பார்.

      Delete
    2. அன்றும் இன்றும் பெண்கள்தான் என்னை டீசிங்க் பண்ணுகிறார்கள்... ஆனால் அந்த காலத்தில் அப்பாவியாக இருந்தேன் ஆனால் இப்ப அப்படி இல்லை.....

      Delete
    3. இளங்கோ சார் எல்லாவற்றையும் ஒரு பதிவிலே சொல்லிட்டால் அப்புறம் பதிவு போட விஷயத்தை தேடனும் அல்லவா அதனால்தான்...

      Delete
    4. இளங்கோ சார் எல்லாவற்றையும் ஒரு பதிவிலே சொல்லிட்டால் அப்புறம் பதிவு போட விஷயத்தை தேடனும் அல்லவா அதனால்தான்...

      Delete
  6. I've read the post Thanks friend😊 will come again. .

    ReplyDelete
    Replies
    1. அச்சப்பதோடதானே திரும்ப வருவீங்க

      Delete
    2. No my dear friend :) i will come with Ramasery idlis :)

      Delete
  7. நல்ல அட்வைஸ், பதிவு

    ReplyDelete
  8. The best advice is not to advise othersஎன்று நண்பர் ஒருவர் ஆட்டோகிராஃபில் எழுதிக் கொடுத்தது ந்னைவில்

    ReplyDelete
    Replies
    1. சிறு வயதில் நான் படித்தது அட்வைஸ் என்பது விளக்கெண்ணைய் மாதிரி கொடுப்பவர்களுக்கு எளிது ஆனால் அதை சாப்பிடுகிறனுக்குதான் தெரியும் அது எவ்வள்வு கஷ்டம் என்பது

      Delete
  9. உங்களுக்கு எங்களின் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த் வருடத்திலிருந்து அவ்வப்போது நல்ல அரசியல் சாராத செய்திகளையும் போடுங்கள்.

    தற்கொலை, எந்தப் பிரச்சனைக்கும் தீர்வல்ல. மற்றவர்களுக்கு புதிய பிரச்சனைகளை உண்டாக்கும்.

    மதுரையானந்தா அட்வைஸ் (உங்கள் குறிப்பு) ரொம்ப நல்ல ஒன்று. உங்கள் அனுபவத்தில் சொல்லும் அட்வைஸ் அல்லவா அது.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அரசியல் சாராத பதிவுகளை கண்டிப்பாக போடுகிறேன்

      Delete
    2. பூரிக்கட்டையால் அடிக்காதே என்று எவ்வளவோ சொல்லியும் என் மனைவியின் காதில் ஏறவில்லை அதைத்தான் பக்கத்துவிட்டு பெண்ணிடம் ரகசியமாக சொன்னேன் அதை என் மனைவி கேட்டு அவ்வப்போது உலக்கையால் அடிக்கிறார் ஹும்ம்ம் என்ன செய்வது நம் விதி அப்படி

      Delete
  10. என் சகோதரனுக்கு என்மேல அம்புட்டு பாசம். அதான் தொடர்பதிவில் கோர்த்து விட்டாச்சு

    ReplyDelete
    Replies
    1. உங்களை கோர்த்துவிட்டால் நீங்களும் நிறைய பேரை கோர்த்துவிட்டு திட்டு வாங்குவீங்க என்ற நல்ல எண்ணத்தால்தான் இப்படி ஒரு முடிவு ஹீஹி

      Delete
  11. சீக்கிரத்தில் பதிவு போடுறேன்ண்ணே

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் போட்டு நிறைய பேரை கோத்து விடுங்க அதுக்கு அப்புறம் அவங்க அழனும்

      Delete
  12. என் நண்பன் ஒருவன் இதேபோல தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பற்றி எங்கள் தளத்தில் எழுதி இருக்கிறேன். என்னிடம் சொல்லி விட்டுத்தான் செய்தான்! அவன் "சாகும்வரை" துணைக்கு இரு நண்பர்கள் படுத்துக்க கொண்டார்கள்!

    ReplyDelete
    Replies
    1. சாகும் வரைக்கு ரெண்டு பேர் கூட படுத்து கொண்டார்கள் ? புரியவில்லையே

      Delete
  13. மற்றவர்கள் நம்மிடம் ஆலோசனை கேட்கும்போது நம் பிரச்னையை அவர்களிடம் சொன்னால் இவனுக்கே பிரச்னை என்று எண்ணி விடுவார்களோ என்கிற மனா எண்ணம் காரணமாக இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் ஒரே மாதிரி பிரச்சனைகள் இருப்பதில்லை அதனால் தைரியமாக சொல்லாம்.... அதுமட்டுமல்ல நான் இங்கே கேட்பது ஜஸ்ட் அட்வைஸ் மட்டுமல்ல நம் வாழ்வில் எப்படி பிரச்ச்சனைகளை சமாளித்தோம் என்பதைத்தான் அதை இங்கு நாம் பகிர்ந்தால் யாருக்காவது எப்பபோதாவது பயன்படுமே என்று நினைத்துதான் இந்த பதிவை பகிரிந்தேன்

      Delete
  14. என் நண்பர் சுகுமாருக்கு எப்போதும் ஒரு அனுபவம் உண்டு. இப்போதும். அவர் ஏதாவது பிரச்னை என்று இருக்கும்போது சரியாக அதற்குத் தீர்வு சொல்வது போல பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியிலோ, படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்திலோ செய்தி வரும்! ஆச்சர்யம்.

    ReplyDelete
    Replies

    1. எனக்கும் அப்படித்தான் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் போது பைபிளை எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தை திற்ந்து பார்த்தால் அதில் மனதிற்கு ஆறுதலான விஷயம் சொல்லி இருக்கும் அதை படித்த பின் பிரச்சனை தீர்ந்துவிட்டது போல தோன்றும்

      Delete
    2. HIGH FIVE :) நான் பைபிள் வாசிச்சிட்டு பிறகு தனியா அமர்ந்து யோசிக்கும்போது தெளிவான முடிவுகளை எடுப்பேன்

      Delete
  15. மதுரையானந்தாவின் அட்வைஸ் அற்புதம். புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. கமெண்ட் மாடரேஷன் இல்லாமல், க்ளிக் செய்தவுடன் உங்கள் தளத்தில் கமெண்ட் வெளியாகி விட்டது ஒரு ஆச்சர்யம்!

    ReplyDelete
    Replies
    1. யேஸ்ஸ்ஸ் புதுவருட மாற்றம் போல:)).. இனி ட்றுத்தை ஆரும் திட்டினாலும் நாம் உடனுக்குடன் கண்டு களிக்கலாம் ஹா ஹா ஹா:).

      Delete
    2. என்னை திட்டுவதை கண்டு கழிக்கணும் என்றால் எங்கள் வீட்டிற்கு வாருங்கள்

      Delete
    3. அது கழி அல்ல களித்தல்:) என்றால் மகிழ்தல் என அர்த்தம்:)) மீக்கு டமில்ல டி ஆக்கும்:) ஹையோ நெ.தமிழன் இதைப் பார்த்திடக்குடா:)..

      Delete
    4. உங்களுக்கு தமிழ் சரியாக தெரியுதா என்று சோதிக்கதான் நான் அப்படி தப்பாக எழுதினேன்... பரவாயில்லையே நீங்க பாஸாக்கிடீங்க... (எப்படி எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கிறது

      Delete
    5. @அதிரா - இப்படி எனக்கெல்லாம் அதிர்ச்சி தரக்கூடாது. முதல் முறையாக, 'ழி','ளி' சரியாக உபயோகப்படுத்தியிருக்கீங்க. (உங்களை மாதிரி, என் அக்கவுன்டில் காசு போடுங்க என்று சொல்லமாட்டேன் :-) )

      Delete
    6. ஹையோ @நெல்லைத்தமிழன் ..என் கண்ணில் இந்த கழிக்கணும் பட்டுச்சா :)நான் நினைச்சேன் இந்த ழ மேட்டர் பூஸுக்கு தானே வராது இது பூஸ் போட்ட கமெண்ட்னு :)
      உண்மையில் 2018 ல பட்டாசு கொழு/ளுத்தணும் :)) ஹா .அதிசயம் ஆனால் உண்மை :) நம்பிதான் ஆகணும்

      Delete
    7. ஹா ஹா ஹா இதுகூட முன்பு அறுசுவையில் ஒரு அண்ணன் விளக்கோ விளக்கெண்டு விளக்கிச் சொல்லித்தந்ந்தார் அதுவரை ழி தான் நானும் போட்டுக்கொண்டிருந்தேன்:) ஹா ஹா ஹா:))

      Delete
  17. அடடா இது என் கண்ணில் இப்போதானே பட்டது.. முன்பு தொடர் பதிவுகள் இருந்தன.. இப்போ ஆரும் தொடர் பதிவு எனக் கூவி அழைப்பதில்லை நான் ஒன்றை ஆரம்பிக்கலாமா எனக்கூட பலநாளாக நினைத்திருந்தேன்...

    என்னையும் அழைத்தமைக்கு நன்றி... போஸ்ட் போடுமளவுக்கு பெரிதாக என்னிடம் ஏதுமில்லை, ஆனா குட்டிக் குட்டியா சிலது அட்வைஸ் எனும் பெயரில் ஏற்கனவே எழுதிவிட்டேன்.. இனி ஏதும் வந்தால் எழுதுவேன் குறை நினைச்சிடாதீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஜஸ்ட் அட்வைஸ் மட்டும் வேண்டாம் நம் சொந்த அனுபவத்தில் பிரச்சனைகளை நாம் எப்படி சமாளித்து வந்தோம் என்பதை எழுதுங்கள். பிரச்சனைகளே இல்லாத மனிதர்கள் கிடையாது.. மேலை நாட்டுக்கு வந்த நீங்கள் அங்கு எழுந்த பிரச்சனைகளை எப்படி சாமளித்தீர்கள் என்று எழுதுங்கள் அதுமட்டுமல்லாமல் தொடர் பதிவிற்கு மற்றவர்களையும் அழையுங்கள் அதற்காகவே ஸ்ரீராம் கீதா பூவிழி போன்ற நிறைய பேர்களை நான் அழைக்காமல் விட்டு வைத்திருக்கிறேன் சீக்கிரம் முந்துங்கள் அல்லது ஏஞ்சல் முந்திக் கொள்ளப் போகிறார்

      Delete
    2. நான் ஏஞ்சலுக்கு விட்டுக் குடுப்பேனே இதிலெல்லாம்:)))

      Delete
    3. விட்டு கொடுங்கள் ஆனால் இந்த தொடர் பதிவை விட்டுவிடாமல் கண்டிப்பாக எழுதணும் அது போல மற்றவர்களுக்கும் அழைப்பு விடனும்... அப்படி இல்லைன்னா உங்கள் நெக்லஸுக்கு ஆபத்து கண்டிப்பாக நேரும் என்று சாமி வந்து என் கனவில் சொல்லிவிட்டு சென்றது

      Delete
    4. வயதில் பெரியவங்க சின்னவங்களுக்கு விட்டுக்கொடுப்பது காலம்காலமா நடப்பது ஹீ ஹீஈ

      Delete
    5. ஆஆவ்வ்வ்வ் என் நெக்லெஸ் கதை வந்ததும் தோஓஓஓஓஓஓ புறப்பட்டு விட்டேன்ன் போஸ்ட் போயிங் ல வருதூஊஊஊஊஉ:))

      Delete
  18. நீங்க தற்கொலை முயற்சி பண்ணினனீங்களோ.. என்னால நம்பவே முடியவில்லை.. கலகலப்பாக இருப்போர் பெரும்பாலும் அப்படி நினைப்பதில்லை என்றுதான் நான் நினைச்சிருந்தேன்.

    நான் எப்பவுமே சாவைப் பற்றியே நினைப்பதில்லை ஏனெனில் எனக்கு சாவதென்றாலே பயம்.. இப்பவும் செத்தால் எப்படி இருக்கும் என்ன நடக்கும் என நினைப்பேன்ன்.. உள்ளே நடுங்கும்... மனதை டைவேர்ட் பண்ணிடுவேன் ஹா ஹா ஹா:).

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலே சொல்லப் போனால் யாருக்குமே சாகப் பயமே இல்லை ஆனால் எப்படி சாகப் போகிறோம் என்று நினைத்துதான் பலரும் பயப்படுவார்கள்...யாருக்கிட்ட வேணும் என்றாலும் கேட்டு பாருங்க அவங்களின் பதில் இழுத்துகிட்ட கிடக்காமல் பட் என்று உயிர் போயிடனும் என்றுதான் சொல்லுவார்கள்..

      Delete
    2. வாழ்க்கையில் சோகமாக இருப்பவர்கள் தங்களை கலகலப்பாக இருப்பதாகவே காண்பித்து கொள்வார்கள் நாங்கூடத்தான் நயன்தாரா இல்லாத கவலையில் மிக சோகமாக இருந்தாலும் வெளியில் கலகலப்பாக இருப்பதாக காட்டிக் கொள்கிறேன்

      Delete
  19. உங்களிடம் இருக்கும் அந்த மோசமான பழக்கம் தான் என்னிடமும் இருக்கிறது:)..

    மதுரையானந்தா.. அட்வைஸ் எனும் பெயரில் எல்லோரையும் அடி வாங்க வைக்கப்போறார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஆனாலும் அதில் உண்மையும் ஒளிஞ்சிருக்கு.. சில பெண்கள் கணவனின் பேச்சுக்கு காது கொடுப்பதில்லைத்தான், அதை பார்க்க எனக்கும் எரிச்சலாக இருக்கும்.. காது கொடுத்துக் கேட்காயினம்.. அல்லது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டினம்...

    ReplyDelete
    Replies
    1. ஹலோவ் மியாவ் இப்போ எதுக்கு காதை வம்புக்கு இழுக்கறீங்க :)

      Delete
    2. எதுக்கு ஏஞ்சல் இங்கே சவுண்டு உடுறாங்க ஒரு வேளை வீட்டில் அவங்க இப்படிதான் காது கொடுப்பதில்லையோ என்னவோ

      Delete
  20. https://pics.me.me/a-womans-ears-when-the-husband-is-on-the-phone-16273675.png

    இது தான் நினைவுக்கு வந்துச்சி :) ரகசியம்னு சொன்னதும்

    ReplyDelete
  21. அஆவ் !1சந்தோஷமா இருக்கு மீண்டும் தொடர் பதிவுகள் வருவது ..நிச்சயம் எழுதுவேன் விரைவில் :)

    ReplyDelete
    Replies
    1. வாக்குக் கொடுத்திட்டால் மீறக்குடா சொல்லிட்டேன்:)) அதனாலதான் நான் சிலதுக்கு யோசிப்பேன்:)).. சொன்ன வாக்கை மீறிட்டால் தேம்ஸ்ல தள்ளிடுவேன் ஜொள்ளிட்டேன்ன்:))

      Delete
    2. ஏஞ்சலை பார்த்து நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள் அதிரா அவங்க பாருங்க விரைவில் எழுதுவதாக வாக்கு கொடுத்திருக்காங்க

      Delete
    3. ஹா ஹா ஹா இல்லாட்டில் தேம்ஸ்ல தள்ளிடுவேன் எனப் பயம்:))

      Delete



  22. துளசி: மதுரைத் தமிழன் முதலில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எப்படி இருக்கீங்க?

    அருமையான அட்வைஸுடன் புத்தாண்டுப் பதிவு!! மதுரையானந்தாவின் மொழியும் அருமை...நல்லதொரு பதிவு.

    கீதா: மதுரை இது எப்படி கண்ணில் படாமல் தப்பிவிட்டது!!!!? அழகான பதிவு! மிகவும் ரசித்து வாசித்த பதிவு. ஹைஃபைவ் நானும் எம் ஏ பொருளாதாரம். ஹிஹிஹிஹி...நிற்க சூப்பர்ப் பதிவு சகோ! எனக்கு ஒரு கெட்டப்பழக்கம்னு தொடங்கி முடிச்சிருக்கீங்களே அந்தப் பாராவை அப்படியே நான் டிட்டோ செய்கிறேன். எனக்கு மிகவும் பொருந்தும் வரிகள்.

    ஆனால் தற்கொலை எண்ணம் மட்டும் இதுவரை வந்ததே இல்லை..எத்தனை கஷ்டம் வந்தாலும்..

    சில சமயம் மதுரை சகோ நாம நல்லது சொல்லப் போய் அது தவறாகப் புரிந்து கொள்ளும்படி கூட நடந்துவிடுகிறது...

    மதுரையானந்தாவின் மொழியை ரொம்பவே ரசித்தேன்....புத்தாண்டும் அதுவுமாக நலல்தொரு பதிவைக் கொடுத்திருக்கீங்க...

    ReplyDelete
    Replies
    1. நான் எம் ஏ பொருளாதாரம்தான் ஆனால் அதை நான் முடிக்கவே இல்லை ஹீஹீ என்ன கனவில்தான் நான் அதை முடித்து கொண்டு இருக்கிறேன்

      என்னிடம் உள்ள கெட்டப் பழக்கம் நம் பதிவர்கள் சிலரிடமும் இருக்கிறது அதனால்தான் நாம் நட்புக்களாக இங்கே தொடர்கிறோம்

      Delete
    2. பரவால்ல மதுரை கனவுலயாவது தொடர்ந்து முடிக்கிறீர்ங்களே...

      இரண்டாவது வரி...மிகவும் சரியே!!! எஸ்...

      கீதா

      Delete
  23. தொடர் பதிவா!! ஆஹா களைகட்டப் போகுது!!

    துளசி, கீதா

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம் எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்று அப்படி இல்லையென்றால் இன்னொரு தொடர் பதிவீற்கும் அழைப்பு விடுவித்து அவர்கள் எழுதும் வரை தொடர் பதிவுகளாக எழுதி தள்ளப் போகிறேன்

      Delete
  24. புத்தாண்டில் புதிதாய் ஒரு தொடக்கம். அரசியல் தவிர்த்த பதிவும் உங்கள் தளத்தில் வருவதை அதிகம் எதிர்பார்க்கிறேன்.

    பிரச்சனைகள் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் - பலருக்கும் இந்தப் புரிதல் இல்லை!

    மீண்டும் தொடர் பதிவு - இப்பதிவு மூலம், சோர்ந்து கிடக்கும் பதிவுலகம் வீறு கொண்டு எழுந்தால் மகிழ்ச்சி. வரப் போகும் பதிவுகளை அட்வைஸ் மழையை, ரசிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன்

      Delete
  25. இப்பவே யோசிச்சு வைகக்ணுமே!!!! யாராவது கூப்பிடாமல் போவாங்களா என்ன ஹிஹிஹிஹி

    சரி விசுவுக்கு என்னாச்சு? ஏன் துறவறம்?!!!!! பதிவுகளும் இல்லை...முகநூல் என்று நினைத்தேன் அங்கும் அப்படியா?!!! ஏன் விசு என்னாச்சு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் நிறைய பேரை கூப்பிடலாம் என்றுதான் நினைத்து இருந்தேன் உங்களை எல்லாம் மறக்கவில்லை மற்றவர்களும் கூப்பிட ஆள் இருக்க வேண்டுமென்று விட்டு வைத்தேன் இன்னும் சில நாள் பொறுங்கள் நான் கூப்பிட்டவரில் யாரும் பதிவு எழுதி கூப்பிடவில்லையென்றால் நீங்கள் எழுதி வெளியிட்டு மேளும் சிலருக்கு அழைப்பு விடுவியுங்கள்

      Delete
    2. மதுரை எங்களுக்குக் கண்டிப்பா மியாவ் சத்தம் கேட்கும்... ஜெஸியும், டெய்ஸியும் இருக்க... ....ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      Delete
  26. இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...


    நல்ல பதிவும்....சிறப்பான அறிவுரையும்....மேலும் தொடரட்டும் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க மேடம் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக நன்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

      Delete
  27. ஹலோ ப்ரெண்ட் நானா எழுத ஆரம்பிச்சிட்டேன் ஆனா அனுமார் வால் மாதிரி நீண்டுகிட்டே செல்கிறது :) பதிவு பரவாயில்லையா:))

    ReplyDelete
    Replies

    1. ஆமாம் உங்களுக்கு வால் இருப்பதை சொல்லவே இல்லையே

      Delete
  28. இந்த பதிவு எனக்கு இப்பத்தான் தெரிய வருது இன்னும் படிக்கவில்லை படித்த பிறகு கருத்துரை... வரும்.

    ReplyDelete
  29. வணக்கம் தமிழரே...
    நம்புவீர்களோ... இல்லையோ உண்மையிலேயே ஒரு தொடர் பதிவை ஆரம்பிக்கும் எண்ணம் கடந்த ஒரு மாதமாக இருந்தது நல்ல விடயத்தை ஆரம்பித்து வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனதில் உள்ளதை நான் திருடிக் கொண்டு விட்டேன் ஹீஹீ

      Delete
  30. வணக்கம் சகோதரரே!

    நாட்கள் சில கடந்துவிடதென்றாலும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    அஞ்சுவின் பதிவுமூலம் இங்கு வந்தேன். அருமையான எண்ணமும் அதன் வெளிப்பாடான தங்கள் பதிவும் மிகச் சிறப்பு!
    எல்லோருக்கும் ஒரு சுய பரிசோதனை, மீட்டல் ஆகிறது!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிகவும் நன்றிம்மா

      Delete
  31. அருமையான தலைப்பு.. சிந்திக்க வைக்கும் அனுபவப் பகிர்வு. மலை போல நம்மை மலைக்க வைத்த துயரங்களை பின்னாளில் அசைபோடும்போது அடச்சே.. இந்த சின்ன விஷயத்துக்கா அன்று அப்படி கலங்கிநின்றோம் என்று தோன்றும்.. எதுவுமே காலத்தால் கரைந்துதான்போகிறது. நல்ல சிந்தனைத் தூண்டலை தொடர்பதிவாக்கியமை நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete
  32. இன்றுதான் உங்கள் பதிவினைக் கண்டேன். நீங்கள் எதிர்கொண்ட சூழலை என் இரு நண்பர்கள் எதிர்கொண்டபோது, நான் அவர்களைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றினேன். இப்பொழுதுகூட என்னைச் சந்திக்கும்போது தனக்கு மறுபிறப்பு அளித்தவன் என்று என்னைக் கூறுவார்கள். எதிர்மறை எண்ணங்களை விடுத்தலே நம்மை முன்னுக்கு அழைத்துச்செல்லும்.

    ReplyDelete
  33. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.