Wednesday, December 13, 2017

@avargalUnmaigal
காளான் பற்றிய ஒரு எச்சரிக்கை குறிப்பு :


இந்தியா முதற்கொண்டு பல நாட்டவர்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக காளான் உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும்.விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

1)காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

2)சில வகை காளான்களை  உண்ணலாம். சிலவகை, போதை தரும். சிலவகை, பயங்கர விஷம். எல்லாமே ஒன்றுபோலவே தோன்றும். ஆகவே, கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

@avargalUnmaigal
3)விஷக்காளானை உண்டுவிட்டால் உடனடியாக சோம்புக்கஷாயம் பருகவும் சோம்புக்கஷாயம் பாம்பின் விஷம், காளான் விஷம் இவற்றை முறிக்கும்

காளானின் பயன்கள்

காளான்களில் லெண்ட்டைசின்(lentysine) எரிட்டைனின்(eritadenin) என்ற வேதிப் பொருட்கள் அதிகமாக உள்ளன.    இதனால், இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கொளிசரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாக குறைக்கிறது.    மேலும், இதில் உள்ள எரிட்டனைன் (eritadenin)கொழுப்புகளை கரைத்து இரத்தத்திலிருந்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் வெளியேற்றி பிர திசுக்களுக்கு அனுப்பி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.    இதனால், இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்பட உதவுகிறது.    மேலும், காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிரந்த நிவாரணி ஆகும்.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள், மலட்டுத் தன்மை போன்றவற்றை குணப்படுத்துகிறது.    தினமும் காளான் சூப் குடிப்பதால், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.    காளானை முட்டைகோஸ் அல்லது பச்சைபட்டாணியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வயிற்றுபுண், ஆசணப்புண் குணமாகும்.    கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளா சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் வலு பெறும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. துளசி: காளான் எப்போதேனும் உண்பதுண்டு. ஆனால் பொதுவாக வீட்டில் சமைப்பதில்லை. எங்கள் ஊரில் கிடைப்பதும் அரிது. பதிவு நல்ல பதிவு மதுரைதமிழன்..

    கீதா: காளான் பற்றிய நல்ல பதிவு மதுரை. ஒரு சில காளான் நலல்தல்லதான் . ஆனால் இப்போது நல்ல காளான் என்று சொல்லப்படும் காளானை வளர்த்துத்தானே விற்கிறார்கள்...பட்டன் காளான், சிப்பிக் காளான் என்று..வளர்க்கிறார்களே. அதை வளர்க்கும் விதம் பற்றியும் வாசித்துள்ளேன்....இயற்கையில் வளர்வ்தை பார்த்து உண்ண வேண்டும் என்று சொல்வார்கள்...ஒரு சிலர் இயற்கையில் வருவதை எடுத்து சமைக்கிறார்கள்.

    காளான் நல்லது என்று சொல்லப்பட்டாலும் சிறு வயது முதல் பழக்கம் இல்லாததால் ஏனோ சாப்பிடத் தோன்றுவதில்லை..

    ReplyDelete
    Replies
    1. நானும் எப்போதாவதுதான் சாப்பிடுவேன் என்னவோ எனக்கு அது அவ்வளவாக புடிக்காது

      Delete
  2. நல்ல தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  3. இவர் என்ன சொல்ல வாறார்ர்? எதுவுமே புரியல்ல.. இடம் மாறி வந்திட்டேனோ?:)).. காளான் தானே என நம்பி வந்தால்ல்ல் அதில ஒரு முகம் தெரியுதே ஜாமீஈஈஈஈஈ:)) கர்:))

    ReplyDelete
    Replies
    1. இன்றைக்கு வந்த செய்தியை நீங்கள் படித்து இருந்தால் நான் காளான் பற்றி ஏன் எழுதி இருக்கிறேன் என்று புரிந்து இருக்கும்.. உங்களுக்காகவே இன்னொரு படமும் செய்தியையும் இணைத்து இருக்கிறேன் படித்து பாருங்கள் நான் ஏன் காளான் பற்றிய பதிவு போட்டு இருக்கிறேன் என்று புரியும் ஹீஹீ

      Delete
    2. ஹா ஹா ஹா :) இப்போதானே பார்க்கிறேன்:))

      Delete
  4. காளான் இதுவரை இரண்டுமுறை சாப்பிட்டிருக்கிறேன், ஆனால் எங்கள் வீட்டில் செய்து அல்ல!

    ReplyDelete
  5. appo enaga aala netru mulaiyjyja kaalan engiririgala..

    ReplyDelete
  6. நல்ல தகவல் நண்பரே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.